Thursday, May 01, 2008

பல்லாண்டெனும் பதங்கடந்தானுக்கே பல்லாண்டு ..

தை மாதத்தில் சிறி வில்லிப்புத்தூர் போயிருந்தோம். "சார்! தமிழக அரசு முத்திரையில் உள்ள கோபுரம் இதுதான் " என்றவாறு பார்த்தசாரதியாய் வாய்த்த வாகனச்சாரதி ஆலயத்துள் அழைத்துச்சென்றார். கூட்டம் அதிகம் இல்லை என்றாலும் ஏதோ ஓர் முக்கிய விழா என்பது புலனாகியது. விசாரித்த போது, மார்கழி முடிந்து தை முதல் வெள்ளிக்கிழமையில் பல்லாண்டு பாடும் வைபவம் அன்று நடப்பதாகச் சொன்னார்கள்.

ஈழத்தில் சில சிவனாலாயங்களில், மார்கழிமாதம் முழுவதும் , மற்றைய திருமுறைகளைத் தவிர்த்து, மணிவாசகப்பெருமானின் திருவாசகத்துக்கே முன்னுரிமைகொடுத்து, வழிபாடுகள் அனைத்திலும் ஓதுவது வழக்கம். தைமாத முதலாம் நாளில் மறுபடியும் தேவாரத்திருமுறைகளைச் சேர்த்துக் கொள்வார்கள். இது சில இடங்கிளல் திருவெம்பாவைத் தினங்களில் மட்டும் கடைப்பிடிப்பதும் உண்டு.

ஏறக்குறைய அதுபோன்றே சிறிவில்லிப்புத்தூர் நாச்சியார் கோவில் பல்லாண்டு பாடல் வைபவமும் எனக்குத் தெரிந்தது. தீபாராதனைகள் முடிந்ததும், சூழவும் நின்றவர்கள் இணைந்து பல்லாண்டு பாடத் தொடங்கினார்கள். அழகான தமிழ இசையோடு கலந்து தேனாக ஒலித்தது.

இரு தினங்களுக்கு முன் வாகனத்தில் செல்லும் போது, ஒலித்த பாடல் மீளவும் சிறிவில்லிப்புத்தூர் காட்சிகளை நினைவுக்கொணர, வீடடிற்கு வந்து காட்சியாகவும் பார்த்து ரசித்தேன். ஆழ்வார் படத்தில் வரும் அந்தப்பாடலின் தொடக்கம் மட்டுமே பல்லாண்டு பல்லாண்டெனத் தொடங்கி, சரணத்தில் மாறுகிறது. ஆயினும் சரணத்தில் வரும் "..அவன் தாயாரைத் தாலாட்டீத் தாயாகிப்போனானே.."என்றவரிகளும், காட்சியும் , இசையும், ரொம்பவும் ரசிக்கும் படியாக இருந்தது. இங்கே உங்களோடும்...
அதைத் தேடியபோது, இதுவும் கிடைத்தது.பல்லாண்டெனும் பதங்கடந்தவனுக்குப் பல்லாண்டு கூறுதலா?. திருநெல்வேலிக்கே அல்வாவா? என்பதுபோலத் தோன்றுகிறதா?. நமக்கு விருப்பமானது, ஆண்டவனுக்கும் விருப்பமானது . வாழ்த்திப் பாடுவது நமக்குப் பிடிக்கிறது...

9 comments :

ஜீவா (Jeeva Venkataraman) said...

அசை படங்களைக் கொடுத்து

இசைத்தமிழ் வார்த்திட்ட பதிவுக்கு நன்றிகள் மலைநாடன் சார்.
திருப்பல்லாண்டு பாடல் வரிகள் விக்கியில்:
http://ta.wikibooks.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

மலைநாடான் ஐயா!

இரண்டாம் வீடியோ அருமையிலும் அருமை!
திருமலை எம்பெருமானைப் பற்றிய ஏதோ ஒரு படத்துக்கு செட் போட்டு எடுத்துள்ளார்கள் போல! மிகவும் எழில் கொஞ்சும் வதனம்! :-)

உங்களுக்கு என் நன்றியோ நன்றி!

மதுரையம்பதி said...

இப்படி சினிமா பாடிருக்கறது இப்போத்தான் தெரியும். நன்றி மலைநாட்டான் சார்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஈழத்தில் சில சிவனாலாயங்களில், மார்கழிமாதம் முழுவதும் , மற்றைய திருமுறைகளைத் தவிர்த்து, மணிவாசகப்பெருமானின் திருவாசகத்துக்கே முன்னுரிமைகொடுத்து, வழிபாடுகள் அனைத்திலும் ஓதுவது வழக்கம்//

ஆகா!
ஈதே எம் தோழீ பரிசேலோ ரெம்பாவாயா?
புதிய தகவல்! நன்றி!

மார்கழியில் ஏகாதசிப் பகல் பத்து இராப் பத்தின் போது வடமொழிக்குத் தடையிட்டு தமிழ் அருளிச் செயல்களை மட்டுமே ஓதுவார்கள்! இது பற்றிய மாதவிப் பந்தல் பதிவு இதோ!


அதிலும் சுப்ரபாதம் கூடத் திருமலையில் கிடையாது! திருப்பல்லாண்டு, திருப்பாவை மட்டும் தான்!

இறைவனுக்கே பல்லாண்டு பாடுவது, அவன் அழகுக்கு கண்ணேறு கழிக்கும் பெரியாழ்வார் தாயுள்ளம்!
இப்போது குமரன் பல்லாண்டுக்கு கூடல் பதிவின் சைட்-பாரில் பொருள் சொல்லிக் கொண்டு வருகிறார்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஆழ்வார் படப் பாடலில் அஜீத் என்னைப் போலவே பாடுறாரு! :-)
எனக்கும் அந்தக் காட்சியும் பாட்டும் ரொம்ப பிடிக்கும்!

குமரன் (Kumaran) said...

ஆழ்வார் படப்பாடலை அறிமுகம் செய்ததற்கு நன்றிகள் ஐயா. பல்லாண்டு என்ற பதங்கடந்தானுக்குத் தாயுள்ளத்தோடு பல்லாண்டு பாடியதால் தான் விட்டுச்சித்தர் (விஷ்ணுசித்தர்) பெரியாழ்வார் ஆனார். இந்த இடுகையைப் பாருங்கள். http://vishnuchitthan.blogspot.com/2005/12/79.html

இரவிசங்கர் சொன்னது போல் 'பல்லாண்டு' பாசுரங்களுக்கு கூடலில் வலப்பக்கத்தில் பொருள் படித்து/எழுதிக்கொண்டு வருகிறேன். அங்கே எழுதியதை எல்லாம் ஒரு இடுகையிலும் சேமித்து வருகிறேன். இந்த இடுகையைப் பாருங்கள். http://koodal1.blogspot.com/2008/02/blog-post_15.html

வல்லிசிம்ஹன் said...

மலைநாடன் எங்கள் ஆண்டாள் கோவிலுக்கும் போய்ச் சேவித்தீர்களா.

என்ன ஒரு பாக்கியம்.
இரு படங்களும் பாடலும் அருமை. மிக நன்றி.

மலைநாடான் said...

ஜீவா!

வருகைக்கும், சுட்டிக்கும், நன்றி.

மலைநாடான் said...

இரவிசங்கர்!

கருத்துக்கும், மகிழ்வுக்கும் நன்றி.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP