Sunday, August 21, 2011

கண்ணன் பிறந்த நாள்: பால் வடியும் முகம்!

கண்ணன் பாட்டு மக்களுக்கு....இனிய கண்ணன் பிறந்த நாள் வாழ்த்துக்கள்! (Aug-21, 2011)

கோகுலாஷ்டமி - கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!

இன்னிக்கி எனக்கு மிகவும் பிடிச்ச
பால் வடியும் முகம்...நினைந்து நினைந்து...என் உள்ளம்
பரவசம் மிகவாகுதே - கண்ணா!


பித்துக்குளி-ன்னாலே என்ன ஞாபகத்துக்கு வரும்?
எனக்கு முருகன் ஞாபகம் வருவான்! :)
அப்பறமா முருகதாஸ்-இன் கூலிங் க்ளாஸ், தலையில் காவி Scarf!
மனுசன் அப்பவே என்ன ஸ்டைலா இருக்காரு-ன்னு பாருங்க! :))

ஒத்தை ஹார்மோனியம் மட்டுமே வச்சிக்கிட்டு......இந்தக் கொங்கு நாட்டுத் தங்கம், எதையும் கொஞ்சம் வித்தியாசமா பண்ணும்!

கர்நாடக பாடல்களை, அப்படியே இழு இழு-ன்னு இழுக்காம, அதை வேறொரு ஸ்டைலில், மக்களோடு மக்களாச் சேர்ந்து, பாடிக் காட்டியவர்!
இதனால் தான், இந்தக் காலத்திலும், ஹார்மோனியம் மட்டுமே வச்சிக்கிட்டு, கல்லூரி மாணவர்களைக் கூடப் பித்துக்குளிக்கு, "ஓ" போட வைக்குது!

Fast Beat காவடிச் சிந்தை, செஞ்சுருட்டி/சுருட்டி/நாதநாமக் கிரியை-ன்னு போடறது தப்பில்லை!
ஆனா காவடிச் சிந்தின் அந்த ஜீவனான "துள்ளல்" போயிறக் கூடாதுல்ல? பண்டிதர்கள் அதை இழுத்து இழுத்தே ஜீவனைப் போக்கிருவாங்க! :)
ஆனால் நம்ம பித்துக்குளியார் காவடிச் சிந்தைக் கேளுங்க! சுருட்டி ராகமும் இருக்கும்! காவடியைச் "சுருட்டிக்"கிட்டு போகாமலும் இருக்கும்! :)

சான்றாக, இந்தப் பாட்டையே எடுத்துக்கோங்க!
பால் வடியும் முகம் - கண்ணா, என்பது ஊத்துக்காடு வேங்கட கவியின் கீர்த்தனை! நடனத்துக்குன்னே பாடப்பட்ட அழகான கண்ணன் பாடல்! இதை எப்படி முருகதாஸ் Handle பண்றாரு?

* முதலில் பச்சை மாமலை போல் மேனி-ன்னு, ஆழ்வாரை Hum பண்ணி ஆரம்பிக்கறாரு!
* அடுத்து, ஒரு டெம்ப்போ உருவாக்க, மெல்லிய பஜனை...மக்களோடு!
* அடுத்து, பாஆஆஆஆஆல் வடியும் முகம்...நினைந்து நினைந்து உள்ளம்.....பரவசம் மிகவாகுதே....கண்ணாஆஆஆஆ!

கேட்டுக்கிட்டே பதிவை வாசிக்க, இதோ சொடுக்குங்கள்: பித்துக்குளியின் மாயக்குரலில், மாயோன் பாட்டு - பால் வடியும் முகம்! Bhajan Version, here

பால் வடியும் முகம்...



பால் வடியும் முகம்
நினைந்து நினைந்தென் உள்ளம்
பரவசம் மிக வாகுதே - கண்ணா!
(பால் வடியும்)

நீலக் கடல் போலும் நிறத்தழகா - எந்தன்
நெஞ்சம் குடி கொண்ட
அன்று முதல் இன்றும்
எந்தப் பொருள் கண்டும்
சிந்தனை செலா தொழிய
(பால் வடியும்)
நீர் வடியும் முகம்...

வான முகட்டில் சற்றே
மனம் வந்து நோக்கினும்
மோன முகம் வந்து தோனுதே!

தெளிவான தண்ணீர் தடத்தில்
சிந்தனை மாறினும்
சிரித்த முகம் வந்து காணுதே!

கானக் குயில் குரலில்
கருத்(து) அமைந்திடினும் - உன்
கானக் குழலோசை மயக்குதே!

கருத்த குழலொடு நிறுத்த மயில் சிறகு - இறுக்கி அமைத்த திறத்திலே
கான மயிலாடும் மோனக்குயில் பாடும் - நீல நதியோடும் வனத்திலே
குழல் முதல் எழிலிசை, குழைய வரும் இசையில் - குழலொடு மிளிர் இளங் கரத்திலே
கதிரும் மதியும் என நயன விழிகள் இரு - நளினமான சலனத்திலே

காளிங்கன் சிரத்திலே
பதித்த பதத்திலே
என் மனத்தை இருத்திக்
கனவு நனவினொடு
பிறவி பிறவி தொறும்
கனிந்துருக வரம்தருக பரங்கருணை....
(பால் வடியும்)

வரிகள்: ஊத்துக்காடு வேங்கட கவி
ராகம்: நாட்டக் குறிஞ்சி
தாளம்: ஆதி
குரல்: பித்துக்குளி முருகதாஸ்

இசைக் கருவிகளில்:
* வயலின் - குன்னக்குடி
* நாதசுரம்
* வீணை

11 comments :

Sankar said...

ஊத்துக்காடு அவர்களின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரத்தினங்கள் . :) பதிவிற்கு நன்றி :) அனைவருக்கும் கண்ணனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

Radha said...

ரவி,
என்ன அதிசயம்...நேற்று இரவு இந்தப் பாடலைப் பதிவு செய்ய எண்ணி, மஹாராஜபுரம் சந்தானம் அவர்களின் தொகுப்பைத் தவற விட்டதை நினைத்து வருந்தினேன். கிரிதாரி அற்புதமானவன். :-)
மிக்க நன்றி.
*****
அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். :-)

sury siva said...

கிரிதாரி அற்புதமானவன். :-)

anekan avan
arindhorkku
ekanum avane.
em chinthai
kondavanum avane


subbu thatha

குமரன் (Kumaran) said...

இந்த கீர்த்தனை நம்மாழ்வார் பாசுரத்திற்கு ஒத்த அழகும் ஆழமும் கொண்டது. மகாராசபுரம் சந்தானம் குரலில் கேட்டு மகிழ்ந்த பாடல். இப்போது பித்துக்குளியாரின் குரலிலும் அருமை.

Kavinaya said...

மிகவும் பிடித்த பாடல். ந்ன்றி கண்ணா.

பிறந்த நாள் காணும் குட்டிக் கிருஷ்ணனுக்கு கட்டி முத்தங்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Can someone add maharajapuram sanathanam version of this song to the post? - thanks

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஊருக்குப் போன சங்கரே, எங்கள் ஆரா அமுதனைக் கண்டீரா?
ஆருக்கு ஆர் என எந்தையிடம், இந்தப் பேதையின் சொல்லைச் சொன்னீரா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@ராதா
கிரிதாரி அற்புதமானவனா? இல்லையில்லை! அவன் மாயக்காரன்! :)

நீ சென்னையில் யோசிச்ச பாட்டை, நான் Rio-வில் இருந்து பதிவிடணுமா? அதுக்கு என்னை வேலை வாங்கிய இந்தக் கண்ணனை என்ன சொல்லிக் கிள்ள? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நன்றி சூரி சார்! நீங்களும் அற்புதமானவன்-ன்னு சொல்லிட்டீக!:)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இந்த கீர்த்தனை நம்மாழ்வார் பாசுரத்திற்கு ஒத்த அழகும் ஆழமும் கொண்டது//

ஒத்த பாசுரம் ஏதாச்சும் இருக்கா குமரன்?

சந்தானம், பித்துக்குளி இவர்கள் இருவர் பாடுவதும் தான் இப்பாடலுக்கு Masterpiece!

Sankar said...

Ya..கண்ணாரக் கண்டேன்.. அழகன் தைலக்காப்பில் திளைத்துக் கொண்டிருக்கின்றான். ஆயிரம் மொழிகள் கூறுகின்றன, அவனது ஆனந்த இதழ்கள். கண்கள் காதலை உமிழ்ந்தன. :)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP