Wednesday, January 09, 2008

82. சீர்காழி-சுசீலா: கண்ணான கண்ணனுக்கு அவசரமா?

சீர்காழியுடன் சுசீலாம்மா சேர்ந்து பாடிய பாட்டுக்களை வரிசையாச் சொல்லுங்க பார்ப்போம்! இன்னிக்கி கண்ணன் பாட்டிலும், அப்படி ஒரு பாட்டு தான்!
ஆலயமணி என்னும் படத்தில் இருந்து கண்ணான கண்ணனுக்கு அவசரமா? கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையான்னு திடீர்-னு சரோஜாதேவி கார் டிக்கியில் இருந்து எழுந்து காருக்குள் வருவாங்க! காதல் பாட்டின் நடுவில் ஆராரோ தாலாட்டு எல்லாம் கூட வரும்!

பாட்டின் கடைசியில் ஒரு டயலாக்!
நீ ஒரு விசித்திரமான பொண்ணு! நீ என்னைக் காதலிக்கிறியா இல்ல வௌளயாடறியா? எனக்கு ஒண்ணுமே புரியல - இது இன்னிக்கும் வலையுலகக் கதைகளில் கூட, வலம் வந்து கொண்டு தான் இருக்கு!
அது எப்படி அவ்வளவு உறுதியாச் சொல்லுறேன்னு பாக்குறீங்களா? பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் என்று ஒரு தொடர்-தொடர்கதை (Relay Story) முயற்சி ஓடிக்கிட்டு இருக்கு! அடுத்து நான் எழுதணுமாம்! பாவம் பதிவுக் கதையுலகம்! அதுல இதே டயலாக்கை வைக்கப் போறேன்! :-)

பாட்டை இங்கே கேளுங்க! கீழாற வீடியோ பாருங்க!




வானம்.....பாடி...
ஆஹாஹஹா...ஆஹாஹஹா...
ஆஹாஹஹா...ஓஹோஹோஹோ...

கண்ணான கண்ணனுக்கு அவசரமா - கொஞ்சம்
பின்னாலே பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா - அது
பேசாமல் பேசுவது கேட்கலையா

(கண்ணான )

பொன்னான கண்மணிக்குப் புரியாதா - கொஞ்சம்
முன்னாலே வந்தாலே தெரியாதா
கண்ணழகை நான் காணக் கூடாதா
கல்யாணத் தேரோடக் கூடாதா

(பொன்னான)

உள்ளத்தில் வீடு கட்டி உள்ளே ஓர் தொட்டில் கட்டி
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா

ஆரிராராரோ ஆரிராராரோ
ஆரிராராரோ ஆரிராராரோ
கன்னத்தில் முத்தமிட்டு கண்ணிரண்டில் கண்ணை வைத்து
சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா

(கண்ணான)

மஞ்சத்தில் உன்னை வைத்து மல்லிகை முல்லை வைத்து
கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா
அந்தமலர் வாடுமென்று சொந்தமலர் வண்ணம் கண்டு
இந்தமலர் வேண்டுமென்று நான் பாடவா

(கண்ணான)

"வானம்பாடி...நீ ஒரு விசித்திரமான பொண்ணு...நீ என்னைக் காதலிக்கிறியா இல்ல வௌளயாடறியா? எனக்கு ஒண்ணுமே புரியல"


குரல்: சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
படம்: ஆலயமணி

6 comments :

ஷைலஜா said...

டக்கரான பாட்டு! ரசிச்சேன்! சரோஜாதேவி இந்தப்பாட்டு சீன்ல குறும்பு கலந்த அழகா இருப்பாங்க இல்லயா?!

Anonymous said...

IMHO, the voice of PB Srinivos or AM Rajah would have been better a choice. Seerkhazi has a fablous voice but given the age of male character his voice sounds odd here. A soft voice would have been a better choice.

கோவி.கண்ணன் said...

கண்ணன் பாட்டுங்கிற பேரில் காதல் பாட்டையெல்லாம் எடுத்துப் போடுறிங்க. அமீரகம் நண்பர்கள் சார்பில் பாவனாவின் 'கண்ணன் வரும் வேளை அந்தி மாலை நான் காத்திருந்தேன்' என்ற தீபாவளி படத்தின் பாடலை நேயர் விருப்பமாக போடமுடியுமா ?
:)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் said...
கண்ணன் பாட்டுங்கிற பேரில் காதல் பாட்டையெல்லாம் எடுத்துப் போடுறிங்க.//

கண்ணனும் காதலும் வேறு வேறா கோவி அண்ணா?
நான் சொன்னது சிங்கைக் கண்ணனை அல்ல! சிங்காரக் கண்ணனை! :-))

//அமீரகம் நண்பர்கள் சார்பில் பாவனாவின் 'கண்ணன் வரும் வேளை அந்தி மாலை நான் காத்திருந்தேன்' //

உய்! உய்! உய்!
போட்டுருவோம்! பாட்டுல கண்ணன்-னு வரணும்! அம்புட்டுதேன்! :-)

சரி அது என்ன அமீரக நண்பர் சார்பாக? தம்பி பாவனா பாட்டைக் கேட்கச் சொன்னாரா என்ன? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷைலஜா said...
டக்கரான பாட்டு! ரசிச்சேன்! சரோஜாதேவி இந்தப்பாட்டு சீன்ல குறும்பு கலந்த அழகா இருப்பாங்க இல்லயா?!//

ஆமாங்க ஷைலஜா! சரோஜாதேவி பேசினாலே குறும்பு தான்! இதுல கார்-ல லூட்டி வேறு அடிக்கறாங்க! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Anonymous said...
IMHO, the voice of PB Srinivos or AM Rajah would have been better a choice.//

hmmm
may be...
but it happens sometimes unusual voices for usual characters turn out to be a hit as well.

சீர்காழி சந்திரபாபுவுக்கும் பாடி இருக்காரு. ஆசைக் கிளியே கோபமான்னு சபாஷ் மீனாவுல! அதுவும் ஹிட் தான்!
சீர்காழியின் குரல் கம்பீரத்தால் அவர் ஆன்மீகப் பாடல்கள் பாட மட்டுமே சிறப்பு-ன்னு ஒரு தோற்றம் வந்துடுச்சி! அவ்வளவு தான்!
சீர்காழி பாடாத காதல் பாட்டுகளா?

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP