கலையாத கனவொன்று...
கலையாத கனவொன்று தந்தாய் – நீயே
நிலையாக வந்தென்றன் நெஞ்சிலே
நின்றாய்!
மலைபோல நம்பிக்கை தந்தாய் – வான்
மழைபோல அன்பினைப் பொழிந்தென்னை
வென்றாய்!
வனமான என்வாழ்வில் வந்தாய் –
வந்து
வளம்தந்து வசந்தமாய் எனையேந்திக்
கொண்டாய்!
மனமெங்கும் உனைநிரப்பி வைத்தேன்
– பூ
மணம்வீசும் உன்பெயரில் உயிரெழுதி
வைத்தேன்!
சுனைபோலப் பெருகு மென்னன்பு
– என்
வினையெல்லாம் நில்லாமல் ஓடுமுன்
முன்பு!
உனைமிஞ்சும் அன்பெங்கும் இல்லை
– உனை
நினையாது ஒருகணமும் கழிவதே இல்லை!
--கவிநயா
10 comments :
அருமை...
மிகவும் பிடித்தது முடிவில் நான்கு வரிகள்...
பலமுறை ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
உங்களுப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி தனபாலன் :) மிக்க நன்றி!
அருமை !
சுப்புசாரின் பாட்டுக்காக காத்திருந்தேன்.அவர் பாடாததால் நானே"கல்லிலே கலைவண்ணம் கண்டான்"என்ற பாட்டின் மெட்டில் பாடிப்பார்த்து ரசித்தேன்!
சந்தத்தோடு பாடுவதற்கேற்ப அழகாக வந்துள்ளன இனிமையான வரிகள்.
வாங்க லலிதாம்மா! நன்றி :)
நன்றி வசந்த்! நலந்தானே?
arumai
நன்றி
நன்றி ராஜேஷ்!
இங்கேயும் வந்துட்டேன்!!!. அழைத்து வந்த லலிதாம்மா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. கண்ணன் பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தெள்ளமுது. மிக்க நன்றி கவிநயா அவர்களே!!