41. ராமன் எத்தனை ராமனடி!
கண்ணன் பாட்டில், ஒரு ராமன் பாட்டு போடலாமா?
அதுவும் விதம் விதமான ராமன்.
ராமன் எத்தனை ராமனடி! - கவியரசரோ கண்ண தாசன்!
பாட்டோ ராமனை, அப்படியே அனுபவித்து எழுதியுள்ளார்.
இந்தப் பாட்டு, ஒரு பெண் பார்க்கும் படலத்தில் பாடுவது போல், திரைப்படத்தில் காட்சி வரும்! நடிகை யார் என்பது மறந்து விட்டது!
ராமன் எத்தனை ராமனடி - அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்
(ராமன் எத்தனை ராமனடி)
கல்யாண கோலம் கொண்ட - கல்யாணராமன்
காதலிக்கு தெய்வம் அந்த - சீதாராமன்
அரசாள வந்த மன்னன் - ராஜாராமன்
அலங்கார ரூபம் அந்த - சுந்தரராமன்
(ராமன் எத்தனை ராமனடி)
தாயே என் தெய்வம் என்ற - கோசலராமன்
தந்தை மீது பாசம் கொண்ட - தசரதராமன்
வீரம் என்னும் வில்லை ஏந்தும் - கோதண்டராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் - ஸ்ரீஜெயராமன்
(ராமன் எத்தனை ராமனடி)
வம்சத்திற்கொருவன் - ரகுராமன்
மதங்களை இணைப்பவன் - சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் - ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் - அனந்தராமன்
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்!!!
உங்களுக்குத் தெரிந்த வேறு ராமன்கள் இருந்தாலும் சொல்லுங்க! :-)
ராம நவமி மேளாவில் அதையும் சேர்த்து விடலாம்!
படம்: லக்ஷ்மி கல்யாணம் (கவியரசரின் சொந்தப் படம் என்று நினைக்கிறேன்)
இசை: M.S.விஸ்வநாதன்
வரிகள்: கண்ணதாசன்
குரல்: P.சுசீலா
ராகம்: சுப பந்துவராளி
23 comments :
முக்கியமான இராமனை விட்டுவிட்டார் கவியரசர். எங்க வீட்டுல அந்த பேரு சொல்லித் தான் என்னைக் கூப்புடுவாங்க. இன்னும் தெரியலையா? :-)
சாப்பாட்டு ராமன்.
சுசிலாவின் குரலில் பாவம் கொஞ்சும் பாடல்.
இப்பாடல் காட்சியில் நடித்தவர் வெண்ணிற ஆடை நிர்மலா.
ராமனைப் பற்றி பெண்பார்க்கும் படலத்தில் பாடப்படும் மேலும் இரண்டு சுசீலா பாடல்கள்:
1. வசந்தத்தில் ஓர் நாள் - படம்: மூன்று தெய்வங்கள்.
2. ஜனகனின் மகளை - படம்: ரோஜாவின் ராஜா.
//குமரன் (Kumaran) said...
முக்கியமான இராமனை விட்டுவிட்டார் கவியரசர். எங்க வீட்டுல அந்த பேரு சொல்லித் தான் என்னைக் கூப்புடுவாங்க. இன்னும் தெரியலையா? :-)
சாப்பாட்டு ராமன்.//
அட, அந்தத் திருப்பெயர் அங்கும் உண்டா? :-))
பலே ராமா! பல ராமா!!
// ஓகை said...
காட்சியில் நடித்தவர் வெண்ணிற ஆடை நிர்மலா//
நன்றி ஓகை ஐயா. நினைவுக்கு வந்திடுச்சு! ஒளியும் ஒலியும் DDஇல் இந்தப் பாட்டைப் பல முறை போடுவார்கள்!
//ராமனைப் பற்றி பெண்பார்க்கும் படலத்தில் பாடப்படும் மேலும் இரண்டு சுசீலா பாடல்கள்:
1. வசந்தத்தில் ஓர் நாள் - படம்: மூன்று தெய்வங்கள்.
2. ஜனகனின் மகளை - படம்: ரோஜாவின் ராஜா.//
ஆகா, விரல் நுனியில், ராம பாணம் போல் வைத்துள்ளீர்களே!
எனக்கு சிப்பிக்குள் முத்து, "ராமன் கதை கேளுங்கள்" பாட்டும் ரொம்ப பிடிக்கும்!
"ஜகம் புகழும் புண்ய கதை" பாட்டின் modern version போல இருக்கும்! :-)
ரவி,
"ஜகம் புகழும் புண்ய கதை"
இதையும் போடுங்களேன்.
என்ன ஒரு அழகான பாட்டு.
ராமன் பட்டு இன்னோண்ணு ''கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும் காதல் வந்த நேரம் என்னவோ''
ஒரு விசு படம்.
டி.டி யும் ராமன் கண்ணன் பாடல்களும் பிரிக்க முடியாதவை.
மிக நல்ல உருக்கமான பாடலைத் தேர்ந்தெடுத்து போட்டீர்கள்.
Ravi sir, actress Nirmala,
this is the excellent song,by kannadasan.
Arangan arulvanaga.
anbudan
srinivasan.
படங்கள் இரண்டும் அருமையாக இருக்கின்றன இரவி.
திரு கண்ணதாசன் பாடல் அவர் ஆத்திகத்தின் சுவை உணர்ந்து எழுதியதா? இல்லை பிறகு உணர்ந்தாரா?
அவருடைய "அர்த்தமுள்ள இந்துமதம்" உணர்ததை எளிய தமிழில் எழுதியிருப்பார் பாருங்கள்...ஆள் அபேஸ் ஆகிவிடுவோம்.
//வல்லிசிம்ஹன் said...
ரவி,
"ஜகம் புகழும் புண்ய கதை"
இதையும் போடுங்களேன்.
என்ன ஒரு அழகான பாட்டு.//
தேடிப் பார்க்கிறேன் வல்லியம்மா.
சரி, கண்ணன் பாட்டில் பதிவிட உங்களுக்கும் அழைப்பு அனுப்பட்டுமா?
//Anonymous said...
Ravi sir, actress Nirmala,
this is the excellent song,by kannadasan.
Arangan arulvanaga.
anbudan
srinivasan.//
வாங்க ஸ்ரீநிவாசன் சார்.
ரொம்ப நாள் ஆகி விட்டது போல் இருக்கு, ஊருக்குப் போய் வந்தது!
வெண்ணிற ஆடை நிர்மலா - ஓகை ஐயாவும் சொல்லி உள்ளார்.
நன்றி
//குமரன் (Kumaran) said...
படங்கள் இரண்டும் அருமையாக இருக்கின்றன இரவி.//
நன்றி குமரன்.
இரண்டாம் படம், கும்பகோணத்தில் திவ்ய தேச யாத்திரையின் போது ஒருவர் தந்தது.
//வடுவூர் குமார் said...
திரு கண்ணதாசன் பாடல் அவர் ஆத்திகத்தின் சுவை உணர்ந்து எழுதியதா? இல்லை பிறகு உணர்ந்தாரா?//
வாங்க குமார் சார்
கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததால் கொடி அசைந்ததா?
:-))
KRS,
ரொம்ப அருமையான பதிவு. போன வருஷம் இராம நவமி சிறப்பு பதிவில் இப்பாடலையும், மற்றுமொரு பாடலையும் (இராமன் கதை கேளுங்கள்...) இட்டேன். இந்த வருடம் கொடுத்து வைக்கவில்லை, அதனால் என்ன பல பதிவுகளை படித்து விட்டேனே!.
கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததால் கொடி அசைந்ததா?
செம உரியடி. :-))
நன்றாக ரசித்தேன்.
அருமையான பாடல், நன்றி கே.ஆர்.எஸ். ஆமாம் சென்னை அருகில் உள்ள சதுர்புஜ ராமர் கோவில் பற்றி தெரியுமா?.
//சிவமுருகன் said...
போன வருஷம் இராம நவமி சிறப்பு பதிவில் இப்பாடலையும், மற்றுமொரு பாடலையும் (இராமன் கதை கேளுங்கள்...) இட்டேன்//
சிவா,
எனக்கு "இராமன் கதை கேளுங்கள்" ரொம்பவும் பிடிக்கும்; இயல்பா கதை சொல்வது போலவே இருக்கும்!
இதோ உங்க பக்கம் போய் ஒரு எட்டு படித்துவிட்டு வந்திடறேன்!
//வடுவூர் குமார் said...
கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததால் கொடி அசைந்ததா?
செம உரியடி. :-))//
ஹி ஹி
:-))
//மதுரையம்பதி said...
அருமையான பாடல், நன்றி கே.ஆர்.எஸ். ஆமாம் சென்னை அருகில் உள்ள சதுர்புஜ ராமர் கோவில் பற்றி தெரியுமா?.//
நன்றி மெள்லி சார்.
சதுர்புஜ ராமர் கோவிலா? சென்னைக்கு அருகிலா? ஆகா, சொல்லுங்களேன்!
பத்ராசலம் ராமர் - சதுர்புஜ ராமர்!
முதல்வர் கலைஞர் வீட்டுக்கு அருகில் உள்ள கோபாலபுரம் வேணுகோபால சுவாமி - சதுர்புஜ கிருஷ்ணர்.
ஆனால் சென்னைக்கு அருகில் சதுர்புஜ ராமர் - எங்கு என்று அறியத் தாருங்கள்!
காலமகள் தந்த கவிதைக் கோமகன் கவியரசு கண்ணதாசன் திருவுருவச்சிலை திறந்துவைத்த பெருமகிழ்வில் .. கலைவாணர் அரங்கில் முழுநாள் வைபவங்கள்! கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், இசைவிருந்து நடைபெற்ற நாள் 11.12.1994. திரைவரலாறுகளைத் தன் விரல்நுனியில் வைத்திருக்கும் திரை அகராதி அருமைக்குரிய பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்களின் ஆலோசனையேற்று திராவிடக் கவிஞர்கள் மூவரைத் தேர்ந்தெடுத்து ‘கண்ணதாசன் விருதுகள்’ வழங்கிப் பெருமையுற்ற கவியரங்கில்.. திருமிகு ஆருத்ரா.. தெலுங்குக் கவிஞர் - பின்வருமாறு கூறினார். தமிழ் கலந்த தெலுங்கில் அந்த இனியமகன் செப்பியதாவது..
நானும் கவிஞர் கண்ணதாசனும் நல்ல நண்பர்கள்.. அடிக்கடி நேரிலும்..அவ்வப்போது தொலைபேசியிலும் அளவளாவாவதுண்டு! இன்றைக்கு என்ன பாடல் எழுதினீர்கள் என்று கேட்பார்.. நான் சொல்லுவேன்.. அதே போல்.. நீங்கள் என்ன பாடல் எழுதினீர்கள் என்று கேட்க அதையும் அறிந்துகொள்வேன். அப்படி ஒரு சமயம்.. நான் கேட்டபோது.. அவர் ஒரு பாடல் சொன்னார். அசந்து போனேன். இன்னொரு முறை சொல்லுங்கள் எனச் சொல்லிக் கேட்டேன். அந்தப் பாடல் அந்த அளவுக்கு என்னை மிகவும் ஈர்த்தது. என்ன பாடல் தெரியுமா? லட்சுமி கல்யாணம் என்கிற திரைப்படத்திற்காக கண்ணதாசன் இயற்றிய ‘ராமன் எத்தனை ராமனடி’ என்கிற பாடல்தான் அது. கவிஞரிடம் எப்படி இத்தனை ராமனை வரிசைப்படுத்தினீர்கள் என்று கேட்டேன். எந்தப் பாடலுக்கும் ஒரு கரு உண்டல்லவா? இந்தப் பாடலுக்கு என்ன கரு என்று கேட்டேன். கண்ணதாசன் சொன்னார்.. இராமயணத்தில் பட்டாபிஷேகப் படலத்திற்குப்பிறகுவரும் இரண்டாம் காதையில் சலவைத் தொழிலாளி ஒருவர் சொன்னார் என்பதற்காக.. ராமன் சீதையைக் கொண்டு சென்று காட்டில் விட்டுவிட்டு வரும்படி தம்பி லக்குவனனிடம் ஆணையிடுவான். அவ்வாய்ச் சொல் ஏற்று லக்குவனன் சீதையைக் காட்டில் விட்டு வீடு திரும்பியபோது ராமன் நிலைப்படியில் தலையை வைத்து அழுது கொண்டிருப்பான்.. அப்போது லக்குவனன் அண்ணன் ராமனைப் பார்த்து.. ஏனன்னா.. இது என்ன ? நீங்கள் தான் ஆணையிட்டீர்கள்.. இப்போது அழுதுகொண்டிருப்பதென்ன? என்று கேட்க..
‘ஆணையிட்டது கோசலராமன்..
அழுதுகொண்டிருப்பது சீதாராமன்’ என்று
இப்பொறிதான் .. இப்பாடல் உருவானதற்கான கருவானது என்றார்.
வம்சத்திற்கொருவன் - ரகுராமன்
மதங்களை இணைப்பவன் - சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் - ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் - அனந்தராமன்
என 18 ராமன்களின் பவனியல்லவா இந்தப் பாட்டு!
அன்புடன்
காவிரிமைந்தன்
kmaindhan@gmail.com
kaviri, இன்ப நினைவுகள் கோர்த்த இனிய பின்னூட்டத்துக்கு நன்றி:)
திரைத்தமிழுக்கு ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் சேவை அளப்பரியது!
18 வித இராமன்களை அடுக்கிய கண்ண தாசன் கருவினைத் தாங்கள் சொல்லிய விதம் மிகவும் பிடித்திருந்தது!
வேதராமன்
பட்டாபிராமன்
பலராமன்
வெங்கட்ராமன்
பாடலின் ராகம் என்னவோ?