Friday, August 15, 2014

காளிங்க நர்த்தனம்!

அனைவருக்கும் இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள்!


சுப்பு தாத்தா கானடாவில் அனுபவித்துப் பாடியது இங்கே... மிக்க நன்றி தாத்தா!



திருமுடி மீதினில் மயிலிறகாடிட
கருங்குழல் கற்றைகள் காற்றினில் ஓடிட
சிறுநுதல் தனிலே வியர்வை துளிர்த்திட
கருமணியென விழியிரண்டும் ஜொலித்திட!

மணமலர் மாலையும் மார்பில் அசைந்திட
எழில்மணி யாரங்கள் இசைந்தொளி வீசிட
கருநிற மேனியைக் காளியன் சுற்றிட
ஈரப் பட்டாடை இடையினைப் பற்றிட!

ஜல் ஜல் ஜல் எனச் சதங்கைகள் ஒலித்திட
கொல் கொல் கொல் எனத் தலைகளை மிதித்திட
நஞ்சுடை காளியன் நலிந்து மடிந்திட
செஞ்சடையனைப் போல் களிநடம் புரிந்திட!

வேய்ங்குழலில் விரல் நாட்டியமாடிட
குழலிசை கசிந்து திசையெங்கும் ஓடிட
தத்தித் தோம் என நர்த்தனம் புரிந்திட
திக்கெட்டும் அவன் திருப்பதம் பணிந்திட!

கிருஷ்ணா கிருஷ்ணா கோவிந்தா
கோகுல கிருஷ்ணா கோவிந்தா
பக்த வத்ஸலா கோவிந்தா
பாண்டு ரங்கா கோவிந்தா!

தேவகி நந்தன கோவிந்தா
தேவர்கள் ரட்சக கோவிந்தா
மாதவ தேவா கோவிந்தா யாதவ தீபா கோவிந்தா!

ராதா மாதவ கோவிந்தா
பாமா ருக்மிணி கோவிந்தா
கோபியர் லோலா கோவிந்தா
கோபால கிருஷ்ணா கோவிந்தா!

கோவிந்தா ஹரி கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா!
 
 
--கவிநயா

படத்துக்கு நன்றி: http://kannan-kadhaigal.blogspot.com/
http://www.dollsofindia.com/product/terracotta-sculpture/vaishnava-kirtaniya-group-krishna-devotees-BX70.html


6 comments :

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

அழகிய கண்ணன் பாட்டு கண்டு மகிழ்ந்தேன்.
நன்றாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

sury siva said...

you may listen to this song here set to Raag kanada.
https://soundcloud.com/meenasury/krishnakrishnagovindhakanada
subbu thatha.
www.subbuthatha72.blogspot.com

நாடி நாடி நரசிங்கா! said...

Nice:)

நாடி நாடி நரசிங்கா! said...

வனமாலி வாசுதேவா ஜகன் மோஹன ராதா ரமணா

சசிவதனா ஸரசிஜ நயனா ஜகன் மோஹன ராதா ரமணா

பாற்கடலில் பள்ளி கொண்ட ஜகன் மோஹன ராதா ரமணா

முழு பாடல் தெரிந்தவர்கள் எமக்கு தெரிவியுங்கள்

Rajewh said...

வனமாலி வாசுதேவா ஜகன் மோஹன ராதா ரமணா

சசிவதனா ஸரசிஜ நயனா ஜகன் மோஹன ராதா ரமணா


வெண்ணை உண்ட மாயவனே கண்ணா நீ ராதா ரமணா
வேண்டும் வரம் தந்திடுவாய் ஸ்ரீரங்க ராதா ரமணா !(வனமாலி)

பாற்கடலில் பள்ளி கொண்ட ஜகன் மோஹன ராதா ரமணா
பக்தர்களின் குறை தீர்க்கும் ஸ்ரீரங்க ராதா ரமணா !(வனமாலி)

Upendra Raamanujam said...

மடுவிடை நடுவே பொலிந்தது அரவம் அரவம்

மடுநீருழன்றிடவே உயர்ந்ததுவே அலையும் அலையும் அலையும்
கொடுவிழி விரிந்திடவே எழுந்ததுவே காளிங்கன் சிரமும் சிரமும்

- என்ற காளிங்க நர்த்தன பாடல்

முழு பாடல் தெரிந்தவர்கள் எமக்கு தெரிவியுங்கள்

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP