Sunday, March 06, 2011

கண்ணனாகக் கண்டால்



கண்ணனாக கண்டால் கல்லும் கமழ்ந்திடும்
மன்னவன் வடிவிற்கு நிகரில்லை மாரனும்..


வெண்ணை உண்டு உண்டு மேனி செழித்திடும் - அவன்
வண்ணத் திருமார்பை வண்டினம் மொய்த்திடும்
சின்னத் தனமனைத்தும் செய்து களித்திடும் - என்
கண்ணில் நீரைக் கண்டால் உள்ளம் குழைந்திடும்.
கண்ணனாக...


தண்ணிய வெண்ணிலவு மின்னிய கோபியர் - என
நன்னிய நாட்டியத்தில் நாட்டம் செலுத்திடும்
திண்ணிய மனமொன்றைக் கொண்டு திகழ்ந்திடும் - எனை
தன்னந் தனியனாய் வாட்டி மகிழ்ந்திடும்.
கண்ணனாக...

5 comments :

குமரன் (Kumaran) said...

சதகோடி மன்மத ரூபன் ஒரு மாரனுக்கு எப்படி நிகராவான்? இவன் திருமுகம் என்னும் தேனமுதம் காணக் காணத் தெவிட்டாமல் இருக்கிறதே!

Kavinaya said...

//கல்லும் கமழ்ந்திடும்//

நல்லாச் சொன்னீங்க, சங்கர் :) கண்ணன், கண்ணன்தான்!

Sankar said...

குமரன் அண்ணா மிகச் சரி!
கவிநயா அக்கா, கண்ணன் கண்ணன்தான் !

Radha said...

குணமே வடிவமாக அமைந்தால் ஆராவமுது தான். கவிதை அருமையாக இருக்கிறது என்று சொல்லவும் வேண்டுமோ?

Sankar said...

ராதா அண்ணா.. மிக்க நன்றி !! :)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP