70. வாணி ஜெயராம்: கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்!
அன்னிக்கி நம்ம ஜிராவுடன், ஜிடாக்கில், ஜிலுஜிலு என்று சாட்டிக்கிட்டு இருந்தேன்;
ஏண்ணா......முருகனருள் ராகவன்-னு போர்டு போட்டுக்குனு,
கண்ணன் பாட்டுத் திண்ணையில காலாற உட்காந்துகிட்டு இருக்கீக!
நீங்க கண்ணன் பாட்டுல பதிவு போட்டு எம்புட்டு நாள் ஆச்சுது? கொஞ்சம் எட்டிப் பாருங்கோண்ணா என்றேன்!
மனுசன் நெசமாலுமே எட்டிப் பார்த்தாரு! எட்டுமா எட்டுமா-ன்னு எட்டி எட்டிப் பாத்தாரு!
யாரை இப்பிடி எட்டி எட்டிப் பாக்குறீங்க? கண்ணனையா? அதான் ஒங்க முன்னாடி நானே இருக்கேனே-ன்னு சொன்னது தான்! மனுசன் ஒரு மொறை முறைச்சுப் பாத்தாரு!
எங்கடா அந்த ராதா? அவளுக்கோசரம் தான் கண்ணன் பாட்டு வலைப்பூவுக்கே வர ஒத்துக்கிட்டேன் தெரியுமா?-ன்னாரு!
அத்தோட நிக்காம ராதா மேல பல பாட்டுகளை அள்ளி அள்ளி வீசினாரு!
எல்லாம் அவர் குருநாதர் எம்.எஸ்.வி போட்ட பாட்டாம்!
நான் எல்லாத்தையும் ஒடனே லபக் லபக்-னு ட்ராவிட் கணக்கா கேச் புடிச்சிக்கிட்டேன்! இந்தப் பாட்டுலயே ஏதாச்சும் ஒன்னைப் போடுங்க-ன்னு கேட்டேன்!
நீயே என் பேரைச் சொல்லிப் போட்டுக்க போடா! நான் பாட்டு போட்டா என்னா, நீயி பாட்டு போட்டா என்ன-ன்னு சொல்லிப்புட்டாரு!
வெறுமனே பாட்டு போட்டா போதுமா? பேக்கிரவுண்டு கொடுங்க! எல்லாம் ஒங்க காலத்துப் படம்...
எங்களுக்கு எல்லாம் யுவன், ஹாரிஸ் இப்படித் தான் தெரியும்-னு வேண்டிக் கொள்ள...இதோ ஜிரா!
இயக்குநர் கே.சங்கர் தெரியுமா? பல பக்திப் படங்களைக் கூடச் சமூக நோக்கில், எளிமையா கொடுப்பாரு! அவர் இயக்கிய ஒரு படம் சுப்ரபாதம்!
இந்தப் படத்தில் சாதாரண தட்டு மக்களையும், பல வைணவக் கோவில்களையும், அதை ஒட்டினாற் போலச் சில கதைகளையும் சோடிச்சி படம் பிடிச்சிக் காட்டி இருப்பாரு!
அதுல வாணி ஜெயராம் பல பாடல்களைப் பாடி இருப்பாங்க! ஆனா அவங்களும் ஜேசுதாசும் சேர்ந்து பாடின இந்த டூயட் செம ஹிட்!
கண்ணா கோபாலா ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா
அப்படின்னு ஒவ்வொரு பத்தியிலும், எடுப்பா முடிப்பாங்க!
என்னது டூயட்டா? ஆமா கண்ணன் பாட்டுல நான் கொடுக்கறேன்னா, டூயட் இல்லாம என்னவாம்? படத்துல ஜெய்கணேஷும் லதாவும் ஆடுவாங்க!
கண்ணா கோபாலா ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா என்று நீங்களும் டூயட் ஆடிக்கிட்டே பாடுங்க!
இந்தா, கேளுங்க!
KannanaiNinaithaal... |
கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
பொன்மணி வண்ணன் சொன்னது கீதை
பூமகன் மார்பினில் தவழ்ந்தவள் ராதை
நல்லவர் செல்வது அவனது பாதை
நாடிய மனிதன் உலகத்தில் மேதை
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
(கண்ணனை நினைத்தால்)
ஆற்றினில் பெண்கள் சேலையை எடுத்தான்
அதையே திரெளபதி கேட்டதும் கொடுத்தான்
காற்றிலும் இசையிலும் கண்ணனின் குரலே
பாட்டினில் வருவது புல்லாங் குழலே
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கோபியர் நடுவே கண்ணனின் நாதம்
குருவாயூரில் குழந்தையின் கீதம்
குருவாயூரில் குழந்தையின் கீதம்
தேவர்கள் சபையில் ஸ்ரீகிருஷ்ண வேதம்
திருமலை தனிலே தவ சுப்ரபாதம்
தவ சுப்ரபாதம் தவ சுப்ரபாதம்
(கண்ணனை நினைத்தால்)
படம்: சுப்ரபாதம்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
குரல்: வாணி ஜெயராம், ஜேசுதாஸ்
இசை: மெல்லிசை மன்னர், எம்.எஸ்.விஸ்வநாதன்
12 comments :
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்
நடக்கட்டும்.
வாணியின் குரல் சூப்பர்.
இது வரைக் கேட்டிராத பாடல். ஆனால் வேற ஒரு பாட்டின் சாயல் நிறையவே இருக்கே. ரவி, என்ன பாட்டு மாதிரி இது இருக்குப்பா?
//வடுவூர் குமார் said...
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்
நடக்கட்டும்.//
எல்லாம் ஒங்க ஆசி குமாரண்ணா!
//வாணியின் குரல் சூப்பர்//
வாணி மெய்யாலுமே வாணி தான்!
சுசீலா, ஜானகி என்ற இரு பெரும் இமயங்களுக்கு மத்தியில் வீசும் தென்றல் இவங்க!
//இலவசக்கொத்தனார் said...
இது வரைக் கேட்டிராத பாடல்.//
எல்லாப் புகழும் ஜிராவுக்கே!
//ஆனால் வேற ஒரு பாட்டின் சாயல் நிறையவே இருக்கே. ரவி, என்ன பாட்டு மாதிரி இது இருக்குப்பா?//
கேள்வியும் ஜிராவுக்கே!
அண்ணே சொல்லுங்கண்ணே! :-)
சிவாஜி-சரிதா படம் மாதிரி இருக்கு கொத்ஸ்! கேட்டா மாதிரி தான் இருக்கு ட்யூனை!
கீழ் வானம் சிவக்கும் படமா?
பாடலைக் கேட்டேன். கவியரசின் பாடல், மெல்லிசை மன்னரின் இசையில், வாணி ஜெயராமின் தேனினும் இனிய குரலில் கேட்டது மனதை நெகிழச் செய்தது. இன்பம் இன்பம் கொள்ளை இன்பம்
//cheena (சீனா) said...
பாடலைக் கேட்டேன். கவியரசின் பாடல், மெல்லிசை மன்னரின் இசையில், வாணி ஜெயராமின் தேனினும் இனிய குரலில் //
வாங்க சீனா
வாணியின் குரலுக்காகவே நானும் பலமுறை இப்பாடலைக் கேட்டேன்!
சின்ன வயசில் மதுரை நியூசினிமா திரையரங்கில் இந்தப் படத்தைப் பார்த்து வந்ததிலிருந்து இந்தப் பாட்டை பாடிக் கொண்டே இருந்திருக்கிறேன். இன்று வரை மனத்தில் பசுமையாக இருக்கும் வரிகள். அண்மையில் மதுரை சென்ற போது இந்தப் படத்தையும் VCDயில் 30ரூபாய்க்கு வாங்கி வந்தேன். நானும் என் மகளும் உட்கார்ந்து பார்த்தோம்.
"அட்டகாசமான எளிய பாடல்!
வா.ஜெ, ஜே.தா. குழைந்து குழைந்து பாடக் கேட்டது ஒரு இனிய சுகானுபவம்!
நன்றி, உங்களுக்கும், ஜி.ரா.வுக்கும்!
//குமரன் (Kumaran) said...
சின்ன வயசில் மதுரை நியூசினிமா திரையரங்கில் இந்தப் படத்தைப் பார்த்து வந்ததிலிருந்து இந்தப் பாட்டை பாடிக் கொண்டே இருந்திருக்கிறேன்.//
ஆகா, குமரன் எங்களுக்காகவும் ஒரு முறை பாடிக் காட்டுங்களேன்! :-)
//அண்மையில் மதுரை சென்ற போது இந்தப் படத்தையும் VCDயில் 30ரூபாய்க்கு வாங்கி வந்தேன். நானும் என் மகளும் உட்கார்ந்து பார்த்தோம்.//
ஏதேது...ஒரு கலக்சனே அள்ளிக் கிட்டு வந்திருக்கீங்க போல!
//
VSK said...
"அட்டகாசமான எளிய பாடல்!
வா.ஜெ, ஜே.தா. குழைந்து குழைந்து பாடக் கேட்டது ஒரு இனிய சுகானுபவம்!
நன்றி, உங்களுக்கும், ஜி.ரா.வுக்கும்!//
வாஜெ ஜேதா
இதுவும் கலக்கலாத் தான் இருக்கு SK! :-)
//ஆனால் வேற ஒரு பாட்டின் சாயல் நிறையவே இருக்கே. ரவி, என்ன பாட்டு மாதிரி இது இருக்குப்பா?//
கீழ் வானம் சிவக்கும் படமா?
கடவுள் நினைத்தான் மணநாள் படைத்தான்
வாழ்க்கை உண்டானதே!
திருமகளே நீவாழ்கவே!
நாலு நாலு சொல்லா-கிட்டத்தட்ட அதே மீட்டரில் தான் வருகிறது! ஆனா சிவாஜி பாடுற பாட்டு கொஞ்சம் ஃபாஸ்ட் பீட்
பதிவுல பல தப்புக இருக்குதுங்களே.
மொதல்ல என்ன அண்ணான்னு கூப்புட்டது தப்பு. வயசுலயும் சரி அனுபவத்துலயும் சரி அறிவுலயும் சரி...நீங்கதான் மூத்தவரு.
அடுத்தது
// இசை: மெல்லிசை மன்னர், எம்.எஸ்.விஸ்வநாதன் //
அதென்ன மெல்லிசை மன்னர்னு ஒருத்தரும் எம்.எஸ்.விஸ்வநாதன்னு ஒருத்தரும் இசையமைச்சிருக்காங்களா? அதென்ன கமா நடுவுல?
அடுத்தது
லேபிள்ள வாணி ஜெயராம், சுப்ரபாதம், ஏசுதாஸ்னு போட்டுட்டு மெல்லிசை மன்னரை விட்டுட்டீங்க. கவியரசரையும் விட்டுட்டீங்களே. அவங்க ரெண்டு பேரையும் பிடிக்காதா? ஹாரீஸ் யுவன் அளவுக்கு அவங்களுக்கு விவரம் தெரியாதுன்னு நெனைக்கிறீங்களா?
ஆனா ஒன்னு.. அதெப்படி லதா மாதிரியே இருக்காங்க நீங்க போட்டிருக்குற படத்துல உள்ள ராதை. நீங்களே வரைஞ்சீங்களா என்ன ;)