Tuesday, September 20, 2011

குடை பிடித்த கிரிதாரி

சமீபத்தில் கேட்டதில் மிகவும் பிடித்த ஒரு கண்ணன் பாடல்(விருத்தம்). காலையில் தூங்கி எழுந்தவுடன் கேட்கலாம் வகை.  கண்ணன் பாடலில் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. இந்த விருத்தத்தை வலையேற்ற அனுமதி அளித்த ரஞ்சனி-காயத்ரி சகோதரிகளுக்கு மிக்க நன்றி.

 

குளிர் மழை காக்க குடை பிடித்த கிரிதாரி
துளிரிடை த்ரௌபதி துகில் நீட்டிய உபகாரி
பிளிறு கேட்டோடி களிறு மீட்ட சக்ரதாரி
வளர்த்தென்னை இங்கு பரிபாலி


9 comments :

Lalitha Mittal said...

நாலே வரிகளில் இவ்வளவு விஷயங்களைப் புகுத்தி அசரவைக்கும் பாட்டு! 'துகில் நீட்டிய உபகாரி'.....கேட்கும்போது மெய்யாவே துகில் நீள்வதை அனுபவிக்கமுடிகிறது!

குமரன் (Kumaran) said...

பகிர்வுக்கு நன்றி இராதா.

Kavinaya said...

கோவர்த்தன கிரிதாரி நடனம்தான் இப்ப போய்கிட்டிருக்கு. அதற்கு தகுந்தாற் போல் அழகான படங்களும் பாடலும். நன்றி ராதா.

Radha said...

லலிதாம்மா, குமரன், கவிநயா அக்கா,
அனைவருக்கும் நன்றி.
கவிநயா அக்கா,
பதிவில் முதலில் ஒரு கிரிதாரியின் படம் தான் இட நினைத்திருந்தேன்.
இரண்டில் எந்த கிரிதாரி படம் பிடித்திருக்கிறது? நான் மிகவும் குழம்பி இரண்டு படங்களையும் இட்டுவிட்டேன். :-) இரண்டாவது படம் மிகவும் ஸ்டைலாக இருப்பதாகத் தோன்றுகிறது. :-)

Kavinaya said...

ரெண்டுமே அழகுதான்; நீங்க சொன்னது போல இரண்டாவது கொஞ்சம் கூடவே :)

Sankar said...

சூப்பர் விருத்தம் ! :)

Sankar said...

முதல் படம் இன்னும் நளினமா இருக்கற மாதிரி தோன்றியது .. :)

m m essakki muthu said...

ungal Aanmegasevaikku thank you veri much

Anu said...

Given below is the enquiry hat my daughter got from her cousin in Kerala dvenkid@gmail.com

Any help possible

Dear Anu and Viji Chiththi

Gopalakrishnaswamy gokulathile, Kuzhanthaiyar roopam konde vilayaadinaar,
kasthoori thilakavum nettiyilitte, kanakamani kondayile poovum choodi,


the above is the way my grandmother sung. But these line below I got from my friend, but it is not complete and also the tune differs and as to tune the lines and words also.



please get the literature if possible and if song available ok.


like that lachu and thanku want oonjal songs for singing on wedding days if available that also.





கோபாலகிருஷ்ணசுவாமி கோகுலத்திலே /
குழந்தை ரூபமாய் வந்து விளையாடினார்
கையில் கங்கனமிட்டு காதில் இரண்டிலும் /
மகர குண்டலமிட்டு கண்ணில் மை இட்டாள்
யசோதை இடுப்பில் வச்சு வெளியில் நிற்க /
இறங்கி சுவாமி ஓடினார் விளையாடவே
ஒருத்தி க்ரஹத்தில்போய் பகவான் கிருஷ்ணன் /
ஒரு துளி வெண்ணை தரவேண்டும் என்றார்
தங்கமர தட்டில் அவள் வெண்ணை நிரெச்சி /
தங்கமே பாலகிருஷ்ணா
வெண்ணை பார் என்றாள்
எனக்கு ரெண்டு குழந்தை மரப்பாச்சிகள்/அதுக்குக்கூட வெண்ணை
தந்தால் திண்ணுமே என்றார்
மரப்பாச்சி வெண்ணையை முழுங்குமா கிருஷ்ணா /
வாய் திறந்து மலர்
வெண்ணை முழுங்கக்கண்டாள்

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP