Friday, April 13, 2012

நகுமோமு கநலேனி - 3

டிஸ்கி: இது மற்றும் ஒரு பழைய ரெக்கார்டிங்க். யாருக்கேனும் பின்னாளில் பயன்படலாம்.

யூட்யூப்-ல் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் உள்ள வீடியோ என்றால் வேறு சில வரைமுறைகள் உள்ளன போல. ஆதலால் இரண்டு வீடியோக்களாக பதிய வேண்டியதாயிற்று.






"முந்தைய இரண்டு பதிவுகளும் இந்தப் பதிவும் ராம நவமியை முன்னிட்டு ஸ்ரீ தியாகராஜரின் உயிராகத் திகழ்ந்த சீதாராமருக்கு அர்ப்பணம்." என்று எழுத ஆசை...ஆனால் ராம நவமி முடிந்து ரொம்ப்ப்ப்ப நாளாயிற்றே...அந்த காரணத்தாலும், பாடல் கிரிதாரியை நினைவுபடுத்துவதாலும், இந்தப் பதிவுகள் அத்தனையும் கிருஷ்ணனுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன.

காலையில் இது போன்ற இசையை லேப்-டாப்பில் போட்டுவிட்டு அலுவலக மெயில்கள் பார்ப்பது, பதில் எழுதுவது போன்ற வேலையில் ஈடுபடுவது வழக்கம்...ஆனால் இந்த நாதஸ்வர இசை செய்யும் வேலையை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டது. :-) ஏறக்குறைய இருபது நிமிடங்கள் எல்லாவற்றையும் மறந்து விடலாம்...
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.  :-)

7 comments :

Kannabiran, Ravi Shankar (KRS) said...

காருக்குறிச்சியின் நாதசுர நாதவெள்ளம்! அப்படியே இசையை நீராய்ப் பொழிந்து மஞ்சனம் ஆட்டுவது போல் இருக்கு! = இசைத் திருமஞ்சனம்!!

யாரு அந்த வீடியோவில் வரும் அழகன்? = ராகவன் தானே? of திருப்புட்குழி? :)

Radha said...

//யாரு அந்த வீடியோவில் வரும் அழகன்? //
அதிசயம்....உன்னாலயே கண்டுபிடிக்க முடியலயாஆஆஆஆஅ??? :-))
திருப்புட்குழி அல்ல...

Radha said...

இரண்டாவது வீடியோவில் ஏழாவது நிமிடம்...வெள்ளோட்டம் கிட்டதட்ட முடிந்துவிட்டது... என்று நினைத்தேன்...அதன் பின்னர் second innnings...and then third innings...நாதஸ்வரத்தில் அடித்து விளையாடுவது என்றால் இது தான் போல...பட்டையை கிளப்பி இருக்கிறார்...இது 1961 ரெக்கார்டிங்க்...இப்போ இது போல யாரும் வாசிக்கிறார்களா என்று தெரியவில்லை...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அதிசயம்....உன்னாலயே கண்டுபிடிக்க முடியலயாஆஆஆஆஅ??? :-))
திருப்புட்குழி அல்ல...//

:)))
திருப்புட்குழில தான் "இராகவன்" ன்னு பேரு வரும்!
வடுவூர்ல அந்தப் பேரு வராதே! இராமன் ன்னு தானே வரும்! அதான் சும்மா விளையாண்டேன்:)

i was talking to ragavan over phone at that time:)
shared this immaculate nadaswaram audio with him; what an extensive prelude & then rendering, line by line - itz so romantic and strings the heart like anything!

குமரன் (Kumaran) said...

இரண்டாவது வீடியோ ஒரே கொண்டாட்டம் தான். :-)

Radha said...

@ரவி,
வடுவூர் ராமரே தான் ! :-)

Radha said...

kumaran, very true...first time i realized that a composition can be used for conveying "pathos" (did you get a chance to listen to the first post in this series?) and at the same time rendered in a very celebrative manner...very humbling...can only say "தியாகராஜர் திருவடிகளுக்கு ஆயிரம் கோடி வணக்கங்கள் !" :-)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP