Sunday, April 03, 2011

பாப்பா ராமாயணம்-(நான்காம்பகுதி)

பாப்பா ராமாயணம்-(நான்காம்பகுதி)


                       சுந்தரகாண்டம்- (பாகம்-1 )
                                                     
        சர்க்கம்-1 ----அனுமன் சமுத்திரம் தாண்டுதல் .
[பாடலை நண்பர் கே.ஆர்.எஸ் பாட  கீழே  கேட்கலாம்.]
                     அனைவரும்    அனுமனை நாடினராம்;
         சீதையை மீட்க வேண்டினராம்.

                   அனுமனும் அதற்குத்  துணிந்தனராம்;
       ராமநாமத்தை ஜெபித்தனராம்.

    (ராம ராம ஜெய ......சீதாராம்)

               பேருருவத்தினராய் மாறினராம்;     
     மலையுச்சியிலே ஏறினராம்.   

               காலால்    மலையை அழுத்தினராம்;
                 வேகமாய் மூச்சினை இழுத்தனராம்.

             மலையை ஊன்றி உதைத்தனராம்;
                   விண்ணை       நோக்கி விரைந்தனராம்.

        வானவீதியை     எய்தினராம்;
                  வானவர்     மலர் மழை பெய்தனராம்.



வான்வழி     அனுமன் பறந்தனராம்;
            வால்    நக்ஷத்திரம்போல் தெரிந்தனராம்.

கடலரசன் இதைக்     கண்டனராம்;
 உதவிட எண்ணங்கொண்டனராம்.

     மைநாகமலைதனை விளித்தனராம்;
உபசரித்திடும்படி பணித்தனராம் .

     மலையரசனும் மனமிணங்கினராம்;
வேகமாய் ஓங்கி வளர்நதனராம்.

         அனுமனின் பாதையில் நின்றனராம்;
   மாருதி மலையைக் கண்டனராம்.

   வேகத்தடையென எண்ணினராம்;
                                                           தேக  பலத்தால்   தள்ளினராம்.

        நிலைகுலைந்தரசன் விழுந்தனராம்.;
                                                           நாணியவாறே            எழுந்தனராம்.

              அனுமனின் ஆற்றலை உணர்ந்தனராம்;
   அவரை அன்பாய் உபசரித்தனராம்.

          கடலோன் விருப்பத்தைக் கூறினராம்;
    களைப்பாறிச்செல்லக் கோரினராம்.

அனுமன்       ஐயம் தெளிந்தனராம்;
அன்புடன் அவனை வருடினராம்.

ஓய்வாய் அமர்ந்திட மறுத்தனராம்.
வைதேகியை மீட்கப் பறந்தனராம்.

வானோர் கண்டு      வியந்தனராம்.;
வாயுபுத்திரனைப்      புகழ்ந்தனராம்.

நெஞ்சுறம் கண்டோமென்றனராம்.;
      அறிவினைச் சோதிக்க எண்ணினராம்.

நாகமாதாவினை           ஏவினராம்.;
சுரசை       என்பது அவள் பெயராம்.

அரக்கியாய்        சுரசை     மாறினராம்;
அனுமனை        நோக்கிச்   சீறினராம்.

வீரனை வளைத்துப் பிடித்தனராம்;
      விழுங்கிடத் துடிப்பதாய் நடித்தனராம்.
  
பேயென        வாயை  விரித்தனராம்;
வாயினுள் புகும்படி பணித்தனராம்.

   'அயன் தந்த வரம்' என விளக்கினராம்;
அனுமனும் வாய்புக இணங்கினராம்

தேகத்தை அனுமன்  வளர்த்தனராம்;
அவளினும் பெரிதாய் பருத்தனராம்.

சுரசை     அனுமனை    அளந்தனராம்;
குகையென வாயைப் பிளந்தனராம்.

  சட்டென     அனுமன் சிறுத்தனராம்;
          சுட்டு          விரலளவு       சுருங்கினராம்.


சுரசையின்     வாயில் புகுந்தனராம்;
ஒரு நொடியில் வெளிவந்தனராம்..

அறிவால் அரக்கியை வென்றனராம்;
சுரசையோ  செயலற்று நின்றனராம்.

விண்ணோர்   வியந்து மகிழ்ந்தனராம்;
அனுமனின் அறிவைப் புகழ்ந்தனராம்.

சுரசையும்     சுயவுரு    மாறினராம் ;
அனுமனுக்கு    வாழ்த்து கூறினராம்.

வானரன் விருட்டெனப் பறந்தனராம்;.
ராமபாணமெனத்   தெரிந்தனராம்.

(ராம ராம ஜெய....சீதாராம்)
பாடலை நண்பர் கே.ஆர்.எஸ் பாட  கீழே  கேட்கலாம்.


[சர்கம்-1  அடுத்த பகுதியில்  தொடரும்]
                      -------------------------------------------------------------

6 comments:

  1. என்ன சொல்றதுன்னு தெரியல . வரிக்கு வரி படிக்க படிக்க சலனமே இல்லாத கடல் போல இருக்கு
    superf:)

    ReplyDelete
  2. ந.நா
    உத்சாகமூட்டும் உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி .தொடர்ந்துபடித்து கருத்து தெரிவிக்கவும்

    ReplyDelete
  3. பள்ளி நாட்களுக்கு கடத்திச் செல்கிறீர்கள்... ரவி குதூகலமாக பாடியிருப்பதும் அருமை.

    ReplyDelete
  4. இந்த பதிவை இதுவரை நான் படிக்கல.
    இப்போ கேட்டுகிட்டே படிச்சேன்!
    @KRS: கலக்கிடீங்க போங்க!! :))

    ReplyDelete
  5. கே.ஆர்.எஸ். ரொம்பம் நல்லா பாடியிருக்கீங்க!

    ReplyDelete
  6. அருமை

    பாடலோடு பாடிக்கையில் பரவசமே தனித் தான்

    கண்ணப்பிரான் அவர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete