Wednesday, November 30, 2011

ரங்கா, கிருஷ்ணா - எனக்கு எதுவுமே தெரியாதுப்பா!



* ராமாயணம், பாரதம், பாகவதம் இப்படி எல்லாவற்றிலுமிருந்தும் சிறந்த பக்தர்களை மேற்கோள் காட்டி தாசர் பாடும் பாடல்.

* தியானம், காதல், பக்தி, நட்பு, பாட்டு இப்படி பல்வேறு விதங்களில் இறைவனை பக்தி செய்த பக்தர்களின் சிறப்புகளை பற்றி பாடும் பாடல்.

* அப்படி இந்த பக்தர்களுக்குத் தெரிந்த எதுவுமே எனக்கு தெரியாது. ஆனாலும் உன்னை நம்பி வந்துவிட்டேன். என்னை காப்பாற்று என்று ரங்கனை ஸ்ரீ புரந்தரதாசர் பாடும் பாடல்.

* இவ்வளவு விதமாக அந்த கிருஷ்ணனை வணங்கி வழிபடலாமென்று நமக்கு எடுத்துரைக்கும் பாடல்.

* தாயின் அன்பு, மனைவியின் காதல் - ஆகிய உணர்சிகளை வெகு அழகாக காட்டும் பாடல்.

* பக்தி மார்க்கத்தில் மிக மிக உன்னதமான நிலையை அடைந்த ஸ்ரீ புரந்ததாசரின் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாக இந்த பாடலை குறிப்பிட்டு சொல்வார்கள்.

* ஸ்ரீ புரந்தரதாசர் எந்த அளவுக்கு இதை பக்தியுடன் படைத்துள்ளாரோ, அதற்கு சற்றும் குறையாத அளவில் (தவறாக ஒப்பிட்டிருந்தால் மன்னிக்க) நம் பீமண்ணர் பாடியுள்ளார் என்பதை, கீழேயுள்ள காணொளியை சொடுக்கி, கேட்டு,  அனுபவியுங்கள்.

* தாசர் இறைவனிடம் கேட்பது என்ன? பொன்னோ பொருளோ அல்ல. அப்புறம்? கீழே பாட்டில் இருக்கு. வாங்க பார்க்கலாம்.

***

கருணிசோ ரங்கா கருணிசோ

ஹகலு இருளு நின்னா
ஸ்மரணே மரெயேதந்தே (கருணிசோ)

அருள் செய்வாய், ரங்கா, அருள் செய்வாய்

பகலும் இரவும் உந்தன்
நினைவு மறக்காதிருக்க (கருணிசோ)


ருக்குமாங்கதனந்தே வ்ரதவ நானறியேனோ
சுகமுனியந்தே ஸ்துதிசலுஅறியே
பகவைரியந்தே த்யானவ மாடலறியே
தேவகியந்தே முத்திசலறீயேனோ ரங்கா (கருணிசோ)

ருக்குமாங்கதனைப் போல் விரதங்களை கடைப்பிடிக்க எனக்குத் தெரியாது
சுக முனிவரைப் போல் ஸ்லோகங்களைச் சொல்லி துதி செய்யத் தெரியாது
பகாசுரனின் பகைவன் [பீமன்] போல் தியானம் செய்யத் தெரியாது
தேவகியைப் போல் உன்னை கொஞ்ச தெரியாது (கருணிசோ)


கருடனன்ததி பொத்து திருகலு அறியே
கரெயலு அறியே கரிராஜனந்தே
வரகபியந்தே தாச்யவ மாடலறியே
சிரியந்தே நெரெது மோஹிசலறியேனு கிருஷ்ணா (கருணிசோ)

கருடனைப் போல் [என்] தோளில் [உன்னை] சுமந்து வரத் தெரியாது
கரிராஜன் [ஆதிமூலம் - யானை] போல் உன்னை கூப்பிடவும் தெரியாது
வரகபி [ஆஞ்சநேயர்] போல் உனக்கு சேவை செய்யவும் தெரியாது
ஸ்ரீ மஹாலக்ஷ்மியைப் போல் உன் மேல் காதல் செய்யவும் தெரியாது கிருஷ்ணா (கருணிசோ)


பலியந்தே தானவ கொடலு அறியேனு
பக்தி சலவனு அறியே ப்ரஹ்லாதனந்தே
ஒலிசலு அறியே அர்ஜுனனந்தே சகனாகி
சலஹோ தேவர தேவா
புரந்தரவிட்டலா ஸ்ரீ (கருணிசோ)

பலிச் சக்கரவர்த்தியைப் போல் தானம் கொடுக்கத் தெரியாது
பிரகலாதனைப் போல் திடமான பக்தி செய்யவும் தெரியாது
அர்ஜுனனைப் போல் உன் மேல் நட்பு பாராட்டவும் தெரியாது
என்னை காப்பாற்று இறைவனின் இறைவனே
ஸ்ரீ புரந்தர விட்டலனே (கருணிசோ)


***



***

கருணிசோ ரங்கா கருணிசோ

***

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP