Tuesday, March 06, 2012

கிரிதாரியுடன் ஹோலி

           

மக்கே உரிய எளியநடையில் நமக்களித்த பல
ஆன்மிகப் படைப்புக்கள் மூலம் என் ஒவ்வொரு
பதிவுக்கும் தூண்டுதலாய் இருந்த அமரர் ரா.கணபதி
அவர்களது "காற்றினிலே வரும் கீதம் "என்ற
மீராவைப்பற்றிய படைப்பில் எனக்குக் கிடைத்த
"ஹோரி கேலத் ஹை கிரிதாரி" எனும்
மீரா பஜனைத் தழுவிய என் தமிழ் ஹோலி கீதம் கீழே :
---------------------------------------

கிரிதாரியுடன் ஹோலி



ஹோரி கேலத் ஹை கிரிதாரி
கொண்டாடுகிறான் ஹோலி ,கிரிதாரி
கொண்டாடுகிறான் ஹோலி !

முரளி சங்கு பஜத் டப் ந்யாரோ,
ஸங்கு ஜுவதி ப்ரஜ்னாரீ |

வேய்ங்குழலூதி மத்தளந்தட்டி
பூம்பாவையர் புடைசூழ
கொண்டாடுகிறான் ஹோலி ,கிரிதாரி
கொண்டாடுகிறான் ஹோலி !

சந்தன் கேசர் சிரகத் மோகன் ,
அப்னே ஹாத் பிஹாரி |

சந்தனத்துகளைக் கைகளாலள்ளி
மங்கையர் மேனியில் பூசி
கொண்டாடுகிறான் ஹோலி ,கிரிதாரி
கொண்டாடுகிறான் ஹோலி !


பரி பரி மூட்டி குலால் லால் சஹுன்
தேத் சபன் பை டாரி |

வண்ணப்பொடியை பிடிப்பிடியாய் எடுத்து
கன்னியர் மேல் வாரியடித்து
கொண்டாடுகிறான் ஹோலி ,கிரிதாரி
கொண்டாடுகிறான் ஹோலி !


சேல் சபீலே நவல் கான்ஹ ஸங்கு
ஸயாமா பிராண் பியாரி |

செல்லமாய் வஞ்சியரை வளையவந்து
சல்லாபித்துள்ளம் கவர்ந்து
கொண்டாடுகிறான் ஹோலி ,கிரிதாரி
கொண்டாடுகிறான் ஹோலி !


காவத் சார் தமார் ராக் தஹ்ன்
தை-தை கல் கர்தாரி |

தமார் பண்ணிலின்ப கானம்பாடி
கைதட்டிக் குதித்துக் கூத்தாடி
கொண்டாடுகிறான் ஹோலி ,கிரிதாரி
கொண்டாடுகிறான் ஹோலி !


மீரா கே பிரபு கிர்தர் மில் கயே ,
மோகன் லால் பிஹாரி |

கண்ணாளனை மீரா கண்டனளின்று !
களிக்கின்றாள் அவனைக் கலந்து !
கொண்டாடுகிறான் ஹோலி ,கிரிதாரி
கொண்டாடுகிறான் ஹோலி !


















            

11 comments :

கோமதி அரசு said...

கிரிதாரியுடன் ஹோலி கண்டு களித்தேன்.

நன்றி.

கோமதி அரசு said...

கொண்டாடுகிறான் ஹோலி ,கிரிதாரி
கொண்டாடுகிறான் ஹோலி !//

பாடல் மிக இனிமை லலிதா.

Sankar said...

Lalitha amma: this is my favorite meera bhajan.. I's wondering how to translate this.. sooper amma!! :)

Lalitha Mittal said...

1)கோமதி ஜி ,
கலா பாடியிருக்கும் என் தமிழ் ஹோலி கீதத்தை நீங்கள் ரசித்துப் பாராட்டி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது; மனமார்ந்த நன்றி.



2) சங்கர் ,

நான் பதிவில் அளித்திருப்பது உனக்கு ரொம்பப் பிடித்த மீராபஜன் என்பதை நீ குறிப்பிட்டதைப் படிச்சதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.நன்றி சங்கர்!

Kavinaya said...

பாடல் அழகு அம்மா. கேட்கவும் மிகச் சுகம். உங்களுக்கும் கலா அவர்களுக்கும் மிக்க நன்றி.

Lalitha Mittal said...

kavinaya,
thanks on kala's behalf also fr yr visit and comments

Radha said...

giridhara gopal ki j !
meeraa maathaa ki j !

Lalitha Mittal said...

radha,
thanks.
giridhar gopal ki j!
meera matha ki j!!

In Love With Krishna said...

Superb!!
Thanks for posting!
This Holi, i "bathed" with Giridhari of Triplicane (maasi magam utsavam)!! :)

In Love With Krishna said...

Superb!!
Thanks for posting!
This Holi, i "bathed" with Giridhari of Triplicane (maasi magam utsavam)!! :)

Lalitha Mittal said...

ilwk!
thanks fr visit.
thrilled to know that u celebrated holi with TPS GIRIDHARI!

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP