ஆடினயே கண்ணா!!!
அம்புஜம் கிருஷ்ணா இயற்றியது.
ஆடினயே கண்ணா பிருந்தாவனம் தனில்
ஆனந்த ரசமய அற்புத நடனம்
(ஆடினயே)
ஈடிலா அழகிய கோபியர் உனைத்தேடி
நாடி வந்தார் நதிக்கரை நிலவொளியில்
(ஆடினயே)
மயில் பீலி சற்றே கொண்டைதனில் அசைய
நவரத்ன மகுடம் சிரம்தனில் ஒளிர
மகர குண்டலங்கள் இருசெவி இலங்க
மதிமுகம் தனிலே முறுவல் விளையாட
மணம் கமழ் மாலைகள் மார்பில் அசைந்தாட
மயங்கும் அந்திவண்ண ஆடை இடையாட
மதுர மோகன குழலிசை கூட்ட
மங்கையர் கண்கள் மையல் காட்ட
மலர்கழல் சதங்கை ஜதிலயம் கூட்ட
மனமறிந்து அருள்சொறிந்து
இணைந்து ஒன்றாய்
(ஆடினயே)
இதனை மேண்டலினில் கேட்க இங்கே சொடுக்கவும்.
7 comments :
அழகான பாடல் சுதா!
பாதம் முதல் கேசம் வரை கிருஷ்ண வர்ணனை அழகு!
பாடல் mp3 கிடைக்குமா என்று தேடிப் பார்க்கிறேன்.
திருமதி.அம்புஜம் கிருஷ்ணா.
அவர் உயிர்,உள்ளம் அனைத்திலும் வியாபித்தவன் கண்ணன்.
அத்தனை பக்தி குருவாயூரப்பனிடத்தில்.
எல்லாவிதமான மொழிகளிலும் அவனைப் பாட வேண்டும் என்பதற்காகவே மொழிகளைக் கற்றவர்.
நினைத்த மாத்திரத்தில் பாடல்கள் வடிவம் பெற்றுவிடும்.
என் மாமியாரின் தங்கை என்பதில் எனக்கு மஹாப்பெருமை:-)
வல்லி அம்மா.
திருமதி.அம்புஜம் கிருஷ்ணா உங்கள் மாமியாரின் தங்கையா?! அறிந்து மகிழ்ந்தேன். அவருடைய பாடல்கள் பலவற்றைப் பலமுறை விரும்பிக் கேட்டிருக்கிறேன்.
வெகு நாட்களுக்குப் பின் இந்தப் பதிவில் எழுதியிருக்கிறீர்கள் சுதா. மிக நல்ல பாடல்.
அருமையான பாடல்....ஆம் அம்புஜம் கிருஷ்ணாவின் பாடல்கள் பல கண்ணனை கண்முன் வரச்செய்கிறது....
என்ன வல்லியம்மா, டிவிஎஸ் குடும்பத்துடன் தொடர்புள்ளவரா நீங்கள்.....(எனக்கு மூன்று வருடங்கள் அன்ன தாதாவாக இருந்த மதுரை தாய் நிறுவனம்....)
ஆஹா........... மாமியாரின் தங்கை!!!!!!!!!!
ஹைய்யோ...........
இந்தப் பாட்டுக்குத்தான் இப்போ நாங்க ஆடிக்கிட்டிருக்கோம். ஒரு வரியில் பாடகரின் வார்த்தைகள் புரியாமலிருந்தது. கண்டிப்பாக கண்ணன் பாட்டில் இருக்கும் என்று எதிர்பார்த்தது வீண் போகவில்லை! மிக்க நன்றி.