புள் ஏறி ஓடும் செம்மா கண்ணன் !
ஹரி பஜனை
[ராகம்: நவரோஜ்]
கோபாலா ! ஹரி கோபாலா !
கோகுல நந்தன கோபாலா !
கோபாலா ! ஹரி கோபாலா !
கோகுல நந்தன கோபாலா !
கோபாலா ! ஹரி கோபாலா !
கோகுல நந்தன கோபாலா !
கோபாலா ! ஹரி கோபாலா !
கோகுல நந்தன கோபாலா !
ஓடும் புள் ஏறி
சூடும் தண் துழாய்
நீடு நின்றவை
ஆடும் அம்மானே !
சூடும் தண் துழாய்
நீடு நின்றவை
ஆடும் அம்மானே !
(திருவாய்மொழி - 1-8-1)
அம்மானாய்ப் பின்னும்
எம்மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட
செம்மா கண்ணனே !
எம்மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட
செம்மா கண்ணனே !
(திருவாய்மொழி - 1-8-2)
மேலே உள்ள நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை இங்கே கேட்கலாம்.
பாடியுள்ளோர்: சென்னை [பள்ளிக்கரணை] திருநாரணன் கோவிலின் திவ்ய பிரபந்த பாடசாலை குழுவினர்
18 comments :
[பாசுர சொற்பொருள்]
புள் - பறவை (கருடன்)
துழாய் - துளசி
தண்துழாய் - குளிர்ச்சியான துளசி
அம்மான் - சுவாமி, நியமிப்பவன், அதிகாரி, தந்தை
மாண்பு - பெருமை, அழகு, நன்மை, மாட்சிமை
எம்மாண்பும் - எல்லா நற்குணங்களும்; எல்லா நன்மைகளும்
மா - குதிரை
வெம்மா - கொடிய குதிரை (கேசி என்னும் அசுரன்)
கீண்டல் - கிழித்தல்
செம்மா கண்ணன் - நீண்ட சிவந்த கண்களை உடையவன் (கிருஷ்ணன்)
//ஓடும் புள் ஏறி//
ஓடும் புள் = மயில் தானே? :)
கருடன் ஓடுமா? பறக்குமா? முருகா முருகா! :)
//அம்மான் - சுவாமி, நியமிப்பவன், அதிகாரி, தந்தை//
தாய் மாமம்-ன்னும் பொருள் இருக்கு-ல்ல? :)
பெண் கொடுத்தவன், காதலியைக் கொடுத்தவன்! :)
இந்தத் திருவாய்மொழி வரிகள் குட்டி குட்டியா இருக்கே ராதா? நல்லா இருக்கு! வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே - Short & Sweet! :)
இப்படியே ஸ்ரீராமபாரதியின் குறுந்தகடு எல்லாம் கண்ணன் பாட்டுல வலையேறுதா? பதிப்புரிமைப் போலீஸ், வந்து ராதாவைப் புடிங்க! :)
இராதா, பஜனை முறையில் பாடுவதற்கு இந்த பாசுரம் ரொம்ப பொருத்தமாக இருக்கிறது.
அப்பாடா ! நான் எதிர்பார்த்த கேள்வி கேட்கலை. தப்பிச்சேன். :-)
ஆமாம். அம்மான் என்றால் மாமன் என்ற் பொருளும் உள்ளதே.
மயில் ஏறும் மன்னவன் தன் அம்மான் திருவடிகளே சரணம். :-)
// இப்படியே ஸ்ரீராமபாரதியின் குறுந்தகடு எல்லாம் கண்ணன் பாட்டுல வலையேறுதா? //
அப்படி நடக்க வேண்டும் என்று எனக்கும் ஆசை. ஆனால் பாடசாலையின் அனுமதி சில பாசுரங்களுக்கு மட்டுமே.
ஆமாம் குமரன். முந்தைய பதிவிலும் பஜனை அருமையாக இருக்கும்.
உள் வாங்கிக் கொள்ள எளிதாக இருக்க வேண்டும் என்று பாசுரத்தின் ராகத்தை ஒட்டியே பஜனையும் இருக்கும்.
//இந்தத் திருவாய்மொழி வரிகள் குட்டி குட்டியா இருக்கே ராதா? Short & Sweet! :) //
இதைப் போலவே இன்னும் ஒரு பத்து.
"கண்ணன் கழலினை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே."
Short & sweet. :-)
பாடியவரின் குரல் வித்தியாசமா அருமையா இருக்கு! எப்படி சொல்றதுன்னு தெரியல!
பெருமாளிடம் deeppaa பாடுறாங்க! தேன் போல voice.
//செம்மா கண்ணன்!//
செம்ம கண்ணன்!
(First, unga post paarthappa appadi thaan irundhadhu.)
ஓடும் புள் = மயில் தானே? :)
கருடன் ஓடுமா? பறக்குமா? முருகா முருகா! :)
I Think Air plane சிறிது தூரம் ஓடி அப்புறம்தான் பறக்குது
அதுபோல கருடனும் பெருமாளை ஏற்றி கொண்டு சிறிது தூரம் ஓடி பிறகு பறக்கிறார் .
நாராயணா! நாராயணா!
ஓடும் புள் ஏறி
சூடும் தண் துழாய்
நீடு நின்றவை
ஆடும் அம்மானே!
:)))
//அதுபோல கருடனும் பெருமாளை ஏற்றி கொண்டு சிறிது தூரம் ஓடி பிறகு பறக்கிறார். //
ராஜேஷ்,
உட்கார்ந்து யோசிக்கும் குழுவிற்கு வருகை தந்து இருக்கிறீர்கள். நல்வரவு ! :-)
// செம்ம கண்ணன்! //
In love with Krishna,
பார்த்தசாரதி செம கண்ணன் தான் ! :-)
May the Lord remember all of us !
மிக அருமை; இனிமை. நன்றி ராதா.
@Radha: //பார்த்தசாரதி செம கண்ணன் தான்//
Yes, yes, yes...
Sri Vaishnavam- adhai rusithu, rasithu, layithu aatchi seiyyum namadhu kannan :)
Deepavali-kku irendu naal munnadi irukkum...koil-la one hour-aga perumal-kku waiting...
"Ungalakku dress-panna ivvalo neramaaa?"-nnu kelvi ketta manasai ore darisanathil kavilthivitaar!!!
Avalo azhagu! Avalo gambeeram!!!
btw, He was not dressing simply, He was hearing the sweet verses of Azhwar all the while He was dressing- MULTITASKING and all we must learn from Him only :)))