Monday, June 11, 2012

காலம் என்று வரும்?


சுப்பு தாத்தா பாடித் தந்ததை கேட்டுக் கொண்டே வாசியுங்கள்!
மிக்க நன்றி தாத்தா!


எனக்கு -
உன் கன்னத்தோடு கன்னம் வைக்கும் காலம் வருமோ? – உன்றன்
உள்ளங் கையில் ஓய்வெடுக்கும் நேரம் வருமோ?


உனக்கு -
சின்னப் பூவின் வண்ணம் பார்க்க ஆசை வருமோ? – இந்த
வண்ணப் பூவின் வாசம் வந்து சேதி சொல்லுமோ?


எனக்கு -
உன் பட்டுப் பாதம் தொட்டுப் பார்க்கும் காலம் வருமோ? – உன்றன்
கட்டுக்குள்ளே கண்ணுறங்கும் நேரம் வருமோ?


உனக்கு -
சிட்டுப் போன்ற பெண்ணைப் பார்க்க ஆசை வருமோ? – என்றன்
கட்டுக் கொள்ளாக் காதல் வந்து சேதி சொல்லுமோ?


எனக்கு -
உன் இதழைத் தழுவும் குழலாய் மாறும் காலம் வருமோ? – உன்றன்
குழலைத் தீண்டும் தென்றலாகும் நேரம் வருமோ?


உனக்கு -
உருகும் இந்தப் பெண்ணைப் பார்க்க ஆசை வருமோ? – உயிர்
கருகும் முன் என் கண்ணீர் வந்து சேதி சொல்லுமோ?


--கவிநயா

10 comments :

jeevagv said...

"எனக்கும் உனக்கும்" இனிது!

Kavinaya said...

வாங்க ஜீவா! உங்களை இங்கே பார்த்ததில் மகிழ்ச்சி :) ரசித்தமைக்கு நன்றி :)

Rathnavel Natarajan said...

அருமை.

நாடி நாடி நரசிங்கா! said...

அச்சச்சோ chance இல்ல!! கண்ணன் கவிதை சூப்பர். :)
ஆனா எழுத்து படிக்க கண்ணாடி போடணும் . ரொம்ப குட்டியா இருக்கு :)

Kavinaya said...

//Rathnavel Natarajan said...

அருமை.//

மிகவும் நன்றி ஐயா!

Kavinaya said...

//அச்சச்சோ chance இல்ல!! கண்ணன் கவிதை சூப்பர். :)//

நன்றி ராஜேஷ் :) (அதென்ன உங்க கல்யாண புகைப்படமா? :) நல்லாருக்கு!

//ஆனா எழுத்து படிக்க கண்ணாடி போடணும் . ரொம்ப குட்டியா இருக்கு :)//

ஆமா :( blogger setting-லேயே அப்படித்தான் இருக்கு. குழும வலைப் பூவா இருக்கறதால நான் ஒண்ணும் பண்ணல.

திண்டுக்கல் தனபாலன் said...

முதன் முதலாக உங்கள் தளத்திற்கு வருகிறேன். அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் ! நன்றி ! இனி தொடர்கின்றேன் !

Kavinaya said...

முதல் வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்! தொடர்ந்து வருகை தாருங்கள் :)

இமயன் said...

நான் உங்கள் வலைபூவிற்கு புதியவன். எனக்கு ஜேசுதாஸ்ன் கந்தர்வ கானம் பாடல்கள் தேவை. நீங்கள் கொடுத்திருந்த சுட்டி இப்போது வேலை செய்யவில்லை.

அந்த பாடல்களை தந்து உதவினால் நன்றியுடன் இருப்பேன்.

http://kannansongs.blogspot.in/2008/04/blog-post_21.html


மிக்க நன்றியுடன்
இமயன்

VijiParthiban said...

பாடல் மிக அருமை ... தொடர்வோம் ... நம் நட்பு தொடரட்டும்...

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP