40. சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ?
கவிஞர் கண்ணதாசன் பவுடர் போடுவாரா?
தெரியாது! :-)
ஆனால் ஒரு பாட்டில், ஒரு குழந்தைக்குப் பவுடர் போடுவது போல்
மெல்லிய சொற்களால் ஒத்தி ஒத்தி எடுக்கிறார்!
என்ன பாடல்? -
சின்னச்சின்னக் கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ?
(பதிவிலேயே கேட்க, மேலே Play button-ஐச் சொடுக்கவும்)
Real Player-இல் கேட்க
Cool Goose-இல் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ள
என்னதான் புன்னகையோ
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம்மின்னும் என்தன்கண்ணா
பால்மணக்கும் பருவத்திலே உன்னைப்போல் நான்இருந்தேன்
பட்டாடைத் தொட்டிலிலே சிட்டுபோல் படுத்திருந்தேன்
அந்நாளை நினைக்கையிலே என்வயது மாறுதடா
உன்னுடன் ஆடிவர உள்ளமே தாவுதடா
(கண்ணிரண்டும் தாமரையோ கன்னம்மின்னும் என்தன்கண்ணா
சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ)
ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா
ஈரேழு மொழிகளிலே என்னமொழி பிள்ளைமொழி
கள்ளமற்ற வெள்ளைமொழி தேவன் தந்த தேவமொழி
(கண்ணிரண்டும் தாமரையோ கன்னம்மின்னும் என்தன்கண்ணா
சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ)
இவ்வளவு நேரம் கொஞ்சிக் கொஞ்சி வந்த பாடல், ஒரு நொடியில்
நெஞ்சில் உள்ள சோகத்தையும் சேர்த்துச் சொல்வதாக மாறி விடுகிறது!
ஒரே பாடலில் இரு வேறு ரசனைகள்!
மழலை மகிழ்ச்சி, பின்பு தத்துவ நெகிழ்ச்சி!
அது எப்படி கண்ணதாசனுக்கு மட்டும் இந்த கைவந்த கலை? :-)
பூப்போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா
பொல்லாத கண்களடா புன்னகையும் வேஷமடா
நன்றிகெட்ட மாந்தரடா நானறிந்த பாடமடா
பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்லைஒரு துன்பமடா
(கண்ணிரண்டும் தாமரையோ கன்னம்மின்னும் என்தன்கண்ணா
சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ)
படம்: வாழ்க்கைப் படகு
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
குரல்: PB ஸ்ரீநிவாஸ்
(பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸ்) - தகவலுக்கு நன்றி: ஜி.ரா
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்