Tuesday, April 05, 2011


                   பாப்பா ராமாயணம்(ஆறாம்பகுதி)

                    சுந்தரகாண்டம் -(பாகம்-3 )

            சர்க்கம்-13-முதல்-20- வரை



அனுமன் பொறுமை இழந்தனராம்;
     "கொன்றனரோ?''எனக் கலங்கினராம்.

தேடா இடமெல்லாந்தேடினராம்;   
           வைதேகியைக் காணாது வாடினராம்.   

    அடர்வனமொன்றைக் கண்டனராம்;
'போகா இடம்' என எண்ணினராம்.

 'அசோக வனம்' என அறிந்தனராம்;
புகுந்து தேடிவிட நினைத்தனராம்.

     மனத்தினில் ராமரை வணங்கினராம்;
    வனத்தினை நோக்கி விரைந்தனராம்.

(ராம ராம ஜெய..சீதாராம்)


        'விருட்'டென வனத்தினுள் புகுந்தனராம்;
மரத்துக்கு மரந்தாவி குதித்தனராம்.

  சிம்சுபா மரமொன்றைக்கண்டனராம்;
உச்சிக்குத்தாவிச் சென்றனராம்.        

       அடர்ந்த இலைகளிடை மறைந்தனராம்;
         பார்வையைக்  கீழ்நோக்கித்திருப்பினராம்.

வனமெங்கும் பார்வை இட்டனராம்; 
ஏழையொருத்தி தென்பட்டனராம்.       

அழுக்காடை அணிந்திருந்தனராம்;     
ஆபரணமேதும் அணிந்திலராம்.           


                    அரக்கியரிடை அமர்ந்திருந்தனராம்;              
               நாய்களிடை மானெனத் தெரிந்தனராம்.
                 
        அவளை அனுமன் கண்காணித்தனராம்;
'சீதையே'என அனுமானித்தனராம்.

தாயை விடுவிக்கத் தவித்தனராம்;
ராமருடன் சேர்க்கத் துடித்தனராம்.

இணைந்து தரிசிக்க விரும்பினராம்;
ராமநாமத்தை ஸ்மரித்தனராம் .       

(ராம ராம ஜெய ....சீதாராம்)

அனுமன் சிந்தனையிலாழ்ந்தனராம்;
  'முயற்சி வெற்றி'என மகிழ்ந்தனராம்.

             அன்னையின் கோலத்தைக் கண்டனராம்;
அளவற்ற துயரங்கொண்டனராம்.     

             'பொறுமையில் பூமி'யென உணர்ந்தனராம்;
தக்க தருணம் பார்த்திருந்தனராம்.   

மரக்கிளையில் சாய்ந்தமர்ந்தனராம்;
    மனத்தினுள்  ராமரை நினைத்தனராம்.

(ராம ராம ஜெய ....சீதாராம்)

சந்திரன் ஒளிக்கதிர் பரப்பினராம்;       
மாருதி பார்வையைத் திருப்பினராம்.


        தலைவியுந்தெளிவாய்த் தெரிந்தனராம்;
சுற்றிலும் அரக்கியர் இருந்தனராம்.

  கோரப்பல்,கூர்நகங் கொண்டவராம்;
சீதைக்குக் காவலாய் நின்றனராம்.

    மான்போல் மைதிலி மருண்டனராம்;
தீயெனக் கற்பினில் திகழ்ந்தனராம்.

அனுமன் தரிசித்து மகிழ்ந்தனராம்;
ஆனந்தக் கண்ணீர் உகுத்தனராம்.  

வேத ஒலியைச் செவிமடுத்தனராம்;
விடியற்காலை என உணர்ந்தனராம்.

அரசன் ஒலிகேட்டு விழித்தனராம்;     
வைதேகியைக்காணத் துடித்தனராம்.

ஆடையாபரணம் அணிந்தனராம்;      
ஜானகியைக் காண விரைந்தனராம்.

பலரும் புடைசூழச் சென்றனராம்;     
குலமகளை அணுகி நின்றனராம்.     

தூயவள் தேகத்தை மறைத்தனராம்;
த்யானத்தில் தரைமேலமர்ந்தனராம்.

நாதனை மட்டுமே நினைத்தனராம்;
நோக்கிய ராவணன் திகைத்தனராம்.

     அன்னையை அரக்கன் நெருங்கினராம்;
அழிவினை நோக்கி நகர்ந்தனராம்.



ராமரை இகழ்ந்து ஏசினராம்;       
சீதையைப் புகழ்ந்து பேசினராம்.

       தன்னை மணந்திடத் தூண்டினராம்;
       ராமரைத் துறநதிட வேண்டினராம்.

(ராம ராம ஜெய.....சீதாராம்)










7 comments :

In Love With Krishna said...

ஸ்ரீராமஜெயம் ....வேற என்ன சொல்லன்னு தெரியல...ரொம்ப அழகா வந்திருக்கு!

நாடி நாடி நரசிங்கா! said...

படிக்க படிக்க வந்துட்டே இருக்கணும்னு எதிர்பார்த்தால்
சீக்கிரமா இன்னைக்கு பதிவு முடிஞ்சிடிச்சு
Intresting:)

Lalitha Mittal said...

ilwk, na.naa,ரசித்துப் படிப்பது மிக மகிழ்ச்சி அளிக்கிறது.
கே.ஆர்.எஸ் சுந்தரகாண்டம் முதல் பகுதியைப் பாடி இணைத்திருக்காரே ;கேட்டு ரசித்தீர்களா?

சிவமுருகன் said...

//படிக்க படிக்க வந்துட்டே இருக்கணும்னு எதிர்பார்த்தால்
சீக்கிரமா இன்னைக்கு பதிவு முடிஞ்சிடிச்சு
Intresting:)//

ரிப்பிட்டு....

//கே.ஆர்.எஸ் சுந்தரகாண்டம் முதல் பகுதியைப் பாடி இணைத்திருக்காரே ;கேட்டு ரசித்தீர்களா//

கேட்க வேண்டும் விரைவில்!

சிவமுருகன் said...

//படிக்க படிக்க வந்துட்டே இருக்கணும்னு எதிர்பார்த்தால்
சீக்கிரமா இன்னைக்கு பதிவு முடிஞ்சிடிச்சு
Intresting:)//

ரிப்பிட்டு....

//கே.ஆர்.எஸ் சுந்தரகாண்டம் முதல் பகுதியைப் பாடி இணைத்திருக்காரே ;கேட்டு ரசித்தீர்களா//

கேட்க வேண்டும் விரைவில்!

Radha said...

ஆஞ்சநேய வீரா அனுமந்த சூரா !
வாயு குமாரா ! வானர வீரா !
ஸ்ரீ ராம் ! ஜெய ராம் ! ஜே ஜே ராம் !
சீதா ராம் ! ஜெய ராதே ஷ்யாம் !

தமிழ் said...

சொல்ல‌ வார்த்தை இல்லை

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP