Saturday, July 14, 2007

59. வருஷம் 16 - கங்கைக்கரை மன்னனடி, கண்ணன் மலர்க் கண்ணனடி

வருஷம் 16 என்னும் படத்தில், இளையராஜா போட்டாரு பாருங்க ஒரு தோடி! அதுவும் பாடலின் இறுதியில் கம கம என்று கமகம் பொங்கிப் பிரவாகமாய்.....
யேசுதாஸ் பாடும் போது, இசை கேட்க எழுந்"தோடி" வருவார் அன்றோ?
நடன மெட்டில் அமைந்த நல்ல கண்ணன் பாட்டு!

கார்த்திக் பாடல் கலைஞர்; குஷ்பு ஆடல் கலைஞர்!
படத்தில் கார்த்திக்கை அந்தச் சிவப்பு சால்வை போட்ட கெட்டப்பில் பார்க்கவே வித்தியாசமாக இருக்கும்!:-)
குஷ்புவும் வேறு யாரோ ஒருவர் வந்து பாட, பரத நாட்டியத்தை நிறுத்தி விடுவார்!
கார்த்திக் பாடினால் மட்டுமே ஆடுவார் போல! இந்தப் பாடல் படத்தின் க்ளைமாக்ஸோ என்னவோ...கடைசியில் துப்பாக்கி பேசிடுமோ? நீங்களே பாருங்க!

பாடலைக் கேட்டு ரசிக்க - இங்கே சுட்டுங்கள்!
பாடலின் ஆரம்பத்தில் வரும் ஒரு முன்னுரை (விருத்தம்)....ஆடை கட்டும் பைங்கிளியே....அதில் அப்படியே யேசுதாஸ் குழைவதைக் கேட்கலாம்!




(கண்மணியே ராதை என்னும் - காதலியே நான் விரும்பும்
பெண்மணியே..... ஆடை கட்டும் பைங்கிளியே!
கண்ணன் வந்தான் பாட்டிசைக்க - கவலைகளை விட்டு விடு
காற் சலங்கை சத்தமிட - மேடையிலே வட்டமிடு....)


கங்கைக்கரை மன்னனடி - கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி - உள்ளம் கவர் கள்வனடி
நெஞ்சில் எழும் அலைகளிலே - நீச்சல் விடும் இளைஞனடி
வஞ்சிக் கொடி மடியினிலே - மஞ்சம் இடும் தலைவனடி


உள்ளத்தை எடுத்தேன் - உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தைப் பிரிந்த - மீனைப் போல் துடித்தேன்
(கங்கைக்கரை மன்னனடி - கண்ணன் மலர்க் கண்ணனடி)


தத்தும் சிறு தாமரைப் பாதங்கள் - நடை தான் பழக
கத்தும் கடல் நீரலை போல் - இங்கு குழல் தான் நெளிய
இல்லை என யாவரும் கூறிடும் - இடை தான் ஒடிய
இன்பம் என என் விழி பார்ப்பது - இமை தான் விரிய

காற் சலங்கை ஆடுதடி ஆள் வரத்தான் வாழுதடி
காற் சலங்கை ஆடுதடி ஆள் வரத்தான் வாழுதடி


முன்னம் பல ஜென்மம் வழியே - உண்டானது உன் உறவே!
இன்னும் என்னைத் தொட்டுத் தொடர்ந்தே - பந்தாடுது உன் நினைவே?
உயிர் வாழும் பெண்ணா - வா வா கண்ணா
(கங்கைக்கரை மன்னனடி - கண்ணன் மலர்க் கண்ணனடி)

தாம் தரிகிட, தாம் தரிகிட, தீம் தரிகிட, தீம் தரிகிட.........

சந்தம் தரும் ஆடலும் பாடலும் சுகமாய் மலரும்
சுட்டும் விழிப் பார்வையில் ஆயிரம் நிலவாய் பொழியும்
அங்கம் ஒரு ஆலிலை போல் இங்கு நடனம் புரியும்
அன்பே என மாதவன் தோள் தொட நெடுநாள் உருகும்


காத்திருப்பான் கை அணைக்க - காதலியாள் மெய் அணைக்க
காத்திருப்பான் கை அணைக்க - காதலியாள் மெய் அணைக்க

கண்ணன் மனம் அந்தப்புரமே - வந்தாடிடும் முத்துச் சரமே
அச்சம் விடும் பச்சைக் கிளியே - அவற்றால் தினம் நத்தும் கனியே
நாளும் ஓதும்......காதல் வேதம்!
(கங்கைக்கரை மன்னனடி - கண்ணன் மலர்க் கண்ணனடி)



படம்: வருஷம் 16
குரல்: KJ ஜேசுதாஸ்
இசை: இளையராஜா
வரிகள்: ?
ராகம்: தோடி

12 comments :

Anonymous said...

Nice post about this song! This song is at the top of my favorite list. There is more to it than just music, voice and cinematography.

If you see the lyrics... WoW! Every second letter in the first word is a "Otru" - the kavignar - I think its vali - has played his part also superb!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவி!
ஜேசுதாசின் இனிமையான குரலுக்காக இப்பாடல் பிடிக்கும்.

Anonymous said...

nice one :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Srikanth said...
If you see the lyrics... WoW! Every second letter in the first word is a "Otru" - the kavignar - I think its vali - has played his part also superb//

நன்றி ஸ்ரீகாந்த்
எழுதியது வாலியா? அருமையான சொல்லாடல்கள்!
நீங்கள் குறிப்பிடும் ஒற்று, ஒவ்வோர் அடியிலும் எதுகையாக வருவது!

//உள்ளத்தை எடுத்தேன் - உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தைப் பிரிந்த - மீனைப் போல் துடித்தேன்//

இயல், இசை இரண்டிலுமே பாட்டு சூப்பர் ஹிட்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ரவி!
ஜேசுதாசின் இனிமையான குரலுக்காக இப்பாடல் பிடிக்கும்//

ஆமாம் யோகன் அண்ணா...
யேசுதாஸின் மிக வேகமாகப் பாடும் பாடல்களில் இதுவும் ஒன்று! அப்படியே கொட்டி இருக்கிறார்!

ஷைலஜா said...

வங்கக்கடல் வண்ணனடி - உள்ளம் கவர் கள்வனடி..
புரிகிறதா ரவி? வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனை---திருப்பாவைபாடல்! வரிகள் அனைத்துமே அற்புதம்! இனிமையான குரல் ஜேசுதாஸுக்கு! தாராள மனம் இதை இங்கு அளித்த நண்பர் கண்ணபிரான் ரவிக்கு! நன்றியோ நன்றி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//thurgah said...
nice one :) //

துர்காவா? நம்ம துர்காவா? பாச மலர் துர்க்காவா? :-)
வாங்க துர்கா...
இப்ப தான் ஆர்க்குட்டில் உங்க page 78 பார்த்திட்டு சிரிச்சிக்கிட்டு இருந்தேன்....:-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷைலஜா said...
வங்கக்கடல் வண்ணனடி - உள்ளம் கவர் கள்வனடி..
புரிகிறதா ரவி? வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனை---திருப்பாவை பாடல்!//

ஆகா....சினிமாப் பாட்டிலும் சிங்காரத் திருப்பாவை எடுக்க திருவரங்கப்ரியாவால் மட்டுமே முடியும்!

//தாராள மனம் இதை இங்கு அளித்த நண்பர் கண்ணபிரான் ரவிக்கு! நன்றியோ நன்றி!//

தாராள மனமா? எனக்கா? ஹி ஹி
ஆமாங்க...இந்தப் பாடல் வரிகள் அவ்வளவா கிடைக்கல! கேட்டு டைப் செஞ்சேன்! :-)

Unknown said...

KRS, I like it this song because of KJ voice. Overall this song good one

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நெல்லை காந்த் said...
KRS, I like it this song because of KJ voice. Overall this song good one//

நன்றி நெல்லை காந்த்...
யேசுதாஸ் + தோடி ராகம் = சொல்லவும் வேண்டுமோ?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இது தோடியா, சிந்து பைரவியா?
நண்பர் ஒருவர் நான் சொன்னது தவறு! சிந்து பைரவி என்று சொல்லி விட்டார்!

அறிந்தவர் சொல்லி உதவுங்கள்!

ராகம் எதுவாயினும், ரசம் சுவையோ சுவை! :-)

குமரன் (Kumaran) said...

மிக அருமையான பாடல் இது இரவிசங்கர். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் எனக்கு பிடிக்கும். இந்தப் பாடலுக்கு முதலிடம்.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP