இசையின் ராணி பிறந்தநாள் - குலம் தரும் செல்வம் தந்திடும் பாடல்
இசைக்கு ஒரு ராணி என்று நம் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் கெளரவிக்கப் பெற்றவர்... இசையின் ஒரே ராணிக்கு இன்று செப்டம்பர் 16 பிறந்த நாள்.
திருவேங்கடமுடையானை தினமும் பள்ளியெழுப்பும் பாக்கியம் பெற்றவர். தன் தெய்வீகக் குரலால் உலகத்துக்கே மகிழ்ச்சி உண்டாக்கியவர். ”குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா” என்று மனம் உருகி பாடும்போது உண்மையிலேயே அவருக்கு குறை ஒன்றும் இல்லை என்பதை அறியலாம். அதிலும் “ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா” எனும்போது அவருடைய முகபாவனையில் ஒரு கம்பீரம் தெரியும், “எனக்கு ஒரு குறையும் இல்லை கண்ணா, ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று சொல்வது போல் இருக்கும்.
அவரின் இசையை மட்டுமே கேட்டு மயங்கியதை தவிர வேறொன்றும் அறியாதவன். அவர் பாடல் மூலமாக அம்மாவின் பாதங்கள்லில் நமஸ்கரிக்கிறேன். குறை ஒன்றும் இல்லா கோவிந்தன் அருள் கிடைக்க வாழ்த்துங்கள் அம்மா.
22 comments :
அவர்களின் மிகப் பிரபலமான அந்த மங்களகரமான புகைப்படத்தை மறந்துவிட்டீர்களே. எனினும், பதிவு அருமை. அவர் நினைவை போற்றுவோம்
எம்.எஸ் அம்மாவின் நல் மணிகளாகத் தேர்ந்து, ஆர்ந்து எடுத்து இட்டிருக்கீங்க! - பாடல், புகைப்படம் இரண்டையும் தான் சொல்கிறேன்!
அதிலும் கடைசியில் குரலால் இசைக் கோலம் இடும் மாதரசி, மாக்கோலம் இடும் அழகே அழகு!
//இன்று செப்டம்பர் 15 பிறந்த நாள்//
இப்போ தான் பார்த்தேன் ராகவ்.
செப்-16 என்று விக்கி சொல்கிறது!
Rediff-உம் அதே சொல்கிறது...
http://www.rediff.com/news/2004/dec/11ms2.htm
பதிவில் மாற்றி விடுங்களேன்!
கோலம் போடத் தெரிந்தவர்களுக்கு அவசரமாகப் போட்டால் என்ன, அழகாக அமைந்துவிட்டது..
சொல்ல வேண்டியவற்றை சொன்னாலும், நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர்களைப் பற்றிச் சொல்லும் பொழுது ஏதோ குறையிருப்பது போலத்தான் தோற்றமளிக்கும்.
எம்.எஸ்.அம்மாவை நினைவுகூர்ந்தவிதமும், புகைப்படங்களும் அருமை.
நினைவுபடுத்தியதுக்கு நன்றிங்க ராகவ். அவர் இசையால் வசமாகா இதயமெது?
//அவர் இசையால் வசமாகா இதயமெது?//
அதேதான். எம்.எஸ். அம்மாவை அழகாக நினைவு கூர்ந்ததற்கு நன்றி ராகவ்.
//இப்போ தான் பார்த்தேன் ராகவ்.
செப்-16 என்று விக்கி சொல்கிறது!//
நான் 15 என்று பார்த்த ஞாபகம், அது தான் இந்த தவறு. திருத்தி விட்டேன் அண்ணா.
//rapp said...
அவர்களின் மிகப் பிரபலமான அந்த மங்களகரமான புகைப்படத்தை மறந்துவிட்டீர்களே. எனினும், பதிவு அருமை. அவர் நினைவை போற்றுவோம் //
வாங்க rapp. நேற்று அலுவலகம் முடிந்து வந்து அவசரமாக பதிந்ததில் நிறைய விஷயங்கள், படங்கள் போட முடியவில்லை. இனி வரும் பதிவுகளில் சரி பண்ணிக்கிறேன்.
எல்லாப் புகழும் இசையரசி ஒருவருக்கே..
// kannabiran, ravi shankar (krs) said...
எம்.எஸ் அம்மாவின் நல் மணிகளாகத் தேர்ந்து, ஆர்ந்து எடுத்து இட்டிருக்கீங்க! - பாடல், புகைப்படம் இரண்டையும் தான் சொல்கிறேன்!
//
உங்க பாராட்டு ஒண்ணு போதும், இன்னைக்கு சாப்புடவே வேண்டாம். நன்றி ரவி அண்ணா.
//
எம்.எஸ்.அம்மாவை நினைவுகூர்ந்தவிதமும், புகைப்படங்களும் அருமை//
நன்றி ஜீவிஅய்யா, எம்.எஸ். அம்மாவை சுப்ரபாதத்துக்கு அடுத்தபடியா குறையொன்றும் இல்லை பாடலில் தான் தெரியும். அவ்வளவு விஷய ஞானம் உள்ளவனா இருந்துருக்கேன் :).
//மதுரையம்பதி said...
நினைவுபடுத்தியதுக்கு நன்றிங்க ராகவ். அவர் இசையால் வசமாகா இதயமெது?
//
ஆஹா நல்ல ஒரு பாட்டையும் ஞாபகப்படுத்திட்டீகளே அதுதான் ”எங்க மெளலி அண்ணாங்கிறது”
”இசையால் வசமாகா இதயமெது
இறைவனே இசை வடிவம் எனும்போது
தமிழ் இசையால் வசமாக இதயமெது”
அப்புறம் எப்புடி இருக்கீங்க மெளலி அண்ணா, உங்களை சந்திக்கணும்னு நினைக்கிறேன். நீங்க தான் சொல்லனும்.
//கவிநயா said...
அதேதான். எம்.எஸ். அம்மாவை அழகாக நினைவு கூர்ந்ததற்கு நன்றி ராகவ்.
//
நன்றி அக்கா. ஸ்ரீரங்கம் போயிட்டு வரும்போது எம்.எஸ். அம்மா பிறந்தநாள் என்று செய்தி படித்தேன், எம்.எஸ் அம்மாவின் சில பாடல்கள் தவிர வேறொன்றும் அறியாவிட்டாலும் அவரை நினைவு கூற நல்ல வழி, அவர் பாடிய பாடல் பதிவது தான் என்று தெரிந்ததை பதிந்தேன்.
//அப்புறம் எப்புடி இருக்கீங்க மெளலி அண்ணா, உங்களை சந்திக்கணும்னு நினைக்கிறேன். நீங்க தான் சொல்லனும்.//
நல்லாயிருக்கேங்க...ஆமாம் என்னை சந்திக்கணுமா?...தாராளமாக சந்திக்கலாம்...இந்தியா-பெங்களூர் வரும்போது சொல்லுங்க....சந்திச்சுடுவோம். :-)
//நல்லாயிருக்கேங்க...ஆமாம் என்னை சந்திக்கணுமா?...தாராளமாக சந்திக்கலாம்...இந்தியா-பெங்களூர் வரும்போது சொல்லுங்க....சந்திச்சுடுவோம். :-)
//
நான் வந்தாச்சு மெளலி அண்ணா.. இப்போ பெங்களூர்ல தான் இருக்கேன்.
படங்கள் எல்லாம் ரொம்ப அருமை ராகவ். அதிலும் அந்த கோலம் போடும் படம், அப்படி ஒரு தெய்வீகம்...
தனி மெயில்ல போன் நம்பர் அனுப்புங்க....மீட்டுவோம். :)
//Divyapriya said...
படங்கள் எல்லாம் ரொம்ப அருமை ராகவ். அதிலும் அந்த கோலம் போடும் படம், அப்படி ஒரு தெய்வீகம்...//
நன்றி சின்னக் கலைவாணி திவ்யப்ரியா :)
அடியேனும் உங்களுடன் சேர்ந்து அம்மாவின் பாடலைக் கேட்டு அவர் நினைவினைப் போற்றினேன் இராகவ். நன்றிகள்.
பதிவிட நினைத்ததே, பெரிய செயல். வாழ்த்துக்கள் ராகவ்!.
hey,
Everything was good.
But you missed something :)
http://www.youtube.com/watch?v=cKdHPCw3K9c&feature=related
நீங்க எழுதின உடனே படிச்சிட்டேன்,ஆனா இப்போ தான் கமெண்ட் போடறேன் ...
ரொம்ப அற்புதமாக எழுதி இருக்கீங்க ராகவ்.
எம்.எஸ்.அம்மாவை நினைவுகூர்ந்தவிதமும், புகைப்படங்களும் அருமை.