Wednesday, August 15, 2007

64. ஆடிப்பூரம் - SPB பாடிய "வந்தாள் மகாலக்ஷ்மியே"!

வந்தாள் மகாலக்ஷ்மியே என்னும் இந்தப் பாடல் கண்ணன் பாட்டு வலைப்பூவுக்குச் சரிப்பட்டு வருமா? இன்று ஆடிப்பூரம்! (Aug, 15 2007)
இன்று வந்தாள், கோதை என்னும் ஆண்டாள்.
இன்று வந்தாள் மகாலக்ஷ்மியே!
நிலமகளாய், அலைமகளாய், திருவாடிப் பூரத்தில் ஜகத்துதித்தாளை,
இந்தப் பாடல் வரிகளில் தொடர்புபடுத்திப் பார்த்தால், பொருந்தவே செய்கிறது!

இசை ஞானியின் இசையில், SPB சிரித்துச் சிரித்துப் பாடும் பாடல் இது!
கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல்.
விழா மூடில் கேட்டால், அழகான எளிமையான இசை! - மனம் துள்ளும்!
இரட்டை அர்த்தங்கள், காதல் விளிப்புகள் எல்லாம் எதுவும் இல்லாமல், ஒரு ஆலாபனைப் பாடல்!
எனவே, ஆண்டாளையே பாடுவதாக நினைத்துக் கொண்டும் பாடலாமே!

பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்!
பாடல் பற்றிய ஆங்கிலப் பதிவை, நம்ம வற்றாயிருப்பு சுந்தர், இங்கே இட்டுள்ளார்! பாடும் நிலா பாலு - பார்த்து, கேட்டு, மகிழலாம்!



வந்தாள் மகாலக்ஷ்மியே - என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
வந்தாள் மகாலக்ஷ்மியே - என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே

(இது பெருமாள் பாடுவதாகவே கற்பனை செய்து கொள்ளுங்கள் - அவனையே ஆண்டவள் ஆண்டாள். அதனால் அவன் வீட்டில் அவள் ஆட்சி தான்! :-)

அடியேனின் குடி வாழ
தனம் வாழ - குடித்தனம் புக
வந்தாள் மகாலக்ஷ்மியே - என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
(இது பெரியாழ்வார் பாடுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய், ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய், அடியேனின் குடி வாழ= குடி வாழ வந்தவள் தானே!)

பக்தனின் வீட்டோடு தங்கி விட்டாள்
பண்டிகை நாள் பார்த்து (ஹாஹா) பொங்கலிட்டாள்
காமாட்சியோ மீனாட்சியோ
அபிராமியோ சிவகாமியோ
அம்பிகை இங்கொரு கன்னிகை என்றொரு
உருவம் எடுத்து
உலவி நடந்து

(வந்தாள் மகாலக்ஷ்மியே)
(பொங்கல் இட்டதை - நோன்பு நோற்றதாகவும் கொள்ளலாம் அல்லவா?
காமாட்சி, மீனாட்சி, அபிராமி, சிவகாமி - எல்லாரும் அலைமகளின் தோழிகள் தானே!)


நண்பா பெண்பாவை கண்வண்ணம்
கள்ளம் இல்லாத பூவண்ணம்
கண்டேன் சிங்காரக் கைவண்ணம்
தொட்டால் எல்லாமே பொன்வண்ணம்
பந்தம் சொந்தம் இல்லாமல்
வந்தது இங்கொரு வண்ணமயில்
வீடு வாசல் எல்லாமே
மின்னுது மின்னுது புன்னகையில்
மயங்கினேன்........... சபாஷ்.... ஆ ஆ ஆ ஆ
(ஸ்வரங்கள்.....)
(தொட்டால் எல்லாமே பொன்வண்ணம் = அவள் தொட்டுச் சூடிக் களைந்தது தானே, கண்ணனுக்குப் பொன்மாலையைக் காட்டிலும் பெரிது?)

என்வழி நேராக ஆக்கி வைத்தாள்
என்னையும் சீராக மாற்றி வைத்தாள்
தெய்வீகமே பெண் ஆனதோ
நான் காணவே தேர் வந்ததோ
மங்களம் பொங்கிடும்
மந்திரப் புன்னகை
இதழில் வடிய
இனிமை விளைய
(வந்தாள் மகாலக்ஷ்மியே)

( தெய்வீகமே பெண் ஆனதோ = இது உண்மை தானே?
என்வழி நேராக ஆக்கி வைத்தாள் = மற்றை நம் காமங்கள் களைந்து, நேரான வழியாக ஆக்கி வைத்தாள்!
என்னையும் சீராக மாற்றி வைத்தாள் = நோன்பினால், தான் மட்டுமன்றி, நோற்ற பெண்கள் அனைவரையும் அவனுக்குச் சீராக அல்லவோ ஆக்கி வைத்தாள்! சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!
)



படம்: உயர்ந்த உள்ளம்
குரல்: SPB
இசை: இளையராஜா
வரிகள்: ?
ராகம்: கல்யாணி

11 comments :

jeevagv said...

:-)

//இரட்டை அர்த்தங்கள் இல்லாமல்...//

அப்படீன்னு சொல்லிட்டு இரண்டாவது அர்த்தம் நீங்களே கொடுத்தால்?

;-) :-)

அழகாகப் பொருந்துகிறது!

கண்ணன் பாட்டிலும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...
//இரட்டை அர்த்தங்கள் இல்லாமல்...//

அப்படீன்னு சொல்லிட்டு இரண்டாவது அர்த்தம் நீங்களே கொடுத்தால்?//

வாங்க ஜீவா
அர்த்தத்தை இரட்டையாக்காம விடமாட்டோம்-ல! :-)))

//அழகாகப் பொருந்துகிறது!
கண்ணன் பாட்டிலும்//

நன்றி ஜீவா!

Anonymous said...

hmmmm.
nalla cinema padal
athai idarkku use pannikiteengala?
still good only.

தி. ரா. ச.(T.R.C.) said...

அனர்தத்தை அர்த்தமாக மாற்றிவிட்டீர்களே சூபர்

CVR said...

சூப்பர் பாட்டு!!
பதிவுக்கு நன்றி!!

வீட்டுக்கு போய் கேக்கறேன்!! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தி. ரா. ச.(T.R.C.) said...
அனர்தத்தை அர்த்தமாக மாற்றிவிட்டீர்களே சூபர்//

திராச
அனர்த்தமா? இளையராஜா கோச்சிக்கப் போறாரு! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//CVR said...
சூப்பர் பாட்டு!!
பதிவுக்கு நன்றி!!
வீட்டுக்கு போய் கேக்கறேன்!! :-)//

ஒங்களுக்கு இது மாதிரி பாட்டெல்லாம் சமீப காலமா ரொம்ப பிடிக்குறா மாதிரி தெரியுதே மிஸ்டர்! - என்னமோ நடக்குது! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Anonymous said...
hmmmm.
nalla cinema padal
athai idarkku use pannikiteengala?
still good only.//

குட் ஆக இருந்ததால் தான் யூஸ் பண்ணிக்கிட்டேங்க. நன்றி அனானி ஐயா!

Sundar Padmanaban said...

ஐயா சாமி. அன்னிக்குத் தேதிக்கே தமிழ்லயும் போட்ருக்கேனே. இங்கிட்டுப் பாருங்க http://myspb.blogspot.com/2006/06/blog-post_15.html

வெள்ளிக் கிழமை வரலஷ்மி பூஜைன்னு வீட்ல பேசிக்கிட்டு இருந்தாங்க. தலைவரு பாட்டைப் போட்டுட வேண்டியதுதான்.

நன்றி.

Sundar Padmanaban said...

சொல்ல மறந்துட்டேன். தலைப்புல SPB னு பாத்ததும் யாரு என்னன்னு பாக்காம ஓடியாந்தேன்! :-)

Anonymous said...

Arumaiyana paadalgal. Maadu mekkum kanne paadal varigal kidaithal nallathu.

nanndri

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP