Friday, February 11, 2011

வரதனை நினைதொறும்...




எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !

யது வீரனை நந்த குமாரனை நினைந்து
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !
மலரே இருவிழி பங்கஜ மலரே திருமுகமும்
மலரே இருகரம் தாமரை மலரே திருவடிகள் !
மந்தஹாசமும் தவழ்ந்த சுந்தர முகாரவிந்தம் நினைந்து
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !

அன்னை தந்தை பதியும் அவன் !
அருந்துணை நவநிதியும் அவன் !
இன்பமும் அழகும் அவனே - என்
இன்பமும் அழகும் அவனே !
எழில் தரும் அணி பணி பவனே ! 
மீரா ப்ரபு கிரிதர கோபாலனை வரதனை நினைதொறும்
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !


டிஸ்கி: இது ஓர் மீள் பதிவு. பக்த மீரா படத்தில் இடம்பெறும் மேலே உள்ள அற்புதமான பாடலை நம் குமரன் ஏற்கனவே பதிந்து விட்டார். இருந்தாலும் சில பாடல்களை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். :-) 

பாடலை இங்கே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.  

12 comments:

  1. Thanks Radha.. :) One of my favo song. :)

    ReplyDelete
  2. இரண்டு முறை கேட்டேன் இராதா இன்று. :-)

    ReplyDelete
  3. @sankar,
    i too like this song very much...this beautiful melody is in my all time favos list. :-)

    ReplyDelete
  4. //இரண்டு முறை கேட்டேன் இராதா இன்று. :-) //
    குமரன்,
    "இன்று மட்டும்" என்று சேர்த்துக் கொண்டேன். :-) காஞ்சி வரதராஜரின் முகத்தைப் பார்த்தால் கவலை எல்லாம் பறந்துவிடுகின்றன. :-)

    ReplyDelete
  5. @Radha: nice :)
    Varadar-um romba nice! :))

    ReplyDelete
  6. காபாடுராரா நன்னு கரி வராத ராஜா!
    முதல் வரதர் படமே அற்புதம்
    --
    எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !
    எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !

    வரிகளை படித்ததும் உள்ளம் நிறைந்தது
    --

    பாடலை இங்கே டவுன்லோட் செய்து கொள்ளலாம். :))
    ஓகே
    --

    ReplyDelete
  7. தேனாய் தித்திக்கிறது பாட்டு..வரதனை நாம் சேவிக்கப்போனோமே ராதா அது நினைவிற்கு வந்தது!

    ReplyDelete
  8. நன்றி ராஜேஷ். வரதர் - புன்னகை மன்னன். :-)

    ReplyDelete
  9. @ilwk,
    yes. varadhar is always nice ! :-)
    [ with the exams so near...were you taking a break by visiting kannan songs? :-) ]

    ReplyDelete
  10. ஷைலஜா அக்கா,தேனே தான். :-) இந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை.

    ReplyDelete
  11. //இருந்தாலும் சில பாடல்களை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். :-) //

    ரொம்ப சரி, ராதா. அழகான படங்களுடன், அவனைப் போலவே அழகு மிகுந்த பாடல். மிக்க நன்றி தம்பீ!

    ReplyDelete