Monday, April 04, 2011


பாப்பா ராமாயணம் -(ஐந்தாம்பகுதி)


                     சுந்தரகாண்டம் -(பாகம்-2 )

சர்க்கம் -1-இரண்டாம்பகுதி- அனுமன் சமுத்திரம் தாண்டுதல்



சிம்ஹிகா என்றோர் அரக்கியராம்;
   பறந்திடுமனுமனை நெருங்கினராம்.

  கொழுத்த குரங்கெனக்கண்டனராம்;
விழுங்கிப் பசியாற எண்ணினராம்.

       பாய்ந்தே அனுமனைப் பிடித்தனராம்;
பிளந்தவாயினில் திணித்தனராம்.

கடுகென அனுமன் சுருங்கினராம்;
                              அரக்கியின் தொண்டையில் இறங்கினராம்.                  

மார்பினை நகத்தால் கிழித்தனராம்;
             அரக்கியைக் கொன்று ஒழித்தனராம்.             

           மீண்டும் விண்ணோக்கி விரைந்தனராம்;
       இலங்கையை நோக்கிப் பறந்தனராம்.

                     இலங்கையின் எல்லையை நெருங்கினராம்;
                லம்பாகிரிமேல் இறங்கினராம்.               

                            -----------------------------------------------------------------------

சர்க்கம்-2 முதல்  12 வரை

இரவில் நகர் புக எண்ணினராம்;
      வடதிசை வாசலை நண்ணினராம்.

   அரக்கக் காவலரைக் கண்டனராம்;
          தேகத்தைச் சுருக்கிக் கொண்டனராம்.

மெதுவாய் ஊர்ந்து நகர்ந்தனராம்;
                              மதில்மேல் ஏறி அமர்ந்தனராம்.                                  

             இலங்கிணி இலங்கையின் காவலராம்;     
            மதில்மேல் அனுமனைக் கண்டனராம்.     

அற்பக்குரங்கென நினைத்தனராம்;
அனுமனை ஓங்கி அறைந்தனராம்.

சினத்தால் மாருதி சிவந்தனராம்.;
    'பெண்ணினம்'என்றே  தயங்கினராம்.

      முட்டியால் மெதுவாய்க் குத்தினராம்;
வலியால் இலங்கிணி கத்தினராம்.

              அனுமனின் வலிமையை உணர்ந்தனராம்;
      நகர்புக அனுமதியளித்தனராம்.         

     மாருதி நகரினுள் புகுந்தனராம்;          
           மன்னனின் அரண்மனை அடைந்தனராம்.

அந்தப்புரத்துள் நுழைந்தனராம்;       
சீதையைத்தேட விழைந்தனராம்.    

விண்ணில் சந்திரன் சிரித்தனராம்;
     தண்ணொளிக்கதிரை  விரித்தனராம்.

அரக்கியர் உறக்கத்திலாழ்ந்தனராம்;
     அரக்கரும் போதையில் வீழ்ந்தனராம்.

சீதையை மாருதி தேடினராம்;          
பேதையைக் காணாது வாடினராம்.

அரண்மனையுள்ளே சென்றனராம்;
மாபெரும் மாளிகை கண்டனராம்.

அங்கோர் விமானம் பார்த்தனராம்;
புஷ்பகவிமானம் எனப்பெயராம்.



வேகத்தில் காற்றென அறிந்தனராம்;      
தேவர்க்கும் அரிதெனத் தெளிந்தனராம்.

அழகிய மாளிகை கண்டனராம்;            
உறங்கும் பெண்கள் தென்பட்டனராம்.

துயிலும் தசமுகனைக் கண்டனராம்;
"மலையோ"என ஐயமுற்றனராம்.       

பேரழகு பெண்ணைக் கண்டனராம்;
"சீதை இவரே!''என எண்ணினராம்.

சற்றே யோசனை செய்தனராம்;     
      ''துயில்வாரென் தாயல்ல" என்றனராம்.

பானசாலைதனில் புகுந்தனராம்;   
மது,மாமிசங்களைக் கடந்தனராம்.

      ஒவ்வொரு மூலையும் கூர்ந்தனராம்;
      சீதையைக் காணாது சோர்ந்தனராம்.

கேசரிநந்தனர் கலங்கினராம்;          
"மாண்டனரோ?"என மயங்கினராம்.

அங்குலம் விடாது சலித்தனராம்.;
               அலைந்து களைத்து மனஞ்சலித்தனராம்.    

           ஊக்கத்தை வளர்த்திட முயன்றனராம்;     
ராமநாம ஜபம் செய்தனராம்.          

(ராம ராம ஜெய......சீதாராம்)

                                       ---------------------------------------------------


                           







                              









   






8 comments :

நாடி நாடி நரசிங்கா! said...

லங்கிணி இலங்கையின் காவலராம்;
மதில்மேல் அனுமனைக் கண்டனராம்.

அற்பக்குரங்கென நினைத்தனராம்;
அனுமனை ஓங்கி அறைந்தனராம்.//

அப்படியே Spot-ke கொண்டு போறீங்க!

//ஊக்கத்தை வளர்த்திட முயன்றனராம்;
ராமநாம ஜபம் செய்தனராம்//.

அடுத்து என்ன நடக்கும் Suspensaa இருக்கு
:)

நாடி நாடி நரசிங்கா! said...

சர்கம் என்றால் என்ன ?
நண்ணினராம்- local tamil என்ன ?

Sivamurugan said...

அடடா அனுமார் இலங்கையை அடைந்து விட்டாரா! இனி எல்லாமே த்ரிலிங்கா! இருக்குமே!

In Love With Krishna said...

மிக அருமையாக இருந்தது!!
இனிக்கு பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ராமர் உற்சவம். அங்கே ராமர், சீதை, லக்ஷ்மணன்...ஆரத்தி எடுத்திகிட்டு இருந்தாங்க...அப்போ உங்கள் பதிவை தான் நினைக்க தோனுச்சு...:)
உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்துகாகவும் நான் வேண்டிகிட்டேன் :))

Lalitha Mittal said...

ilwk,
thank you for offering prayers to psp on my family's behalf.so sweet of you to have remembered me at that time.

Lalitha Mittal said...

சிவமுருகன்,சுந்தர காண்டம் என்று பேர் சொன்னாலே ஒரு பாசிடிவ் வைப்ரேஷன்
நம்ம மனசிலே கிளம்புதே;கவனிச்சீங்களா?

Lalitha Mittal said...

ந.நா .
சர்கம் என்றால் அத்யாயம் என்று பொருள் கொள்ளலாம்.
நண்ணினராம் என்பதை நெருங்கினார் என்று பொருள் கொள்ளலாம.

தமிழ் said...

ஆவ‌லுட‌ன்

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP