Monday, June 13, 2011

நித்தியமும் வந்து சத்தியங்கள் செய்தவன்...





நித்தியமும் வந்து சத்தியங்கள் பலசெய்த
வித்தகன் வேணுகான லோலனை கண்டாயோ!

வேய்ங்குழல் மத்தால் பேதை மனத் தயிரைக் கடைந்து..
நேயப்பொன் கரத்தால் பிரேமபக்தி வெண்ணை புசித்தான் !

ஆயர்க்குலச் சீயன் அவன் அங்கம் வழியும் கருமையை
சாயம் பூசினான் சந்திரன் தவழும் விண்ணிற்கு..
வியர்வையாய் சுரந்தனன் மாயன் மழையதனை - அதில்
மண்குளிரச் செய்வதாய் ஏழை மனம் குளிர்வித்தானடி..

18 comments:

  1. 'kuzhal maththu',
    'manaththayir',
    'bakthi vennai',
    .....fantastic!

    ReplyDelete
  2. அழகான கவிதை சங்கர்.
    [நித்தமா? நித்தியமா?]

    ReplyDelete
  3. லலிதம்மா : நன்றி ! :)

    ReplyDelete
  4. @ராதா அண்ணா: நன்றி அண்ணா ! நித்தியம் தான்.. ஏன் கேக்கறீங்க ?
    பாட்டு நடனம் எல்லாம் கத்துக்கறீங்கலாமே? :)

    ReplyDelete
  5. சங்கர்
    நல்ல பாடல்; நல்லாப் பாடி இருக்கீங்க! சாயம் பூசினான் என்ற இடத்தில் 'பூசினாற்' போல் பாடியது பிடித்து இருந்தது!

    ReplyDelete
  6. சங்கர்,
    பாட்டு கத்துக்கணும் இன்னும் ஆவல் இருக்கு. நான் பாட(!??) கிரிதாரி நடனம் புரிவான். :-)

    தற்பொழுது என் நிலை இந்தப் பாடலை தான் நினைவுபடுத்துகிறது.
    "உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா !
    உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா !"

    :-)

    ReplyDelete
  7. நித்தம் - தினம் தினம்
    நித்தியம் - எப்பொழுதும்
    --
    என்று நினைக்கிறேன்.
    எப்படி பார்த்தாலும் கண்ணனுக்கு
    பொருத்தம் தான். :-)

    ReplyDelete
  8. அருமை ,வரியும் பாடலும்

    ReplyDelete
  9. //வேய்ங்குழல் மத்தால் பேதை மனத் தயிரைக் கடைந்து..நேயப்பொன் கரத்தால் பிரேமபக்தி வெண்ணை புசித்தான் !// :))
    Beautiful lines! Vera enna solla? :)
    btw, can i dedicate this please?

    ReplyDelete
  10. @KRS: ரொம்ப நன்றி.. ஹா ஹா தானா அமைஞ்சது.. :)

    ReplyDelete
  11. @ராதா அண்ணா: கண்டிப்பா கத்துக்கங்க! நிறைய பாடுங்க.. அவன் கண்டிப்பா வந்து ஆடுவான்.. நான் guarantee.. :)

    ReplyDelete
  12. @ராதா அண்ணா: ரெண்டு விதமாவும் நீங்க சொன்ன மாதிரி அழகாதான் இருக்கு. :)

    ReplyDelete
  13. @திகழ்: ரொம்ப நன்றி! :)

    ReplyDelete
  14. @ILWK: நன்றி! Of course, you can! :) its my pleasure.. :)

    ReplyDelete
  15. @Sankar: Thanks:)
    Dedicated to my Lord, Azhagiya Singar of thiruvallikeni who looks all the more handsome when He dresses up as Krishna.

    ReplyDelete
  16. நித்தியமும் வந்து சத்தியங்கள் பலசெய்த
    வித்தகன் வேணுகான லோலனை கண்டாயோ!:)

    Very nice:)

    ReplyDelete
  17. /வேய்ங்குழல் மத்தால் பேதை மனத் தயிரைக் கடைந்து..நேயப்பொன் கரத்தால் பிரேமபக்தி வெண்ணை புசித்தான் !

    realy........superb:)

    ReplyDelete