Monday, July 23, 2012

யார் இந்தப் பெண்?



வாழுகிறாள்; ஆனால் வாடுகிறாள்
பாடுகிறாள்; அதிலும் வாடுகிறாள்
நாடுகிறாள்; அவனைத் தேடுகிறாள்
தேடுகிறாள்; மீண்டும் வாடுகிறாள்

இந்தப் பெண்ணின் சோகம்தான் என்னே.

கனவிலேயே நிலைத்திருக்கும் கண்கள்.
அவன் நினைவிலேயே நிலைத்திருக்கும் நெஞ்சம்.
அவன் மணத்தையே சுவாசிக்கும் நாசி.
அவன் சுவையிலேயே கனிந்திருக்கும் இதழ்கள்.

இந்தப் பெண்ணின் உலகமே வேறு.

ஆடியிலும் அவன் வதனம்.
பாடி வரும் அவன் வேய்ங்குழல்.
தொடுத்து வந்த மாலையை அவள் கரங்களாலேயே
எடுத்துச் சூடிக் கொள்ளும் அவன் தோள்கள்.

இந்தப் பெண்ணின் நல்லூழ்தான் என்னே.

ஆண்டாள் திருவடிகளே சரணம்.


--கவிநயா

13 comments :

இராஜராஜேஸ்வரி said...

ஆடியிலும் அவன் வதனம்.
ஆடி மாதத்தில்
ஆண்டாளின்
அற்புத தரிசனம்
அருமை !

Kavinaya said...

ஆம் அம்மா :) ரசித்தமைக்கு மிக்க நன்றி!

கோமதி அரசு said...

இந்தப் பெண்ணின் நல்லூழ்தான் என்னே.

ஆண்டாள் திருவடிகளே சரணம்.//

ஆண்டாள் கொடுத்து வைத்தவள்.
பாடல் அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பாடல்... நன்றி சகோதரி...

என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

Lalitha Mittal said...

அவளது அன்பை அப்படியே படம் பிடித்துக்காட்டும் அழகான வரிகள்!

அம்பாளடியாள் said...

உண்மைக் காதலின் உருக்கத்தை
உணர வைத்தவள் ஆண்டாள்
நாச்சியார்தானே!..வாழ்த்துக்கள் அருமையான கவிதை வரிகளிற்கு .

குமரன் (Kumaran) said...

ஆடியிலும் அவன் வதனம். அழகான வரி அக்கா. :-)

Kavinaya said...

//கோமதி அரசு said...

ஆண்டாள் கொடுத்து வைத்தவள்.
பாடல் அருமை.//

மிக்க நன்றி அம்மா!

Kavinaya said...

//நல்ல பாடல்... நன்றி சகோதரி...//

நன்றி, திரு.தனபாலன்.

//என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?//

வாசித்தேன், மனிதனின் மிகப் பெரிய எதிரி மனம்தான் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்! பகிர்தலுக்கு நன்றி.

Kavinaya said...

//அவளது அன்பை அப்படியே படம் பிடித்துக்காட்டும் அழகான வரிகள்!//

அப்படியே (என்) அன்பும் அவள் அன்பைப் படம் பிடித்துக் காட்டுவதைப் போல அமைந்து விட்டால்?! :)

நன்றி லலிதாம்மா.

Kavinaya said...

//உண்மைக் காதலின் உருக்கத்தை
உணர வைத்தவள் ஆண்டாள்
நாச்சியார்தானே!..வாழ்த்துக்கள் அருமையான கவிதை வரிகளிற்கு .//

உண்மைதான், அம்பாளடியாள்! வருகைக்கு நன்றி.

Kavinaya said...

//ஆடியிலும் அவன் வதனம். அழகான வரி அக்கா. :-)//

நன்றி குமரன். உங்கள் பதிவின் நினைவூட்டலுக்குப் பிறகு உடனே எழுதினேன். அவளுக்காக குட்டியாவாவது ஏதாச்சும் எழுதிடணும்னு ஒரே தவிப்பா இருந்தது. அதுக்கும் சேர்த்து உங்களுக்குத்தான் நன்றி :)

anonymous said...

//ஆடியிலும் அவன் வதனம்//

ஆடி = அவள் பிறந்தாள், அப்போதும் அவன் வதனம்!
ஆடி = அவள் ஆடிப் பாடும் போதும், அவன் வதனம்!
ஆடி = கண்ணாடி! அதிலும் அவன் வதனம்

//இந்தப் பெண்ணின் நல்லூழ்தான் என்னே//

பாவம்...இந்தப் பெண்ணின் தீயூழ் தான் என்னே!:(

உலகுக்கெல்லாம் நல்லூழ் மாதிரித் தான் தெரியும்!
ஆனா இவ ஊழ், உறுத்து வந்து ஊட்டும்! முருகா!

தவறு தவறு..
முருகா -ன்னு சொன்னால், கண்ணன் இவளைப் பொதுவிலே அறைந்து ஒதுக்கினாலும் ஒதுக்கி விடுவான்.. பாவம், அது இவளுக்கு வேண்டாம்!

இல்லாத உறவையோ (அ) இல்லாத நட்பையோ...
இன்னும் இருப்பதாகவே பாவித்துக் கொண்டால், இவள் பாவனை புரியுமோ என்னவோ? முருகா!

பருந்து ஆட் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னை...
விருந்தா வனத்தே விட்டு சித்தன் கோதை சொல்

மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்,
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ்..."பிரியாது என்றும் இருப்பார்களே"!

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP