95. சு-வா? ஜா-வா?? கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே!
அந்தக் கணத்தில், என் உதட்டில், தன் உதட்டால், முத்தெடுப்பான்-னு ரொமாண்டிக்கா பாட, இளமை ததும்பும் குரல் வேணும்-னா யாரைப் பாடக் கூப்பிடலாம்? சு-வா? ஜா-வா? :-))
எத்தனை வயதானாலும், குரல் மட்டும் என்றும் பதினாறாய், கட்டிளங் கன்னியாய் இருக்கும் S.ஜானகி அம்மா தானே அதுக்கு வந்தாகணும்!- சரி தானே சர்வேசன்? சரியல்ல தானே ஜிரா? :-))
ரொமான்டிக் கிக் இருக்குற பாடலுக்கு ஜானகி ரொம்ப பொருந்துவாங்க! - ஏன்னா ஜானகி கொஞ்சம் குரலை மாத்தி மாத்திப் பாடுவாங்க! (முக்கல் முனகல் பாட்டுக்கு ஜானகி தான் ஈசி்யாச் சரிப்பட்டு வருவாங்க)!
மற்றபடி...மெலடி, இன்னிசை, மரபு வழி இசை, மெல்லிய காதல், சோகம், ஏக்கம், தாலாட்டு-ன்னு எல்லாம் எடுத்துக்கிட்டா அப்போ சுசீலாம்மா தான்!
மயூரி புகழ் சுதா சந்திரன் பல நடனப் பாடல்கள் ஆடியிருக்காங்க. அதுல ஒரு கண்ணன் நடனப் பாட்டு இன்னிக்கு! மெல்லிசை மன்னர் MSV இசையில் ஜானகி, அவுங்களுக்கே உரிய ரொமாண்டிக் குரலில் பாடின பாட்டு!
இந்தப் பாட்டுக்கு பல தனிக் கச்சேரிகளிலும் மவுசு. தனி மேடைகளில் இந்தப் பாட்டுக்குப் பரதமும் ஆடியிருக்காங்க பொண்ணுங்க!
மயூரி சுதா சந்திரன் பற்றி மேலதிக தகவல்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்க மக்கா!
பாட்டை, இங்கே வீடீயோ-வில் பாருங்க!
கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே
அந்த மீராவைப் போல் ஏங்கினேன்
தினம் வாடாமல் நான் வாடினேன்
(கண்ணன் மனம் என்னவோ)
கானத்தில், குழல் நாதத்தில்,
ஒரு கந்தர்வ லோகத்தில் எனைக் கொண்டு சேர்ப்பான்!
மோனத்தில், அந்தி நேரத்தில்,
அவன் முந்நூறு முத்தங்கள் ஒன்றாகக் கேட்பான்!
கார் கூந்தல் தனை நீவுவான்
அதில் கல்யாண சுகம் தேடுவான்
அந்தக் கணத்தில், என் உதட்டில், தன் உதட்டால், முத்தெடுப்பான்.
வானம் எந்தன் காலில் வந்து கோலம் போடாதோ....
(கண்ணன் மனம் என்னவோ)
மோகத்தில், விழி ஓரத்தில்,
கண்ணன் பார்த்தாலும் என் நெஞ்சில் பசி ஆறிப் போகும்
காமத்தில், நடு ஜாமத்தில்,
இமை மூடாத என் கண்ணில் நதி ஓடிப் பாயும்
மை கூட கரைகின்றதே
இன்று பன்னீரும் சுடுகின்றதே
அந்தி இருட்டில் என் விழிக்குள் நின்றிருப்பான் - கண்மணிக்குள்
இங்கும் அங்கும் எங்கும் காதல் கண்ணன் கோலங்கள்!
(கண்ணன் மனம் என்னவோ)
படம்: வசந்தராகம்
குரல்: S.ஜானகி
வரிகள்:
இசை: M.S. விஸ்வநாதன்
கார் கூந்தல் தனை நீவுவான்
அதில் கல்யாண சுகம் தேடுவான்
- இதுக்குப் பொருள் என்னாங்க? கூந்தல் நீவினவங்க யாராச்சும் பெரிய மனசு பண்ணிச் சொல்லுங்கப்பா சொல்லுங்க! :-)
18 comments :
//சரி தானே சர்வேசன்?//
சந்தேகமே வேண்டாம். சரியேதான் ;)
எங்க ஊர்ல படம் தெரியலங்க. யூ.ட்யூபு சுத்திக்கிட்டே இருக்கு.
\\எங்க ஊர்ல படம் தெரியலங்க. யூ.ட்யூபு சுத்திக்கிட்டே இருக்கு.\\ இங்க தென் துருவத்திலயும் அப்படியேதான் சுத்துது. ஒண்ணும் தெரியமாட்டெங்குது.
@சர்வேசன் அண்ணாச்சி!
நீங்க சொன்ன சரியாத் தான் இருக்கும்! மக்கள் தீர்ப்பே சர்வே தீர்ப்பு-ல்ல :-)
//யூ.ட்யூபு சுத்திக்கிட்டே இருக்கு//
இது ஜிராவின் சதியோ? :-)
Dailymotion playerக்கு மாத்திட்டேன் அண்ணாச்சி! இப்ப பாருங்க!
//அந்தக் கணத்தில், என் உதட்டில், தன் உதட்டால், முத்தெடுப்பான்-னு ரொமாண்டிக்கா பாட, இளமை ததும்பும் குரல் வேணும்-னா யாரைப் பாடக் கூப்பிடலாம்? சு-வா? ஜா-வா? :-))/////
சந்தேகமென்ன சு தான்!!! மன்னவன் வந்தானடி பாடலில் ஒருமுறை 'ம்மன்னவன்ன்....' என்பாரே பி சுசீலா..ஆஹா என்ன ஒரு காதல்ரசம் சொட்டும் தெரியுமா(ஆடிய பத்மினியிடமும்?:))
இந்தவிஷயத்தில்(மட்டும்) நான் ஜிரா கட்சி!!
//கார் கூந்தல் தனை நீவுவான்
அதில் கல்யாண சுகம் தேடுவான்
- இதுக்குப் பொருள் என்னாங்க? கூந்தல் நீவினவங்க யாராச்சும் பெரிய மனசு பண்ணிச் சொல்லுங்கப்பா சொல்லுங்க! :-)//
சொல்லுங்கம்மான்னு கேட்ருந்தா சொல்லி இருப்போம் பெண்கள் அணி!!!
//மன்னவன் வந்தானடி பாடலில் ஒருமுறை 'ம்மன்னவன்ன்....' என்பாரே பி சுசீலா..ஆஹா என்ன ஒரு காதல்ரசம் சொட்டும் தெரியுமா//
அந்தவரி நளினத்துக்காகவே பலமுறை கேட்டிருக்கேன் அப்பாடலை
பாட்டைக் கேட்டும் மயூரி சுதாவின் நடனத்தைக் கண்டும் இரசித்தேன். நன்றி இரவிசங்கர். மற்றபடி சுவா ஜாவா கேள்விக்குப் பதில் சொல்ல இராகவனோட பதிவை இனிமே தான் படிக்கணும். பொதுவா எனக்கு ஜானகியை விட சுசிலா குரல் பிடிக்கும். கூந்தல் கேள்விக்கு சங்கப்பாடல்களைப் பாருங்க.
எனக்கும் சுசீலாம்மாதான் முதல்ல பிடிக்கும்பா! மைபாக்கா சொன்ன பாட்டு ரொம்பப் பிடிக்கும். இந்தப் பாடல் நல்லாருக்கு! சுத்தாம பார்த்தேன் :) கண்ணன் படம் அதை விட அழகு! உங்க அனுமதியோட சுட்டுக்கிறேன், கண்ணா!
//இதுக்குப் பொருள் என்னாங்க? கூந்தல் நீவினவங்க யாராச்சும் பெரிய மனசு பண்ணிச் சொல்லுங்கப்பா சொல்லுங்க! :-)//
நீவிப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்! :) நேரடி அனுபவத்தை விட நல்ல பாடம் இருக்கா?
மலைநாடான் said...
//மன்னவன் வந்தானடி பாடலில் ஒருமுறை 'ம்மன்னவன்ன்....' என்பாரே பி சுசீலா..ஆஹா என்ன ஒரு காதல்ரசம் சொட்டும் தெரியுமா//
அந்தவரி நளினத்துக்காகவே பலமுறை கேட்டிருக்கேன் அப்பாடலை
>>>ஆமாம் மலைநாடன் !அதே போல
ஜேசுதாஸ் செந்தாழம்பூவில் பாட்டிலும் பிபிஸ்ரீனிவாஸ், மௌனமே பாரவையாய் ஒருபாட்டுபாடவேண்டும் பாட்டில் ம்ம் என்ற ஹம்மிங்கும் நளினம் மெருகு அல்லவா?
சின்ன அம்மிணி அக்கா!
இப்போ படம் தெரியுதுங்களா? தென் துருவத்துலயும் சுத்துது-ன்னு சொன்ன ஒடனே பயந்தடிச்சிக்கிட்டு சரி பண்ணிட்டேன்! :-)
//ஒருமுறை 'ம்மன்னவன்ன்....' என்பாரே பி சுசீலா..ஆஹா என்ன ஒரு காதல்ரசம் சொட்டும் தெரியுமா//
அது மட்டுமா ஷைலுக்கா!
இசையரசி எந்நாளும் நீயே பாட்டைக் கேளுங்க! அப்படி இருக்கும் குரலில் அருவி மழை!
//இந்தவிஷயத்தில்(மட்டும்) நான் ஜிரா கட்சி!!//
கவலைப்படாதீங்க அக்கா! இப்பவும் நீங்க உங்க செல்லத் தம்பி கட்சியில் தான் இருக்கீங்க! why bcoz, நானே சுசீலா கட்சி தான்!
ஜிரா அந்தப் பதிவு போடும் போது ரெண்டு பேரும் சாட்டிக்கிட்டே தான் போட்டாரு! நான் சொன்னது என்னன்னா போட்டின்னு வந்த பிறகு fair play இருக்கணும். எனவே போட்டியில் இருவர் பாடிய பாடல்களுக்கும் கம்பேர் பண்ண சரியான ஒப்புமை கொடுங்க-ன்னு தான் சொன்னேன்!
//சொல்லுங்கம்மான்னு கேட்ருந்தா சொல்லி இருப்போம் பெண்கள் அணி!!!//
சொல்லுங்கம்மா சொல்லுங்க!
சொல்லுங்க அக்கா! சொல்லுங்க!
சொல்லுங்க புள்ள! சொல்லுங்க!
இந்தப் பாட்டு பிடிச்சிருக்கா...சரி. ஜானகி நல்லா பாடியிருக்காங்களா. அதுவும் சரி. ஆனா // ரொமாண்டிக்கா பாட, இளமை ததும்பும் குரல் வேணும்-னா யாரைப் பாடக் கூப்பிடலாம்? சு-வா? ஜா-வா? :-)) //
இது குசும்பு. நான் இந்தப் பக்கம்னு சொல்லிக்கிட்டே அந்தப் பக்கத்துக்கு கை நீட்டுற XXXXXதனம்.
குழலூதும் கண்ணனின் வண்ணமேனி
கதை சொல்வான் கண்ணிலே அந்த ஞானி
இந்த வரிகள் எந்தப் பாட்டுலன்னு கண்டுபிடிச்சு...அந்தப் பாட்டைக் கேளுங்க. நீங்க போட்டிருக்குற பாட்டுக்குப் பின்னாடி வந்த பாட்டு.
கங்கைக் கரைத்தோட்டம்... கண்ணிப் பெண்கள் தோட்டம்.. கண்ணன் நடுவினிலே..... ஹோ ஹோ....
இது போதாதா
கண்ணா கருமை நிறக் கண்ணா... உன்னைக் காணாத கண்ணில்லையே..
இதுவும் போதாதா....
குருவாயூருக்கு வாருங்கள்... ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்... ஒருவாய்ச் சோறு ஊட்டும் தாய்முன் உட்கார்ந்திருப்பதைப் பாருங்கள்....
இதுவும் போதாதா..
கோகுலத்தில் ஒரு நாள் ராதை.. கோபத்தில் ஆழ்ந்திருந்தாள்.. ஏனடி ராதா என்று என்னடி சேதி என்று ஸ்ரீரங்க பாலன் வந்தான்...தானொரு ஆனந்த ராகம் தந்தான்...
பத்தலையா....
யதுவம்ச வீரனுக்கு யசோதை நானே...ஸ்ரீராமன் பாட வந்த கம்பநாடன் நானே.... என்ன பாட்டுன்னு தெரியுதுல்ல....
அடுத்தது
கண்ணன் ஒரு கைக்குழந்தை.. கண்கள் சொல்லும் பூங்கவிதை..
இன்னும் எடுத்துச் சொல்லிக்கிட்டேயிருக்கலாம். அத்தனை பாட்டுங்க இருக்கு.
நீங்க போட்டிருக்கும் பாடலும் மிக அருமையான பாடல். ஜானகி நல்லாப் பாடியிருப்பாங்க. ரொம்ப நாள் கழிச்சி கேக்க வெச்சதுக்கு நன்றி.
ரவி, உங்கள் மனம் புண்படும் படி (பட்டிருச்சுதானே? இல்லைன்னா இந்தப் பின்னூட்டத்தை இக்னோர்டு..) பின்னூட்டம் இட்டதற்கு வருத்தங்கள்.
எஸ்.ஜானகி நன்றாகப் பாடியிருக்கிறார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நானும் அவருடைய ரசிகன். ஆனால் இசையரசியின் குரலும் இனிமையும் பாடும் திறமும் வளமும் இன்னமும் பிடிக்கும். அவ்வளவுதான்.
இந்த இடத்தில் ஏன் ஒப்புமை என்ற ஆத்திரத்துப் பின்னூட்டம் அது. மற்றபடி இந்தப் பாடலை எஸ்.ஜானகி சிறப்பாகவே பாடியிருக்கிறார் என்பதே எனது கருத்தும்.
மலைநாடான் ஐயா
மன்னவன் வந்தானடி பாட்டை மிகவும் லயிச்சிக் கேட்டிருக்கீங்க போல!
கடைசீல அந்தப் பாட்டில் ஒரு சரிகமபதநிச வரும்! கேப்பீங்களா?
ச=சதமது தரவா
ரி=ரிகம பதநி ச...
ன்னு பாடுவாங்க பாருங்க! அப்படியே வீணைத் தந்தியை இழுத்து வுட்டா போல ஒரு சுகம்!
//குமரன் (Kumaran) said...
பாட்டைக் கேட்டும் மயூரி சுதாவின் நடனத்தைக் கண்டும் இரசித்தேன்//
மயூரி அப்பறம் ரெண்டு மூனு படம் தான் பண்ணாங்க குமரன்! மேடை நிகழ்ச்சி கூட ரொம்ப இல்லை அதுக்கப்பறம்!
//மற்றபடி சுவா ஜாவா கேள்விக்குப் பதில் சொல்ல இராகவனோட பதிவை இனிமே தான் படிக்கணும்//
மொதல்ல படிங்க! பல பேரு உரையாடல் படிக்க படிக்க நல்லா ரசிப்பீங்க!
அப்படியே சர்வேசன் பதிவையும் ஒரு எட்டு பாருங்க!
//கூந்தல் கேள்விக்கு சங்கப்பாடல்களைப் பாருங்க//
நாங்க கூந்தலைத் தான் பார்ப்போம்!
பாட்டை எல்லாம் நீங்க படிச்சி எங்களுக்குச் சொல்லுங்க! :-)))
//கவிநயா said...
சுத்தாம பார்த்தேன் :) கண்ணன் படம் அதை விட அழகு! உங்க அனுமதியோட சுட்டுக்கிறேன், கண்ணா!//
கண்ணனைச் சுட என்ன அனுமதி அக்கா வேண்டிக் கிடக்கு?
ருக்மிணி/நப்பின்னை கிட்ட கூட அனுமதி வாங்கத் தேவை இல்ல!
//நீவிப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்! :) //
அக்காவின் ஆணையைச் சிரமேற் சாரி கூந்தல்மேற் கொள்வேன்! :-)
@ஷைலுக்கா
//அதே போல
ஜேசுதாஸ் செந்தாழம்பூவில் பாட்டிலும் பிபிஸ்ரீனிவாஸ், மௌனமே பாரவையாய் ஒருபாட்டுபாடவேண்டும் பாட்டில் ம்ம் என்ற ஹம்மிங்கும் நளினம் மெருகு அல்லவா?//
காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவ்வ்வா பாட்டுலயும் ஒரு ஹம்மிங் வரும்!
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால் அது தான் தெய்வத்தின் சந்நிதி....
என்னும் போது சந்ந்ந்...ன்னு கொஞ்ச நேரம் மட்டூமே இழுப்பாங்க பாருங்க....
நெஜமாலுமே கண்ணுல தண்ணி வந்துரும்! வந்திருக்கு!!
@கேஆர்ஸ் சுப்புடு கூறுவார் சுசிலா பாடிய மன்னவன் வந்தானடி பாடலை எந்த கர்நாடக முன்னனி வித்துவானாலும் பாடமுடியாது என்பார்.அதுசரி அந்தப்பாட்டில் ம... மதி மிகு முதல்வா... என்று வருமே அது யார்?மயூரி சுதா சந்திரன் அவர்களுக்கு ஒரு கால் செயற்கை கால்முட்டிக்கீழ் பொருத்தபட்டு இருக்கிறது. இருந்தாலும் அபார ஆட்டம்.
சு-வா? ஜா-வா? பதிவில் நடந்த சுவையான உரையாடல்களை ரசித்த பின், இந்தப் பதிவைப் போட்டேன்!
//சரி தானே சர்வேசன்? சரியல்ல தானே ஜிரா? :-))//
என்பது அந்த விவாதங்களை எல்லாம் நினைச்சிப் பார்த்து, சிரித்து ரசித்து எழுதியது!
இது வரை கண்ணன் பாட்டில் எத்தனை சுசீலாம்மா பாட்டு வந்திருக்குன்னு தேடிப் பாருங்க! நான் சு-வின் குரலில் கரைபவன்-ன்னு ஈசியா தெரிஞ்சிடும்!
அதுக்காக ஜானகி ஒன்னும் லேசுப்பட்டவங்க இல்ல! அதே இசையரசி எந்நாளும் நானே என்கிற பாட்டைக் கேளுங்க! சுசீலாம்மாவுக்கு கிட்டத்தட்ட அருகில் வந்துடுவாங்க!
பொதுவாகப் பலரும் சொல்வது இது தான்!
ரொமான்டிக் கிக் இருக்குற பாடலுக்கு ஜானகி ரொம்ப பொருந்துவாங்க! - ஏன்னா ஜானகி கொஞ்சம் குரலை மாத்தி மாத்திப் பாடுவாங்க! (முக்கல் முனகல் பாட்டுக்குக் கூட ஜானகி தான் சரிப்பட்டு வருவாங்க)! அதைத் தான் பதிவில் சொன்னேன்!
ஆனால் மெலடி, இன்னிசை, மரபு வழி இசை, மெல்லிய காதல், சோகம், ஏக்கம், தாலாட்டு-ன்னு எல்லாம் எடுத்துக்கிட்டா அத்தனைக்கும் சுசீலாம்மா தான்!
இங்கே ரசிகர்கள் கொடுத்த அத்தனை பாட்டையும் பாருங்க! மேலே நான் சொன்ன வகை தான்!
அதான் //என் உதட்டில், தன் உதட்டால், முத்தெடுப்பான்-னு ரொமாண்டிக்கா பாட// ஜா-ன்னு சொன்னேன்! நேத்து ராத்திரி அம்மா-ன்னு, ஜா பாடும் போது தான், "அந்த" எஃபெக்ட் கிடைக்கும்! :-)
மத்தபடி நான் சுசீலாம்மா கட்சியில் இருந்து கொண்டு, ஒரு வகை பாடல்களுக்கு மட்டும் ஜானகியைக் கை காட்டுவது என்பது என்னுடைய "ட்ரிப்பிள் X தனம்" என்றால்....
ராகவா...உன் சொற்படி...நான் ட்ரிப்பிள் X-ஆகவே இருந்துட்டுப் போறேன் ராகவா! எனக்கு-ன்னு நீ இட்ட வழக்காவே இருக்கேன்! பரவாயில்லை ராகவா!
------------------------------
Jun 11,2008 - அப்போது இட்ட என்னுடைய பதிலில், ஜிராவின் பின்னூட்டம் கண்டு, கொஞ்சம் கலங்கி் இருந்தேன்! இப்போ கண்ணன் பாட்டு பதிவுகளுக்கு Label ஒட்டும் வேலையின் போது, மீண்டும் பார்க்க நேரிட்டது! அதான் அப்போதைய கலக்கத்துக்கு, இப்போ சிரிப்பான் போட்டு, அப்போதைய கண் கலங்கின வரிகளை மட்டும் நீக்கிப் பதிப்பிக்கிறேன்! :) Ragavan didnt really mean it!