Wednesday, February 11, 2009

கிராமத்துக் கும்மி! ஓடக்கார ராமா! கப்பல்கார கண்ணா!

கிராமத்துக் கும்மியில் பல வகை உண்டு! சாதாரண கிராம வாழ்க்கை பற்றியும் கும்மியில் பாடலாம்! கடினமான தத்துவத்தையும் சல்லீசா கும்மியில் சொல்லி விட்டுப் போயிறலாம்!

நண்பர் ராகவ் மற்றும் பரவஸ்து சுந்தர் அண்ணா அவர்களால், ஒரு அருமையான பாட்டு கிடைச்சுது! இதை அவிங்க ஊர்ல கும்மியா பாடுவாங்களா-ன்னு நமக்குத் தெரியாது!
ஆனால் இதே மெட்டில் அமைந்த பாடல்களை, எங்கூர்ல உடனே கும்மி ஆக்கீருவாங்க! :)

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்! நீந்தார்
இறைவன் அடிசேரா தார்!
பற்றுக பற்றற்றான் பற்றினை! அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு!


ஐயன் வள்ளுவனின் குறளை, எப்படி கும்மியாக்குறாங்க பாருங்க!
ஆசை என்னும் பாரக் கப்பல் ஏறக் கூடாது!
சாரமற்ற சம்-சாரக் கடல் தாண்டி விடலாம்!

இப்போ தெரியுதுங்களா கும்மி மகாத்மியம்? ஏதோ நாட்டுப்புறக் கும்மி-ன்னு அவ்வளவு லேசா எடை போட்டுறாதீங்க! (பதிவுலக் கும்மி வேற! :)
பாட்டைப் பார்க்கலாமா? வாழைப்பந்தல் கிராமத்தில் எவனோ ஒரு கிராமத்தான் காச் மூச்-ன்னு பாடறான்! கேட்டுக்கிட்டே படியுங்கள்! :)
Gabcast! MadhaviPanthal #58




தாண்டி விடலாம் கடல் தாண்டி விடலாம்!
சாரமற்ற சம்-சாரக் கடல் தாண்டி விடலாம்!
சாரமற்ற சம்-சாரக் கடல் தாண்டி விடலாம்!
(தாண்டி விடலாம்)

சாரமற்ற சம்-சாரக் கடல் தாண்ட வேண்டியே
ஆசை என்னும் பாரக் கப்பல் ஏறக் கூடாது! - பேர்
ஆசை என்னும் பாரக் கப்பல் ஏறக் கூடாது!
(தாண்டி விடலாம்)

இராமன் நல்ல ஓடக்காரன் தேடிப் பிடியுங்கள்!
கிருஷ்ணன் நல்ல கப்பல்காரன் கண்டு பிடியுங்கள்! - எங்கள்
கண்ணன் நல்ல கப்பல் என்றே கண்டு பிடியுங்கள்!

பாண்டுரங்கன் பெயரைச் சொல்லி படகில் ஏறுங்கள்!
பக்தர்களைக் காக்கக் காசு கேட்கவே மாட்டான்! - அவன்
பக்தர்களைக் காக்கக் காசு கேட்கவே மாட்டான்!

ராமா ராமா என்றே சொல்லித் தாண்டி விடலாம்!
கிருஷ்ணா கிருஷ்ணா என்றே சொல்லித் தாண்டி விடலாம்!


கண்ணா கண்ணா என்றே சொல்லித் தாண்டி விடலாம்!
பாண்டு ரங்கா என்றே சொல்லித் தாண்டி விடலாம்!


தாண்டி விடலாம் கடல் தாண்டி விடலாம்!
சாரமற்ற சம்சாரக் கடல் தாண்டி விடலாம்!
சாரமற்ற சம்சாரக் கடல் தாண்டி விடலாம்!
(தாண்டி விடலாம்)



இந்தப் பாட்டின் வரிகளை நினைவில் இருந்து எழுதி அனுப்பிய
* நண்பர் ராகவ்-க்கும்,
* பரவஸ்து சுந்தர் அண்ணாவுக்கும்,
அடியோங்கள் நன்றி!

ஒவ்வொரு வரி பற்றியும், அவர்கள் ஊரான பரமக்குடி-எமனேஸ்வரத்தில் இதைப் பாடியது பற்றியும், அவிங்களே வந்து குறிப்பு தருவாங்க!
வாங்க எம(னேஸ்வரத்) தூதர்களே! :)

இந்தக் கும்மிப் பதிவில், இராமன்-கண்ணன் பேரைச் சொல்லி, அவரவர் தாராளமாக் கும்மி அடிக்கலாம்! அடிக்கணும்! வாங்க! :)

4 comments :

Raghav said...

கிராமத்து கும்மி நல்லாத்தான் இருக்கு

இந்தப்பாட்டு யாரும் பாடி நான் கேட்டதில்லை.. நீங்க நல்லா பாடிருக்கீங்க

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Raghav said...
கிராமத்து கும்மி நல்லாத்தான் இருக்கு//

:)

//இந்தப்பாட்டு யாரும் பாடி நான் கேட்டதில்லை..//

சரஸ்வதியும் லட்சுமியும் சங்கரிகளும் ராமா-என்ற மெட்டு!

//நீங்க நல்லா பாடிருக்கீங்க//

Dankees:)
ஷைல்ஸ் அக்கா வந்து பாடட்டும்! சூப்பரா இருக்கும்!

ஷைலஜா said...

வாழப்பந்தல் கிராமத்துக்காரரே ராமாராமா- ஒலிப்
பேழையிலே குரலைக்கேட்டேன் ராமாராமா
தாழம்பூவாசம்போல தங்கக்குரல்தான்

கண்ணாகண்ணா-மனசு
ஆழம்வரை ஊடுருவுது கண்ணா கண்ணா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷைலஜா said...
வாழப்பந்தல் கிராமத்துக்காரரே ராமாராமா- ஒலிப்
பேழையிலே குரலைக்கேட்டேன் ராமாராமா//

ஆகா...
யார் அது என் பாட்டுக்கு எசப்பாட்டு பாடுறது? :))

//தாழம்பூவாசம்போல தங்கக்குரல்தான்//

நீங்க பாடினீங்க-ன்னா இன்னும் சூப்பரா இருக்கும்-க்கா!

//மனசு
ஆழம்வரை ஊடுருவுது//

பாட்டின் வரிகள் எளிமையா இருந்தாலும் அவ்வளவு சக்தி வாய்ந்தவை-க்கா!
யார் எழுதியது-ன்னு ராகவ் தான் வந்து சொல்லணும்!

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP