உடையவர், உறைபவர்!
கண்ணன் ராதை - இவர்கட்கு மட்டும் தான் இடமா? - இந்த வலைப்பூவில்?
யார் சொன்னது? அவனைக் காட்டிலும் இரக்கம் உள்ளவர்க்கு எல்லாம், இப்பதிவில் இடம் உண்டே!
அவனைக் காட்டிலும் இரக்கம் "உடையவர்" யார் அப்பா?
அதான் உங்க கேள்வியிலேயே பதில் சொன்னீரே அப்பா!
உடையவர், அவரே தானப்பா! உடையவர், அனபர் நெஞ்சில் உறைபவரப்பா!
இராமானுசரின் திரு அவதார நாள் இன்று! அவர் மறைந்த (பரமபதித்த) தினமும் கூட! சித்திரைத் திருவாதிரை.
அது என்ன உடையவர்?
பெருமாளின் தர்ம பத்தினி சாட்சாத் மகாலக்ஷ்மி, அவருக்கு இட்ட பெயர்!
நம் பெரும் குல தனத்துக்கு எல்லாம் உடையவர் இவர்! அதனால் உடையவர்!
எல்லாச் சாதிக்கும் மதங்களுக்கும் உடையவர்.
அவர்களை எல்லாம் பெருமாளுக்கு உடையவர் ஆக்கும் உத்தமர்!
அதனாலும் உடையவர்!!
1. இளையாழ்வார் - பிறப்புப் பெயர் - பெரிய திருமலை நம்பிகள் இட்டது
2. ராமானுஜர் (ராம+அனுஜர்=ராமனின் உடன் பிறந்தான்=இலக்குவன்) - பெரிய திருமலை நம்பிகள் தந்தது
3. பரதபுரீசர் - பெரிய திருமலை நம்பிகள் தந்தது
4. யதிராசர் (யதி+ராசர்=முனிவர்க்கு அரசர்) - காஞ்சி வரதராஜப் பெருமாள் தந்தது
5. உடையவர் - ரங்கநாதனும், ரங்கநாயகியும் தம் சொத்தைத் தந்து, பேரையும் தந்தது
6. தேசிகேந்திரன் - திருமலை வேங்கடேசன் தந்தது
7. ஸ்ரீ பாஷ்யகாரர் - கலைமகள், சரஸ்வதி தேவி தந்தது
8. திருப்பாவை ஜீயர் - பெரிய நம்பிகள் தந்தது
9. எம்பெருமானார் - திருக்கோட்டியூர் நம்பி தந்தது
10. நம் கோயில் அண்ணன் - வில்லிபுத்தூர் ஆண்டாள் தந்தது
11. சடகோபன் பொன்னடி - திருமலையாண்டான் தந்தது
12. லக்ஷ்மண முனி - திருவரங்கப் பெருமாள் அரையர் தந்தது
இறும்பூதெய்தும் மனம்
இராமானுஜனை நினைக்கும் கணம்
வைணவத்தின் வைரமணி
வேதாந்த சிகாமணி
சூடிகொடுத்த நற்பெண்மணி
அவளுக்கு முன்னான மாமுனி
அரங்கனுக்கு உடையவன்
அன்பருக்குள் உறைபவன்
சீரார் மதில்கள் சூழ்
திருவரங்கத் திரு நகரினில்
காரார்ந்த மேனியனின்
காலடியைத் துதிப்பவன்
ஆதிரைநட்சத்திரம் கொண்ட
தீதிலா வைணவ ஜோதி
(அவன்)ஓதியதெல்லாம்
'அண்ணலின் அடியார்
அனைவரும் ஒரே ஜாதி!"
******************************
இராமானுச ஜெயந்தியை முன்னிட்டு
ஷைலஜா (திருவரங்கப்ரியா) எழுதிய பாடல்
21 comments :
ஷைலு,
அருமையா எழுதி இருக்கீங்க. ரொம்ப சந்தோஷம்.
திருவரங்கபிரியா. அருமையாக சுருக்கமாக எழுதியிருக்கிறீர்கள். நம்மையுடையவன் நாராயணன் நம்பி மட்டுமில்லை; நம்மையுடையவள் பெரிய பிராட்டியார் மட்டுமில்லை; நம்மை உடையவர் உடையவரும் என்று அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
ராமானுஜ திவ்யாக்ஞா வர்த்ததாம் அபிவர்த்ததாம்
ஷைலஜா, திருவாதிரை நிறைவாகப் பதிவுகள் படிப்பது ரொம்ப அழகு.
கவிதை உருவாகவும் சொல்லிவிட்டீர்கள்.
அருமையாக இருக்கிறது.
rombave arumaiyana vilakkathais surunga cholli vilanga vachirukings. nanri.
நன்றி துளசிமேடம், குமரன், வல்லிமா, கீதா! எல்லாம் கண்ணபிரான்(ரவிசங்கர்)
கருணைதான் கண்ணன் பாட்டினில் சேர்ந்து என்னை எழுதவைத்தது!
உடையவர் திருநாளில், அன்புடையவர் பாடிய, பதிவும் கருத்துடையது தான்!
/VSK said...
உடையவர் திருநாளில், அன்புடையவர் பாடிய, பதிவும் கருத்துடையது தான்! //
மகிழ்ச்சியில் நெஞ்சடைக்கிறது டாக்டர்!:)
ஷைலஜா
அருமை அருமை!
உடையவரை எப்படியோ பிளாக்கருடன் போராடி,
கண்ணன் பாட்டில் கொண்டு வந்து விட்டீர்களே!
//அரங்கனுக்கு உடையவன்
அன்பருக்குள் உறைபவன்//
முத்தான வரிகள்!
உடையவரின் திருமேனி
முப்படங்களும் அருமை!!
நானும் சொல்ல வேண்டும் என்று எண்ணினேன் திருவரங்கபிரியா. தானுகந்த திருமேனி, தமருகந்த திருமேனி, தானான திருமேனி என்று மூன்று திருமேனிகளையும் ஒரே நேரத்தில் தரிசிக்க வைத்துவிட்டீர்கள். அருமை.
ஒரு கேள்வி. திருவரங்கத்தார் யாராகிலும் அவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுவிடுவேன். தானான திருமேனி உண்மையிலேயே உடையவரின் பூதவுடலா? அப்படி சொன்னவர்கள் உண்டு. இல்லை அவர் திருமேனியைப் பள்ளிப்படுத்திய இடத்திற்கு மேல் அமைக்கப்பட்ட சிலையா?
நான் ஒரு முறை திருவரங்கம் உடையவர் சன்னிதிக்குச் சென்ற போது அர்ச்சகர் தானான திருமேனியில் நகங்களைத் தொட்டுப் பார்க்க அனுமதித்தார். திருமுடியை (கிரீடத்தை) தூக்கிக் காட்டி சிகையையும் காணும் படி வைத்தார்.
//அருமை அருமை!
உடையவரை எப்படியோ பிளாக்கருடன் போராடி,
கண்ணன் பாட்டில் கொண்டு வந்து விட்டீர்களே//
ரவி! இதில் உங்கள் உதவி பெரும்பங்கு. உடையவர் மட்டும் அன்று ப்ளாக்குல வர்லேன்னா உடைஞ்சே போயிருக்கும் மனசு!
குமரன்! தானுகந்த திருமேனி தமருகந்த திருமேனி இரண்டு விக்ரஹங்களிலும் ராமானுஜர்தனது சக்தியை செலுத்தி அளித்திருக்கிறார்.
இவைகள் மேல்கோட்டை மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ளன.
திருவரங்கத்தில் அரங்கனின் திருவடி நோக்கியபடி அரங்கனின் கட்டளைப்படி ,வசந்தமண்டபத்தில் திருப்பள்ளிப் படுத்தப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் ராமானுஜருக்கு ஒரு சந்நிதி கட்டி அவரது விகரஹத்தை பிரதிஷ்டை செய்தனர். திருவரங்கத்தில் தானான திருமேனி என்ற திருநாமத்துடன் ஆராதனை இப்போதும் செய்யப்பட்டுவருகிறது.
தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த கருணைக்கடல் ஸ்ரீராமானுஜர்.
நகங்கள் சிகை அப்படியே ராமானுஜருடையது என அங்கு சிலர் சொல்கிறார்கள். சிலர் மறுக்கிறார்கள்.
நம்பிக்கையைப் பொறுத்து ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம். அது இருக்கட்டும்,ராமானுஜரின் பிரதான சீடர் கூரத்தாழ்வாரின் குருபக்தி அலாதியானது. திருவரங்கத்தின் கோயிலில் நுழைந்ததும் முதலில் வருவது கூரத்தாழ்வார் சந்நிதிதான் அதற்கும் கதை இருக்கிறது கேட்டால் மெய்சிலிர்க்கும் கண் நனையும் ஒருமுறை அதை அளிக்க விருப்பம்
தகவல்களுக்கு நன்றி ஷைலஜா. கூரத்தாழ்வார் கதையையும் விரைவில் கூறுங்கள்.
மூன்று திருமேனிகளையும் தரிசிக்கத் தந்ததற்கு மிக்க நன்றி ஷைலஜா. மிகுந்த மனநிறைவைத் தந்த பதிவு.
கூரத்தாழ்வார் பற்றியும் எழுதுங்கள்.
ராமானுஜர் அவதார தினத்தன்று நீங்கள் எழுதிய அவரது துதியும் அருமை.
//ஜெயஸ்ரீ said...
மூன்று திருமேனிகளையும் தரிசிக்கத் தந்ததற்கு மிக்க நன்றி ஷைலஜா. மிகுந்த மனநிறைவைத் தந்த பதிவு.//
நன்றி ஜயஸ்ரீ.என்னை கண்ணன் பாட்டெனும் தேர் வடமிழுக்க சந்தர்ப்பம் தந்த கண்ணபிரான் ரவிசங்கருக்குத்தான் பெருமை எல்லாம் போய்ச்சேரவேண்டும்..
//கூரத்தாழ்வார் பற்றியும் எழுதுங்க//
கண்டிப்பாக எழுதுகிறேன் குமரனும் கேட்டிருக்கிறார்.
/ராமானுஜர் அவதார தினத்தன்று நீங்கள் எழுதிய அவரது துதியும் அருமை. //
அரங்கனின் பக்தன் இராமானுஜனுக்கு இராமாயண அனுமானாய் பெரிய பதிவு தந்தார் ரவிசங்கர். நான் அணிலாய் சிறு பாடலை துதித்து சமர்ப்பித்தேன் .நன்றி ஜய்ஸ்ரீ.
'bhakthi chuvai nani sottum' nice blog. useful info. thank you.
Luckily I came across your Blog. Very nice info.
Dasan.
rathina surukkamana padaal. Nanri
rathina surukkamana padaal. Nanri
rathina surukkamana padal, Nanri
I want the lyrics of udayavarupadesamthanaikolvom song