Thursday, April 18, 2013

நாவே!ராமரஸம் பருகு!

சதாசிவ பிரம்மேந்திரரின்  "பிபரே  ராமரஸம் "என்ற பாட்டை 
பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் குரலில் கேட்கும்போதெல்லாம் 
நான் மிகவும் உணர்ச்சிவசப்படுவதுண்டு .காரணம் ?
1)இயற்றியவர் சதாசிவ பிரம்மேந்திரர் என்பதாலா?
2)அந்தப்பாடலின் வரிகளா ?
3)பாடியவரின்  இழையும் குரலா?
4) எல்லாவற்றையும் விட முக்கியமானது  அது ஸ்ரீராமநாம மகிமையை 
    சொல்வதனாலோ ?

இன்றுவரை  காரணம் புரிபடவில்லை !

பாட்டைத்தழுவி அதே ராகத்தில் பொருந்தும்வகையில் 
தமிழில் எழுதிவிட்டேன் .கண்ணன்பாட்டு  அன்பர்களுக்கு 

 இனிய ராமநவமி  வாழ்த்துக்கள்!

1)சுப்புசார்  ராமரஸத்தை  ரசித்துருசித்து  உருகி 
    அனுபவிக்கும் ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ள :
http://www.youtube.com/watch?v=KuWu4VX_z8I&list=UUw4TCj3_an8TqdGY6TNaixA&index=1

2)கலாவின்  குரலில்  ராமரஸ  இனிமையைச்
    சுவைக்க   கீழே:

நாவே!ராமரஸம்  பருகு!





பிபரே ராமரஸம் ரஸனே பிபரே ராமரஸம்

அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம் 

தூரிக்ருத பாதக ஸமஸர்க்கம் 
பூரித நானாவித பல வர்க்கம் 

புன்மையைப் போக்கும் புனித நன்னாமம்.
நன்மைகளனைத்தும் நல்கும் சுநாதம்.
அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம் 


ஜனனமரணபய சோக விதூரம் 
சகல சாஸ்த்ர நிகமாகம சாரம் 

பிறவிமரணபயம்  மாய்க்கும் மாமந்த்ரம்.
மறைகளிலே நிறை ஞானத்தின் சாரம்.
அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம் 
 

பரிபாலித சரசிஜ கர்ப்பாண்டம் 
பரம பவித்ர க்ருத பாஷாண்டம்

நான்முகன் படைப்பினைக் காத்திடும் கவசம். 
நாத்திகநோய் நீக்கும் ஔடதக்கலசம் . 
அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம் 
 

சுத்த பரமஹம்ச ஆஸ்ரம கீதம் 
சுக சௌனக  கெளசிக முக பீதம்

யோகியர் திளைத்திடும் திவ்விய கானம் .
ஞானியர் பருகிடும் தேனிசைப் பானம் . 
அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம் 



THANKS: http://sujamusic.wordpress.com/2012/06/07/pibare-ramarasam/

 FROM GOOGLE SEARCH

6 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

இணைப்பிற்கு நன்றி...

இனிய ஸ்ரீராமநவமி நல்வாழ்த்துக்கள்...

Lalitha Mittal said...

தனபாலன் ஜி,

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி !

sury siva said...

ராமனை பூஜிப்போம்.
ராமனை ரசிப்போம்.
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ர நாம தஸ்துல்யம் ராம நாம விராஜனே.


சுப்பு தாத்தா.
இங்கும் உங்கள் பதிவைப்பற்றி விவரம் இருக்கிறது.
www.subbuthatha.blogspot.in

Lalitha Mittal said...

சுப்புசார்,

ரசமான பதிவு!
குழந்தைபாடகரின் ராமரசம் கேட்டு கண்கள் குளமானது .
இணைப்பு கொடுத்ததற்கு நன்றி .

பார்வதி இராமச்சந்திரன். said...

ஸ்ரீராம நவமி நல்வாழ்த்துக்கள். நல்லதொரு பதிவுக்கு இதயம் கனிந்த நன்றிகள். சுப்புத் தாத்தாவின் பதிவும் காணக் கிடைத்து. மிக்க நன்றி.ஸ்ரீராமர் அருள் பெருகப் பிரார்த்திக்கிறேன்.

Lalitha Mittal said...

PARVATHIJEE,
THANKS FR VISIT AND FEEDBACK.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP