ஹரி தும ஹரோ! (காந்தி - மீரா - எம்.எஸ்)
இந்தப் பாடல் காந்தியண்ணலின் விருப்பப் பாடல்! ஒரு நாள் எம்.எஸ் வந்திருந்த போது, அவர் குரலில் கேட்க ஆசைப்பட்டு, திடீரென்று அவரைப் பாடச் சொன்னார்!
எம்.எஸ்.அம்மா, 'தனக்கு இந்தப் பாடலை எப்படிப் பாடணும் என்பது தெரியாதே, முன்னே பின்னே இதைப் பாடியதில்லையே' எனத் தயங்க...
அதில் நெகிழ்ந்து போய்...பாடலையும் பொருளையும் கற்றுக் கொண்டு...அடுத்த நாள் பதிவு செய்து, அண்ணலுக்கு Air Mail-இல் பிறந்தநாள் பரிசாக அனுப்பி வைத்தார்!
இந்தப் பாடலையே, அண்ணலின் படுகொலைக்குப் பின், பல முறை வானொலியில் ஒலிபரப்பினார்கள்!
ஹரி.........
தும ஹரோ...ஜன் கி பீர்
அரி...அய்யா...
அன்பரின் துயரம் தீர்!
--------
திரெளபதி கி லாஜ் ராக்ஹி......
தும படயோ சீர்
(ஹரி தும ஹரோ)
திரெளபதை தன்-மானம் காக்க.....
துகில் வளர்க்க விரைந்தீர்!
(அரி.....அய்யா)
--------
பக்த காரண, ரூப நரஹரி,
தர்யோ ஆப் சரீர்
ஹிரண்ய கஸ்யப, மார லீந்ஹோ,
தர்யோ நாஹின தீர்
(ஹரி தும ஹரோ)
சிறுவன் பொருட்டு, ஆள்-அரி உருவம்,
நன்று நீர் எடுத்தீர்!
சீறும் இரணியன், சாபம் தொலைந்திட,
அன்று நீர் முடித்தீர்!
(அரி.....அய்யா)
--------
பூடதே கஜ, ராஜ ராக்யோ,
கியோ பாஹர நீர்
தாச மீரா, லால கிரதர,
துக் ஜஹான் தஹான் பீர்
(ஹரி தும ஹரோ)
காதல் களிறின், காலைத் தூக்கி,
காத்து அருள் செய்தீர்!
தாச மீரா, கிரி-தாரி இங்கோ,
துக்க வலி பெய்தீர்!
(அரி.....அய்யா)
வரிகள்: மீரா
குரல்: எம்.எஸ்.சுப்புலட்சுமி
மொழி: இந்தி
Jan 30 - அண்ணலின் நினைவு நாள்!
7 comments :
64 வருடங்கள் ஆச்சு. என்று தணியும் இந்த சுதந்திர தாகம்ன்னு இன்னும் பாட வேண்டியிருக்கு.
வாழ்க நீ எம்மான்!
//வாழ்க நீ எம்மான்!//
ரிப்பீட்டிக்கிறேன்.
அழகான பாடலை பொருத்தமான நேரத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி.
இந்தப் பதிவு எனக்கு ஆனந்தமான ஆச்சர்யம்!நான் என்ன நினைத்தேனோ அதைப்பதிவில் தமிழாக்கமாய்க் கண்டு மகிழ்ந்தேன்!
கே ஆர் எஸ்! டெலிபதியா?(டெல்லிபதியா?)
64 வருடங்கள் ஆச்சு. என்று தணியும் இந்த சுதந்திர தாகம்ன்னு இன்னும் பாட வேண்டியிருக்கு.
வாழ்க நீ எம்மான்!
kumaran say it once more !!
subbu rathinam
தேடலில் தற்செயலாகக் கிடைத்தப் புதையல். அருமையாக இருக்கிறது. உங்கள் திறமைக்கு இன்னும் எத்தனை பரிமாணங்கள் உண்டு என்பதை எண்ணி வியந்து கொண்டிருக்கிறேன்.
அப்பாதுரை சொன்னதில் 'திறமை' குறித்த வியப்பினை வழிமொழிகிறேன். :-)
http://www.musicindiaonline.com/album/10-Classical_Carnatic_Vocal/3694-Atma_Soul/#/album/10-Classical_Carnatic_Vocal/3689-Bramhanandam_Vol_4/
KRS inda site le Hari tum haro kettu parunga.
Shruthi