Sunday, January 17, 2010

ஹரி கைங்கரியம் செய்யுங்கள் பிறவி வராது பின்னர்...


க2டெ3 ஸரீர் கா2ல் பொடி3 ஜாநாமுல்லோ - ஹரி
கைங்கர்யம் கரொ ஜெலும் அவ்நா ப2ல்லோ (க2டெ3)


கொண்ட உடல் கீழே விழுந்து போகும் முன்னர் - ஹரி
கைங்கரியம் செய்யுங்கள் பிறவி வராது பின்னர் (கொண்ட)


க2டி3 ஸொடெ3 ஸரீர் ஜுக்கு லெ:க்க நீ: முல்லோ - அமி
கரெ கருமுந் அஸ்கி திரிஜாய் ஜல்வோ (க2டெ3)

கொண்டு விட்ட உடல் நிறைய கணக்கில்லை முன்னர் - நாம்
செய்த கருமங்கள் எல்லாம் தீர்ந்து போகும் அறிவீர் (கொண்ட)

தெ4ரந் நிக்ளேத் ஹிப்பி3 ரா:நா த4மய் மொந்நு - யெக
தெ4ரந் முஸைகி தே3வுக் ப4ஜொ குண்ணு
சரம ஸ்லோக் அர்த்துந் அய்கி ஸெய்ல்வோ ஸெய்ல்வோ ஸங்கு
சக்ரபாணி விநா க3தி நீ:யேட் ஜல்வோ (க2டெ3)

பிடிக்கக் கிளம்பினால் நிற்காது ஓடும் மனம் - இதை
பிடிக்க முடியுமோ தெய்வத்தை வணங்குதல் குணம்
சரம ஸ்லோக பொருள் கேட்டு பாருங்கள் பாருங்கள் சங்கு
சக்ரபாணியை விட்டால் கதி இல்லை இங்கு அறியுங்கள் (கொண்ட)

இஸோஸ் ஏ மெநிகு ஜெலும் அவ்லேத் ரா:ய்கி - ஏ
ஹரிக் ப4ஜந நீ:ஜியேத் பாப் திரைகி
பிஸொ தெ4ரி ஹிண்டு3நகன் நமமூஸ் வாடு - சொக்கட்
பிஸொ தெ4ரி க3வ்னாஜியேத் நீ: க3தி யேடு (க2டெ3)

இப்படியே இந்த மனிதப் பிறவி வந்து கொண்டே இருக்குமோ - இந்த
ஹரி பஜனை இல்லையேல் பாவம் தீருமோ
பித்துப் பிடித்து அலையாதீர் நாமமே வழி - நல்ல
பித்துப் பிடித்து பாடாவிட்டால் இல்லை இங்கே கதி (கொண்ட)

வடபத்ரார்யுநு மொகொ வாட் தி3யாஸி - ஸ்ரீ
வைகுண்டுக் நிக்ளி ஜவேந் வாட் ஹொயெஸி
நடனகோ3பாலூஸ் தே3வ் நஜ்ஜவுங்கநு - க3வி
நடனம் கர்னாஸ்தக கோ பொ3வுங்கநு (க2டெ3)

வடபத்ரார்யர் எனக்கு வழி கொடுத்தார் - ஸ்ரீ
வைகுண்டம் கிளம்பி போகும் வழி கிடைத்தது
நடனகோபாலனே தெய்வம் கெட்டுப் போகாதீர் - பாடி
நடனம் செய்யாமல் சும்மா அழைக்காதீர் (கொண்ட)

பாடல் : ஸ்ரீ நடனகோபால நாயகி ஸ்வாமிகள்
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
இராகம்: செஞ்சுருட்டி
தாளம்: ஆதி

14 comments :

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கைங்கரியம் செய்யுங்கள் பிறவி வராது பின்னர்//
//கைங்கர்யம் கரொ ஜெலும் அவ்நா ப2ல்லோ//

செளராஷ்டிரத்திலும் கைங்கர்யம் என்ற சொல் பலுக்கல் தானா? அருமை!
முன்னர் இதே போல, திருவடி சரணங்களுக்கு="பாய்ன்போட்" என்று சொன்னதாக நினைவு!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

டி.எம்.எஸ் குரலில் இது, தமிழ்ப் பாட்டு கேக்கறாப் போலவே தான் இருக்கு!

இதே மெட்டில் தமிழில் ஒரு முருகன் பாட்டும் இருக்கு! - மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு...

சிந்து நதியின் மிசை நிலவினிலே...கூட இதே மெட்டில் பாடுவாய்ங்க!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//சரம ஸ்லோக பொருள் கேட்டு பாருங்கள் பாருங்கள்//

சொல்லுங்க குமரன்! கேட்கிறோம்!
சரம சுலோகம் என்றால் என்ன?
அதன் பொருள் என்ன?
அதை ஏன் "சரம" (இறுதி) சுலோகம் என்று சொல்ல வேண்டும்?
அதன் பொருளால் நாம் அறிய வேண்டுவது என்ன? உணர வேண்டுவது என்ன?

Raghav said...

அருமையான பாடல் குமரன்.. மதுரை செளராஷ்டரம் கொஞ்சம் புரியமாட்டேங்குது எனக்கு..

நடனகோபால நாயகி ஸ்வாமிகள் நம் அரங்கனைப் பற்றி பாடிய பாடல்கள் இருந்தால் பதியுங்களேன்..அத்துடன் அவரின் கைங்கர்யங்களையும் கதைகளாக பதிந்தால் அறிந்து கொள்வோம்.

Radha said...

//மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு...//
This is another very nice melody.

Radha said...

//நம் அரங்கனைப் பற்றி பாடிய பாடல்கள்//
I have a beautiful song of Sadguru Thyagarajar rendered wonderfully by M.S.
But I don't know how to upload it. :-(

Radha said...

//பித்துப் பிடித்து அலையாதீர் நாமமே வழி - நல்ல
பித்துப் பிடித்து பாடாவிட்டால் இல்லை இங்கே கதி //
I am reminded of this Kulasekara Azhwar's pasuram.
மொய்த்துக் கண்பனி சோர, மெய்கள் சிலிர்ப்ப, ஏங்கி இளைத்து நின்று
எய்த்துக்கும்பிடு நட்டமிட்டெழுந்தாடிப்பாடி யிறைஞ்சி* என்
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி* அவனுக்கே
பித்தராம், அவர் பித்தரல்லர்கள்; மற்றையார் முற்றும் பித்தரே.

Anonymous said...

ஹரி கைங்கரியம் செய்யுங்கள் பிறவி வராது
நல்ல பதிவு!

குமரன் (Kumaran) said...

இரவி,

சௌராஷ்ட்ரம் பிராகிருத மொழிவகைகளுள் ஒன்று என்பதால் பல சொற்களும் வடமொழி வழி வந்ததாக இருக்கும். சௌராஷ்ட்ரத்தில் தொலைத்த சொற்களை மீட்க வேண்டுமென்றால் முதலில் சில நூற்றாண்டுகளாக இருந்து வரும் இலக்கியங்களைப் பார்க்க வேண்டும்; அங்கும் கிடைக்காவிட்டால் வடமொழியையும் பிராகிருத மொழிகளையும் பார்க்க வேண்டும் என்று எண்ணுபவன் நான்.

கைங்கர்யம் என்ற வடசொல் அதனால் தான் அப்படியே பயின்று வருகிறது இங்கே.

குமரன் (Kumaran) said...

சரம ஸ்லோகம் என்றால் என்ன இரவி? அதற்கு சரம ஸ்லோகம் என்று ஏன் பெயர்? அதில் அறிய வேண்டுவது என்ன? உணர வேண்டியது என்ன? :-)

குமரன் (Kumaran) said...

மதுரை சௌராஷ்ட்ரர்களுக்கும் இந்தப் பாடல் புரியாது இராகவ். செந்தமிழ் பேச்சுத் தமிழ் போல் இந்தப் பாடலில் இருக்கும் சௌராஷ்ட்ரமும் பேச்சு சௌராஷ்ட்ரமும் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டே வருகின்றன. சௌராஷ்ட்ரத்தில் இப்படி அருமையான பாடல்கள் இருப்பதே பல சௌராஷ்ட்ர இளைஞர்களுக்குத் தெரியாததால் இந்தப் பாடல்களை முதலில் கேட்கும் போது இது தம் மொழி பாடல்கள் என்றே அவர்கள் அறிவதில்லை; ஏதோ செங்கிருதப் பாடல் என்று நினைத்துக் கொள்வார்கள். இந்தப் பாடல்களை நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு சொல்லாகப் பலுக்கினால் புரிகிறது - என் துணைவியார், மகள், தம்பி, மாமனார், மச்சான் இவர்களுக்கு இப்படி சில பாடல்களைச் சொல்லிக் காண்பித்திருக்கிறேன். அப்போதும் சில சொற்களுக்குப் பொருள் சட்டென்று அவர்களுக்குப் புரியாமல் போகும் போது தற்காலப் பலுக்கலையோ ஆங்கில/தமிழ்ச்சொற்களையோ சொல்லிப் புரிய வைக்க வேண்டியிருக்கிறது.

குமரன் (Kumaran) said...

நாயகி ஸ்வாமிகள் அரங்கனைப் பாடிய பாடல்கள் சில மதுரையின் ஜோதி பதிவில் இருக்கின்றன. பாருங்கள் இராகவ். அவருடைய கதையும் அங்கே இருக்கிறது என்று நினைக்கிறேன்.

srimannayagi.orgஐயும் பார்க்கவும்.

குமரன் (Kumaran) said...

பொருத்தமான பாசுரம் இராதா. நன்றி.

குமரன் (Kumaran) said...

நன்றி இராஜேஷ் நாராயணன்.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP