Thursday, April 07, 2011

பாப்பா ராமாயணம்(எட்டாம்பகுதி)


              பாப்பா ராமாயணம்(எட்டாம்பகுதி)

                    சுந்தரகாண்டம்(பாகம்-5 )

சர்க்கம் -28-- முதல்  -37-    வரை
  மரத்தினை  மைதிலி நெருங்கினராம்;  
            கரத்தால் கிளையொன்றைப் பிடித்தனராம்.

  முடியினைக் கயிறாய் முறுக்கினராம்;
     தூக்கிட்டுக்கொள்ளத் துணிந்தனராம்.      

   நாதனை நெஞ்சினில் நினைத்தனராம்.
  நற்சகுனம் பல கண்டனராம்.                   

(ராம ராம ஜெய ....சீதாராம்)

இடக்கண் துடிப்பதை உணர்ந்தனராம்;
இடப்புயமுந்துடிப்பதுணர்ந்தனராம்.       

இடத்தொடையுந்துடிக்க நின்றனராம்;
ஆடை நழுவிடக் கண்டனராம்.             

சகுனங்களால் மனம் மகிழ்ந்தனராம்;  
நடக்கும் நல்லதென நினைத்தனராம்.

கலக்கமும் கவலையும் நீத்தனராம்;   
அமைதியால் முகமலர் பூத்தனராம்.    

மாருதி மறைவாய் அமர்ந்தனராம்;     
நிகழ்வதெல்லாம் பார்த்திருந்தனராம்.

உத்தமி உள்ளத்தை உணர்ந்தனராம்;
ஆறுதல் கூறிடத் துடித்தனராம்.           

அரக்கியர் உறங்கிடக் கண்டனராம்;
தக்க தருணமென எண்ணினராம்.     

நம்பிக்கைப் பெறவழி தேடினராம்;   
ராமரின் பெருமையைப் பாடினராம்.

(ராம ராம ஜெய......சீதாராம்)

தனக்குத்தானே பேசிக்கொண்டனராம்;
     சுருக்கமாய் நிகழ்ந்ததை நவின்றனராம்.

      தான்வந்த நோக்கத்தை மொழிந்தனராம்;
செவியுற்ற சீதை நிமிர்ந்தனராம்.          


கவனமாய்ப் பார்வையிட்டனராம்;    
குரங்கொன்றைக் கண்ணுற்றனராம்.

வானரக்குரல்கேட்டு வியந்தானராம்;
       செவியுற்ற செய்தியால் மகிழ்ந்தனராம்.

கனவென்றையம் கொண்டனராம்;   
''துயிலின்றிக் கனவேது?''என்றனராம்.

     தெய்வத்தை மனத்தால் தொழுதனராம்;
   கேட்டவை மெய்த்திட வேண்டினராம்.

மாருதி கீழே இறங்கினராம்;                   
   மைதிலியை மெல்ல நெருங்கினராம்.

    பணிவாய்க் கைகூப்பி வணங்கினராம்;
இனிமையாய்ப் பேசத்துவங்கினராம்.

இதுவரை நடந்ததை விளக்கினராம்;
சீதையின் அச்சத்தைப் போக்கினராம்.

சீதையின் அருகில் சென்றனராம்      
அன்னையோ ஐயம் கொண்டனராம்.

'ராவணனோ?'என பயந்தனராம்;         
அனுமன் அவள்மனமறிந்தனராம்.     

'ராம தூதன் நான்' என்றனராம்;             
ராமர் பணித்ததைப் பகர்ந்தனராம்.  

வைதேகி வினாபல வினவினராம்;
வாயுமகனும் விடையளித்தனராம்.

ராமலக்ஷ்மணரைப் புகழ்ந்தனராம்;
அங்க அடையாளம் பகர்ந்தனராம்.

கணையாழிதனை எடுத்தனராம்;       
ராமரளித்ததெனக் கொடுத்தனராம்.



கணையாழியை சீதை வாங்கினராம்;
            கணவரையே கண்டதுபோல் களித்தனராம்.

   அனுமனின் அன்பால் நெகிழ்ந்தனராம்;
  வீரனின் வலிமையை வியந்தனராம்.

,'வருவாரோ,பதி?'என விசும்பினராம்;  
'காண்பேனோ?' எனக்கதறினராம்.       

கேசரி நந்தனன் குனிந்தனராம்;       
முதுகிலமர்ந்திடக் கூறினராம்.        

     'சுமந்துசெல்வேன்'என உரைத்தனராம்;
அமர்ந்திட அன்னை மறுத்தனராம்.  

    அனுமன் ஐயம் நீக்க  நினைத்தனராம்;
விசுவரூபத்தில்  நின்றனராம்.              



அன்னை அனுமனைப் புகழ்ந்தனராம்;
அவர்மேல் அமரவோ மறுத்தனராம்.  

'பதி மீட்பார்' எனப் பகர்ந்தனராம்;         
       அனுமனுமவள் கற்பை உணர்ந்தனராம்.

(ராம ராம ஜெய...சீதாராம்)

6 comments :

Radha said...

லலிதாம்மா, பொருத்தமான படங்களை தேர்வு செய்து அருமையாக கொடுத்துள்ளீர்கள்.
ரகுபதி ராகவ ராஜா ராம் !

நாடி நாடி நரசிங்கா! said...

கனவொன்று கண்டதாய் உரைத்தனராம்;
கனவினில் நிகழ்ந்ததை விளக்கினராம்.
திரிசடை கனவை கூறியவுடன் சீதா பிராட்டியின் மன நிலையை கூறுவீர்கள்
என்று நினைத்தேன் . அடுத்து

மரத்தினை மைதிலி நெருங்கினராம்;
கரத்தால் கிளையொன்றைப் பிடித்தனராம்.
என்று ஆரம்பித்து விட்டீர்கள்

நாடி நாடி நரசிங்கா! said...

.அன்னை அனுமனைப் புகழ்ந்தனராம்;
அவர்மேல் அமரவோ மறுத்தனராம்.

'பதி மீட்பார்' எனப் பகர்ந்தனராம்;
அனுமனுமவள் கற்பை உணர்ந்தனராம்.


அனுமன் நினைத்திருந்தால் அவரே இராவணனை அழித்து சீதையை மீட்டிப்பார்.அல்லவா !!
nice:)

Lalitha Mittal said...

ந.நா,
கே.ஆர்.எஸ் பாடியதையும் கேட்டு ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
வால்மீகி ராமாயணத்தில்(அண்ணா அவர்களின் மொழி பெயர்ப்பு)திரிசடையின் பேச்சை சீதை கவனித்ததா கவே இல்லை.அரக்கிகளின் இழிச்சொல் கேட்டு மனமுடைந்து இனி உயிரோடிருந்து பயனில்லை என்று மரக்கிளையைப் பிடித்து இழுப்பதாக வருது.அதனால்தான் அப்படி எழுதினேன்.என்கற்பனையை இதில் கலக்கக்கூடாது என்று எண்ணியதால் அவளது தற்கொலை முயற்சியை அடுத்த நிகழ்ச்சியாக அமைத்துவிட்டேன்.ஒ கேயா?

நாடி நாடி நரசிங்கா! said...

ok:)

கே.ஆர்.எஸ் பாடியதையும் கேட்டு ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
no:problem in speaker!

தமிழ் said...

நன்றாக விளங்கும்படி எழுதி யுள்ளீர்கள்.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP