Wednesday, May 09, 2012

புலியைக் கேட்ட பூனையின் மியாவ்...!

தாமரைப் பூந்தாளெடுத்து

தாவிவரும் தங்கரதம்

மேனியிலே வாங்கிக்கொள்ள வாராயோ...

தாமரைப் பூந்தாளெடுத்து

தாவிவரும் தங்கரதம்

மேனியிலே வாங்கிக்கொள்ள வாராயோ...

அவன் பூவிதழில் புன்னகைத்து

புனைவிழியில் புல்லரித்து

புதுமலரில் வண்டெனவே சேராயோ...

புதுமலரில் வண்டெனவே சேராயோ...

கண்ணழகைக் காண்பதற்குக்

காரிருளில் வெள்ளைநிலா

பிள்ளைமுகம் தேடி ஓடி வாராதோ...

வண்ணமயில் தோகை யொன்றை

கண்ணன் முகம் தாங்கியதை

எண்ணமெல்லாம் ஏந்திக் கொண்டு போகாதோ...

எண்ணமெல்லாம் ஏந்திக் கொண்டு போகாதோ...

(தாமரைப் பூந்தாளெடுத்து)

ராதை மனம் கண்டு அந்த

கோதையுடன் மோகனத்தின்

பாதையிலே பாடிவந்தான் கேளாயோ...

தளிர் ஊடி வரும் காற்றின்

குளிர் ஊதலிலே நாதம்தரும்

குழலெனவே கிறங்குகின்றாள் பாராயோ...

குழலெனவே கிறங்குகின்றாள் பாராயோ...

(தாமரைப் பூந்தாளெடுத்து)

முன்னம் வந்த ராத்திரியில்

மூடவந்த முகத்திரையில்

முத்தமழை சிந்துகின்றான் வாங்காயோ...

புலர் வெள்ளி வரும் வேளை வரை

புல்நுனி நீர் தீரும் வரை

புதல்வனைநீ மடியினிலே தாங்காயோ...

(தாமரைப் பூந்தாளெடுத்து)

5 comments :

Lalitha Mittal said...

அருமை!

"ஆயர்பாடி மாளிகையில் "மெட்டுக்கு கச்சிதமா பொருந்தும் பாடல்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அட, தோ பார்றா....மாப்பிள்ளை வசந்து, கண்ணாலம் முடிஞ்ச கையோட, கண்ணன் பாட்டுக்கு வந்துட்டாரு!:)))))))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மூடவந்த முகத்திரையில்
முத்தமழை சிந்துகின்றான் வாங்காயோ..

புலர் வெள்ளி வரும் வேளை வரை
புல்நுனி நீர் தீரும் வரை//

இதெல்லாம் ரொம்ப A+ :))
ச்சே...A1 ன்னு சொல்ல வந்தேன்:)

நாடி நாடி நரசிங்கா! said...

Thanks:)

sury siva said...

கே.ஆர். எஸ். சொன்னது சரிதான்.
கொஞ்சம் ஏ தான். இருந்தாலும் சந்தத்திலும் நடையிலும் உணர்விலும் பின்னிபின்னி வாங்குகிறது. கேட்க வேண்டும் என்றால்
இங்கே 

subbu thatha

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP