Monday, August 25, 2008

கண்ணன் பிறந்த இரவு-3: சொக்க வைக்கும் தாலாட்டு-மணி நூபுர தாரி!

மூன்றாம் இரவில், முத்தாய்ப்பான இரவில், குழந்தையை மட்டுமல்லாது, நம்மையே சொக்க வைக்கும் ஒரு அருமையான தாலாட்டைக் கேட்கலாம்! இது தமிழில் இல்லை! அதனால் என்ன? நேற்று இரண்டு இரவுகளும் தமிழ்த் தாலாட்டைக் கேட்டோம் அல்லவா? இன்று சற்று வித்தியாசமாக! நாட்டியத் தாலாட்டு! நடனம் ஆடிக் கொண்டே தாலாட்டு!

இந்தப் பாடலை எழுதியது "அலை பாயுதே" புகழ் - ஊத்துக்காடு வேங்கடகவி! பல அருமையான தமிழிசைப் பாடல்களைத் தந்துள்ளார்! கொஞ்சம் போல வடமொழிப் பாடல்களும் எழுதி உள்ளார்!

இந்தப் பாட்டுக்கு மெளலி அண்ணா/குமரன்/கவி அக்கா யாராச்சும் பொருள் சொன்னாங்கனா, மிகவும் மகிழ்வேன்!



மன்னார்குடி இராஜகோபால ஸ்வாமி (மன்னார்சாமி) மேல் பாடிய பாட்டு இது!
மன்னார்குடி 108 திவ்ய தேசங்களுள் ஒன்றல்ல எனினும் இது ஒரு அபிமான ஸ்தலம்!


மன்னார்குடி இராஜகோபாலனை இன்னிக்கி எல்லாம் வைச்ச கண்ணு வாங்காம பார்த்துக்கிட்டு இருக்கலாம்! அம்புட்டு அழகு! சொக்கத் தங்கம்! அவன் கையில் குழலும், காலடியில் பசுவும், தங்க விக்ரகமாய் மின்னும்!
நீங்களே பாருங்க! படங்களைக் கிளிக்கிப் பெரிதாக்கிப் பாருங்க!

குழந்தை இல்லாதவர்கள், எம்பெருமான் கண்ணனை, இராஜகோபாலனை, இங்கு மடியேந்தப் பண்ணுவார்கள்!
தட்சிணத் துவாரகை என்று பெயர் பெற்ற தலம்! மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்துள்ளார்!

ஊத்துக்காடு கவியின் பல பாடல்கள், மன்னார்குடி இராஜகோபாலனைச் சுற்றியே இருக்கும்!
* பாடலை நாட்டியப் பாணியில் இங்கே கேட்கலாம்!
* பம்பாய் சகோதரிகள் பாட, இங்கே கேட்கலாம்!

அருணா சாய்ராம்:



மணி நூபுர தாரி ராஜ கோபால
மணி நூபுர தாரி
கங்கண கிங்கிணி கண
(மணி நூபுர தாரி)

(மணி=மாணிக்கம்; நூபுரம்=சிலம்பு, கொலுசு; மணி நூபுர தாரி = மாணிக்க மணிச் சதங்கைகள், கங்கண-கிங்கிணி-கண என்று ஒலிக்க, இராஜ கோபாலக் குழந்தை ஓடி வருகிறான்!)

மணி கோமேதக லோகிதக நீல
மரகத வால வாயுஜ ஜால
மகுட விராஜித சிகுர மனோகர
முடிர சமகர களேபர கிங்கிணி கண

(மணி நூபுர தாரி)

மாணிக்கம், கோமேதகம், செம்பவழம், நீலம், பச்சை மரகதம் என்று பல அணிமணிகள் குழந்தைக்கு! தலையில் மகுடம் அலங்கரிக்க, அழகான கூந்தல் மேகம் போல் பரவ, குழந்தை ஓடி வரும் களேபரத்தில், கங்கண-கிங்கிணி-கண என்று ஒலிக்கிறதே!

மலயஜ ரஞ்சன யக்ஷ கர்த்தம
வர்ணக மிஷ்ரத அனுபோத
திலக மகைக சுகந்த விலேபன
திரிபுவன ப்ரகடித ப்ரதாப

ஜலதர நீல சமத்யுதி பால
ஸ்வாமி ஸ்ரீ ராஜ கோபால


லலாம கலோல லலித லலாட
மாலாத மால சுவர்ண கபோல
லாலித கோப கோபீ ஜன லோல
காளிங்க லீல கருணா லவால! - லல!
(மணி நூபுர தாரி)

ராகம்: நீலாம்பரி
தாளம்: ஆதி
வரிகள்: ஊத்துக்காடு வேங்கடகவி

செட்டியார் திருக்கோலத்தில், கையில் தராசுடன், இராஜகோபாலன்

5 comments :

Kavinaya said...

நாட்டிய பாடல்தான் கேட்டேன். பாடலும் சொற்களும் (பொருள் புரியாட்டி கூட), இராஜகோபாலனைப் போலவே வெகு அழகு!

Raghav said...

பாட்டு மிக அருமை.. கொண்டாட்டத்தில கண்ணனை தூங்க வைக்குற முயற்சி மட்டும் தெரியுது, அதிகப்படியான விஷயங்களைக் காணோமே :) ரொம்ப பிஸியோ ???

Raghav said...

ரவி அண்ணா, நீங்களே தமிழுக்கு மாற்றி பாடிருந்தீங்கன்னா, என்னைய மாதிரி "தமிழர்கள்" புரிஞ்சுப்போம்..

Anonymous said...

//ரவி அண்ணா, நீங்களே தமிழுக்கு மாற்றி பாடிருந்தீங்கன்னா, என்னைய மாதிரி "தமிழர்கள்" புரிஞ்சுப்போம்.. // ராகவனுக்கு ரிப்பீட்டெய், (சுமாரா புரிய்யத்தான் செய்யூது, இருந்தாலும்)

Dr.N.Kannan said...

அருமை!

அப்படியே ஒரு நடை

மின் தமிழ் கோகுலாஷ்டமிக்கும்

வந்துட்டுப்போங்க! :-)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP