Tuesday, September 06, 2011

நீல வண்ண கண்ணா வாடா !


அமைதியான இரவில் கேட்க  அருமையான இன்னொரு கண்ணன் பாடல். கிருஷ்ண ஜெயந்தியின் போது வானொலியில் கேட்க நேர்ந்தது.


நீல வண்ண கண்ணா வாடா !
நீ ஒரு முத்தம் தாடா !
நிலையான இன்பம் தந்து
விளையாடும் செல்வா வாடா !

பிள்ளையில்லாக்  கலியும் தீர
வள்ளல் உன் தன் வடிவில் வந்தான்

எல்லை இல்லாக்  கருணை தன்னை
என்னவென்று சொல்வேனப்பா !

வானம்பாடி கானம் கேட்டு
வசந்தகால தென்றல் காற்றில்
தேன் மலர்கள் சிரிக்கும் காட்சி
செல்வன் துயில் நீங்கும் காட்சி


தங்கநிறம் உன்தன் அங்கம்
அன்புமுகம் சந்திர பிம்பம்

கண்ணால் உன்னைக் கண்டால் போதும்
கவலை எல்லாம் பறந்தே போகும்

சின்னஞ்சிறு திலகம் வைத்து
சிங்காரமாய் புருவம் தீட்டி

பொன்னாலான நகையும் பூட்ட
கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு

நடுங்கச் செய்யும் வாடைக் காற்றே
நியாயமல்ல உன்தன் செய்கை
தடை செய்வேன் தாளைப் போட்டு
முடிந்தால் உன் திறமை காட்டு

விண்ணில் நான் இருக்கும் போது
மண்ணில் ஒரு சந்திரன் ஏது
"அம்மா என்ன புதுமை ஈது?!" என்றே
கேட்கும் மதியைப் பாரு

இன்ப வாழ்வின் பிம்பம் நீயே !
இணையில்லா செல்வம் நீயே!
பொங்கும் அன்பின் ஜோதி நீயே !
புகழ் மேவி வாழ்வாய் நீயே !

18 comments :

rajamelaiyur said...

அருமையான பதிவு

rajamelaiyur said...

கண்ணனை பற்றி அருமையாக சொல்லியுள்ளிர்கள்

RAMA RAVI (RAMVI) said...

வணக்கம் சார்.என் பதிவிர்க்கு வந்து படித்து கருத்து சொன்னது மிகவும் மகிழ்சியாக உள்ளது.நன்றி.

Radha said...

@ராஜா,
மிக்க நன்றி. இது ஒரு திரைப்படப் பாடல். மருதகாசி அவர்கள் இயற்றியது என்று நினைக்கிறேன்.
@ராம்வி,
தங்கள் வலைப்பூவிற்கு வருகை புரிந்த நினைவில்லை. கண்ணன் பாடல் குழுவினர் வேறு எவரையேனும் குறிக்கிறீர்கள் போல.
எனினும் தங்கள் வருகைக்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

இராதா,

இந்தப் பாடலை இங்கே இட்டதற்காக 'புகழ் மேவி வாழ்வாய் நீயே!'

ஒவ்வொரு வரியும் அருமை. இசையும் குரலும் பா3வமும் அருமையோ அருமை. நீர் கோர்க்கிறது கண்களில்.

Lalitha Mittal said...

கண்ணால் உன்னைக்கண்டால் போதும்;

கண்ணா! உன்னைக் கண்டால் போதும் ;

கவலையெல்லாம் பறந்தே போகும்;

கவலையெல்லாம் மறந்தேபோகும்.



பல ஆண்டுகளாக ரசித்துரசித்துக் கேட்கும் பாட்டு!

சிறுமியாக இருந்தபோது கதவைமூடிக்கொண்டு பாடி டான்ஸ் ஆடிப்பார்த்துகொண்டு எஞ்சாய் பண்ணியதும் நினைவு இருக்கு!

நன்றி!!

In Love With Krishna said...

//அமைதியான இரவில் கேட்க அருமையான இன்னொரு கண்ணன் பாடல்.//
:)
@ Radha: Is that bcoz it is only in the night that u r free? :))

//செல்வன் துயில் நீங்கும் காட்சி//

Midnight-il kooda Kannan-ai ezhuppum kootam... :))

//நடுங்கச் செய்யும் வாடைக் காற்றே
நியாயமல்ல உன்தன் செய்கை
தடை செய்வேன் தாளைப் போட்டு
முடிந்தால் உன் திறமை காட்டு//
Periyazhwar kaathu super-aa veesudhu indha paatu-la.
i keep getting reminded of him while reading this song. :))

In Love With Krishna said...

btw i forgot to mention in my prev comment:
A thousand likes!
A thousand thanks for posting! :))

The song is awesome!!!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

என்னவொரு மெல்லிய இனிமை பாடலில்! அதன் உணர்ச்சியில்!

இதயக் கதவுகளைக் கண்ணனே வந்து நடு ராத்திரியில் 'டொக் டொக்' என்று தட்டுவது போல் அல்லவா உள்ளது!

இது போன்ற பாடல்கள், இப்போது சினிமாவில் அதிகம் வருவதில்லை ஆயினும்....
இது போன்ற பாடல்கள் கண்ணன் பாட்டிலே அதிகம் வர வேண்டும்! தேடி இட வேணும்!

அப்படி இட்ட ராதா - புகழ் மேவி வாழ்வாய் நீயே!:))

பாடல் குறிப்பு:
எழுதியவர்: ஆ.மருதகாசி
பாடுபவர்: நாட்டியப் பேரொளி, பால சரஸ்வதி
படம்: மங்கையர் திலகம்!
சிவாஜி, பத்மினி, ஜெமினி நடித்தது...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//விண்ணில் நான் இருக்கும் போது
மண்ணில் ஒரு சந்திரன் ஏது?
"அம்மா என்ன புதுமை ஈது?!" என்றே
கேட்கும் மதியைப் பாரு//

எத்தனை எளிமை! எத்தனை அழகியல்!

//சின்னஞ்சிறு திலகம் வைத்து
சிங்காரமாய் புருவம் தீட்ட
கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு//

இதுவல்லவோ எம்பெருமானுக்கு உகந்த அலங்காரம்!

//நடுங்கச் செய்யும் வாடைக் காற்றே
நியாயமல்ல உன்தன் செய்கை
தடை செய்வேன் தாளைப் போட்டு
முடிந்தால் உன் திறமை காட்டு//

அவனை இரவில் பொத்தி அணைக்கும் அம்மா!
அம்ம்மா.....ஆயிரம் சுலோகங்கள் அப்பால் கிடக்கட்டும்! இப்படியொரு அழகியல், எளிமை வருமா! ஆகா!

Radha said...

குமரன்,
நீங்கள் குறிப்பிட்டு இருப்பது அனைத்தும் உண்மை. பாடலைக் கேட்டு சில நாட்கள் வரை, பாடலின் எளிமையும், பாடகர் குரலில் தோய்ந்திருக்கும் அன்பும் நினைவை விட்டு அகலவில்லை. பாடல் மனப்பாடமே ஆகிவிட்டது. :-)

Radha said...

லலிதாம்மா,
"கண்ணால் உன்னைக் கண்டால் போதும்
கவலை எல்லாம் பறந்தே போகும்"
எனக்கும் பிடித்த வரிகள். மாவல்லிகேணியானிடம் அனுபவத்தில் கண்ட உண்மை.

இதேப் போல "கண்ணன் வந்தான்" பாடலில்
"அடையாத கதவிருக்கும் சன்னிதானம்
அஞ்சாத சொல் இருக்கும் சன்னிதானம்"
விரிகள் மிகவும் பிடிக்கும்.

Radha said...

@ilwk,
நிசாசரர் என்ற ஒரு வகை மக்கள் இருக்கிறார்கள். நான் அந்தக் கூட்டத்தை சேர்ந்தவனாக மாறி ஆண்டுகள் பல ஆயிற்று. காகுத்தன் வந்து கொன்றால் தான் விமோசனம். :-)

//The song is awesome!!!!//

will be surprised only if you haven't liked it ! :-)

Radha said...

ரவி,
இந்தப் பாடல் ரேடியோவில் யதேச்சையாக கிடைத்த அமிர்தம். :-) ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் பாடிய ஒரு தமிழ் விருத்தம் ஒன்று சமீபத்தில் கேட்க நேர்ந்தது. இடலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். (காப்புரிமை தான் யோசிக்க வைக்கிறது.)

Sankar said...

கண்ணனை குழந்தையாகவே பாவித்து ரொம்ப எளிமையா எழுதி இருக்கார். ராதா அண்ணா, எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. especially, i loved,//நடுங்கச் செய்யும் வாடைக் காற்றே
நியாயமல்ல உன்தன் செய்கை
தடை செய்வேன் தாளைப் போட்டு
முடிந்தால் உன் திறமை காட்டு// very much... :) :)

சுபத்ரா said...

உருக்கமான பாடல் ராதா. நன்றி!

Radha said...

@சங்கர், @சுபத்ரா,
உங்களுக்கும் பாடல் பிடித்திருப்பதுக் குறித்து மகிழ்ச்சி & நன்றி.

சசிகலா said...

மாயக் கண்ணன் பாட்டு மயங்கின செவிகள் கேட்டு.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP