Wednesday, May 15, 2013

"தெலுங்கு" இராமானுசர்!

இன்று (14-May-2013) = சித்திரைத் திருவாதிரை!


"ஆதிரையான்" எனப்படும் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரத்திலே...
"ஆம் முதல்வன்" என்று தோன்றிய = இராமானுசர்;

இவரை வைணவர்கள் கொண்டாடுவதில் வியப்பேதும் இல்லை;
ஆனால்... பழுத்த நாத்திகர்கள் கொண்டாடுவது??
அதுவே = "இவர் குணம் என்ன?" என்பதை ஓரளவு சொல்லி விடும்!


பாரதிதாசன், புரட்சிக் கவிஞர் ஆவதற்கு முன்பே (ஆரம்ப காலத்தில்).. என் காதல் முருகன் மேல் பாட்டெழுதி இருக்காரு; (மயிலம் சுப்ரமணியர் துதியமுது)
ஆனா, பழுத்த திராவிடத் தலைவரான பின்னால்?? = மூச்:)
சீரங்க நாதனையும், சிதம்பரநட ராசனையும்
பீரங்கி கொண்டு பிளப்பது எந்நாளோ? :))

தான் நாத்திகரான பிறகும், போற்றிப் பாடிய ஆன்மீக அருளாளர்கள் = ரெண்டே ரெண்டு பேரு தான்
1) இராமானுசர்
2) வள்ளலார்

ஏன்?
= அதையும் பாரதிதாசனே சொல்லீடறாரு;

முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்
இத் தமிழ்நாடு தன் இருந்தவப் பயனாய்
இராமானுசனை ஈன்ற தன்றோ?

சச்சரவுபட்ட தண்டமிழ் நாடு,
மெச்சவும் காட்டுவான் வேண்டும் என்றெண்ணி
இராம லிங்கனை ஈன்ற தன்றோ?
(பாரதிதாசன் கவிதைகள்)

*பல பக்திமான்களும், தங்கள் பாட்டு/ தங்கள் பதிகம் என்ற அளவில் நின்று விடுவார்கள்... 
= "தன்னளவில் இறையன்பு"

*ஆனால், சமூகத்தின் தாழ்த்தப்பட்ட மக்களையும், அரவணைத்துக், கூடி இருந்து குளிர்ந்து?
= "பொதுநலம் மிக்க இறையன்பு"


ஆயிரம் ஆண்டுகட்கும் முன்னரே, அக்ரஹாரங்கள் கட்டாவாகக் கோலோச்சிய காலத்திலேயே...
பல "மேலாளர்களின்" எதிர்ப்பையும் மீறி...

* ஒதுக்கப்பட்டோரை ஆலயத்துள் சேர்ப்பித்து, "திருக்குலத்தார்" என்று ஏற்றம் தந்தது
* ஆலயப் பணியில் உள்ள வண்ணான் முதலானோரை = ஈரங் கொல்லி உடையார் -ன்னு, ஊதியம் + மதிப்பு செய்வித்தது

* தமிழைக், கருவறைக்குள்ளேயே முழங்கச் செய்தது

ஊர்வலங்களில், தமிழ் தான் முன்னே செல்லணும்; பெருமாள் தமிழைப் பின்பற்றியே வர வேண்டும்...
வடமொழி வேதங்கள் பெருமாளுக்கும் பின்னே வந்தால் போதும் என்று வகுத்துக் குடுத்த கோயில் ஒழுகு!

* இன்றைய 21ஆம் நூற்றாண்டிலும், ஒரு அரசாங்கமே போராட வேண்டிய நிலையில் உள்ள "அனைத்துச் சாதி அர்ச்சகர் திட்டம்
= இதை அன்றே நடத்திக் காட்டியது; (பூநூல்) "சார்த்தாத ஸ்ரீ வைணவர்கள்" என்றும் "கருப்பு அந்தணர்கள்" என்றும், தக்க பயிற்சியோடு, கோயில் அர்ச்சகர்களாய் நியமித்தது

கிட்டத்தட்ட, தந்தை பெரியார் போன்ற அதே "கூர்மையான" சொல்லால்.....
"அடியார்களைக் குலம் விசாரிப்பவன், பெற்ற தாயை யோனி விசாரித்தவன் ஆகின்றான்"
- ன்னு அதிரடியாப் பேசி, பலர் பகையைச் சம்பாதித்துக் கொண்டது; இருப்பினும் தளராமல் நின்றது...

இவை தான் பாரதிதாசனே, வியந்து பாடக் காரணம்!

இது தவிர,
* ஆழ்வார் பாசுரங்களுக்கு உரை எழுதப் பண்ணியது
* ஸ்ரீ பாஷ்யம் எழுதியது
-ன்னு ஆன்மீகப் பணிகளையெல்லாம் நான் இங்கு பட்டியல் இடப் போவதில்லை; சமூகப் பணிகள் மட்டுமே இங்கு சொல்லியது;

இந்தச் சமூகப் பணிகள், தமிழகம் மட்டுமல்ல! ஆந்திராவிலும் பரவியுள்ளது!

"இராமானுஜ கூடமுலு" (இராமானுச கூடம்) - என்று ஒரு குறிப்பிட்ட தெலுங்கு வர்க்கத்தினர், இன்றும்... ஊர் முழுதும் நடத்தும் பணி

- தங்களுக்குச் சாதி என்பதே கிடையாது என்றும் சொல்லுவார்கள் இந்த இயக்கத்துத் தெலுங்கு மக்கள்;
திருவாய்மொழி/ திருப்பாவை -ன்னு இந்தத் தெலுங்கர்கள் பாடுவதே வித்தியாசமாய் இருக்கும்:)


அப்படியொரு "வித்தியாசமான" பாட்டு இன்னிக்கி...

கர்நாடக சங்கீதப் பிதாமகர், தியாகராஜருக்கும் காலத்தால் முன்னவர் என்று போற்றப்படும் "அன்னமாச்சாரியர்";
அந்த அன்னமய்யா, இராமானுசர் மேல் எழுதின ஒரு பாட்டு!

(இராமானுசர் மேல், அன்னமய்யா எல்லாம் பாட்டு எழுதி இருக்காங்களா? என்பதே சிலருக்கு வியப்பா இருக்கும்)



எடுப்பு: (பல்லவி)

உன்னதோ உன்னதுடு உடையவரு
என்ன நன்னந்துடே ஈ உடையவரு

உன்னதம் உன்னதமாம் உடையவரே
உன்னையே நம்பி வந்தோம் உடையவரே
(
உன்னதோ உன்னதுடு உடையவரு)
----------------

முடிப்பு: (சரணம்)
சர்வ லோகமுல சாஸ்திர ரகசியமுல
ஊர்வி போதம நீ உடையவரு
பூர்வபு வேதாந்த புண்ய சாஸ்திரமுலு
நிர்வகிஞ்சே நன்னித நூ உடையவரு

உலகம் யாவையும் ஊரும் - அறிந்து கொள்ள
மறைகளை மறைக்காது சொன்னவரே
சொன்ன வண்ணம் அந்த - ஓல மறையெல்லாம்
நல்ல வண்ணம் சீர் செய்த உடையவர் நீ்ரே!
(உன்னதோ உன்னதுடு உடையவரு)
----------------

வெக்க சம்பு ஸ்ரீ விஷ்ணு பக்தியே
ஒக்க ரூபமே உடையவரு
சக்க நைன சு ஞானமுன கிரவை
உக்கு மீரே நிதே உடையவரு

உன் தன்னோடு உறவே - திருமாலின் மெய்யன்பே
உருவமாய் வந்திட்ட உடையவரே
கண்ணன் கழலை நண்ணும் - மனமும் குணமும்
திகட்டாமல் ஊட்டிடும் உடையவர் நீரே!
(உன்னதோ உன்னதுடு உடையவரு)
----------------

கதினே மோட்ச சாகரமு தானை
வுடுதுன நிலிசே நீயு உடையவரு
இதிகோ ஸ்ரீ வேங்கடேஸ்வரு யீ நீடை
பொதலுசு நுன்னாடு பூவீனு உடையவரு

பிறவிப் பெருங்கடலை - நீந்துவார் நீந்திடப்
பரிசல் துடுப்பே உடையவரே
இதுவே வேங்கட அன்னமய்யன் பாடிய
காரேய்க் கருணை உடையவர் நீரே
(உன்னதோ உன்னதுடு உடையவரு)
----------------

கவிஞர்: தாளபாக்கம் அன்னமய்யா (1408-1503)
ராகம்: சாமந்தம்
(கிட்டத்தட்ட அதே மெட்டில், தமிழாக்கியும் குடுத்துள்ளேன்; பிழை இருப்பின் மன்னித்துச் சுட்டிக் காட்டுங்கள்)

3 comments :

sury siva said...

அழகான மொழிபெயர்ப்பு
அமுதமாக இருக்கிறது.

ராகம் ஹம்சானந்தம் போல் அல்லவா இருக்கிறது !!

அந்த காலத்து ஜெமினி படம் தேசுலாவுதே...பாட்டு
மணாளனே மங்கையின் பாக்கியம் படம் நினைவு இருக்கிறதா...?

சாமந்தம் என்று ஒரு ராகம் இருக்கிறதா ?

என் தங்கையிடம் கேட்கவேண்டும்.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in

துளசி கோபால் said...

அருமை!

பாடியவர் யாரோ? குரலும் அமுதமாத்தான் இருக்கு!

முழி பெயர்ப்பு அட்டகாசமா இருக்கு. இனிய பாராட்டுகள்.

தேசுலாவுதே..... எனக்கு ரொம்பப்பிடிச்ச பாட்டு. அதன் ஆரம்ப இசைதான் இதுக்கும்.

ஒரு காலத்துலே பாடலின் ஆரம்ப இசை வந்தவுடனே அது என்ன பாட்டுன்னு சொல்லிருவோம். அவ்வளவு ஆர்வம் படிப்பில் இருந்துருந்தால்...... ஹூம்:-)

Vijayaraghavan said...

Dear Sir,
Interesting to read about Sri Ramanujar.
I think there are two mistakes.
The one line you quote for asking bhagavathas of caste is not by Sri Ramanujar, but I think is by either Sri Lokacharyar or his brother Sri Azhagiya manavaala nayanar.
Second, Sri Ramanujar removed caste based discrimination. He didn't remove caste. Saathatha Srivaishnavas are not temple priest. They are kaimkarya ekankees. They are the trustees for ghee for lamps, flowers for garland to deities, arrangements for utsavams, etc.,
As Bharathiyaar says, caste is not the problem. Caste based descrimination is the problem. 'Saathigal illayadi pappa, kula thaazhchi uyarchi sollal paavam'.
Before Sri Ramanujas time itself, Vedas were recited only behind Perumal in procession. Naathamunigal codified the vaishnava siddhargal or aazhwar songs and set them to the vedic meter of Chanda's. Sri Ramanujam again codified and introduced this recitation to go in front. In fact Sri Ramanujar's composition are all in Sanskrit only.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP