என்னெஞ்சில் பள்ளி கொண்டவன்...
ஓம் நாராயணாய நம:
ஓம் நாராயணாய நம:
ஓம் நாராயணாய நம:
என்னெஞ்சில் பள்ளி கொண்டவன் ஸ்ரீ ரங்கநாயகன்
என்னெஞ்சில் பள்ளி கொண்டவன் ஸ்ரீ ரங்கநாயகன்
சயனத்தில் ஆதி சேஷன் மேலே
திருவடி திருமகள் மடி மேலே
பூலோக நாயகன் ஸ்ரீ ரங்கன் (என்னெஞ்சில்)
சயனிக்கும் பெருமாளின் தொப்புள் கொடி
கமலத் தொப்புள் கொடி மேல் ப்ரம்ஹன் அமர்ந்த படி (சயனிக்கும்)
உலகத்தின் உயிர்களைப் படைத்த படி
அப்படைப்பினைத் திருமால் காத்தபடி (உலகத்தின்)
அண்டம் பகிரண்டம் அதைக் காக்கும் அவன் கோதண்டம்
விண்ணையும் மண்ணுலகையும் அளக்கும் அவ்வாமனனின் பாதம் (அண்டம்)
ஹரி ஹரி ஹரி என தினம் ஸ்மரி
ஹரி ஹரி ஹரி என தினம் ஸ்மரி
நான் வணங்கிடும் இறைவனோ சங்கு சக்ர தாரி (என்னெஞ்சில்)
திருப்பதியில் எழுந்தருளும் திருமாலும் நீயே - உன்
திருமார்பினில் அமர்ந்திருப்பது பத்மாவதி தாயே (திருப்பதியில்)
உடுப்பியினில் தவழ்கின்ற ஸ்ரீ க்ருஷ்ணன் நீயே - உன்
அருள் வேண்டி நிற்கின்றேன் நான் உந்தன் சேயே (உடுப்பியினில்)
நெறியையும் அற வழியையும் எமக்குணர்த்த பல அவதாரம்
எடுத்தாய் எடுத்துரைத்தாய் அதுவே வாழ்வின் ஆதாரம் (நெறியையும்)
அருள் தரும் தேவா வரம் தர வா வா
அருள் தரும் தேவா வரம் தர வா வா
மூவுலகையும் ஆள்கின்ற த்ரிவிக்ரம ரூபா (என்னெஞ்சில்)
இயற்றியவர்: சேலம் ஈஸ்வர்
இராகம்: கல்யாணி
தாளம்: ஆதி
இந்தப் பாடலை தன் கந்தர்வ கானக் குரலில் ஜேசுதாஸ் பாடியதைக் கேட்க இங்கே அழுத்தவும்.
9 comments :
இந்த இடுகை 16 ஜூலை 2006 அன்று எனது 'கேட்டதில் பிடித்தது' வலைப்பதிவில் இடப்பட்டது. இந்தப் பாடலுக்குரிய இடம் 'கண்ணன் பாட்டு' வலைப்பதிவு தான். அதனால் அங்கிருந்து இங்கே நகர்த்தப்படுகிறது. முன்பு இட்டபோது வந்த பின்னூட்டங்கள்:
35 comments:
கோவி.கண்ணன் said...
திருகுமரன்...
திருமாள் பெருமைக்கு நிகரேது உந்தன் திருவடி நிழலுக்கு ... அந்த பாட்டை தேடிப்பிடிச்சு ஓடிவிடுங்களேன்... பாட்டைக் கேட்டு ரெம்ப நாளாச்சு !
Thursday, July 20, 2006 7:16:00 AM
--
Sivabalan said...
குமரன் சார்,
ஆகா மிக அருமை...
காலையில் ஏசுதாஸ் குரல் இனிமை...
மிக்க நன்றி.
Thursday, July 20, 2006 7:24:00 AM
--
johan -paris said...
அன்பு குமரா!
இனிய நாரயணன் பாடல்; நன்றி
"பச்சை மாமலை போல் மேனி" பாசுரம் ;இசை வடிவுடன் போடுங்கள்.கேட்ட வேண்டும்.
யோகன் பாரிஸ்
Thursday, July 20, 2006 7:54:00 AM
--
Manjula said...
கல்யாணியில் நல்ல தமிழ் பாடல், ஜேசுதாஸின் குரலில் அடிக்கடி கேட்கும் பாடலும் கூட.
Thursday, July 20, 2006 8:57:00 AM
--
குமரன் (Kumaran) said...
கோவி. கண்ணன் ஐயா. திருமால் பெருமைக்கு நிகரேது பாடலைக் கேட்க இந்தச் சுட்டிக்குச் செல்லுங்கள். விரைவில் பதிவிலும் இடுகிறேன்.
http://www.musicindiaonline.com/p/x/S5Kg9dQDkS.As1NMvHdW/
Thursday, July 20, 2006 10:55:00 AM
--
குமரன் (Kumaran) said...
பாடலைக் கேட்டு அனுபவித்ததற்கு நன்றி சிவபாலன். எனக்கு மிகப்பிடித்தப் பாடல்களில் முதல் இடம் இந்தப் பாடலுக்குத் தான். இந்தப் பாடலை இந்தக் குரலில் கேட்பதே தலையாயது.
Thursday, July 20, 2006 10:57:00 AM
--
குமரன் (Kumaran) said...
யோகன் ஐயா. பச்சை மாமலை போல் மேனி பாடலைக் கேட்க இதோ சுட்டி. அதனையும் விரைவில் பதிவாக இடுகிறேன்.
http://www.musicindiaonline.com/p/x/Q4b2.-8tH9.As1NMvHdW/
Thursday, July 20, 2006 10:58:00 AM
--
குமரன் (Kumaran) said...
நீங்களும் இந்தப் பாடலை அடிக்கடி கேட்பீர்களா மஞ்சுளா. மிக்க மகிழ்ச்சி. :-)
Thursday, July 20, 2006 11:00:00 AM
--
கோவி.கண்ணன் said...
திரு குமரன் தேடிப் பிடித்து சுட்டி தந்ததற்கு நன்றி
Thursday, July 20, 2006 11:03:00 AM
--
G.Ragavan said...
கோவி கேட்கும் திருமால் பெருமைக்கு நிகரேது பாடல் திருமால் பெருமை திரைப்படத்தில் இடம் பெற்றது. அந்தப் படத்தில் எனக்கு ஹரி ஹரி கோகுல ரமணா பாடலும் கோபியர் கொஞ்சும் ரமணாவும் மிகவும் பிடிக்கும். அதில் நடுவில் பி.சுசீலா இப்படிப் பாடுவார்கள்.
ஆயர் குல மணி விளக்கே
வானும் கடலும் வார்த்தெடுத்த பொன்னுருவே
கானத்தில் உயிரினத்தைக் கட்டுவிக்கும் கண்ணா............
தானே உலகாகி தனக்குள்ளே தானடங்கி
மானக் குலமாதர் மஞ்சள் முகம் காத்து
வாழ்விப்பாய் என்று உன்
மலர்த்தாள் கரம் பற்றி தொழுவேன்
நம்பிப் பரந்தாமா!
இதே படத்தில் டீ.எம்.எஸ், பச்சை மாமலை போல் மேனி பாசுரத்தை உள்ளம் உருகப் பாடியிருப்பார். அது கேட்கத் திகட்டாத கானம்.
Thursday, July 20, 2006 12:20:00 PM
--
SK said...
பல்லாண்டுகளுக்கு முன், ஒரு ஐயப்பன் ஒலிநாடாவில் இதனை கேட்டதில் இருந்து நான் மிகவும் விரும்பி அடிக்கடி கேட்கும் பாடல் இது!
தரங்கிணி கேஸட்ஸ் என நினைக்கிறேன்.
நன்றி.
கோவியார், ஜி.ரா.வின் தேர்வுகளும் அமர்க்களம்!
அதிலும் அந்த 'பச்சை மாமலை போல் மேனி'!!
அப்பப்பா! மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்!
Thursday, July 20, 2006 1:47:00 PM
--
வெற்றி said...
குமரன்,
படித்தேன். ஆனால் இன்னும் பாடலைக் கேட்கவில்லை. பாடலைக் கேட்ட பின்னர் பாடல் பற்றிச் சொல்கிறேன்.
நன்றி
Thursday, July 20, 2006 4:42:00 PM
--
நாமக்கல் சிபி said...
குமரன்,
தங்கள் பணிக்கு மிக்க நன்றி.
அருமையான பாடல்.
"புல்லாங்குழல் கொடுக்கும் முங்கில்களே" பாடலுக்கான லிங்கை கொடுக்க முடியுமா???
Thursday, July 20, 2006 5:49:00 PM
--
குமரன் (Kumaran) said...
யோகன் ஐயா. நீங்கள் டி.எம்.எஸ். அவர்கள் பாடிய 'பச்சை மா மலை போல் மேனி' கேட்டீர்களோ? இராகவனுடையப் பின்னூட்டத்தைப் பார்த்தப் பின் அதனை நீங்கள் கேட்டிருக்கலாம் என்று தோன்றுவதால் அதற்குரியச் சுட்டியையும் தருகிறேன்.
http://www.musicindiaonline.com/p/x/H5Qg-Khi4S.As1NMvHdW/
Thursday, July 20, 2006 9:34:00 PM
--
குமரன் (Kumaran) said...
இராகவன், அந்தத் திரைப்படத்தில் வரும் பாடல்கள் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கிறீர்களே.... விட்டால் எல்லாப்பாடலையும் கேட்பீர்களோ? musicindiaonlineக்குப் போய்ப் பாருங்கள். அங்கு எல்லாப் பாடல்களும் கிடைக்கும். :-)
Thursday, July 20, 2006 9:35:00 PM
--
குமரன் (Kumaran) said...
ஆமாம் எஸ்.கே. தரங்கிணியில் தான் இந்த ஒலிப்பேழையை வாங்கினேன். musicindiaonlineயில் அந்த ஒலிப்பேழையில் இருக்கும் எல்லாப் பாடல்களும் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பதித்துக் கொண்டிருக்கிறேன்.
பச்சை மாமலை போல் மேனி பாடலுக்கு இரு சுட்டிகள் தந்திருக்கிறேன். கேட்டுப் பாருங்கள்.
Thursday, July 20, 2006 9:38:00 PM
--
குமரன் (Kumaran) said...
பாடலையும் கேட்டுவிட்டுச் சொல்லுங்கள் வெற்றி. கட்டாயம் உங்களுக்குப் பிடிக்கும்.
Thursday, July 20, 2006 9:39:00 PM
--
கோவி.கண்ணன் said...
இரண்டு பாடல்களையும் கேட்டேன். டிஎம் எஸ் சின் கனீர் குரல் இனிமை. சுட்டித்தந்த குமரன் உங்களுக்கு பொட்டி தரலாமா ?
Thursday, July 20, 2006 9:53:00 PM
--
johan -paris said...
அன்பு குமரா!
கேட்டேன்;மகிழ்ந்தேன்.
அருமை;அருமை!
ஊரிலே காணியில்லை, உறவு மற்ரொருவர் இல்லை;;;; என்னைப் போல் ஈழத் தமிழருக்காக எழுதிய அடிகளோ!!!
சிவாஜியின் பாவபூர்வமான படம்- இப்பாடலுடன் பிரமாதமாகப் பொருந்தியுள்ளது.
யோகன் பாரிஸ்
Friday, July 21, 2006 5:43:00 AM
--
குமரன் (Kumaran) said...
பையல்ஜி (பாலாஜி) உங்களுக்கும் இந்தப் பாடல் பிடித்ததா? மிக்க நன்றி. ல் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடலைத் தேடிப் பார்த்தேன்; கிடைக்கவில்லை. மற்ற இடங்களிலும் தேடிப் பார்த்துக் கிடைத்தால் தருகிறேன்.
Friday, July 21, 2006 5:53:00 AM
--
குமரன் (Kumaran) said...
ஏற்கனவே பொட்டியில தந்துக்கிட்டுத் தானே இருக்கீங்க கோவி.கண்ணன் ஐயா. தொடர்ந்து அப்படியே செஞ்சுக்கிட்டு இருந்தா போதும். :-) பின்னூட்டப் பொட்டியைச் சொன்னேனுங்க. :-)
Friday, July 21, 2006 5:55:00 AM
--
குமரன் (Kumaran) said...
பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தீர்களா? மிக்க மகிழ்ச்சி யோகன் ஐயா.
Friday, July 21, 2006 5:56:00 AM
--
G.Ragavan said...
// குமரன் (Kumaran) said...
இராகவன், அந்தத் திரைப்படத்தில் வரும் பாடல்கள் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கிறீர்களே.... விட்டால் எல்லாப்பாடலையும் கேட்பீர்களோ? musicindiaonlineக்குப் போய்ப் பாருங்கள். அங்கு எல்லாப் பாடல்களும் கிடைக்கும். :-) //
என்னிடம் எல்லாப் பாடல்களும் இருக்கின்றன குமரன். நான் விரும்பிக் கேட்டுருகும் பாடல்கள் அவை.
மாபாரதத்தின் கண்ணா
மாயக் கலையின் மன்னா
மாதவா கார்மேக வண்ணா
மதுசூதனா கோபியர் கொஞ்சும் ரமணா....
இதோ போல நான் ருசிக்கும் ரசிக்கும் மற்றொரு பாடல்...மெல்லிசை மன்னரின் இசையில் வாணி ஜெயராம் பாடிய...
கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்
கண்ணா கோபாலா ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா
பொன்மணி வண்ணன் சொன்னது கீதை
பூமகன் மார்பில் சாய்ந்தவள் கோதை
(இந்தப் பாடலை இயற்றியவர் கவியரசர் என்று சொல்லவும் வேண்டுமோ!)
Friday, July 21, 2006 1:32:00 PM
--
G.Ragavan said...
குமரன், புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாட்டைச் சொன்னீர்கள். மிகவும் சிறப்பான பாடல். அந்தத் தொகுப்பில் எல்.ஆர்.ஈஸ்வரியின் இனிய குரலில் ஒரு பாடல்.
கோபியரே கோபியரே
கொஞ்சும் இளம் வஞ்சியரே
கோவிந்தன் பேரைச் சொல்லிக்
கும்மி கொட்டி ஆடுங்களேன்
வேங்கடத்து மலைகளிலே வெண்முகிலாய் மாறுங்களேன்
ஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களேன்
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அதே போல இன்னொரு எல்.ஆர்.ஈஸ்வரி பாட்டு...இதுவும் கவியரசர்தான். ஆனால் இசை கே.வி.மகாதேவனா குன்றக்குடியா என்று தெரியவில்லை.
கோகுலத்தில் ஓரிரவு கொண்டாட்டமாம் கொண்டாட்டம்
கோபியர்கள் ஆடுகின்றார் கங்கைக் கரை வண்டாட்டம்
கோகுலத்தில் ஓரிரவு கொண்டாட்டமாம் கொண்டாட்டம்
கொஞ்சினாள் முத்தமிட்டாள் கோலமொழிப் பெண்ணொருத்தி
கன்னத்தில் கன்னம் வைத்தாள் கண்ணனுக்கு இன்னொருத்தி
சிரித்தாள் இதழ் விரித்தாள் கனி பறித்தாள் புதுப் பெண்ணாட்டம்..
Friday, July 21, 2006 1:38:00 PM
--
நாமக்கல் சிபி said...
குமரன்,
மிக்க நன்றி. நான் அந்த பாடலை கண்டுபிடித்துவிட்டேன்.
http://www.musicindiaonline.com/l/7/s/album.377/language.8/
ராகவன்,
எனக்கும் அந்த பாடல் பிடிக்கும். நான் குடுத்த லிங்க்ல கிருஷ்ணகானம் எல்லாம் இருக்கு. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...
Friday, July 21, 2006 3:56:00 PM
--
தி. ரா. ச.(T.R.C.) said...
குமரன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.ஆனால் பாடல் ஆசிரியர் யார் என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன். நன்றி.
Friday, July 21, 2006 10:17:00 PM
--
G.Ragavan said...
என்னுடைய இன்னொரு பின்னூட்டத்தைப் பிரசுரிக்காத குமரனைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். :-)
Saturday, July 22, 2006 3:08:00 AM
--
G.Ragavan said...
என்னுடைய இரண்டாவது பின்னூட்டத்தைப் பதித்த குமரனை வன்மையாகப் பாராட்டுகிறேன். :-)
Saturday, July 22, 2006 1:46:00 PM
--
Merkondar said...
குமரன்
அருமையாக உள்ளது நெஞ்சில் பள்ளிகொண்டவன் ரெங்கநாதன் பாடல்
Saturday, July 22, 2006 9:36:00 PM
--
குமரன் (Kumaran) said...
நல்ல பாடல்களைச் சொல்லியிருக்கிறீர்கள் இராகவன். உங்களிடம் இருக்கும் அந்தப் பாடல்களைத் தொடர்ந்து கேளுங்கள். :)
Sunday, July 23, 2006 1:08:00 AM
--
குமரன் (Kumaran) said...
கோபியரே கோபியரே நல்ல பாடல் இராகவன். அருமையான பாடல்களாகப் பட்டியல் இட்டுள்ளீர்கள்.
Sunday, July 23, 2006 1:09:00 AM
--
குமரன் (Kumaran) said...
பாலாஜி. அந்தச் சுட்டியைக் கண்டுபிடித்துவிட்டீர்களா? மிக்க மகிழ்ச்சி.
Sunday, July 23, 2006 1:10:00 AM
--
குமரன் (Kumaran) said...
தி.ரா.ச. உங்களுக்கும் இந்தப் பாடல் பிடிக்கும் என்று அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.
Like People Like Interests. :-)
Sunday, July 23, 2006 1:10:00 AM
--
குமரன் (Kumaran) said...
கடுமையாகக் கண்டித்து வன்மையாகப் பாராட்டிய இராகவனுக்கு மிக்க நன்றி. :-)
Sunday, July 23, 2006 1:11:00 AM
--
குமரன் (Kumaran) said...
மிக்க நன்றி என்னார் ஐயா.
Sunday, July 23, 2006 1:11:00 AM
குமரன்
பள்ளி கொண்டவன் நான் தானே?
இது யாரு பற்றிக் கண்ணன் பாட்டில் போட்டிருக்கீங்க? :-))
ஆஹா! என் அரங்கனைப்பற்றிய பாடலா? அதுவும் ஜேசுதாஸ் பாடி.....?கேட்டேன்..கற்றுக்கொண்டேன் பாட்டையும் நன்றி குமரன்!
கண்ணபிரானைப் பற்றிய பாட்டு தான் இரவிசங்கர். இங்கே தானே போட வேண்டும்? :-)
பாட்டையும் கற்றுக் கொண்டீர்களா? ரொம்ப மகிழ்ச்சி திருவரங்கப்ரியா அக்கா.
இந்தப் பாடலுக்கு இரண்டு வாரம் முன்னாடி ஒரு நிகழ்ச்சியில் பரதம் ஆடினேன். பாடல், நடனம், இரண்டுமே மிக மிகப் பிடித்தவை!
கவிநயா said...
இந்தப் பாடலுக்கு இரண்டு வாரம் முன்னாடி ஒரு நிகழ்ச்சியில் பரதம் ஆடினேன். பாடல், நடனம், இரண்டுமே மிக மிகப் பிடித்தவை
>>>>.கவிநயா! இந்தப்பாடலுக்கு நடனம் ஆடினீர்களா? ஆஹா நான் அதைப்பார்க்க வேண்டுமே? இந்தியா வந்தால் ஒரு நிகழ்ச்சி வைத்துக்கொள்ளவேண்டும் அல்லது இதைப்பார்க்கவாவது நான் திரும்ப அமெரிக்கா வரணும்.
ஆகா. எத்தனை முறை ஆடச் சொன்னாலும் ஆடுவேன். பார்க்கிறவங்களுக்குதான் எப்படியோ, தெரியாது :)
நீங்கதான் இந்தப் பாடலைப் பாடக் கத்துக்கிட்டேன்னீங்களே. அதனால நீங்க பாட, நான் ஆடலாம் :)
அவன் மனசு வச்சா நடவாததும் உண்டோ?
அருமை கவிநயா அக்கா. எனக்கும் மிகவும் பிடித்த பாடல் இது. இந்தப் பாடலை முதலில் கேட்டபோது மிகவும் பிடித்துப் போய் அப்போதிலிருந்து தினந்தோறும் சில மாதங்கள் கேட்டேன். ஒரே நாளில் மீண்டும் மீண்டும் கேட்டேன்.
ஷைலஜா அக்கா பாட நீங்கள் ஆட இறைவனின் திருவுள்ளத்திற்கு மிகவும் உகப்பானதாக இருக்கும்.