Thursday, August 02, 2007

62. கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா!

நண்பர் ஆசிப் மீரான் அவர்களின் துணைவியார்,
யாஸ்மீன் பாத்திமா அவர்களின் நினைவஞ்சலிக்கு அடியேன் இந்தப் பாடலைச் சமர்பிக்கிறேன்!
அது என்னமோ, குழந்தைகள் விஷயங்களில் ஏற்படும் மனதின் கனம், இறங்க மிகவும் கடினமாக உள்ளது!
ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா...
அதை உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா...

ஷாஜியின் பதிவு
செந்தழல் ரவியின் பதிவு
சற்று முன்..



பாடலைக் கேட்க இங்கு சொடுக்கவும்!


கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா
ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா

சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா
தர்மத்தைத் தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா
(கேட்டதும் கொடுப்பவனே)

தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா

ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா
அதை உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா

(கேட்டதும் கொடுப்பவனே)

நீயுள்ள சன்னிதியே கிருஷ்ணா கிருஷ்ணா
நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா

கோயிலில் குடி புகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
குடைநிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா

கிருஷ்ணா கிருஷ்ணா...
கிருஷ்ணா கிருஷ்ணா... கிருஷ்ணா கிருஷ்ணா...

எண்ணை இல்லாது ஒரு தீபம் எரிந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா
உன்னை நினைந்தது உருகி இருந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா
கண்களைப் போல் எமைக் காவல் புரிந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா
கண்ணன் திருவடி எண்ணியிருந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா


கிருஷ்ணா கிருஷ்ணா...
(கேட்டதும் கொடுப்பவனே)



படம் : தெய்வ மகன்
இசை : M.S.விஸ்வநாதன்
வரிகள்: கண்ணதாசன்
குரல்: T.M.சௌந்தரராஜன்
ராகம்: கல்யாணி

(இந்தப் பாடல், நண்பர் ஸ்ரீநிவாசனின் நேயர் விருப்பமும் கூட)
இதில் வரும் சிதார் (Sitar) இசையை மறக்காமல் கேட்கவும்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மூன்று வேடங்களில் நடித்த படம்.
இதை ஆஸ்கர் அவார்டுகளுக்கு அனுப்பி வைத்ததாய் எங்கோ படித்த நினைவு!
கல்யாணி ராகத்தில் அமைந்த கண்ணதாசனின் மிகவும் உருக்கமான பாடல்!

17 comments :

CVR said...

நல்ல பாடல்!

வெற்றி said...

ரவி,
அருமையான பாடல். மிக்க நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//CVR said...
நல்ல பாடல்!//

என்ன CVR - என் மேல் இன்னும் கோபமா? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வெற்றி said...
ரவி,
அருமையான பாடல். மிக்க நன்றி//

வாங்க வெற்றி.
கண்ணதாசன், கண்ணனையே அடுக்குத் தொடராக்கின பாட்டு இது!
கிருஷ்ணா கிருஷ்ணா...என்று அடுக்கி விடுகிறார் கவியரசர்!

//ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா
ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா//

என்ன ஒரு வைர வரி பாருங்க!

தி. ரா. ச.(T.R.C.) said...

அருமையான பாட்டு.சந்தர்ப்பங்களுக்கு பொருந்தும் வரிகள் அதுவும் இந்த வரிகள் எனக்கு பொருந்தும் வரிகள்
தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தி. ரா. ச.(T.R.C.) said...
அருமையான பாட்டு.சந்தர்ப்பங்களுக்கு பொருந்தும் வரிகள்//

வாங்க திராச. ஆமாம்...பல சமயங்களில் நமக்குப் பொருந்தும் வரிகள் தான். அதுவும் மூட் அப்செட்-ஆ இருக்கும் போது!

//அதுவும் இந்த வரிகள் எனக்கு பொருந்தும் வரிகள்
தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா//

ஹூம்!

CVR said...

ஐயோ!!
உங்க மேலே என்ன கோபம்???

ஒரு துக்கமான செய்தியுடன் வந்த பதிவு என்பதால் எனக்கு மேலே என்ன சொல்வது என்றே தெரியவில்லை!! :-(

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவி!
ஒரு காலத்தில் இப்பாடல் வானொலியில் ஒலிக்கத நாளே இல்லையெனலாம்.

''விதி வலியது''
வேறென்ன சொல்லமுடியும்.

G.Ragavan said...

சகோதரி யாஸ்மீன் பாத்திமா அவர்களின் ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்.

பாடல் மிகவும் அருமையானது. எண்ணெய்யிலாதொரு தீபமெரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா....இந்த வரிகளைக் கேட்கையிலும் படிக்கையிலும் நினைக்கையிலும் கண்களில் அலையடிக்கிறது.

ஏழிசை வேந்தரின் இனிய குரலும், மெல்லிசை மன்னரின் சிறந்த இசையும், கவியரசரின் அருந்தமிழும்....நம்மைக் கட்டிப் போடுகிறது என்றால் மிகையிலை. இந்தப் பாடல் எமக்குப் பகையிலை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//CVR said...
ஐயோ!!
உங்க மேலே என்ன கோபம்???

ஒரு துக்கமான செய்தியுடன் வந்த பதிவு என்பதால் எனக்கு மேலே என்ன சொல்வது என்றே தெரியவில்லை!! :-( //

எனக்குப் புரிகிறது CVR.
ஒத்த வரியில போனீங்களா. அதான் கேட்டேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ரவி!
ஒரு காலத்தில் இப்பாடல் வானொலியில் ஒலிக்கத நாளே இல்லையெனலாம்//

இணைய வானொலிகளில் கூட அடிக்கடி ஒலிக்கிறது யோகன் அண்ணா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//G.Ragavan said...
பாடல் மிகவும் அருமையானது. எண்ணெய்யிலாதொரு தீபமெரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா....இந்த வரிகளைக் கேட்கையிலும் படிக்கையிலும் நினைக்கையிலும் கண்களில் அலையடிக்கிறது//

உண்மை தான் ஜிரா.
வரிகளின் ஈர்ப்பு சக்தி அப்படி...

இந்தப் பாட்டுக்கு யாரு சித்தாரு வாசிச்சாங்கன்னு உங்களைத் தான் கேக்கலாம்னு இருந்தேன்!

குமரன் (Kumaran) said...

சிறுவயதில் பலமுறை விரும்பிக்கேட்ட பாடல் இது இரவிசங்கர்.

சகோதரி யாஸ்மீன் பாத்திமா அவர்களின் ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

our heartfelt condolences to Asif Miran.
thanks Ravi for hosting this song and remiding of Sri.Krishna's Presence during dificult times for the family of our blogger friend.

Anonymous said...

Ravi sir,
Vanakkam, thanks,Sivaji lived in this role.Thank you again.
ARANGAN ARULVANAGA.
Anbudan
k.srinivasan.

தொளசம்பட்டி பஜனை குழு said...

அருமை

Ashok Othimalai said...

அடடா அற்புதம்

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP