சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா - என்பவள் யார்?
இன்னிக்கி கண்ணன் பாட்டுக்குள்ள ஒரு "கண்ணன் பாட்டு"! பாரதியாரின் கண்ணன் பாட்டு நூலில் இருந்து சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா என்னும் சூப்பர் பாட்டு!
* இதைச் சினிமாவிலும் பாடுவாங்க! கர்நாடக சங்கீதத்திலும் பாடுவாங்க!
* தமிழ் இசையிலும் பாடுவாங்க! மெல்லிசைக் கச்சேரியிலும் பாடுவாங்க!
அப்படி என்ன தான் இருக்கு இந்தப் பாட்டில்? பார்க்கலாமா?
"சரி...மொதல்ல இது கண்ணன் பாட்டு தானா?"
"அட என்ன கேள்வி இது? பாரதியாரின் கண்ணன் பாட்டு என்னும் தொகுப்பில் தானே இருக்கு! கண்ணன் பாட்டே தான்!"
"இல்லை! இது பராசக்தி பாட்டு!"
"அடிங்க! இதைக் கண்ணன் பாட்டில் தானே பாரதி பாடுறான்?
* இதுக்கு முந்தன பாட்டு = கண்ணன் என் சத்குரு!
* இதுக்கு அடுத்த பாட்டு = தீராத விளையாட்டுப் பிள்ளை!
அப்புறம் எப்படி இது பராசக்தி பாட்டு ஆகும்? கொழப்பம் பண்றதே பொழைப்பாப் போச்சு கேஆரெஸ் ஒனக்கு! "
"ஹிஹி! ஆனால் பாரதியார், இதுக்கு முன்னுரை எழுதும் போது,
"பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு"-ன்னு எழுதறாரே!"
"ஆகா! அப்படியா சேதி! இது எனக்குத் தெரியாதே! கண்ணன் பாட்டுத் தொகுப்பில் பராசக்தி எங்கே வந்தா? எப்படி வந்தா?"
"அப்படிக் கேளு! அதை விட்டுப்போட்டு, கொழப்பம் பண்றேன், கொய்யாப் பழம் பண்றேன்-ன்னு சொன்னா எப்படி?" :)
"சரி, சரி...கோச்சிக்காதே! சொல்லுடா"
"இது பாரதியார் எழுதினாப் போல, "பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு" தான்! எதுக்கு அவர் கண்ணன் பாட்டில் பராசக்தியைப் பாடணும்?"
கண்ணனுடன் பிறந்த குழந்தை பராசக்தி!
* அவன் கிருஷ்ணன் என்றால், இவள் கிருஷ்ணை!
* அவன் சியாமளன் என்றால், இவள் சியாமளை!
* அவன் கருப்பன் என்றால், இவள் கருப்பி!
கண்ணன், ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒருத்தி மகனாய் ஒளிந்து விளையாடினான்! ஆனால் அவள்?
பெற்ற தாயான யசோதை, பார்க்கக் கூடக் கொடுத்து வைக்காமல், கை மாறிய குழந்தை!
பெண் குழந்தையாச்சே விட்டுருவான் என்று நினைத்தார்கள் அடியவர்கள்! ஆனால் கருத்துப் பிழை கொண்ட கம்சன் விடுவானா என்ன?
மூர்க்கத்தனமான பிடிப்புக்கு ஆண் என்ன? பெண் என்ன?
குழந்தையைக் கொல்ல உசரத் தூக்கினான்! உதை வாங்கினான்!
கம்சன் கையில் சிக்காமல், வானில் பறந்தாள் மாயா! காத்யாயினி! காற்றில் தெய்வமாய்க் கலந்தாள்!
இன்னிக்கும் ஆயர்/கோனார் வீடுகளில் (எங்க வீட்டில் உட்பட), மணம் ஆகாமல் மறைந்து போகும் இளம் பெண்களுக்கு, ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல் அன்று படையல் போடுவார்கள்! புதுப் புடவையை ஒரு பொண்ணு போல சுத்தி, அதற்கு காதோலை-கருக மணி மாட்டி, நகை போட்டு, அதன் மடியில் தேங்காய் பூ பழம் வச்சி, பூசை போடுவார்கள்!
பாரதியும் அதையே செய்கிறான்!
பாரதியின் கண்ணன் பாட்டில் கண்ணக் குழந்தை ஓடி விளையாடுகிறது! ஓடி விளையாடு பாப்பா, ஒரு குழந்தையை வையாதே பாப்பா அல்லவா?
எனவே இன்னொரு குழந்தையான, இரவில் இடம் மாறிய பராசக்திக் குழந்தையை, கண்ணனின் தங்கச்சியை, கண்ணனுடன் ஓடி விளையாடச் செய்கிறான்!
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா! செல்வக் களஞ்சியமே! என்னைக் கலி தீர்த்தே, உலகில் ஏற்றம் புரிய வந்தாய்!
சின்னஞ்சிறு கிளியான ஒரு குழந்தை பாடுவது...பேத்துவது :)) Dont Miss!
பிடிச்சமான ஒரு சுட்டியைக் கேட்டுக்கிட்டே படிங்க! பதிவின் கீழே இன்னும் பல சுட்டிகள், அசைபடங்கள் இருக்கு!
திரைப்படங்களில்:
* கலைஞரின் நீதிக்குத் தண்டனை படத்தில் இருந்து...சொர்ணலதாவின் முதல் பாடல்-எம்.எஸ்.வி இசையில்
* மணமகள் படத்தில் இருந்து...எம்.எல்.வசந்தகுமாரி
தமிழிசை-கர்நாடக இசைகளில்:
* மகாநதி ஷோபனா
* சாக்சோஃபோன்
* மகராஜபுரம் சந்தானம்
இந்தப் பாடல் ஒரு நவரசப் பாடல்! மகிழ்ச்சி-சோகம், சிரிப்பு-அழுகை, வெற்றி-ஏக்கம்-ன்னு விதம் விதமா பிரதிபலிக்கும்!
இதுவும் "கிருஷ்ணை" பாட்டே! "கிருஷ்ணன்" பாட்டே! கண்ணன் பாட்டே!
சின்னஞ்சிறு கிளியே, கண்ணம்மா! செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே, உலகில் ஏற்றம் புரிய வந்தாய்!
பிள்ளைக் கனியமுதே! கண்ணம்மா! பேசும் பொற் சித்திரமே!
அள்ளி அணைத்திடவே, என் முன்னே ஆடி வரும் தேனே!
ஓடி வருகையிலே, கண்ணம்மா உள்ளம் குளிருதடி!
ஆடித் திரிதல் கண்டால், உன்னைப் போய் ஆவி தழுவுதடி!
உச்சிதனை முகர்ந்தால், கருவம் ஓங்கி வளருதடி!
மெச்சி உனை ஊரார், புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி!
கன்னத்தில் முத்தமிட்டால், உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி!
உன்னைத் தழுவிடலோ, கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி!
சற்று உன் முகம் சிவந்தால், மனது சஞ்சலம் ஆகுதடி!
நெற்றி சுருங்கக் கண்டால், எனக்கு நெஞ்சம் பதைக்குதடி!
உன் கண்ணில் நீர் வடிந்தால், என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி!
என் கண்ணிற் பாவையன்றோ? கண்ணம்மா! என்னுயிர் நின்னதன்றோ!
சொல்லும் மழலையிலே, கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய்!
முல்லைச் சிரிப்பாலே, எனது மூர்க்கம் தவிர்த்திடுவாய்!
இன்பக் கதைகளெல்லம், உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ?
அன்பு தருவதிலே, உன்னை நேர் ஆகுமோர் தெய்வம் உண்டோ?
மார்பில் அணிவதற்கே, உன்னைப்போல் வைர மணிகளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே, உன்னைப்போல் செல்வம் பிறிதுமுண்டோ?
வாய்ப்பாட்டுகளில்:
* டி.என்.சேஷகோபாலன்
* செளம்யா
* உன்னி கிருஷ்ணன்
* பம்பாய் சகோதரிகள்
இசைக் கருவிகளில்:
* புல்லாங்குழல் - டி.ஆர்.மகாலிங்கம்
* மேண்டலின் - ஸ்ரீநிவாஸ்
* வீணை - ராஜேஷ் வைத்யா
* சாக்சோஃபோன் - கத்ரி கோபால்நாத்
நித்ய ஸ்ரீ
பாரதியார் பைரவியில் இதை இட்டாலும்...ஒவ்வொரு பத்திக்கும் ஒரு ராகமாக, ராக-மாலையாகப் பாடப்படுவதும் உண்டு!
காபி, மாண்ட், வசந்தா, திலாங், ஹிந்தோளம், நீலாமணி, நீலாம்பரி, வலாசி, மத்யமாவதி
TM கிருஷ்ணா - சஞ்சய் வாணன் (சின்னஞ் சிறு பையன் :)
வீணை சிட்டிபாபு
சுதா ரகுநாதன்
நடனம்
42 comments :
அற்புதமான பதிவு.
அமரத்துவமான் பாரதி பாடல்களில் இதற்கு முக்கியமான இடம் உண்டு.
பாரதி சிறுவயதில் யாரோ ஒரு பெண்ணை விரும்பினார் எனவும் அவர் தந்தையார் அப்பெண்ணை மருமகளாக்க விருப்பமில்லாமல் இருந்ததால் செல்லம்மாவைக் கைப்பிடித்தார் என்னும் வதந்திகள் உண்டு.
அனைவர் பாடிய வெர்ஷன்களையும் போட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன்.
யு ட்யூபில் அம்மாவும் குழந்தையுடன் பாடுகிறாரா அல்லது பின்னணியில் ஒலிப்பானில் பாடல் வருகிறதா?
அம்மாவே பாடுகிறார் எனில் ரொம்பவும் effortless ஆகப் பாடுகிறார் எனத் தோன்றுகிறது;நல்ல பாடகியாக முயற்சிக்கலாம்.
One of my all time favorite song. Thanks for giving all versions in one place
அருமையான தொகுப்பு, நன்றி நண்பர்களே!
ஒரே ஒரு சின்னத் திருத்தம் (குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குகிறவனாக்கும் நான் :) ... ‘நீதிக்குத் தண்டனை’ இசை இளையராஜா இல்லை, சொர்ணலதாவை அறிமுகப்படுத்திய இந்தப் பாடல் எம். எஸ். விஸ்வநாதனின் படைப்பு. நேரம் இருக்கும்போது திருத்திவிடுங்கள், நன்றி!
- என். சொக்கன்,
பெங்களூர்.
ஆகா அந்த சின்னக்கிளி பாடிய அழகும் அதுக்கு ஆடிய அழகும்.. அற்புதம்... அற்புதம் காணக்கண்கோடி வேண்டும்..:) நன்றி நன்றி..
அற்புதமான தொகுப்பு....
அன்புடன் அருணா
எல்லா பாட்டையும் ஒரே இடத்தில் கொடுத்ததற்கு நன்றி ரவிண்ணா.. இனிமே தான் கேட்கணும்.
//"இல்லை! இது பராசக்தி பாட்டு!"//
இன்னைக்கு தான் தெரிஞ்சுகிட்டேன்...
பெண்குழந்தையைப் பார்த்து ‘கலி தீர்த்து ஏற்றம் புரிய வந்தாய்’னு சொல்ல பாரதியார் வர வேண்டியிருந்தது... அதுக்காகவே இந்த பாட்டு பிடிக்கும்.
அந்த விடியோ - அழகு! (அவங்க பர்மிஷன் வாங்கினீங்களா? :-) அந்தத் தாய்க்கு ஒரு ஹைஃபைவ்.
//கெக்கே பிக்குணி said...
பெண்குழந்தையைப் பார்த்து ‘கலி தீர்த்து ஏற்றம் புரிய வந்தாய்’னு சொல்ல பாரதியார் வர வேண்டியிருந்தது... அதுக்காகவே இந்த பாட்டு பிடிக்கும்//
அருமையாச் சொன்னீங்க-க்கா!
அதுக்கு அப்புறம் தான் கவிமணி வந்து "மங்கையராய்ப் பிறப்பதற்கே"-ன்னு பாடினாரு!
பாடல் வரிக்கு நான் பொருள் சொல்லலை! எளிமையாத் தான் இருக்கு என்பதால்!
ஆனால் "கலி தீர்த்து", "உன்மத்தம்"-ன்னு ரெண்டு மூனு வருது!
நீங்களே ஒன்-லைனர் விளக்கம் சொல்லுங்களேன் கெபி அக்கா!
//அந்த விடியோ - அழகு! (அவங்க பர்மிஷன் வாங்கினீங்களா? :-)//
எனக்குத் தெரியும்! சூப்பராப் பிடிச்சிருக்குல்ல! அப்பறம் வொய் திஸ் கிராஸ் கொஸ்டின்-க்கா? நோ நோ! நோ கேள்வீஸ்! :))
//அந்தத் தாய்க்கு ஒரு ஹைஃபைவ்//
அந்தக் குழந்தைக்கு ஒரு முத்தம் + ஹைஃபைவ் :))
அது ரொம்ப பாடலீன்னாலும், என்னைப் போலவே சூப்பராப் பாவ்லா பண்ணுது! :))
//அறிவன்#11802717200764379909 said...
அற்புதமான பதிவு.
அமரத்துவமான் பாரதி பாடல்களில் இதற்கு முக்கியமான இடம் உண்டு//
நன்றி அறிவன்!
இந்தப் பாட்டைக் குழந்தை, காதல், பக்தி-ன்னு எல்லாத்துக்குமே பயன்படுத்திக்கறாங்க இல்லையா? அதான் பாடலின் மகத்தான வெற்றி!
//பாரதி சிறுவயதில் யாரோ ஒரு பெண்ணை விரும்பினார் எனவும் அவர் தந்தையார் அப்பெண்ணை மருமகளாக்க விருப்பமில்லாமல் இருந்ததால் செல்லம்மாவைக் கைப்பிடித்தார் என்னும் வதந்திகள் உண்டு//
ஹா ஹா ஹா!
பாரதிக்கே வதந்தியா? :)
வதந்தி-க்கு தமிழில் என்ன? = அலர்??
//அனைவர் பாடிய வெர்ஷன்களையும் போட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன்//
இப்பத்திக்கு இவ்ளோ தான் திரட்ட முடிஞ்சுது! :)
//யு ட்யூபில் அம்மாவும் குழந்தையுடன் பாடுகிறாரா அல்லது பின்னணியில் ஒலிப்பானில் பாடல் வருகிறதா?//
அம்மா தான் பாடுறாங்க-ன்னு நினைக்கிறேன்!
ஏன்னா குழந்தைக்கு ஏத்தாப் போல நடுநடுவில் நிறுத்துறாங்க!
//Anonymous said...
Thanks for giving all versions in one place//
Anytime Anony!
My pleasure! This is one stop shop :)
//என். சொக்கன் said...
அருமையான தொகுப்பு, நன்றி நண்பர்களே!//
ரசித்தமைக்கு நன்றி சொக்கன்!
//ஒரே ஒரு சின்னத் திருத்தம் (குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குகிறவனாக்கும் நான் :)//
தப்பே இல்ல! ஆல் தி பெஸ்ட்!
//இந்தப் பாடல் எம். எஸ். விஸ்வநாதனின் படைப்பு.//
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி! எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது! ஆனால் TFM தளத்தில் ராஜா-ன்னு பார்த்ததால் மாற்றினேன்!
நீங்க சொன்ன பிறகு இன்னும் தேடியதில்...படம் பற்றிய தகவல்:
http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=neethikku%20thandanai
//நேரம் இருக்கும்போது திருத்திவிடுங்கள், நன்றி!//
இப்பவே!...
எம்.எஸ்.வி மெச்சும் உங்களை, என் நண்பன் விஸ்வநாத ராகவனுக்கு ரொம்பவே பிடிக்கும்! :))
வணக்கம் நாங்கள் தினம் ஒரு மென்பொருள் என்னும் பெயரில் ஒரு பதிவு எழுதி வருகிறோம் . அதற்கு உங்கள் ஆதரவு தேவை , எங்களை ஆதரிக்க விரும்பினால் கீழே ஆங்கிலத்தில் உள்ள code ஐ உங்கள் வலைப்பதிவில் பதியலாம் .இந்த code ஐ copy செய்து உங்கள் வலைப்பதிவில் ->layout->Add a Gadget ->HTML/JavaScript குச் சென்று paste செய்து பதிந்து விடவும் மிக்க நன்றி .code ஐ பெறுவதற்கு http://tamilwares.blogspot.com/2009/01/support-us.html
எனக்கு ரொம்பப் பிடித்த பாடல்; அரங்கேற்றத்துக்கு நான் ஆடிய "பதம்" இதான்னு பெருமையுடன் தெரிவிச்சுக்கறேன். (நீங்க யாரும் பார்க்கலைங்கிற தைரியம்தான் :) நன்றி கண்ணா.
அருமையான தொகுப்பு இரவி. எல்லா ஒளிச்சுட்டிகளையும் 'கேட்டேன்'. முதலாவதை மட்டும் பார்த்துக் கொண்டே கேட்டேன். நல்லா பாடறாங்க ரெண்டு பேரும். :-)
எவ்வளவு நீளமா பாடினாலும் அது நீலாம்பரிதான்! :)
பாரதியின் சுயசரிதையில அவர்தம் “பிள்ளைக் காதல்” இருக்கு. இது பற்றி மற்ற பாரதிசரிதைகளிலும் படித்திருக்கிறேன்.
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
ஆகா அந்த சின்னக்கிளி பாடிய அழகும் அதுக்கு ஆடிய அழகும்.. அற்புதம்... அற்புதம்//
he he! i know u r going to love it, muthakka! :)
கண்ணன் பாட்டோ மலைமகள் பாட்டோ பாரதி பாட்டு இல்லை என்று சொல்லாதவரை பிரச்சினை இல்லை. யாழ் இனிது....... மழலைச் சொல். டான்ஸ் வேறு போனஸ்.அது சரி சிட்டிபாபு படத்தை/வீணை இசையை போட்டு விட்டு கேஆர்ஸ் பாலச்சந்தர் என்று சொன்னால் சரின்னு சொல்லிடனுமா கேஆர்ஸ்.
//தி. ரா. ச.(T.R.C.) said...
கண்ணன் பாட்டோ மலைமகள் பாட்டோ பாரதி பாட்டு இல்லை என்று சொல்லாதவரை பிரச்சினை இல்லை//
பாரதி பாட்டு இல்லை-ன்னு சொன்னாலும் பிரச்சனை இல்லை திராச! பகல் ஒளி சூரியனது இல்லை-ன்னு சொன்னா சூரியனுக்கு அதனால் எந்தப் பிரச்சனையும் இல்லை! :)
//யாழ் இனிது....... மழலைச் சொல். டான்ஸ் வேறு போனஸ்//
நன்றி! டான்ஸ் நம்ம கவி அக்காவுக்காக இட்டது :)
//அது சரி சிட்டிபாபு படத்தை/வீணை இசையை போட்டு விட்டு கேஆர்ஸ் பாலச்சந்தர் என்று சொன்னால் சரின்னு சொல்லிடனுமா கேஆர்ஸ்//
சரியில்லை, தப்பு-ன்னு தாராளமாச் சொல்லலாமே!
சொக்கன் கூடச் சொல்லி இருக்காரு பாருங்க எம்.எஸ்.வி பற்றி!
பதிவில் மாற்றிட்டேன் திராச. பாலச்சந்தர் இசையும் கேட்டுக்கிட்டு இருந்தேன். பின்னர் சிட்டிபாபுவின் சுட்டியை ஒட்டும் போது அப்படியே ஒட்டிட்டேன் போல!
அதான் அசைபடத் துவக்கத்திலேயே சிட்டிபாபு-ன்னு கொட்டை எழுத்தில் போட்டு இருக்காங்களே! :)
//இலவசக்கொத்தனார் said...
எவ்வளவு நீளமா பாடினாலும் அது நீலாம்பரிதான்! :)//
ஹிஹி!
நீளாம்பரி? நீலாம்பரி?
ரெண்டுத்துக்கும் என்ன வித்யாசம் கொத்ஸ்? படையப்பா ரம்யா கிருஷ்ணன்-ன்னு சொல்லக் கூடாது, சொல்லிட்டேன்! :)
//அன்புடன் அருணா said...
அற்புதமான தொகுப்பு....//
ரசித்தமைக்கு நன்றி அருணா.
//Raghav said...
எல்லா பாட்டையும் ஒரே இடத்தில் கொடுத்ததற்கு நன்றி ரவிண்ணா.. இனிமே தான் கேட்கணும்//
ஒன் ஸ்டாப் ஷாப், ராகவ்வு :)
பாட்டை வீட்டில் போய் கேட்டீங்களா?
Raghav said...
//"இல்லை! இது பராசக்தி பாட்டு!"//
இன்னைக்கு தான் தெரிஞ்சுகிட்டேன்...//
சூப்பர்! எப்படி நம்ம பாரதி? அப்பவே கண்ணன்-சக்தி-ன்னு கலந்து அடிச்சிருக்காருல்ல? :)
//கவிநயா said...
எனக்கு ரொம்பப் பிடித்த பாடல்;//
தெரியும் :)
//அரங்கேற்றத்துக்கு நான் ஆடிய "பதம்" இதான்னு பெருமையுடன் தெரிவிச்சுக்கறேன்//
சூப்பரோ சூப்பர்!
அது உங்களை நினைச்சிக்கிட்டு தான் இட்டேன்! ஆனா இது இப்படிப் பொருந்தி வரும்-னு தெரியாதுக்கா! :)
//(நீங்க யாரும் பார்க்கலைங்கிற தைரியம்தான் :)//
அரங்கேற்ற வீடியோவின் யூட்யூப் சுட்டி ப்ளீஸ்! :))
மத்த எதுவுமே பிடிக்கலை. குட்டிப்பாப்பா + அம்மா பாடுனது தான்.
உள்ளம் நிறைந்து பாடிருக்காங்க. வாழ்த்துக்கள்
>>ஹா ஹா ஹா!
பாரதிக்கே வதந்தியா? :)
வதந்தி-க்கு தமிழில் என்ன? = அலர்??
>>
வதந்தி இல்லை;பல கட்டுரைகளில் இந்த செய்தி இருக்கிறது என்று நினைக்கிறேன்.
பை த வே,அலர் என்றால் தூற்றுதல் இல்லையோ?
வதந்திக்கான சரியான வார்த்தை என்ன,நானும் யோசிக்கிறேன்.
அந்த முதல் பாடலை பார்த்த பிறகு வேறு எதையும் இப்போது கேட்க பிடிக்கவில்லை.குழந்தையின் பாவம் அழக்காக இருந்தது.
//வடுவூர் குமார் said...
அந்த முதல் பாடலை பார்த்த பிறகு வேறு எதையும் இப்போது கேட்க பிடிக்கவில்லை.குழந்தையின் பாவம் அழக்காக இருந்தது//
வாங்க குமார் அண்ணா!
அதுக்குத் தான் அதை முதலில் போட்டு....dont miss-ன்னு சொன்னேன்! :)
மிஸ் பண்ணாம ரசிச்சதுக்கு நன்றி-ண்ணா!
//குமரன் (Kumaran) said...
அருமையான தொகுப்பு இரவி. எல்லா ஒளிச்சுட்டிகளையும் 'கேட்டேன்'.//
ஒளியைக் கேட்க முடியுமா? இது என்ன அறிவியல் விந்தை குமரன்? :))
//முதலாவதை மட்டும் பார்த்துக் கொண்டே கேட்டேன். நல்லா பாடறாங்க ரெண்டு பேரும். :-)//
வீட்டுல குட்டீஸ் கிட்ட, இந்தக் குட்டியைக் காட்டினீங்களா? :)
//இலவசக்கொத்தனார் said...
நீலாம்பரிதான்! :)//
கொத்ஸ்
நீலாம்பரி = நீல + அம்பரி...பேர்க் காரணம் ஏதாச்சும் தெரிஞ்சா சொல்லுங்களேன்!
ஆல்சோ,
நீலாம்பரி கேட்டா மட்டும் எப்படித் தூக்கம் தானா வருது?
லைட்டா விளக்க முடியுமா?
//கெக்கே பிக்குணி said...
பாரதியின் சுயசரிதையில அவர்தம் “பிள்ளைக் காதல்” இருக்கு. இது பற்றி மற்ற பாரதிசரிதைகளிலும் படித்திருக்கிறேன்//
ஆமா கெபி-க்கா!
அதைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு "ஒரு மாதிரி" சாஃப்ட் பீலிங்க்ஸ் ஓடும்.....
எனக்குப் பிடித்த, பாதித்த வரிகள்
மற்றொர் பெண்ணை மணஞ்செய்த போழ்து முன்
மாதராள் இடைக் கொண்டதொர் காதல் தான்
நிற்றல் வேண்டும் என உளத்து எண்ணிலேன்;
நினைவையே இம் மணத்திற் செலுத்திலேன்
...
...
கற்றும் கேட்டும் அறிவு முதிருமுன்
காத லொன்று கடமையொன்று ஆயின! :(((
//Jeeves said...
மத்த எதுவுமே பிடிக்கலை//
ஹா ஹா ஹா!
//குட்டிப்பாப்பா + அம்மா பாடுனது தான்//
குட்டிப் பாப்பா பாடுச்சா?
என்ன ஜீவ்ஸ் அண்ணே தப்பு தப்பாச் சொல்றீங்க?
குட்டிப் பாப்பா இசை அமைத்துப் பாடுச்சி...பேத்தலான, உள்ளங் குளிரும் இசையமைப்பு! :)
@அறிவன்
//வதந்தி இல்லை;பல கட்டுரைகளில் இந்த செய்தி இருக்கிறது என்று நினைக்கிறேன்//
ஹா ஹா ஹா! பாரதி சுயசரிதைப் பாடல் உங்களுக்கும் கெபி அக்காவுக்கும் கொடுத்திருக்கேன்! பாருங்க!
//பை த வே,அலர் என்றால் தூற்றுதல் இல்லையோ?//
பொதுவாக அலர் = மலர்தல், விரிதல், பரவுதல், தூற்றல் எல்லாமே உண்டு!
குறளில், அலர் அறிவுறுத்தல்-ன்னு அதிகாரம்! அதாச்சும் ஊர்ப் பேச்சு! பழிப்படு போலான வதந்தி-ன்னு வச்சிக்கலாம்!
//வதந்திக்கான சரியான வார்த்தை என்ன,நானும் யோசிக்கிறேன்.//
குமரன், ஜிரா, கோவி, சொல்-ஒரு-சொல் மக்கள்-ன்னு எல்லாரும் சேர்ந்து யோசிக்கலாமே? :)
ஒன்னுமே பிடிபடலை-ன்னா, நம்ம இராம.கி. ஐயா இருக்கவே இருக்காரு, வைத்த மா நிதியாக!
//கொத்ஸ்
நீலாம்பரி = நீல + அம்பரி...பேர்க் காரணம் ஏதாச்சும் தெரிஞ்சா சொல்லுங்களேன்!//
பெயர் காரணம் தெரியாது,
//ஆல்சோ,
நீலாம்பரி கேட்டா மட்டும் எப்படித் தூக்கம் தானா வருது?
லைட்டா விளக்க முடியுமா? //
தாலாட்டுக்கு உகந்த ராகம் நீலாம்பரி. தூக்கம் வருவதற்கு இதுக்கு மேல காரணம் வேணுமா?
ஆனா எனக்கு என்னமோ தாலாட்டுக்கு உகந்த ராகம் எனச் சொல்லிச் சொல்லியே psychologicalஆ நீலாம்பரி கேட்டாத் தூக்கம் வந்திடுதுன்னு நினைக்கிறேன்.
சின்னஞ்சிறுகிளி! எத்தனை அழகான சொல்! பாரதிமட்டுமே இப்படி கிளி என்றாலே பெண்(கிளிபோல பெண்ணைவளர்த்து......கையிலே கொடுத்தமாதிரின்னு பழையமொழிகூட உண்டே:)):)
என்கிற வார்த்தையை அதிலும் சின்னக்கிளி கூட இல்லையாம்- சின்னஞ்சிறுகிளியாம்- சிற்றஞ்சிறுகாலை(காளைஇல்ல:))) மாதிரி!
குட்டிப்பெண்ணை எப்படியெல்லாம் கொஞ்சுகிறார் பாருங்கள்! பெண்ணைப்போற்றுவதில் எங்கள்பாரதிக்கு உண்டோ ஈடு!
இந்த ஒருபாடல்போதும் பெண் இனமே அந்த மகாகவிக்குத்தலைவணங்கும்!
நவரசங்களும் இந்தப்பாடலில் தெறிக்கிறது!
மற்றபடி பாரதிக்கு சின்னவயதில் யாரோ கண்ணம்மா என்ற காதலி இருந்தார் என்கிற கதைகள் வதந்திகளாகவும் இருக்கலாம். ஏன் அந்தக்கண்ணம்மா
நல்ல சிநேகிதியாக இருந்திருக்கலாம்..அதில் என்ன தவறென்று புரியவில்லை. மனைவி செல்லம்மாவையே அவர் கண்ணமாவாக நினைத்தும்பாடி இருக்கலாம் என்கிறார்கள் சிலர்.
கலைஞரின் படைப்புகளைமட்டுமே நாம் பார்த்து கருத்து சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது.
மகாகவி ,பராசக்திபக்தர், தாய்நாட்டுப்பற்றுமிக்கவர்,தமிழை எளிமைப்படுத்தி இன்றும் என்றும் அனைவரையும் தமிழை நேசிக்கவைத்துக்கொண்டிருக்கும் கவிஞனின் ஒவ்வொரு கவிதையும் நம்மைச் சிந்திக்கவைக்குமென்றால் இநதச்சின்னஞ்சிறுகிளி, நம் மேனியை சிலிர்க்கவும் வைக்கக்கூடிய பாடல்! வாழ்க நீ எம்மான் பாரதி!
அழகான பாடகர்கள் குரலில் முக்கியமாய் மழலைஅதன் தாயின் குரலில் இயற்கையாய் பாடலைக்கேட்க வைத்த கேஆரெஸ், நீரும் பல்லாண்டு வாழ்க!
//இலவசக்கொத்தனார் said...
தாலாட்டுக்கு உகந்த ராகம் நீலாம்பரி. தூக்கம் வருவதற்கு இதுக்கு மேல காரணம் வேணுமா?//
எனக்கு பைரவி பாடினா கூடத் தூக்கம் வருது! யார் அந்த பைரவி-ன்னு கேக்கப்பிடாது! :)
//எனக்கு என்னமோ தாலாட்டுக்கு உகந்த ராகம் எனச் சொல்லிச் சொல்லியே psychologicalஆ நீலாம்பரி கேட்டாத் தூக்கம் வந்திடுதுன்னு நினைக்கிறேன்//
ஹிஹி! அப்படியா?
ஸ்வர வரிசை எதுவும் காரணம் இல்லையா?
எதுக்கும் ஜீவாவையும் கேட்டுப் பாக்குறேன்!
//ஷைலஜா said...//
கலைமகள் இதழில் காட்சி கொடுக்கும் அக்காவே வருக! வருக! வருக!
//சின்னக்கிளி கூட இல்லையாம்- சின்னஞ்சிறுகிளியாம்- சிற்றஞ்சிறுகாலை(காளைஇல்ல:))) மாதிரி!//
உடனே துணைக்கு ஆண்டாளா? :))
//நவரசங்களும் இந்தப்பாடலில் தெறிக்கிறது!//
1 பருப்பு ரசம்
2 மிளகு ரசம்
3 தக்காளி ரசம்
4 இஞ்சி ரசம்
5 பூண்டு ரசம்
6 கொத்துமல்லி ரசம்
7 கொள்ளு ரசம்
8 எலுமிச்சை ரசம்
9 பைனாப்பிள் ரசம்
சரி தானே-க்கா? :)))
//மனைவி செல்லம்மாவையே அவர் கண்ணமாவாக நினைத்தும்பாடி இருக்கலாம் என்கிறார்கள் சிலர்//
சூப்பர்! ஐ லைக் திஸ்!
என்ன கண்ணு-ன்னு கூப்புடறது இல்லையா? அதைப் போல!
//கலைஞரின் படைப்புகளைமட்டுமே நாம் பார்த்து கருத்து சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது//
100% with you on this!
//முக்கியமாய் மழலைஅதன் தாயின் குரலில் இயற்கையாய் பாடலைக்கேட்க வைத்த கேஆரெஸ், நீரும் பல்லாண்டு வாழ்க!//
அந்த மழலையை வாழ்த்துங்க-க்கா, உங்க வாயால!
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//ஷைலஜா said...//
கலைமகள் இதழில் காட்சி கொடுக்கும் அக்காவே வருக! வருக! வருக!
<<<<<<<<<<<<>..
பிரமாதமா ஏதும் சாதிச்சிடல ரவி ..இரண்டாம்பரிசுதான் என் கதைக்கு! முடிந்தால் என் வலைல அதனை தட்டச்சறேன் கலைமகள் பத்திரிகை மின்னஞ்சலில் படைப்புகளை வாங்கிக்கொள்வதில்லை(பலபத்திரிகைகள் இன்னமும் அப்படித்தான்:)) நன்றிவாழ்த்துக்கு!
]]1 பருப்பு ரசம்
2 மிளகு ரசம்
3 தக்காளி ரசம்
4 இஞ்சி ரசம்
5 பூண்டு ரசம்
6 கொத்துமல்லி ரசம்
7 கொள்ளு ரசம்
8 எலுமிச்சை ரசம்
9 பைனாப்பிள் ரசம்
சரி தானே-க்கா? :)))
>>>குறும்புரசம் உங்க இந்த கேள்வில:):)
\\\]] சூப்பர்! ஐ லைக் திஸ்!
என்ன கண்ணு-ன்னு கூப்புடறது இல்லையா? அதைப் போல!
\\\
ஆமாமாம்! கண்ணுங்களும் அதை விரும்புகிறதே அதான் அதிசியம்!!!
\\\\அந்த மழலையை வாழ்த்துங்க-க்கா, உங்க வாயால!\\\\\
GOD BLESS YOU DEAR CHILD!
//எதுக்கும் ஜீவாவையும் கேட்டுப் பாக்குறேன்! //
கேட்டதுனாலே சொல்லறேன் ;-) எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு :-)
ஆனா கேள்விப்பட்டது:
நீலம்பரி மட்டுமல்ல - குறிஞ்சி, கேதாரம் போன்ற ராகங்களும், அந்த ராக பாவங்களுக்கு ஏற்றதுபோல பாடினால், மனதை அமைதிப்படுத்துன்னு சொல்லறாங்க. அதனால இயற்கையா தாலாட்டுப் பாடல்களுக்கு தோதா இந்த இராகங்கள் அமையுது!
நம்ம திரை இசை அமைப்பாளர்களை விட்டால், நீலம்பரி இராகத்திலும் குத்துப் பாடலை போட்டு வைப்பார்கள்! இப்போ, கண்டிப்பா தூக்கம் வரணும்!
அருமையான பதிவு!!
இந்தபாடலின் பொருள் நயம் பற்றி சொல்லுங்கள்