Wednesday, September 05, 2007

65. கண்ணன் பிலேடட் பிறந்தநாள் வாழ்த்து - TMS & சீர்காழி!

இந்த ஆண்டு கண்ணனின் பிறந்தநாள் ப்ரைவேட் பர்த்டே ஆகிவிட்டது!
கண்ணன் பிறந்த நாளான கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) நேற்று! (Tuesday, Sep 4th 2007).
Belated Birthday Wishes, கண்ணா!

உனக்கென்றே இருக்கும் கண்ணன் பாட்டு வலைப்பூவில்,
ஒருவர் கூட உனக்கு "Happy Birthday to you" பாடவில்லையே என்று கோபமா கண்ணா? :-) அதான் நேராக வந்து சொன்னோமே?
சரி சரி, உன் சிரித்த முகத்தைத் தூக்கிவைத்துக் கொள்ளாதேடா!
நீ சிரிச்சா தான் அழகு!
உம்மென்று இருந்தால் உதைபடுவாய் (birthday bump) சொல்லிவிட்டேன்! :-)
உருண்டை வெண்ணெய் திரட்டித் திரட்டித் தருகிறோம்! ஒரு சிரி சிரித்து விடு!




நானும் பதிவர் CVR-உம், நேற்று நியூயார்க் மாநிலத்தில் உள்ள பொமோனா அரங்கநாதன் ஆலயம், கண்ணன் சன்னிதிக்குச் சென்று இருந்தோம்!
அங்கே கண்ணன் அருளால் கோவில் பணியாளர் ஒருவரிடம், ஒரு சுவையான உரையாடல்!

என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே என்று ஆழ்வார் பாசுரத்தை நான் மெல்லிதாகப் பாட, எங்கிருந்தோ ஓடி வந்த அவர், என்னை ஒரு பிடி பிடித்துக் கொண்டார்.
மற்றொன்றினைக் காணாவே என்பதற்கு அவர் தவறான அர்த்தம் கொண்டு விட்டார் போலும்! பிற தெய்வங்களைக் காணக் கூடாது என்று அவர் சொல்ல, நான் அவரிடம் மென்மையாக மறுத்துரைக்க...

சரி அரங்கனின் முன் அனல் வாதம் வேண்டாம் என்று ஆழ்வாரின் "முக்கண் அப்பா" பாடலை மட்டும் அவருக்கு எடுத்துக்காட்டி விட்டு வந்து விட்டேன்! அவரும் தன் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்துவிட்டார்!
அவர் பேசும் பேச்சுக்கு, அவர் தமிழ்மணம் வந்தால் சொல்லால் அடித்தே துரத்தி விடுவார்கள் என்பது சர்வ நிச்சயம்! :-)

நீண்ட வார இறுதி (Long Weekend) விடுமுறையில், நண்பர்களோடு நெய்தல் நாட்டுச் சுற்றுலா சென்று வந்த களைப்பு இன்னும் தீரவில்லை!
இனி மேல் தான் பல மின்னஞ்சல்களுக்கு ரிப்ளை செய்யணும்!
அதற்கு முன், சற்று முன்,
இதோ கண்ணன் பிறந்தநாள் பாடல்!
கண்ணன் வந்தான் அங்கே
கண்ணன் வந்தான் - ஏழைக்
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்

TMS & சீர்காழி இணைந்து பாடி முழங்கும் உருக்கமான பாடல்!
அடையாத கதவிருக்கும் சன்னிதானம்!
அஞ்சாத சொல்லிருக்கும் சன்னிதானம்!!



பாடலைக் கேட்டு ரசிக்க இங்கே சொடுக்கவும்!

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவான்...
நோய்க்கு மருந்தாவான்...
பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே...


கண்ணன் வந்தான் அங்கே
கண்ணன் வந்தான் - ஏழைக்
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்

தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்பவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்
தர்மம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்க கண்ணன் வந்தான்


கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்...
கண்ணன் வந்தான்...
(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)

முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம்
குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம்
அடையாத கதவிருக்கும் சன்னிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும் சன்னிதானம்


சன்னிதானம் கண்ணன் சன்னிதானம்
சன்னிதானம்...
(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)

கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கனி மழலை குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள்செய்ய வருவாய் கண்ணா


கண்ணா...கண்ணா..கண்ணா..கண்ணா..
(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)


படம்: ராமு
பாடல்: கண்ணதாசன்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்திரராஜன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்



படங்களுக்கு நன்றி: krishna.com, radharani.com

18 comments :

ILA (a) இளா said...

அங்கே போயிமா கருத்தாய்தல்?

//நெய்தல் நாட்டுச் சுற்றுலா //
இல்லை. இன்னும் அது குறிஞ்சியா இல்லையா என்ற குழப்பம் தீராமல் இருக்கே.

Yogi said...

கண்ணபிரான்(உங்களைத்தான்) எனக்குப் பிடித்த கண்ணன்(உங்களையல்ல) பாடல் 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருசோத்தமன் புகழ் பாடுங்களேன்' ..

மார்கழி மாதம் அதிகாலையில் இந்தப் பாடலைக் கேட்கும் போது ஆஹா அமுதம் ...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ILA(a)இளா said...
அங்கே போயிமா கருத்தாய்தல்?//

அட நீங்க வேற!
அவரா வந்து பிடிச்சிக்குனாரு! ஐயா எனக்கு தரிசனம் தான் முக்கியம் உங்க கரிசனம் எல்லாம் அப்பறம் வச்சிக்கலாம் என்று சொல்லி எஸ்கேப்பு!

//நெய்தல் நாட்டுச் சுற்றுலா //
இல்லை. இன்னும் அது குறிஞ்சியா இல்லையா என்ற குழப்பம் தீராமல் இருக்கே//

அதுவும் சரி தான்!
மலையும் கடலும் சார்ந்த இடத்தை என்ன சொல்வது?
ஜிரா, இராம.கி ஐயா, சொல் ஒரு சொல் மக்கள்ஸ் - ஹெல்ப் ப்ளீஸ்!

வல்லிசிம்ஹன் said...

Ravi,

paattukku nanRi.
pathivukkum nanRi.

Kannan thaan sonnan.
intha Ravippaiyan oNNume sollaliye.

maRanthuttaanaa enRu.

avaraa maRappaarnu solli mudikkiRathukkuLLa pathivu vanthaachu.:))))))))
nallaa irunthathummaa.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பொன்வண்டு said...
கண்ணபிரான்(உங்களைத்தான்) எனக்குப் பிடித்த கண்ணன்(உங்களையல்ல) பாடல் 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருசோத்தமன் புகழ் பாடுங்களேன்' ..//

ஆகா இந்தப் பாடல் கண்ணன் பாட்டு வலைப்பூவில் எப்போதோ வந்திருக்க வேண்டியது! ஹூம் பொண்வண்டு கேட்டு வரவேண்டும் என்று இருக்கிறது போலும்! விரைவில் இட்டு விடுகிறோம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
Kannan thaan sonnan.
intha Ravippaiyan oNNume sollaliye.
maRanthuttaanaa enRu.

avaraa maRappaarnu solli mudikkiRathukkuLLa pathivu vanthaachu.:))))))))//

வல்லியம்மா வாங்க!
எனக்கு சப்போர்ட்டா கண்ணனிடம் சொன்னதற்கு நன்றி!
மறப்பதா கண்ணனை?
காப்பு மறந்தறியேன்!
கண்ணனே என்றிருப்பேன் - பாட்டு தான் நினைவுக்கு வருது! :-))

மடல்காரன்_MadalKaran said...

உள்ளம் உருகும் பாட்டு.
உயிரை உருக்கும் பாட்டு.
உலகுக்கு உரைக்கும் பாட்டு.
அதையும் நீங்க பதிவா போட்டு
நாங்க காதில் கேட்டு
கண்களில் நீர் வர வச்சுட்டீங்க.
பதிவுக்கு நன்றி.!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மடல்காரன் said...
உள்ளம் உருகும் பாட்டு.
உயிரை உருக்கும் பாட்டு.
உலகுக்கு உரைக்கும் பாட்டு.
அதையும் நீங்க பதிவா போட்டு
நாங்க காதில் கேட்டு
கண்களில் நீர் வர வச்சுட்டீங்க.//

நன்றி மடல்காரன்!
கண்ணீர் வர வைக்கும் பாட்டு தான் இது! அதுவும் நமக்குன்னு யாருமே இல்லையா என்று ஒரு சிந்தனை வரும் போது இப்பாட்டைக் கேட்பேன் பாருங்க...அப்படியே எல்லாம் பஞ்சாய் பறந்து விடும்!

G.Ragavan said...

ரெட்டைக் குரல் துப்பாக்கி மாதிரி ஒரு பாட்டு. என்ன பாட்டு இது! ஆகா! ஆகா! ஆகா!

நெய்தல் நிலத் தலைவனை நெய்தல் நிலத்துல வெச்சு நெனைச்சிக்கிட்டே இசையில் நெய்த பாட்டைப் போட்டுட்டீங்களா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// G.Ragavan said...
ரெட்டைக் குரல் துப்பாக்கி மாதிரி ஒரு பாட்டு. என்ன பாட்டு இது! ஆகா! ஆகா! ஆகா!//

ஆமாம் ஜிரா!
நாகையா (சீர்காழி) பாடிக் கொண்டிருக்க, ஜெமினி வந்த பின், TMS குரலும் சேர்ந்து, இரட்டைக் குழல் துப்பாக்கி முழக்கம் தான்!

//நெய்தல் நிலத் தலைவனை நெய்தல் நிலத்துல வெச்சு நெனைச்சிக்கிட்டே இசையில் நெய்த பாட்டைப் போட்டுட்டீங்களா!//

நல்லாவே நெய்யறீங்க, சொற்றமிழை! :-)
நினைப்பு இருந்திச்சு ஜிரா! குமரனும் டூர் போனார். அச்சோ, யாரிடமாச்சும் சொல்லி விட்டு வந்திருந்தா கண்ணன் பிறந்த நாள் அன்று பாட்டு இட்டிருப்பார்களே என்று நெய்தல் நிலத்தில் ஒரே எண்ணம் தான்!

Shobha said...

Aha Ravi naan Madhavi Pandhalil Kannan piranthanaal pathivu thedinren. Indrudan intha pathivu paarthen. Good Kannan would have been happy.
Another TMS & Sirgali song I like is "Santhanam manakudu, Karpooram Jollikudu" forget which movie it is.
Cheedai murukku sapteengala?
Shobha

நாகை சிவா said...

உறியடி உற்சவம் எப்பங்க நடத்த போறீங்க....

Dr.N.Kannan said...

நெஞ்சை உருக்கும் பாடலது.. கண்ணதாசன் உண்மையில் கண்ணனின் தாசன் என்பதைக் காட்டும் பாடலது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Shobha said...
Aha Ravi naan Madhavi Pandhalil Kannan piranthanaal pathivu thedinren. Indrudan intha pathivu paarthen. Good Kannan would have been happy.//

ஆமாங்க ஷோபா!
மாதவிப் பந்தலில் நானும் ஒரு தொடர் போடத் தான் எண்ணி இருந்தேன், ஆண்டாளுக்குப் பதிவிட்டது போல்! ஆனால் வெளியூர் போக வேண்டியதாகி விட்டது!

ஹூம் அடியார்கள் பற்றி எல்லாம் மாதவிப் பந்தல் பதிவில் வருகிறது! அவன் பதிவு தான் எப்படியோ எஸ்கேப் ஆகி விட்டது!

//Another TMS & Sirgali song I like is "Santhanam manakudu, Karpooram Jollikudu" forget which movie it is.//

கந்தர் அலங்காரம்-ன்னு நினைக்கிறேன் ஷோபா!

//Cheedai murukku sapteengala?//

அதான் வெளியூர் போயாச்சே! பாலும் பழமும் தான்! :-)
சீடை முறுக்கு பாக்கி இருக்குங்களா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நாகை சிவா said...
உறியடி உற்சவம் எப்பங்க நடத்த போறீங்க....//

ஹிஹி!
உறியில் என்ன வைக்கலாம், நீங்களே சொல்லுங்க புலி! நீங்க ஏறி உறி அடிக்க ரெடியா! உங்கள் மேல் பாலும், வெண்ணெயும், தயிரும் ஊற்ற பாவனாவைக் கூப்பிடலாமா? :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நா.கண்ணன் said...
நெஞ்சை உருக்கும் பாடலது.. கண்ணதாசன் உண்மையில் கண்ணனின் தாசன் என்பதைக் காட்டும் பாடலது!//

ஆமாங்க கண்ணன் சார்!
கண்ணதாசன் கண்ணனின் பாடல்களை எழுதும் போதெல்லாம் உருகி விடுவார்! நம்மை உருக்கியும் விடுவார் அல்லவா?

மடல்காரன்_MadalKaran said...

நீங்க ஏற்கனவே 'புல்லாங்குழல் கொடுத்த.. 'பாட்டு பதிவுல போட்டுட்டீங்க இங்கே சென்று பாருங்க.. http://kannansongs.blogspot.com/2006/12/16.html
பொன்வண்டு கவனத்திற்கு..

ஷைலஜா said...

நான் ரொம்பவே லேட்டா இந்தப்பதிவுக்கு வந்து பின்னூட்டம் இடுகிறேன் மன்னிக்க..
அருமையான பாடல் இது ரவி. எத்தனைமுறை கேட்டாலும் சில பாடல்கள் அலுப்பதே இல்லை அந்தவகையைச் சேர்ந்த பாடல்.மகிழ்ச்சி அளித்தமைக்கு.
ஷைலஜா

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP