Sunday, November 09, 2008

கே.பி.சுந்தராம்பாள் கண்ணன் பாட்டு பாடுவாங்களா? ராதா சமேதா கிருஷ்ணா!

வாங்க மக்கா, கண்ணன் பாட்டு வலைப்பூவில் பாட்டு போட்டே ரொம்ப நாள் ஆவுது! எவ்வளவு நாள் தான் கண்ணன் ரொமான்ஸ் மட்டுமே பண்ணிக்கிட்டு இருக்க முடியும்? அப்பப்போ பாட்டும் கேக்கணும்-ல?

கண்ணன் பாட்டு நூறாம் பதிவுக் கொண்டாட்டம்-ன்னு சொல்லிட்டு, அது முடிஞ்சவுடன் குமரன் கிட்ட கண்ணனைக் கொடுத்துட்டு, நடையைக் கட்டிறலாம்-னு பார்த்தேன்!
நொங்-ன்னு ஒரு குட்டு, புல்லாங்குழல்-லயே!
அடிங்க...ன்னு வாய் வந்திரிச்சி! திரும்பிப் பாத்தா....

ராதை...ஓ அடிச்சது ராதையா?
அப்படின்னா பரவாயில்லை! அந்த மாட்டுக்காரப் பையன் கண்ணன் தான் கைய வச்சானோ-ன்னு நினைச்சேன்! ராதா சமேதா கிருஷ்ணா-ன்னா ஓக்கே தான்! :)

கம்பீரக் குரல் அரசி, அம்மா, கேபி சுந்தராம்பாள் முருகன் பாட்டு பாடுவாங்க! கலக்குவாங்க! தெரியும்! கண்ணன் பாட்டு பாடுவாங்களோ? இல்லீன்னா...முருகனை அல்லால் வேறோர் குறுகனைப் பாட மாட்டேன்-ன்னு சொல்லிருவாங்களோ??
சேச்சே! அம்மையாருக்கு கனிவான மனசு! கண்ணக் குழந்தையை விரும்பாதாவரும் உண்டோ?

இந்தப் பாட்டு சினிமா, ரீ-மிக்ஸ், Fusion, கச்சேரி-ன்னு எல்லா இடத்திலேயும் பிரபலம்!
ஏன்னா ரொம்ப ரொம்ப சின்னப் பாட்டு!
அதே சமயம் வெஸ்டர்ன் இஷ்டைல்-ல, வேகமா வரும் பாட்டு! Band Music போல களை கட்டும் பாட்டு!
கேளுங்க, கே.பி.எஸ் குரலில்!

அப்படியே, ஒரு Fusion! சாக்ஸபோன்-கத்ரி கோபால்நாத் (DONT MISS!!!)



(எடுப்பு)
ராதா சமேதா கிருஷ்ணா
(ராதா சமேதா)

(தொடுப்பு)
நந்த குமார நவநீத சோரா
பிருந்தா வன கோவிந்த முராரே

(ராதா சமேதா)

(முடிப்பு)
கோபி மனோகர கோகுல வாச
ஷோபித முரளீ கான விலாசா
சுந்தர மன்மத கோடிப் பிரகாசா
(ராதா சமேதா)

ராகம்: மிஸ்ர யாமன்
தாளம்: ஆதி
வரிகள்: ?
குரல்: கேபி சுந்தராம்பாள்


அதே பாடல், பலரின் கைவண்ணத்தில்:

* GNB-GN பாலசுப்ரமணியன் -- (ஷைலஜா அக்காவின் நட்சத்திர ஆணைப்படி!)

* MLV-எம்.எல்.வசந்தகுமாரி, பழைய தமிழ்த் திரைப்படத்தில்

* உன்னி கிருஷ்ணன்

* பம்பாய் சகோதரிகள்

* வயலின்-குன்னக்குடி வைத்தியநாதன்

* வயலின்-கன்னியாகுமரி

* இளவரசர் ராம வர்மா (ஸ்வாதித் திருநாள் பரம்பரையில் வந்தவர்)


50 comments :

Kavinaya said...

கண்ணனை மறந்துட்டோமேன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்... நல்லது நல்லது. அதென்ன ஜீவாவும் இப்பதான் ஒரு அழகு கண்ணன் பாட்டு போட்டிருக்கார்... ஏதாச்சும் கண்ணன் ஸ்பெஷல் போயிட்டிருக்கா? நல்ல பாடலுக்கு நன்றி.

jeevagv said...

அந்தக் காலத்தில் இந்தப் பாடலை பாடாத பாடகர்களே இருந்திருக்க மாட்டார்கள்!
அவ்வளவு பிரபலமான பாடல் - பட்டி தொட்டி முதல் பஜனைக் கூடம் வரை, அனைவர் வாயிலும் முண்முணுத்த பாடல்!
கே.பி.எஸ் அம்மா, பாடலின் இடை இடையே பேசுவதைக் கேட்பதே சுவாரஸ்யம்!

துளசி கோபால் said...

எனக்குப் பிடிச்சப் பாட்டு.

ஜஸ்ட் ஆறே வரிதான்.
சட்னு பாடி முடிச்சுட்டுச் சுண்டலை வாங்கிட்டு வந்துறலாம்:-))))

ஷைலஜா said...

எனக்கும் பிடிச்சபாட்டு உப்புமா மாதிரி ஆபத்பாந்தவ அனாதரட்சகபாட்டு... ஒருகாலத்துல நான் இந்தப்பாட்டையே கொலுவில கல்யாணங்களில் பாடினதால் ராதாசமேதாஷைலஜான்னு பேரே வச்சிட்டாங்க!!! அப்றோம் தான் குறைஒன்றுமில்லைக்கு மாறினேன்!!!
ரவி..ஜிஎன்பி பாட்டும் ஜோரா இருக்குமே அதுவும் கிடைச்சா சேருங்களேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கவிநயா said...
கண்ணனை மறந்துட்டோமேன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்... நல்லது நல்லது.//

நானும் அப்படித் தான்-கா நினைச்சேன்! குமரன் கூட ஞாபகமே படுத்தல! நல்ல வேளை ராதா வந்து தட்டினா! :)
அவளைக் குமரனையும் தட்டச் சொல்லுறேன்! :)

//அதென்ன ஜீவாவும் இப்பதான் ஒரு அழகு கண்ணன் பாட்டு போட்டிருக்கார்... ஏதாச்சும் கண்ணன் ஸ்பெஷல் போயிட்டிருக்கா?//

கண்ணன் தேவன் டீ குடிச்ச்சோம் ரெண்டு பேரும்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...
அந்தக் காலத்தில் இந்தப் பாடலை பாடாத பாடகர்களே இருந்திருக்க மாட்டார்கள்!
அவ்வளவு பிரபலமான பாடல்//

ஆமாம் ஜீவா!
அது என்ன மிஸ்ர யாமன்?
ராகம் கேள்விப்படாதது! ஆனா இந்தப் பாட்டு மட்டும் வாயில் ஓடிக்கிட்டே இருக்கும்!

டீச்சர் சொன்னா மாதிரி ரொம்ப அடி வாங்காம மனப்பாடம் செய்யவும் ரொம்ப ஈசி :)

//கே.பி.எஸ் அம்மா, பாடலின் இடை இடையே பேசுவதைக் கேட்பதே சுவாரஸ்யம்!//

நானும் கவனிச்சேன்!
ரொம்ப வயதான காலத்தில் பாடறாங்களோ? கொஞ்சம் மூச்சும் கேட்குது! ஆனா பேசிக் கிட்டே பாடுவது என்னமோ, நமக்கு-ன்னு தனியாப் பாடிக் காட்டுவது போல் இருக்கு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//துளசி கோபால் said...
எனக்குப் பிடிச்சப் பாட்டு.

ஜஸ்ட் ஆறே வரிதான்.
சட்னு பாடி முடிச்சுட்டுச் சுண்டலை வாங்கிட்டு வந்துறலாம்:-))))//

சூப்பரு!
நானும் அதே தான் பண்ணுவேன் டீச்சர்! ஆனா ஒரே ஒரு பிராப்ளம்! இதை வேற யாரும் பாடிறக் கூடாது! எனக்கு கெட்ட கோவம் வரும்! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷைலஜா said...
எனக்கும் பிடிச்சபாட்டு உப்புமா மாதிரி//

ஓ...உப்புமா பதிவு மாதிரி இது உப்புமா பின்னூட்டம்-ன்னு சொல்லுங்க! :)

// இந்தப்பாட்டையே கொலுவில கல்யாணங்களில் பாடினதால் ராதாசமேதாஷைலஜான்னு பேரே வச்சிட்டாங்க!!!//

ஹா ஹா ஹா
ராதா சமேதா ஷைலா! ஜா ஜா!
ராதா சமேதா ஷைலா!
:)

//ஜிஎன்பி பாட்டும் ஜோரா இருக்குமே அதுவும் கிடைச்சா சேருங்களேன்!//

அக்கா சொல்றான்!
அருணாச்சலம் செய்யறான்!
Done! :)

ஷைலஜா said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//ஷைலஜா said...
எனக்கும் பிடிச்சபாட்டு உப்புமா மாதிரி//

ஓ...உப்புமா பதிவு மாதிரி இது உப்புமா பின்னூட்டம்-ன்னு சொல்லுங்க! :)

// இந்தப்பாட்டையே கொலுவில கல்யாணங்களில் பாடினதால் ராதாசமேதாஷைலஜான்னு பேரே வச்சிட்டாங்க!!!//

ஹா ஹா ஹா
ராதா சமேதா ஷைலா! ஜா ஜா!
ராதா சமேதா ஷைலா!
:)
>>>>>>>:):) வால்(சூப்பர்ஸ்டார்)நட்சத்திரம்!!!

//ஜிஎன்பி பாட்டும் ஜோரா இருக்குமே அதுவும் கிடைச்சா சேருங்களேன்!//

அக்கா சொல்றான்!
அருணாச்சலம் செய்யறான்!
Done! :)>>>>>கேட்டதும் கொடுப்பவரே கண்ணபிரான் ரவிசங்கரே நியூயார்க்நாயகரே!!

Raghav said...

ராதா சமேதா கிருஷ்ணர் அழகா.. அம்சமா இருக்கார்.. பாட்டுல...

Raghav said...

//எவ்வளவு நாள் தான் கண்ணன் ரொமான்ஸ் மட்டுமே பண்ணிக்கிட்டு இருக்க முடியும்? அப்பப்போ பாட்டும் கேக்கணும்-ல? //

ரொமான்ஸ் என்றாலே பாட்டு தானே..

Raghav said...

//முருகனை அல்லால் வேறோர் குறுகனைப் பாட மாட்டேன்- //

குறுகன் அப்புடின்னா விளக்கம் சொல்லுங்களேன்.. திருக் குருகூர் பிரானா ?

Raghav said...

//கம்பீரக் குரல் அரசி, அம்மா, கேபி சுந்தராம்பாள் //

என் வணக்கங்கள்

Raghav said...

//அப்றோம் தான் குறைஒன்றுமில்லைக்கு மாறினேன்!!! //

இன்று முதல் “குறையொன்றுமில்லா ஷைலஜா” அக்கா என்று அழைக்கப்படுவீராக.. :)

குமரன் (Kumaran) said...

இந்தப் பாட்டு எனக்கு தெரியுமா இல்லையா என்றே தெரியவில்லையே??!!

பல முறை கேட்டிருக்கிறேன். முதல் இரு வரிகளை மட்டும் பாடுவேன் என்று நினைக்கிறேன். முழுப்பாடலையும் படித்துக் கொள்ளவில்லை. :-)

யார் சொன்ன பேச்சைக் கேப்பாங்கன்னு இராதைக்குத் தெரிந்திருக்கிறது. அதான் கண்ணபிரானை மட்டும் தட்டியிருக்கிறாள். நல்லா தட்டட்டும். :-)

jeevagv said...

//அது என்ன மிஸ்ர யாமன்?
ராகம் கேள்விப்படாதது! //
இது ஹிந்துஸ்தானி ராகம்ன்னு நினைக்கிறேன்,
கிட்டத்தட்ட, நம்ம யமுன கல்யாணி (கிருஷ்ணா நீ பேகனே)போல, அப்புறம் யாமன் கல்யாண், அப்படின்னு ஹிந்துஸ்தானியிலே இருக்கு போல. இவையெல்லாம், கிட்டத்தட்ட, ஒண்ணிரண்டு ஸ்வரங்கள் மாற்றி வருது. மிஸ்ரம் என்றால், அன்னிய ஸ்வரங்களும் கலந்து வருவது.

வல்லிசிம்ஹன் said...

ராதைப் பாட்டு சூப்பர் ரவி.
ரொம்ப நாளாச்சு கேட்டு.

கண்ணனுக்கு ராதை பாட்டு கேக்க ஆசை வந்ததாலதான் உங்களைத் தட்டி இருக்கான்.

கடைசிப் பாட்டும் நல்லா இருந்தது.

ஷைலஜா said...

Raghav said...
//அப்றோம் தான் குறைஒன்றுமில்லைக்கு மாறினேன்!!! //

இன்று முதல் “குறையொன்றுமில்லா ஷைலஜா” அக்கா என்று அழைக்கப்படுவீராக.. >>>>>>

பேரு ரொம்ப குட்ஸ் வண்டியாட்டம் இருக்கு! மாற்றி அழகா அழைக்க தசரதபுத்திரனை வேண்டுகிறேன்!":):)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Raghav said...
ராதா சமேதா கிருஷ்ணர் அழகா.. அம்சமா இருக்கார்.. பாட்டுல...//

படத்துல! :)

//ரொமான்ஸ் என்றாலே பாட்டு தானே..//

இல்ல, அதுக்கும் மேல! :)

//குறுகன் அப்புடின்னா விளக்கம் சொல்லுங்களேன்.. திருக் குருகூர் பிரானா ?//

ஆகா...எவ்வளவு துணிச்சல்?
குருகூர்-ல இடையின ர-ப்பா!
குறுகன்-ல வல்லின ற!

குறுகன்-ன்னா குறுக்கமானவன், குள்ளன்-ன்னும் பொருள் எடுத்துக்கலாம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
பல முறை கேட்டிருக்கிறேன். முதல் இரு வரிகளை மட்டும் பாடுவேன் என்று நினைக்கிறேன்.//

பாட்டுலயே மொத்தம் நாலஞ்சு வரி தான் குமரன்! அப்புறம் என்ன "முழுதும்"? - டீச்சர் தரும் சுண்டலை வாங்கிக்கோங்க! :)

//யார் சொன்ன பேச்சைக் கேப்பாங்கன்னு இராதைக்குத் தெரிந்திருக்கிறது; அதான் கண்ணபிரானை மட்டும் தட்டியிருக்கிறாள். நல்லா தட்டட்டும். :-)//

என்னாது நல்லா தட்டட்டுமா? இருங்க இருங்க! ராதையிடம் போட்டுக் கொடுக்கிறேன்! நான் ராதைச் செல்லம்!
எனக்குத் தட்டு தான்!
உமக்குக் குட்டு! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...
இது ஹிந்துஸ்தானி ராகம்ன்னு நினைக்கிறேன்,
கிட்டத்தட்ட, நம்ம யமுன கல்யாணி//

நன்றி ஜீவா, தகவல்களுக்கு!

//மிஸ்ரம் என்றால், அன்னிய ஸ்வரங்களும் கலந்து வருவது//

மிஸ்ரம்-திஸ்ரம் எல்லாம் நீங்க தான் சொல்லிக் கொடுக்கணும் இசை இன்பத்தில்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
ராதைப் பாட்டு சூப்பர் ரவி.
ரொம்ப நாளாச்சு கேட்டு//

எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு வல்லியம்மா! என்னையப் போல கத்துக்குட்டிங்க ஈசியாப் பாடிறலாம்! :)

//கண்ணனுக்கு ராதை பாட்டு கேக்க ஆசை வந்ததாலதான் உங்களைத் தட்டி இருக்கான்//

கண்ணன் கைய வச்சா முறுக்கிடுவேன்! ராதை-ங்கிறதால செல்லமா விடறேன்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷைலஜா said...
//இன்று முதல் “குறை யொன்றுமில்லா ஷைலஜா” அக்கா என்று அழைக்கப்படுவீராக..//

//பேரு ரொம்ப குட்ஸ் வண்டியாட்டம் இருக்கு!//

வாட்!
குறையொன்றுமில்லாத கோவிந்தா-ன்னு ஆண்டாள் குட்ஸ் வண்டியாட்டம் எழுதினாளா? என்ன துணிச்சல் அக்கா? எங்க வூட்டுப் பொண்ணை நக்கல் அடிக்கறீங்களா? படைகள் மடிவாலா புறப்படட்டும்! :)
(பி.டி.எம் லே-அவுட்டா?)

துளசி கோபால் said...

//குறையொன்றுமில்லாத கோவிந்தா-ன்னு ஆண்டாள் குட்ஸ் வண்டியாட்டம் எழுதினாளா?//

ஆண்டாளா?

நான் என்னமோ ராஜாஜி எழுதுனதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேனே!!!!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//துளசி கோபால் said...
//குறையொன்றுமில்லாத கோவிந்தா-ன்னு ஆண்டாள் குட்ஸ் வண்டியாட்டம் எழுதினாளா?//

ஆண்டாளா?
நான் என்னமோ ராஜாஜி எழுதுனதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேனே!!!!!//

இந்தாங்க டீச்சர் ஸ்பெஷல்!

"குறையொன்றுமில்லாத கோவிந்தா" உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே!
இறைவா நீ தாராய் பறை, ஏல்-ஓர்-எம் பாவாய்!

ஆண்டாளைப் பார்த்து ராஜாஜி காப்பியடிச்சார்! :)
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா! குறையொன்றுமில்லை கோவிந்தா!

இப்படிக் காப்பியடிச்ச ராஜாஜி, பிற்பாடு ஆண்டாள் என்பதே கற்பனைப் பாத்திரம்! பெரியாழ்வாரே பொண்ணு மாதிரி எழுதிட்டாரு-ன்னு சொல்லி, பலமா வாங்கிக் கட்டிக்கிட்டாரு! :))

ஷைலஜா said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...


"குறையொன்றுமில்லாத கோவிந்தா" உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே!
இறைவா நீ தாராய் பறை, ஏல்-ஓர்-எம் பாவாய்!

ஆண்டாளைப் பார்த்து ராஜாஜி காப்பியடிச்சார்! :)
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா! குறையொன்றுமில்லை கோவிந்தா!

இப்படிக் காப்பியடிச்ச ராஜாஜி, பிற்பாடு ஆண்டாள் என்பதே கற்பனைப் பாத்திரம்! பெரியாழ்வாரே பொண்ணு மாதிரி எழுதிட்டாரு-ன்னு சொல்லி, பலமா வாங்கிக் கட்டிக்கிட்டாரு
>>>>>>>ராஜானியைபோல பலருக்கு இந்தக்கருத்து இருக்கிறது ஏனென்றால் ஆண்டாள் பாடலக்ளில் சிலவற்றில் காணும் துணிச்சலான சிருங்கார ரசம் ! அந்த நாளில் ஒரு பெண் இப்படியெல்லாம் எழுத முடியுமா என்னும் சந்தேகம்!


// kannabiran, RAVI SHANKAR (KRS) said...வாட்!
குறையொன்றுமில்லாத கோவிந்தா-ன்னு ஆண்டாள் குட்ஸ் வண்டியாட்டம் எழுதினாளா? என்ன துணிச்சல் அக்கா? எங்க வூட்டுப் பொண்ணை நக்கல் அடிக்கறீங்களா? படைகள் மடிவாலா புறப்படட்டும்! :)
(பி.டி.எம் லே-அவுட்டா?)

3:18 PM, November 10//

>>>>ஹலோ ஹலோ கூல் டவுன் யார்! அவங்க முதல்ல எங்க வீட்டுப்பொண்ணு(ஸ்ரீரங்கம் உள் ஆண்டாள் சந்நிதி )தெரியுமில்ல?:)
ஒரேகுடும்பம் அடிச்சிப்போம் சேர்ந்துப்போம்....ஆனா விட்டுக்கொடுக்கமாட்டோம்!! 'கோல்தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே, மால் தேடி ஓடும் மனம்'என்ற ஆண்டாளையே வணங்கும் பக்தர் கூட்டமாக்கும் நாங்கள்!!

துளசி கோபால் said...

//மால் தேடி ஓடும் மனம்...//

இது தெரிஞ்சுதான் உலகம் பூராவும் மாலோ mallஸ். கட்டிவச்சுட்டாங்கப்பா....

ஷைலஜா said...

துளசி கோபால் said...
//மால் தேடி ஓடும் மனம்...//

இது தெரிஞ்சுதான் உலகம் பூராவும் மாலோ mallஸ். கட்டிவச்சுட்டாங்கப்பா....

8:17 PM, November 10, 2008
>>>அட வரவர டீச்சர், காளமேகப்புலவர் ஆகிட்டுவராங்க அங்க மைபா எங்க மைத்தடங்கண்ணினாய் என்றும், இங்க மால்..மால்ஸ்!! ம்ம்ம்..கலக்கல்ஸ்! ஆமா மாலுமாலு சுராங்கனிக்கா மாலுன்னா என்ன?:):)

Radha Sriram said...

என் பேரு பாட்டு போட்டு இங்கென்ன ஒரே லூட்டி??!

கெ.பி.எஸ் குரல்ல அருமையா இருக்கே?? ஒரு வேள ஏதாவது கல்யாண கச்சேரியா இருக்குமோ....நிறைய பேச்சு குரல்??

அந்த ரெண்டாவது பிடி பிடிச்சுட்டு எங்கப்பா பெருமையா ஒரு பார்வை பாப்பார்......அந்த நியாபகம் வந்துது.ஜி.என்.பி ப்ரியர்....!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Radha Sriram said...
என் பேரு பாட்டு போட்டு இங்கென்ன ஒரே லூட்டி??!//

அதை டீச்சர்-ஷைலுக்கா கிட்ட கேளூங்க! :)

//கெ.பி.எஸ் குரல்ல அருமையா இருக்கே?? ஒரு வேள ஏதாவது கல்யாண கச்சேரியா இருக்குமோ....நிறைய பேச்சு குரல்??//

நானும் அப்படித் தான் நினைக்கிறேன்! ஆனா கேபிஎஸ் அம்மா, தனிக் கச்சேரி-ல பாடறதை எல்லாம் சீக்கிரமாவே நிப்பாட்டிக்கிட்டாங்க-ன்னு சொல்லுவாய்ங்க! கோயில் கச்சேரியாக் கூட இருக்கலாம்!

//அந்த ரெண்டாவது பிடி பிடிச்சுட்டு எங்கப்பா பெருமையா ஒரு பார்வை பாப்பார்......அந்த நியாபகம் வந்துது.ஜி.என்.பி ப்ரியர்....!!//

:)
ஆணை இட்டது ஷைலுக்கா!
அடங்கி இட்டது கேஆரெஸ்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஹலோ ஹலோ கூல் டவுன் யார்! அவங்க முதல்ல எங்க வீட்டுப் பொண்ணு//

உங்க வீட்டுப் பொண்ணு இல்ல!
உங்க மாட்டுப் பொண்ணு! :)

//ஒரே குடும்பம் அடிச்சிப்போம் சேர்ந்துப்போம்....ஆனா விட்டுக்கொடுக்கமாட்டோம்!!//

அதை எல்லாம் குடும்பத்துக்குள்ள வச்சிக்கோங்க!
என் ஆருயிர்த் தோழியை ஏதாச்சும் சொன்னா எனக்கு மீசை துடிக்கும்! சொல்லிட்டேன்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//துளசி கோபால் said...
//மால் தேடி ஓடும் மனம்...//

இது தெரிஞ்சுதான் உலகம் பூராவும் மாலோ mallஸ். கட்டி வச்சுட்டாங்கப்பா....//

டீச்சர் கலக்கிங்க்ஸ்! :)
அப்போ உலகம் பூரா மால் இருக்காரு!
சரி அது திரு-மாலா? தெரு Mallஆ? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆமா மாலுமாலு சுராங்கனிக்கா மாலுன்னா என்ன?:):)//

என்னை வியாக்யானச் சக்கரை வத்தி ஆக்காம வுட மாட்டீங்க போல! :)

சுறா-ங்கனிக்கா மாலு = சுறா, மச்ச அவதாரம்! அந்த மாலைச் சொல்லுறாங்க!
மாலு கண்ணா மாலு கண்ணா வா! = இப்படி "மச்சத்தில்" ஆரம்பிச்சி, கடேசி அவதாரம் மாலு "கண்ணா"வில் முடிக்கறாங்க!

போதுமாக்கா? யப்பா! இப்பவே கண்ணைக் கட்டுதே! :))

ஷைலஜா said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//ஹலோ ஹலோ கூல் டவுன் யார்! அவங்க முதல்ல எங்க வீட்டுப் பொண்ணு//

உங்க வீட்டுப் பொண்ணு இல்ல!
உங்க மாட்டுப் பொண்ணு! :>>>>>>>

மாற்றுப்பெண்ணே மாட்டுப்பெண் ஆனதப்பா அருமைத்தம்பியே!


//என் ஆருயிர்த் தோழியை ஏதாச்சும் சொன்னா எனக்கு மீசை துடிக்கும்! சொல்லிட்டேன்//

ஆருயிர்த்தோழி?:) ஸார் கிபி885லேயே பொறந்தாச்சா?:) ஏக் காவ் மே ஏக் ரவித்தாத்தா ?:):)

காயிலே புளிப்பதென்னே கண்ணபிரானே!

இல்லாதமீசையும் துடிப்பதும் ஏன் கண்ணபிரான்ரவிசங்கரே?:)

ஷைலஜா said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//ஆமா மாலுமாலு சுராங்கனிக்கா மாலுன்னா என்ன?:):)//

என்னை வியாக்யானச் சக்கரை வத்தி ஆக்காம வுட மாட்டீங்க போல! :)>>>>

:):) வாணலியக்கிண்டினா வருமே உப்புமா
ரவியின் வாயைக்கிண்டினா வருமே வியாக்கியானமா!

//சுறா-ங்கனிக்கா மாலு = சுறா, மச்ச அவதாரம்! அந்த மாலைச் சொல்லுறாங்க!
மாலு கண்ணா மாலு கண்ணா வா! = இப்படி "மச்சத்தில்" ஆரம்பிச்சி, கடேசி அவதாரம் மாலு "கண்ணா"வில் முடிக்கறாங்க! //

யெப்பா!!!! ராகவ் எங்கபோயிட்டே! தலயோட விளக்கம்கேட்டு உன் ரியாக்ஷன் என்னாச்சுப்பா?:):)

//போதுமாக்கா? யப்பா! இப்பவே கண்ணைக் கட்டுதே! :))//


போதும் போதும்!! இனி இம்மாதிரிப்பாடலுக்கு வியாக்கியான சக்கரைவத்திகிட்ட ஒண்ணும் கேட்கறதா இல்லப்பா!

9:22 PM, November 10,

ஷைலஜா said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//Radha Sriram said...
என் பேரு பாட்டு போட்டு இங்கென்ன ஒரே லூட்டி??!//

அதை டீச்சர்-ஷைலுக்கா கிட்ட கேளூங்க! :)

<<<>>>>>>பிகாஸ் ரவி ஈஸ் எ நாட்டி
கை.அதான்!!! ச்சும்மா கிட்டிங்!!!ராதா கோச்சிக்காதீங்க..ராதே உனக்குக்கோபம் ஆகாதடீஈஈஈ:):)

Raghav said...

////பேரு ரொம்ப குட்ஸ் வண்டியாட்டம் இருக்கு!//

வாட்!
குறையொன்றுமில்லாத கோவிந்தா-ன்னு ஆண்டாள் குட்ஸ் வண்டியாட்டம் எழுதினாளா?//

ஆண்டாளின் சொல்லை விட ஆண்டாள் அடியவர் சொல்லே எமக்கு பிரதானம். :)

அக்கா.. ”குறையேயில்லா ஷைலஜா” ஓ.கேவா :)

Raghav said...

//ஹலோ ஹலோ கூல் டவுன் யார்! அவங்க முதல்ல எங்க வீட்டுப்பொண்ணு(ஸ்ரீரங்கம் உள் ஆண்டாள் சந்நிதி )தெரியுமில்ல?:)
ஒரேகுடும்பம் //

சரியா சொன்னீங்கக்கா.. நான் ஆண்டாள் பிறந்த வீட்டுக்காரன்.. நீங்க புகுந்த வீட்டுக்காரங்க... பூதூர் சம்பந்தமுடைய ரவி அண்ணாவை விட உரிமை அதிகம் எங்களுக்கு.. :)

Raghav said...

//ஆருயிர்த்தோழி?:) ஸார் கிபி885லேயே பொறந்தாச்சா?:) ஏக் காவ் மே ஏக் ரவித்தாத்தா ?:):)
//

யக்கா..என்னக்கா இப்புடி கேட்டுட்டீங்க.. நம் கோதைக்கு, எம்பெருமானார் அண்ணன் ஆன மாதிரி இவர் ஆண்டாளுக்கு தோழன் ஆயிட்டார்..ராமானுசர் 100 தடா வெண்ணையும், அக்கார அடிசிலும் சுந்தரத் தோளுடையானுக்கு படைச்சதனால் அண்ணன் ஆனார்..

இவருக்கு ஆண்டாள் எப்புடி தோழியானாள்?? அத அண்ணாத்தே தான் சொல்லனும்.. :)

Raghav said...

//:):) வாணலியக்கிண்டினா வருமே உப்புமா
ரவியின் வாயைக்கிண்டினா வருமே வியாக்கியானமா! //

அதாவது அவர் வியாக்கியானம்.. நீங்க போன சனிக்கிழமை செஞ்ச உப்புமா பதிவு போலன்னு சொல்ல வர்றீங்களாக்கா? :)

ஷைலஜா said...

Raghav said...
////பேரு ரொம்ப குட்ஸ் வண்டியாட்டம் இருக்கு!//

ஆண்டாளின் சொல்லை விட ஆண்டாள் அடியவர் சொல்லே எமக்கு பிரதானம். :)

அக்கா.. ”குறையேயில்லா ஷைலஜா” ஓ.கேவா :)
>>>>>>>>>>>>>>>>>>>வாங்க சக்கரவர்த்திதிருமகனே!!! குறையேயில்லா ஷைலஜா ரொம்ப ஓவர்! அரைகுறை ஷைலஜா
சரியா இருக்கும்!!:)

ஷைலஜா said...

Raghav said...
////

சரியா சொன்னீங்கக்கா.. நான் ஆண்டாள் பிறந்த வீட்டுக்காரன்.. நீங்க புகுந்த வீட்டுக்காரங்க... பூதூர் சம்பந்தமுடைய ரவி அண்ணாவை விட உரிமை அதிகம் எங்களுக்கு///

>>>>>>ஆண்டாள் இப்போ காவிரிமாதிரி
எந்த ஊருக்காரருக்குசொந்தமென ஆகிவிட்டாளா?:) பொறந்த வீடா புகுந்தவீடா? பட்டிமன்றம் போட்டுட்லாம்!!!

ஷைலஜா said...

Raghav said...
//:):) வாணலியக்கிண்டினா வருமே உப்புமா
ரவியின் வாயைக்கிண்டினா வருமே வியாக்கியானமா! //

அதாவது அவர் வியாக்கியானம்.. நீங்க போன சனிக்கிழமை செஞ்ச உப்புமா பதிவு போலன்னு சொல்ல வர்றீங்களாக்கா? :)

1:08 AM, November 11, 2008
>>>>>ஷ்ஷ்!!! சும்மா போட்டுக்கொடுக்கல்லாம் கூடாது பாலகா!

ஷைலஜா said...

58 AM, November 11, 2008


Raghav said...
?:):)
//

.. நம் கோதைக்கு, எம்பெருமானார் அண்ணன் ஆன மாதிரி இவர் ஆண்டாளுக்கு தோழன் ஆயிட்டார்..ராமானுசர் 100 தடா வெண்ணையும், அக்கார அடிசிலும் சுந்தரத் தோளுடையானுக்கு படைச்சதனால் அண்ணன் ஆனார்..

இவருக்கு ஆண்டாள் எப்புடி தோழியானாள்?? அத அண்ணாத்தே தான் சொல்லனும்//

>>>>>>>>>>>>>ஆண்டாள் தோழியாம் !தெரில்ல ராகவ் ஏதாவது காலேஜ்ல கூடப்படிச்ச பொண்ணை சொல்லி இருக்கலாம்!!!
பிள்ளாய் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் ன்னு நாம்பாடினாலும் இப்போ உங்க அண்ணாத்த எழுந்திருக்கமாட்டார்... அமெரிக்கால இல்ல இருக்கார்?:)

துளசி கோபால் said...

எதுக்கு இந்தப் பிறந்த வீடு புகுந்தவீடுன்னு சண்டை?

நாமும் நியாயமா இருக்கணுமா இல்லையா.

இப்படி வேணுமுன்னா வச்சுக்கலாம். ஆளுக்கு ஒன்னா இருக்கட்டுமே.

தங்கமணிக்கு பிறந்த வீடு, ரங்கமணிக்குப் புகுந்த வீடு.

சரியா வந்துருக்கு பாருங்க:-)))))

Raghav said...

//நாமும் நியாயமா இருக்கணுமா இல்லையா.

இப்படி வேணுமுன்னா வச்சுக்கலாம். ஆளுக்கு ஒன்னா இருக்கட்டுமே.

தங்கமணிக்கு பிறந்த வீடு, ரங்கமணிக்குப் புகுந்த வீடு.
//

டீச்சர்.. இது எந்த ஊர் நியாயம் டீச்சர் ?

நான் இன்னும் ரங்கமணி ஆகலன்னாலும் (ஷைலஜாக்கா, நிஜமாவான்னு கேக்கக்கூடாது.. சொன்னா நம்பணும்) இத நான் கேட்டே ஆகனும்.

Raghav said...

//அரைகுறை ஷைலஜா
சரியா இருக்கும்!!:)//

என்னை மாதிரி அரைகுறையெல்லாம் பட்டம் கொடுக்குறதால சொல்றீங்களா ? :)

//பிள்ளாய் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் ன்னு நாம்பாடினாலும் இப்போ உங்க அண்ணாத்த எழுந்திருக்கமாட்டார்... அமெரிக்கால இல்ல இருக்கார்?:) //

உறக்கத்தில் உள்ளவரை எழுப்பலாம். பேருறக்கத்தில் உள்ளவரை யாராலும் எழுப்ப இயலாதே :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

எழுந்தாச்சே!
எழுந்தாச்சே!

சுப்ரபாதம் பாடி எழுப்புவாங்க!
இப்படி கும்மி அடிச்சி எழுப்பி இருக்கீங்களேப்பா! அவ்வ்வ்வ்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நான் ஆண்டாள் பிறந்த வீட்டுக்காரன்.. நீங்க புகுந்த வீட்டுக்காரங்க... பூதூர் சம்பந்தமுடைய ரவி அண்ணாவை விட உரிமை அதிகம் எங்களுக்கு//

ஹா ஹா ஹா
யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
அரங்கமும் எனதே! வில்லியும் எனதே!
அதனால் பதிவில் ஜல்லியும் எனதே! :)

யப்பா ராகவ்வு!
உங்க உரிமையை நீங்களே வச்சிக்கோங்க!
எனக்கு ஆண்டாளிடத்தில் உரிமையில்லை!
அவளுக்குத் தான் என்னிடத்தில் சகல உரிமை இருக்கு!
Thats why she's my Thozhi! Hurrah! :))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//காயிலே புளிப்பதென்னே கண்ணபிரானே!
இல்லாதமீசையும் துடிப்பதும் ஏன் கண்ணபிரான்ரவிசங்கரே?:)//

ஹா ஹா ஹா
அதெல்லாம் ஒட்ட வச்சி துடிச்சிப்போம்! ஜிரா சொல்லிக் கொடுத்திருக்காரு! :)

//ஆருயிர்த்தோழி?:) ஸார் கிபி885லேயே பொறந்தாச்சா?:) ஏக் காவ் மே ஏக் ரவித்தாத்தா ?:):)//

அப்போ அதே வருஷத்தில் பிறந்த ஆண்டாள் பாட்டியா?
OMG! அக்கா இப்படி வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டாங்களே! :)

மாட்டுப் பொண்ணை, இந்தத் திருவரங்கம் புகுந்த வீட்டுல, எப்படி எல்லாம் பேசறாங்க! இதைக் கேப்பார் இல்லீயா? :)

யக்கா
ஆண்டாள் & கேஆரெஸ் - Both friends are youth only-kka! :)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP