Tuesday, March 01, 2011

கண்ணன் தூணில் இருக்கிறானா? துரும்பில் இருக்கிறானா?


கண்ணன் எங்கே இருக்கிறான்? தூணில் இருக்கிறானா? துரும்பில் இருக்கிறானா?

இருங்க இருங்க. இந்த வசனம் கண்ணன் அவதாரத்தில் இல்லையே? அது ரொம்ப முன்னாடி நரசிம்ம அவதாரத்திலேயே வந்த வசனமாச்சே?

பின்னே. யாரு இப்படி கேட்டாங்க?

ஒரு வேளை யசோதா கேட்டாங்களா? நந்தகோபர்?

அட, யார் கேட்டா என்னப்பா? பதில் சொல்லுங்க.

கண்ணனோ, நரசிம்மனோ - இருவரும் (ஒருவரே!) எல்லா இடத்திலும்தானே இருக்காங்க.

அவங்க இல்லாத இடம்னு ஏதாவது இருக்கா?

எதிலும் இங்கு இருப்பான், அவன் யாரோன்னு பாடியிருக்காங்களே.

அப்போ, இந்த கேள்வி கேட்டது யாருப்பா? சொல்லப் போறீங்களா இல்லையா?

அது வேறெ யாருமில்லே. நம்ம புரந்தர தாஸர்தான்.

என்ன? சந்தேகமா? தாஸருக்கா?

நமக்குத்தான் கஷ்டமான நேரங்களில் பகவான் இருக்கானா இல்லையான்னு தோணும்.

ஆனா, அனைத்தும் அறிந்த ஞானியான தாஸருக்கும் அந்த சந்தேகம் வந்துடுச்சா?

அதுதான் கிடையாது.

அவர் கேள்விகள் கேட்பது நமக்காக.

அவர் பதில்கள் சொல்வது நமக்காக.

அவருக்கு சந்தேகம் வர்றது நமக்காக.

அதுக்கு அவரே விளக்கங்கள் கொடுப்பது நமக்காக.

கண்ணன் எங்கே இருக்கிறான்? அவனைப் பார்த்தீர்களா? என்று கேட்பது போல் கேட்டு, அதற்குண்டான பதிலையும் அவரே கொடுக்கிறார் - இந்த அழகான பாடலில்.

இப்போ பாடல்.


****

பிள்ளங்கோவிய செலுவ கிருஷ்ணன எல்லி நோடிதிரி
ரங்கன எல்லி நோடிதிரி


குழலூதிக்கொண்டு நின்றிருக்கும் கிருஷ்ணனை
எங்கு பார்த்தீர்கள்?
ரங்கனை, எங்கு பார்த்தீர்கள்?

எல்லி நோடிதரல்லி தானில்ல
தில்லவெந்து பல்லே ஜானர (பிள்ளங்கோவிய)


வெறும் கண்களால் எங்கு பார்த்தாலும் கிடைக்காத கிருஷ்ணன்
(பக்தியுடன் பார்த்தால் எங்குமே இருப்பான்) என்று அறிந்த மக்களே (பிள்ளங்கோவிய)

நந்தகோபன மந்திரங்கள சந்து கொந்தினல்லி
சந்த சந்தத கோப பாலர விருந்த விருந்ததல்லி
சுந்தராங்கத சுந்தரியர ஹிந்து முந்தினல்லி
அந்தகாகள கந்த கருகள மந்தே மந்தேயல்லி (பிள்ளங்கோவிய)


நந்தகோபரின் கோயில்களின் அக்கம் பக்கத்தில்
கோபாலத்து சிறுவர்களின் தோட்டங்களில்
அழகான கோபியர்களின் முன்னும் பின்னும்
ஆயர்பாடியின் கன்றுகளின் மந்தையின் நடுவில் (பிள்ளங்கோவிய)

ஸ்ரீ குருக்த சதா சுமங்கள யோக யோகதல்லி
ஆகமார்த்ததொளகே மாடுவ யாக யாகதல்லி
ஸ்ரீகே பாக்ய நாஷ வார்த்திப போக போகதல்லி
பாகவதரு சதா பாகி பாடுத ராகதல்லி (பிள்ளங்கோவிய)


குரு மற்றும் சத்பக்தர்கள் கூடும் இடங்களில்
ஆத்மார்த்த பக்தியுடன் செய்யப்படும் யாகசாலைகளில்
(நமக்குள் கொழுந்து விட்டு எரியும்) ஆசைகளை எரிக்கும் வத்தியாய் (wick) நம் மனதில்
பாகவதர்கள் எப்போதும் (கிருஷ்ணனை) புகழ்ந்து பாடும் ராகங்களில் (பிள்ளங்கோவிய)

ஈ சராசரதொளகே ஜனங்கள ஆசே ஈசெயல்லி
கேசரேந்த்ரன சுதன ரதத அச்ச பீடதல்லி
நாசதே மாதவ கேசவ எம்ப வாச கண்களல்லி
பிச்சுகொண்டத புரந்தர விட்டலன லோசனாக்ரதல்லி (பிள்ளங்கோவிய)


உலகத்து மக்களின் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டு (இருக்கிறான்)
இந்திரனின் புதல்வனான அர்ச்சுனனின் தேரில் இருக்கிறான்
மாதவா, கேசவா என்று அன்புடன் குதித்து பாடும் பக்தனின் பேச்சில் மற்றும் கண்களில்
புரந்தர விட்டலா என்றழைக்கும் பக்தனின் விழியோரத்தில் (பிள்ளங்கோவிய)

*****

கண்ணன் ஆயர்பாடியில் இருக்கிறான் என்று ஆரம்பித்த தாஸர், கடைசியில், மாதவா, கேசவா என்று சொல்லிக் கொண்டே இருங்கள், உங்கள் மனதில், பேச்சில், கண்களில் என்று உங்களுக்குள்ளேயே, உங்களுடனேயே இருப்பான், வேறெங்கும் தேடவேண்டியதேயில்லை என்று அழகாக முடிக்கிறார்.

***

இந்த பாடலைப் வித்யாபூஷணர் பாடியுள்ள காணொளி இங்கே. (இரண்டாம் சரணத்தை பாடவில்லை இவர். முதலாம் மற்றும் மூன்றாம் சரணத்தை மட்டும் கேட்போம்).



***

16 comments :

Radha said...

//மாதவா, கேசவா என்று அன்புடன் குதித்து பாடும் பக்தனின் பேச்சில் மற்றும் கண்களில்
புரந்தர விட்டலா என்றழைக்கும் பக்தனின் விழியோரத்தில் //
அருமை அருமை.

Radha said...

//ஆசைகளை எரிக்கும் வத்தியாய் (wick) நம் மனதில் //
"என் பக்தன் மனதில் நான் நித்ய வாசம் செய்வதால் அவன் ஆசைகள் அனைத்தும் நாசமடைகின்றன" என்று ஸ்ரீ பாகவதத்தில் கண்ணன் உரைத்தது நினைவிற்கு வருகிறது.
புரந்தரதாசர் திருவடிகளே சரணம் .

Radha said...

//இந்த பாடலைப் வித்யாபூஷணர் பாடியுள்ள காணொளி //
அறிமுகத்திற்கு நன்றி. :-)

நாடி நாடி நரசிங்கா! said...

ஆசைகளை எரிக்கும் வத்தியாய் (wick) நம் மனதில் ..---
"என் பக்தன் மனதில் நான் நித்ய வாசம் செய்வதால் அவன் ஆசைகள் அனைத்தும் நாசமடைகின்றன

ஆஹா அருமை அருமை நன்றி நன்றி

நாடி நாடி நரசிங்கா! said...

ஆசைகளை எரிக்கும் வத்தியாய் (wick) நம் மனதில் ..---
"என் பக்தன் மனதில் நான் நித்ய வாசம் செய்வதால் அவன் ஆசைகள் அனைத்தும் நாசமடைகின்றன. //

yes. but

இதை படிச்சவுடன் ஒரு சம்பவம் நினைவுக்கு வருது போடலாமா!

சில வருசத்து முன்னாடி teamoda சேர்ந்து ஷோளிங்குர் கோயிலுக்கு போனோம் . குருசாமி எல்லார்கிட்டயும் ஒரு கேள்வி கேட்டார்

நாட்டுல எல்லா நோய்க்கும் மருந்து கண்டுபிடிச்சிட்டான் . ஒரு சில புதுசா வர நோய்க்கும் மருந்து கண்டு படிசிடுவாய்ங்க! ஆனால் ஒரு நோய்க்கு மட்டும் எவனாலயும் மருந்து கண்டுபிடிக்க முடியாது!
அது எந்த நோய்! என்ன மருந்து . இதுதான் கேள்வி
எல்லாரும் பே! பே! என்று முழிக்க, நானும்தான்.
அப்போ நான் ரொம்ப ரொம்ப சின்ன பையன் .
இப்ப ரொம்ப சின்ன பையன் .

கொஞ்ச நேரம் கழிச்சி அவரே பதிலு சொல்லிட்டாரு!
பிறவி என்னும் நோய்க்கு மருந்து எம்பெருமானே என்று


எருது கொடி உடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவார் இல்லை
மருத்துவன் ஆய் நின்ற மா மணி வண்ணா மறு பிறவி தவிர
திருத்தி உன் கோயில் கடை புக பெய் திருமாலிருஞ்சோலை எந்தாய்!

தி. ரா. ச.(T.R.C.) said...

கண்ணன் ஆயர்பாடியில் இருக்கிறான் என்று ஆரம்பித்த தாஸர், கடைசியில், மாதவா, கேசவா என்று சொல்லிக் கொண்டே இருங்கள், உங்கள் மனதில், பேச்சில், கண்களில் என்று உங்களுக்குள்ளேயே, உங்களுடனேயே இருப்பான், வேறெங்கும் தேடவேண்டியதேயில்லை என்று அழகாக முடிக்கிறார்.
அழகான பாடல் அதற்கு அர்த்தத்தோடு விளக்கமும் அருமை.கடந்தவாரம் உடுப்பி கோவிலுக்கு சென்று கண்ணனின் தரிசனம் கிட்டியது . வைர அலங்காரத்துடன் மனதைக் கொள்ளை கொண்டான். வர மனமே இல்லை.இந்தப் பாடலுடன் சேர்த்துப் பாக்கும் போதுதான் இன்னும் இனிமையாக இருக்கிறது. நன்றி

சின்னப் பையன் said...

@ராதாஜி -> அட்டகாசமா பாகவத வசனத்தை ஒப்பிட்டீங்க.
வித்யாபூஷணர் நிறைய அருமையா பாடியிருக்காரு. கேட்டுப் பாருங்க.

@ராஜேஷ்ஜி -> //பிறவி என்னும் நோய்க்கு மருந்து எம்பெருமானே// கண்டிப்பா.
தாஸரும் இதை நிறைய பாடல்களில் வலியுறுத்தியிருக்காரு.

@திராசஜி -> ஆஹா. உடுப்பி போயிருந்தீங்களா. சூப்பர். நாங்க 8 வருடங்களுக்கு முன் போய் 3 நாட்கள் இருந்தது நினைவுக்கு வருது. பாலகிருஷ்ணன் இன்னும் கண்களிலேயே இருக்கிறான்.

Kavinaya said...

//வர் கேள்விகள் கேட்பது நமக்காக.
அவர் பதில்கள் சொல்வது நமக்காக.
அவருக்கு சந்தேகம் வர்றது நமக்காக.
அதுக்கு அவரே விளக்கங்கள் கொடுப்பது நமக்காக.//

நல்லாச் சொன்னீங்க. அழகான முன்னுரையுடன் பாடலை அருமையாகத் தமிழில் தந்தமைக்கும் மிக்க நன்றி.

Unknown said...

//பக்தனின் விழியோரத்தில் // ஒளிஞ்சிட்டுருக்கான்னு தெரியும். பொல்லாதவன்!:-)

பாட்டு ரொம்ப அழகு, அதுக்கான பில்டப்பும் சென்னாகி இத்தே. நன்றி!

குமரன் (Kumaran) said...

அருமையான பாடல். எங்களுக்காக மொழிபெயர்ப்பில் கொஞ்சம் எளிமைப்படுத்திட்டீங்களோ?

சந்து கொந்தினல்லி, மந்தெ மந்தெயல்லி போன்ற இடங்களில் கொஞ்சம் எளிமைப்படுத்திவிட்டது போல் தோன்றுகிறது.

பொருளுடன் படிக்கும் போது புரியாத மொழிகளும் புரிந்துவிடும் மாயம் என்ன? அது ச்சின்னப்பையன் கண்ணனின் மாயம் தான் போலும்! :-)

தமிழ் said...

அருமை

பலமுறை கேட்டு மகிழ்ந்த பாடல்

Lalitha Mittal said...

கணினி வேலைநிறுத்தம் செய்து காலைவாரியதால் லேட்டாயிடுத்து.இதோ என் [ஆஸ் யூசுவல்] தமிழ் வெர்ஷன் ..அதே மெட்டில் பாடிப் பார்க்கலாம்!

வேய்ங்குழலூதும் மாயக்கண்ணனை
எங்கேனும் கண்டீரா?-ரங்கனை ,,,,,,,,,,,,,,,,,,,,?

வேற்று விழியாலே காணக்கிடைக்காதவன்,
பக்தர்க்கு எங்கணும்
தெரிவானென்றறிந்தோரே !

1)நந்தகோபனின் ஆலயங்களின் சந்துபொந்துகளிலே,

கன்றுகூட்டத்தை
மேய்த்திடும் ஆயச்
சிறுவரின்தோட்டத்திலே,

சிந்தைகவர் கோபிக் கன்னியர்களின் முன்னாலோ பின்னாலோ,

மந்தையாய் ஆயரைப்
பின்தொடரும் கன்றுக்
கூட்டத்தின் மத்தியிலோ,

2 )சத்குருவும் சத்ஜனங்களும் கூடிடும் இடங்களிலே,

உத்தமபக்தர்கள் வேதமோதும் யாகச்சாலையிலே,

இச்சைகளைச் சுட்டுப்
பொசுக்கிடுந்தீ
வத்தியாய் நம்முள்ளே,

விட்டலனைப்பாடும் பாகவதரின் துதிகளின்ராகத்திலே.

3)ஆசைகள் நிறைந்த மானுடனின் ஆசா
பாசத்துக்கப்பாலாய்,

போர்க்களத்தினில்
வாசவன்மகனாம்
பார்த்தனின் தேரினிலே

உன்னைப்பாடியாடிடுவோரின் வாக்கிலே,நோக்கினிலே

புரந்தரவிட்டலனை
பக்தியாய் அழைப்போரின்
கடைக்கண்ணோரத்திலே.

Lalitha Mittal said...

'வேற்றுவிழி' என்பதை 'வெற்று'விழி என்று
படிக்கவும் ;அவசரத்தில் சரியாக்க மறந்து விட்டேன்.

நாடி நாடி நரசிங்கா! said...

இவ்ளோ அழகா கீர்த்தனைகள் சொல்றாரே!
நாயக்கரை புரந்தரதாசராகிய நம்ம பாண்டுரங்கன்

ஸ்ரீனிவாஸ நாயக்கன் புரந்தரதாஸனாக மாறிய கதை

சின்னப் பையன் said...

@கவி நயா -> அழகான கண்ணனை பாடும் பாடல் அழகாய்த்தானே இருக்கும்.. :-)

@கெக்கே பிக்குணி -> //சென்னாகி இத்தே// நிம்ம சந்தோஷா நம்ம சந்தோஷா..

@குமரன் -> ஆஹா. 'சந்து' குறித்து தனியா எழுதனும்னு நினைச்சி விட்டுட்டேன். நீங்க சொன்னதைப் பார்த்துதான் தெரியுது..

@திகழ் -> அப்போ வித்யாபூஷணரின் மற்ற பாடல்களையும் கேட்டிருப்பீங்கதானே.

Sankar said...

நன்றி அண்ணா. இன்றே இப்பாடலின் பொருள் விளங்கியது.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP