Tuesday, January 04, 2011

பேராசைக் கண்ணன்!

கோதையின் நிலையைக் கண்டு பெரியாழ்வாரின் உள்ளம் துவள்கிறது. அவளுக்கு எப்படி உற்சாகம் ஊட்டுவது என்று யோசிக்கிறார்.

“கோதை… அம்மா கோதை…”

தூணின் மேல் சாய்ந்து கொண்டு ஏதோ ஒரு உலகத்தில் இருந்தவளின் விழிகள், மெதுவாகத் திரும்பி அவரை நோக்குகின்றன.

“கூப்பிட்டீர்களா அப்பா?”

“ஆம் அம்மா. அப்படி என்னம்மா யோசனை, நான் உள்ளே நுழைந்தது கூடத் தெரியாமல்?”

அவளுடைய செவ்விதழ்கள் புன்னகையில் நெளிகின்றன, இலேசாக.

“எனக்கு வேறென்னப்பா யோசனை இருக்கப் போகிறது? தெரியாதது போல் கேட்கிறீர்களே?”

“இல்லையம்மா… உன் தோழிகள் வந்து சென்றார்களே… அவர்கள் கூட உன்னை எங்கோ கூப்பிட்டார்கள் போல் தெரிந்தது. நீ போயிருப்பாய் என்று நினைத்துக் கொண்டே வந்தேன்.”

“ஆம் அப்பா. அவர்கள் எல்லாம் ஆற்றுக்குப் போய் குளித்து விட்டு, அருகிலிருக்கும் நந்தவனத்தில் விளையாடப் போகிறார்களாம். என்னையும் கூப்பிட்டார்கள்.”

“போயிருக்கலாமே அம்மா. இங்கே தனியாக உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறாய்?”

“போங்கள் அப்பா. அவர்களெல்லாம் எந்தக் கவலையும் இல்லாதவர்கள், உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கிறார்கள். என் நிலை அப்படியா? என்னுடைய அந்தரங்கம் தெரிந்திருந்தும் நீங்கள் இப்படிக் கேட்பது நியாயமா அப்பா?”

மகளின் கண்களில் துளிர்க்கும் நீரைப் பார்த்ததும் பதறி விட்டார், தந்தை.

முற்றத்தின் வழியாக சத்தமின்றி நுழைந்த தென்றல், அவள் கூந்தலை அன்புடன் கோதி விடுகிறது, அவரை முந்திக் கொண்டு.

“நீ எப்போதும் இப்படி சோகத்திலேயே இருப்பதை என்னால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை அம்மா”

“என்னப்பா செய்யட்டும்? ஆனந்தமாக ஆடிப்பாடிக் களிக்க எனக்கும் ஆசைதான். அந்த ரங்கன் மட்டும் வந்து விட்டால்…”, விழியில் நீருடன் இப்போது கனவும் கோர்த்துக் கொள்கிறது.

“அவன் நிச்சயம் வருவானம்மா. சந்தேகமே இல்லை!”

“ஆனால் எப்போது?” கோதையின் குரல், அவளின் இயலாமையைப் பிரதிபலிக்கும் வண்ணம் சற்றே தழுதழுக்கிறது.

“நீ சூடிக் கொடுத்த மாலைதான் வேண்டுமென்கிறான். அதிலிருந்தே தெரியவில்லையா, அவன் உன்மீது அன்பு கொண்டிருப்பது?”


“அப்படிச் சொல்பவன் ஏன் என்னிடம் முகம் காட்ட மறுக்க வேண்டும்?”

“அங்குதான் இருக்கிறதாம்மா சூட்சுமம்”

“அப்படி என்னப்பா சூட்சுமம்?”

“நீ ஏன் உன் தோழிகளுடன் விளையாடப் போகவில்லை? அதைச் சொல் முதலில்!”

“ஏனப்பா பேச்சை மாற்றுகிறீர்கள்?” செல்லமாகச் சிணுங்குகிறாள் கோதை.

“காரணம் இருக்கிறது; சொல்லம்மா…”

“எங்கு சென்றாலும் எதைச் செய்தாலும் அவன் நினைவு அதிகமாகிறது, அப்பா. அது என் மனதை அறுத்துப் பிழிகிறது”

மறுபடியும் மெல்ல மெல்ல அவன் நினைவில் ஆழத் துவங்கும் மகளின் எழில் வதனத்தை, கனிவுடன் பார்க்கிறார் தந்தை.

விழிகள் ஏதோ ஒரு கிறக்கத்தில் செருகியிருக்க, இதழ்கள் எப்படியோ வார்த்தைகளைக் கண்டு பிடித்துப் பேசுகின்றன.

“ஆற்றில் விளையாடச் சென்றால், அவன் கோபியரின் ஆடைகளைக் களவாடி அவர்களுடன் கிரீடை செய்த நினைவு வருகிறது…”

“ம்…”, மகள் பேசுவதைச் செவிமடுத்த வண்ணம், திண்ணையின் மீது அமர்ந்து கொள்கிறார், அவர்.

“மலைச்சாரலில் பூத்திருக்கும் கருங்குவளை மலர்களைக் கண்டால் அவனுடைய மேனியின் நிறம் கண்முன்னே தோன்றுகிறது…”

“சரிதான்…”

“மழை பொழியத் தயாராக சூல் கொண்டிருக்கும் மேகங்களைக் கண்டால், ஒரே கோபமாக வருகிறது!”

“ஏனம்மா அப்படி?”

“பின்னே என்னப்பா? அவன் வண்ணத்தைப் பூசிக் கொள்ள அவற்றுக்கு என்ன உரிமை இருக்கிறதாம்?”

“சரியாகச் சொன்னாய், தாயே!”

“குயிலின் கீதம் கேட்டால் அவன் இதழைச் சுவைத்துக் கொண்டிருக்கும் குழலின் நினைவு வருகிறது”

“அடேயப்பா! அப்புறம்…?”

“மயிலின் ஆட்டம் கண்டால் அவன் ஆயர்குலச் சிறுவர்களுடன் சந்தோஷமாகத் துள்ளித் திரிவதும், கோபிகளுடன் ஆடிப்பாடி மகிழும் காட்சியும் கண்முன்னே விரிகிறது”

”…..!”


“அதுமட்டுமல்ல. நந்தவனத்தில் வரிசையாகப் பூத்துக் குலுங்கும் முல்லை மலர்களைக் கண்டால், அவையெல்லாம் சேர்ந்து, என் நிலை கண்டு பல் தெரியச் சிரித்து என்னைப் பலவிதமாக ஏளனம் செய்வது போல் தோன்றுகிறதப்பா. அதனால்தான் அவன் நினைவுகளைத் தூண்டும் இடங்களுக்குப் போக எனக்குப் பிடிக்கவே இல்லை!”

குழந்தையைப் போன்ற பிடிவாதம், கோதையின் குரலில்.

“கோதை… இப்படி வா அம்மா”

தந்தையின் அருகில் வந்து, அவர் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொள்கிறாள். பெரியாழ்வார் அவள் தலையை பரிவுடன் வருடி விடுகிறார்.

“உன் நிலை எனக்கு நன்றாகப் புரிகிறதம்மா. ஆனால் நீ தோழியருடன் போகா விட்டால் மட்டும் என்ன? இங்கேயே இருந்த போதும், அவன் நினைவுடனே தானே இருக்கிறாய்?”

கோதையின் அழகிய கன்னங்கள், நாணத்தால் சற்றே சிவக்கின்றன.

“அத்துடன் நீ சொல்வதையெல்லாம் பார்க்கும் போது அவன் உள்ள உகப்பு என்ன என்று எனக்கு நன்றாகப் புரிகிறதம்மா”

“என்னப்பா அவன் உள்ள உகப்பு? என்னை இப்படி பிரிவாற்றாமையால் துன்புறச் செய்வதுதான் அவனுக்கு இன்பமா?”

பாவம் கோதை... அந்தக் கள்வன் மேல் கோபம் கொள்ள நினைத்தாலும் முடியவில்லை, அவளால்.

“அது இல்லை அம்மா. அவனுக்கான உன் அன்பு வளர்ந்து கொண்டே போக வேண்டுமென்பதுதான் அவன் விருப்பம். அதனால்தான் உன்னைப் பிரிந்தே இருக்கிறான்.”

தந்தையின் சொற்கள் அவள் ஆவலைத் தூண்டி விடுகின்றன. எழுந்து அமர்ந்து கொண்டு, அவர் சொல்வதை ஆர்வத்துடன் கவனிக்கிறாள்.

“அவனைப் பிரிந்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவனையே நினைக்கிறாய். காணுகின்ற பொருள் எல்லாவற்றிலும் அவனையே காண்கிறாய். ஒவ்வொரு சுவாசத்திலும் அவன் பெயரையே உச்சரிக்கிறாய். இப்படிச் செய்யச் செய்ய உனக்கு அவன் மீதான அன்பும் பிரேமையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன அல்லவா? அதனால்தான் சொல்கிறேன், உன் அன்பு முழுவதற்கும் தான் ஒருவனே சொந்தக்காரனாக வேண்டுமென்ற பேராசையம்மா, அந்தக் கள்வனுக்கு! அதனால்தான் உன் அன்பை வளர விட்டு வேடிக்கை பார்க்கிறான்!”

தந்தை சொன்ன விஷயம் சொல்ல முடியாத ஆனந்தத்தைத் தருகிறது, கோதைக்கு. சிறு குழந்தை போல் கை கொட்டிக் கலகலவென்று சிரிக்கிறாள். கண்ணீர்த் துளிகளுடன் சேர்ந்த அவளுடைய சந்தோஷ வதனம், பனித்துளிகளை ஏந்திய செந்தாமரை மலர் போலத் துலங்குகிறது.

“நீங்கள் சொன்னதைக் கேட்ட பின், எனக்கு பிரிவே பிடித்து விடும் போல் இருக்கிறது அப்பா!”

--கவிநயா

48 comments :

In Love With Krishna said...

aandal thiruvadigale saranam!!

In Love With Krishna said...

@kavinaya aunty:
ippo dhaan thirupaavai ellam solli (inikku konjam late ayiduchu), avarukku pongal ellam saapida kuduthuttu vandhaal indha post!
aandal-e ennai koopittu pesiyadhu pol! thanks :)

btw, pongal-il uppu poda marandhutten. :)) nalla whistle vandhadharkku apram dhaan i realized! apram enna? ore pongal-ai two times ponga vitten! (enga ammakku therinja idhu kooda panna theriyadha-nnu kathuvaanga... :)) )

so ennai thitikonde seydha pongal,
andha idiot kalvanukku romba dhaan pidichurindhudhu!! (avarukku pidikaatho-nnu romba bayandhen)

in between i thought i'll just throw the whole thing down the sink, but in the end it tasted like PSP koil temple (my mom said!)
:))

In Love With Krishna said...

coming back to the post, beautiful! beautiful! beautiful!
no other words, aunty!
kalakkiteenga!!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//“எங்கு சென்றாலும் எதைச் செய்தாலும் அவன் நினைவு அதிகமாகிறது, அப்பா. அது என் மனதை அறுத்துப் பிழிகிறது”//

என் மனத்தையும் தான்! :(
இப்போது இந்தியா போய் வந்த பின் இன்னும் அதிகமாகி விட்டது! Home sick??

In Love With Krishna said...

//என்னை இப்படி பிரிவாற்றாமையால் துன்புறச் செய்வதுதான் அவனுக்கு இன்பமா?”//

:(((

//ஆம் அப்பா. அவர்கள் எல்லாம் ஆற்றுக்குப் போய் குளித்து விட்டு, அருகிலிருக்கும் நந்தவனத்தில் விளையாடப் போகிறார்களாம். என்னையும் கூப்பிட்டார்கள்.”//

Yes. Girls ellam onna serndhaal edhai pathi pesuvaanga???
"en aal ippadi", "en bf enakku indha gift vaangikuduthaan" "en mr. x-um naanum engalaam suthinom theriyuma?" "en aal nadakkum style-e thani dhaan" "naanga inikku evening dating porom!"
ippadi pogum andha conversation...

"fickle love"-kke ekkachakkama build-up kodupaanga some girls...
inge kothai kannan-idam than-aiye kuduthutaanga...
aanal andha kannan oru naal "Dating" va da-nnu koopitta varuvaana?
oru naal unnudan utkaandhu pesanum-nu koopitta vandhaana?

seri, idhai ellam vidunga...avan enakku ivvalavu azhaga kanavil kaatchi thandhaan-nnu sonnal kooda, He is the eternal truth, but that would be but a "Dream" in this "dream called reality!

avargalai pol azhaga kathai kathaiya solla mudiyathe kothai? ange, avanga manadhil irundhadhellam sogamum, pirivum dhaan...

ippadi friends ellam serndhu verupethuvvanga-nnu, than sogam en avargal-udaya happiness-ai kedukkanum-nnu dhaan kothai pogavilaiyo ennavo...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஆனால் நீ தோழியருடன் போகா விட்டால் மட்டும் என்ன? இங்கேயே இருந்த போதும், அவன் நினைவுடனே தானே இருக்கிறாய்?//

ஆமாம்-ல்ல? இது ஏன், என் மரமண்டைக்கு எப்பமே புரிய மாட்டேங்குது? :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நீங்கள் சொன்னதைக் கேட்ட பின், எனக்கு பிரிவே பிடித்து விடும் போல் இருக்கிறது அப்பா!”//

நீங்கள் சொன்னதைக் கேட்ட பின், எனக்கும் பிரிவே பிடித்து விடும் போல் இருக்கிறது அக்கா!

In Love With Krishna said...

@KRS:
///ஆனால் நீ தோழியருடன் போகா விட்டால் மட்டும் என்ன? இங்கேயே இருந்த போதும், அவன் நினைவுடனே தானே இருக்கிறாய்?////
ஆமாம்-ல்ல? இது ஏன், என் மரமண்டைக்கு எப்பமே புரிய மாட்டேங்குது? :)//

maramandai neenga dhaan kothai-yai sonnadhukku...
girls-ai purinjikka maatengreenga...
pls. see my comment!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//in between i thought i'll just throw the whole thing down the sink, but in the end it tasted like PSP koil temple (my mom said!)//

Too bad KK
For kaNdu aruLa paNNal = 1st arangan
For uNdu aruLa paNNal = 1st adiyaargaL, then arangan!
Gimme my share of the pongal, right now :)

In Love With Krishna said...

//Too bad KK
For kaNdu aruLa paNNal = 1st arangan
For uNdu aruLa paNNal = 1st adiyaargaL, then arangan!
Gimme my share of the pongal, right now :)//

i'll give you pongal after shailaja aunty gives us my.pa... :))
my. pa, my.pa -nnu solli "my paa"vam manadhai alaya viduraanga!

In Love With Krishna said...

//நீங்கள் சொன்னதைக் கேட்ட பின், எனக்கும் பிரிவே பிடித்து விடும் போல் இருக்கிறது அக்கா!//

adhu eppadi mr.homesick??

When thinking of Him is so sweet,
when just imagining His form is so exhilirating,
When just imagining spending time with him is so beautiful....
......,
think what it will be like if it REALLY happened??

-----
haiyyo!! i am thinking!
psp! will you think, please?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ippadi friends ellam serndhu verupethuvvanga-nnu, than sogam en avargal-udaya happiness-ai kedukkanum-nnu dhaan kothai pogavilaiyo ennavo...//

:)
not only that...one more reason...she told her utRa thOzhan krs!

//maramandai neenga dhaan kothai-yai sonnadhukku...//

he he...
naan my thOzhi-yai chollala...ennai thaan chonnen...
murugan-ai ninaiikave koodathu-nu thaan will not go to temple when friends call...but, ninaikka koodaathu, ninaikka koodathu nu ninachi kitte iruppen! gosh! dee kOthai, u spread your poison into me also! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//girls-ai purinjikka maatengreenga...//

:)
appdiye konjam konjam purinji kittaalum, puriyaatha maathiri nadippOm :)
antha nadipil oru sugam irukke! antha nadipukku varum response irukke! aaha! :)

In Love With Krishna said...

@KRS:
//not only that...one more reason...she told her utRa thOzhan krs!//

neenga kothai kili endraal, yes..

avanga kaadhal-ai purinjikka avanga thozhigal-kku kandippa patirnce illai, en yaarukkum puriyaadhu andha kalvanidam kollum kaadhal, adhu paduthum paadu...

andha kili kitte dhaan solla mudiyum, bcoz it cannot think about anything else, all it has to think about is kothai's words...

In Love With Krishna said...

@KRS:
//antha nadipil oru sugam irukke! antha nadipukku varum response irukke! aaha! :)//

indha comment-kku reply when i come to u.s :))

In Love With Krishna said...

@KRS:
ok, bye, i gtg, english exam to write!
btw, speaking about english exam, i mostly write all my stuff on the paper indirectly referring to Him.
so, once, i had to tell KP something.
we have a "frame sentences using both british and american english equivalents" kinda question.
i had to address him, but i can't say ARANGA or ranganatha. i had already used "Krishna" and "kannan" and "Rama" and "mukund" and "govind in different places.
so, i found a new name for Him- RANGA DEV"
(it sounds like the name of a businessman, but only you and me know what the real meaning is) :))

Narasimmarin Naalaayiram said...

அந்தக் கள்வனுக்கு! அதனால்தான் உன் அன்பை வளர விட்டு வேடிக்கை பார்க்கிறான்!”:))

O! This is the reasanaa:)
sometimes he is doing games:)
but kannan ethu paanaalum ellaame nanmaikke:)

Narasimmarin Naalaayiram said...

In Love With Krishna said.
btw, pongal-il uppu poda marandhutten. :))

itha pongalu sappida migavum virumbubhavar namma oppliappan thaanunga:)

என்னப்பன் எனக்கு ஆயிகுளாய் என்னைப் பெற்றவளாய்,
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என் அப்பனுமாய்,
மின்னப்பொன் மதிள்சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த அப்பன்,
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள்நிழலே!

In Love With Krishna said...

//itha pongalu sappida migavum virumbubhavar namma oppliappan thaanunga:)//

even i thought of Him! :)
but, but..
illainga...
namma Perumal, nalla rusichhu rasichu prasadum sappidum Perumal, thaayar-kaga uppu saapida mattar!
Aanalum, adhai thaayar-kku daily solli kaamichu "unakkaga uppu illadhadhai kooda saapiduven"-nnu solla dhaan andha "oppiliyappan" thirukolam.
That prasadam does not have salt by His order.
But, when it is offered, it can't be like that :)

Narasimmarin Naalaayiram said...

@kk
Aanalum, adhai thaayar-kku daily solli kaamichu "unakkaga uppu illadhadhai kooda saapiduven"-nnu solla dhaan andha "oppiliyappan" thirukolam:))

perumaalin guname gunam:)

perumaalin gunam muzhuthum solla mudiyumaa nammaal ennee oru gunam:)


சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும்நீ*
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதிநீ*
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்*
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே?

கவிநயா said...

தாங்கிலம் படிச்சு பதில் இடறதுக்கு நேரமாகும் எனக்கு; வீட்டுக்கு போனாதான் முடியும் :) உப்பு மறந்த பொங்கல் பற்றி மட்டும்தான் படிச்சேன் கேகே :)

கண்ணா! ராஜேஷ்! நீங்களாச்சும் தமிழிலேயே எழுதக் கூடாதா? எல்லாரும் இந்த விஷயத்தில் கள்வனின் காதலியை பின்பற்ற ஆரம்பிச்சிட்டா போல இருக்கு! :)

In Love With Krishna said...

//சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும்நீ*
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதிநீ*
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்*
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே?//

@NPR:
Neenga unmayile KRS sonna NPR dhaan!!
Narayanan Public Radio!! :))

In Love With Krishna said...

@PSP Priyargal:
(@Kavinaya aunty: this is not related to your post, sorry)

idhu mr. radhamohan sollum "Arivina"- Quiz Question..

One person asked me this, naan "thiru thiru"-nnu mulichen!!
idhu kooda theriyalaya???-nnu oru vekkam vera... :))

Now, i am on an evil mission to find out my companions in lack of knowledge :))

PSP Koil-il----
1)namma VK, Thaayar kudumba sahitham
2)en PSP :))
3)Rrrranganathar!
4)Ramar
5)Ranganayaki Thaayar (Vedavalli)
6)Varadar
7)Azhagiya singar
8)Aandal
9) x
10) y
indha "X" and "Y" yaaru???
kandupidinga paarpom!! :))

P.S: Please, no one must escape saying acharya/alwar/anjaneyar name. Not acceptable!!

In Love With Krishna said...

//தாங்கிலம் படிச்சு பதில் இடறதுக்கு நேரமாகும் எனக்கு; வீட்டுக்கு போனாதான் முடியும் :) //
@Kavinaya aunty: Sorry, enakku thamizh ezhudha theriyaadhu.
Fast-aa padippen, padapada-nnu pesuven!! :))

That reminds me, there was once a drama in school. Tamil drama.
My Sanskrit teacher put my name in to the Tamil dept. and they were quite sceptical, but they decided to let me try, and have a laugh! :)
They were AMAZED when i was reading the script.
READING! FLAWLESS READING!! (almost)
So, i got the role anyway (lead), and you know what my make-up was??
Periya MEESAI!!! :))
Appadiye adhu yaaru madhiri irundhudhunnu neenga correct-aa guess pannunga!
Shailaja aunty "my.pa" "my.pa"-nnu comment pannuvaanga-that's your prize!! :))

Anonymous said...

//In Love With Krishna said...
//தாங்கிலம் படிச்சு பதில் இடறதுக்கு நேரமாகும் எனக்கு; வீட்டுக்கு போனாதான் முடியும் :) //
@Kavinaya aunty: Sorry, enakku thamizh ezhudha theriyaadhu.
Fast-aa padippen, padapada-nnu pesuven!! :))

That reminds me, there was once a drama in school. Tamil drama.
My Sanskrit teacher put my name in to the Tamil dept. and they were quite sceptical, but they decided to let me try, and have a laugh! :)
They were AMAZED when i was reading the script.
READING! FLAWLESS READING!! (almost)
So, i got the role anyway (lead), and you know what my make-up was??
Periya MEESAI!!! :))
Appadiye adhu yaaru madhiri irundhudhunnu neenga correct-aa guess pannunga!
Shailaja aunty "my.pa" "my.pa"-nnu comment pannuvaanga-that's your prize!! :))

9:51 AM, January 05, 2011

/// வரேன் வரென்!!! கேகே! இத்தனை குறும்பா உனக்கு?:)
ஷைலஜா

Anonymous said...

கவிநயாவின் பதிவு ஆண்டாளைப்போலவே அழகு! ஆழ்வாரின் பாசுரம்போலவே அருமை!

ஷைலஜா

(வலைப்பூ முகவரில பிரச்சினை ஆகவே இப்படி அனானியாக வந்தேன்:)

தக்குடு said...

அந்தரங்கம் எல்லாம் அந்த ரங்கன் அறிவான்நு அழகா சொல்லும் பதிவு!! படித்தேன்.... தேன்.... ரசித்தேன்!...:)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

x and y question sooperu :)
evil mission to find companions in lack of knowledge athai vida sooperu :)

I am one too, lack of knowledge, So lemme join the mission :)

In Love With Krishna said...

///// வரேன் வரென்!!! கேகே! இத்தனை குறும்பா உனக்கு?:)
ஷைலஜா//
:))))
pinna, enakku my.pa kudukkaamal neenga maatum eppo paarthaalum "my.pa" "my.pa"-nnu sollikitte irundhaa???

Aunty, naan kettadhu romba simple question. Periya meesai yaarai kurikkum-nu.
idhellam oru question, idhukku badhil solravangalukku vera oru "prize"-aa??
That's why unga comment-il "my.pa" prize! innum enga vidura prize! idhai pathi yaaravudhu kettangala??-nnu ketkavaikkum prize! :))
Really, if anyone knows/finds out the answer to my other question, unmayile real "my.pa" panni kuduthurunga!! :))

In Love With Krishna said...

//x and y question sooperu :)
evil mission to find companions in lack of knowledge athai vida sooperu :)

I am one too, lack of knowledge, So lemme join the mission :)//

ok, PSP-kku first proof..
what proof??
mr. know-it-all, endha question keaalum "answer-it-all"kku theriyala??
paavam, ungalaiye paartha enakku...

@KRS: Mission incomplete!
konjam waitings :))

In Love With Krishna said...

@KRS:
if you can, search for the answer, please do so and mail me.
Shailaja aunty will give "my.pa" to the winner it seems. :)))
Neenga shailaja aunty real "my.pa" kudupaanga-nnu ninaicheenga-nna effort eduthu answer thedunga! :))

@Shailaja aunty: manikkavum! :))
unga "my.pa" business, like i already said, is too much for "my pa"avam mind, and "my pa"avam tongue!!!

In Love With Krishna said...

@KRS:
btw,
//Hey Lord
I am not as greedy as ILWK :)

If itz too much to grant one loving smile...
Fine, Grant one "little" frown on me...
All I ask is, just cast yours on mine! //

let me be greedy...
avar azhagu mugathil "surukkam" paarkkavaa naam ellam panrom???

i am telling you out of personal experience, you are getting yourself into loads of trouble with that statement..
go see my reply...

Radha said...

dear all,
ராதா கொஞ்சம் பிசி (உண்மைய சொல்லனும்னா நிறையவே பிசி. :-)) கொஞ்ச நாள் கழிச்சி வரேன்.
@KK,
ரங்கநாதர் சன்னிதியில் உள்ளே வேற யார் எல்லாம் இருக்காங்கன்னு நிறைய பேருக்கு தெரியாதம்மா.
@கவிக்கா,
கடைசி வரி நெஞ்சை பிழிகிறது.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// Radha said...
dear all,
ராதா கொஞ்சம் பிசி (உண்மைய சொல்லனும்னா நிறையவே பிசி. :-)) கொஞ்ச நாள் கழிச்சி வரேன்//

என்னடா, மீண்டும் சொஜ்ஜி பஜ்ஜியா? :) வாழ்த்துக்கள்! :))

// @KK,
ரங்கநாதர் சன்னிதியில் உள்ளே வேற யார் எல்லாம் இருக்காங்கன்னு நிறைய பேருக்கு தெரியாதம்மா.//

தோடா! பில்டப்பைப் பாரு!

மன்னாதனின் சன்னிதியில் தலை மாட்டில் வராகப் பெருமாளும், கால் மாட்டில் ஆளரிப் பெருமாளும், நாங்கல்லாம் எட்டி எட்டிப் பார்க்க மாட்டோமா? கிட்டக்க கொஞ்சம் ஆரத்தி காட்டுங்க-ன்னு கேட்க மாட்டோமா? நாங்க என்ன, x = சக்கரைப் பொங்கல், y = மிளகு வடை-ன்னு சொல்லுவோம்-ன்னு நினைச்சியா? :) நாங்கல்லாம் எம்புட்டு நாளு மெட்ராசு! எம்புட்டு நாளு அல்லிக்கேணி கண்டேனே! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ச்சே, ஜாலியா, KK Mission-ல ஊர் சுத்தலாம்-ன்னு நினைச்சா, இந்த ராதா வந்து உசுப்பேத்தி விட்டுட்டான்! டேய், ஏன்டா இப்பிடி தூண்டி விடுற? விடையை நீயே நேரடியாச் சொல்லலாம்-ல்ல? :)

உம்ம்ம்..இன்னொரு Quiz Question! QQ! :)
அல்லிக்கேணியில் எந்தச் சன்னிதியில் மணிகளுக்கு எல்லாம் நாக்கே இருக்காது? சும்மானா மணி மட்டும் இருக்கும்?

கவிநயா said...

//Home sick??//

அவனுடைய 'home' னா அது உங்ககிட்டதானே இருக்கு? அப்புறம் என்ன 'sick'? :)

//நீங்கள் சொன்னதைக் கேட்ட பின், எனக்கும் பிரிவே பிடித்து விடும் போல் இருக்கிறது அக்கா!//

எப்படியாச்சும் சமாதானம் சொல்லணும்ல? அதான். convincing-ஆ இருக்கா? :)

கவிநயா said...

//
O! This is the reasanaa:)
sometimes he is doing games:)
but kannan ethu paanaalum ellaame nanmaikke:)//

நீங்க சொல்றது சரிதான், ராஜேஷ்.

//சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும்நீ*
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதிநீ*
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்*
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே?//

சூப்பர்!

கவிநயா said...

//@Kavinaya aunty: Sorry, enakku thamizh ezhudha theriyaadhu.//

எனக்கு தெரியுமே! அதனாலதான் உங்களை சொல்லலை. தம்பீஸை மட்டும் சொன்னேன் :)

//padapada-nnu pesuven!! :))//

அப்படின்னா நம்ம நல்ல combination தான் :) ஏன்னா நான் பேச...வே மாட்டேன் :)

//coming back to the post, beautiful! beautiful! beautiful!
no other words, aunty!
kalakkiteenga!!//

beautiful - அது அவள்தான், அவள் அன்புதான் - நம்ம கோதை! அதனாலதான் பதிவும் உங்களுக்கு அப்படி தெரியுது போல :)

உங்களோட அறிவினாவுக்கு அறிஞ்சவர்களே வந்து விடை சொல்லட்டும்! அதெல்லாம் சொல்லாமலேயே ஷை அக்கா எனக்கு மைபா கொடுப்பாங்க! :) இல்லக்கா?

கவிநயா said...

//நாங்கல்லாம் எட்டி எட்டிப் பார்க்க மாட்டோமா? கிட்டக்க கொஞ்சம் ஆரத்தி காட்டுங்க-ன்னு கேட்க மாட்டோமா?//

ராதா சொன்னது என்னை மாதிரி பேர்வழிகளை நினைச்சுதான் கண்ணா :)

கவிநயா said...

//கவிநயாவின் பதிவு ஆண்டாளைப்போலவே அழகு! ஆழ்வாரின் பாசுரம்போலவே அருமை!//

ஆகா. அவங்க கால் தூசுக்கு பெறுமா. ரசித்ததுக்கு நன்றி அக்கா.

கவிநயா said...

//@கவிக்கா,
கடைசி வரி நெஞ்சை பிழிகிறது.//

எனக்கும்தான் ராதா :(

அவ்ளோ பிசிலயும் வாசிச்சதுக்கு நன்றி தம்பி.

In Love With Krishna said...

@KRS: @Radha:
//ரங்கநாதர் சன்னிதியில் உள்ளே வேற யார் எல்லாம் இருக்காங்கன்னு நிறைய பேருக்கு தெரியாதம்மா.//
//மன்னாதனின் சன்னிதியில் தலை மாட்டில் வராகப் பெருமாளும், கால் மாட்டில் ஆளரிப் பெருமாளும், நாங்கல்லாம் எட்டி எட்டிப் பார்க்க மாட்டோமா? கிட்டக்க கொஞ்சம் ஆரத்தி காட்டுங்க-ன்னு கேட்க மாட்டோமா?//
:((
arivu jeevigal-kku NO COMMENTS!

In Love With Krishna said...

@PSP: @KP:
ivvalavu naal unga koil-kku vandhum, neenga enakku kaatikodukkaamal, ippadi vilaiyaaditeenga-la?
unga thiruvadi-yai unni-unni paarthen, unga face-ai rasithu rasithu paarthen, appadiyum en kannukku theriyaama maraichiteengle!!

ungalai enna pannalaam????

In Love With Krishna said...

@KRS: @Radha:
i wanted to give Him proof..
ippadi proof koduthadhukku romba thanks! (urghhh)
ungalai yaaru unni unni kettu vaangi aarthi edukka vaikka sonnaanga??
ungalai pondra arivu jeevigal irupadhaal en PSP kitta ippa thothu poyittten! :((

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@ KK
//:((
arivu jeevigal-kku NO COMMENTS!//

ஹா ஹா ஹா
ராதா - உன்னையத் தான் சொல்லுறாங்க KK! :)

நான் ஜீவி இல்லப்பா! மீ ஒன் அப்பாவிச் சிறுவன்! KK Evil Mission-இல் ஜாலியா சுத்தும் ஒரு Companion! :)
அதான் அப்பவே சொன்னேன்-ல்ல எனக்குத் தெரியாது, நான் உன் கூட மிஷன்-ல்ல சுத்துறேன்-ன்னு! :))

//@PSP: @KP:
ungalai enna pannalaam????//

ஓ...PSP-க்கே கண்ணன் பாட்டில் டைரக்ட்டா கமென்ட் போட்டாச்சா? சூப்பரு! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//@KRS: @Radha:
ungalai yaaru unni unni kettu vaangi aarthi edukka vaikka sonnaanga??//

ஹிஹி!
சென்னைக்குக் குடி பெயர்ந்து, முதல் முறை பார்த்தசாரதி கோயிலுக்குப் போகும் போது, ஏழாம் வகுப்பு பொடியன்! அங்குள்ள அரங்கன் சன்னிதியில், பச்சை மா மலை போல் மேனி பாசுரம் லைட்டா ஹம் பண்ணேன்! அப்போ தெரிஞ்ச பாசுரம் அது ஒன்னு தான்! :)

அதைக் கேட்ட பட்டர், குழந்த என்னமா சமத்தா சவுண்ட் விடறான்-ன்னு, அவராத் தான் சேவிச்சிக்கோங்க-ன்னு மறைவா இருந்த வராக-நரசிம்மரை introduce பண்ணாரு! அப்பறமாத் தான் எட்டிப் பாக்குறது பழக்கமாப் போச்சி!

இல்லீன்னா சைட்டுக்கும் சர்க்கரைப் பொங்கலுக்கும்ன்னே கோயிலுக்குப் போற எனக்கு எங்க இதெல்லாம் தெரிஞ்சிருக்கப் போவுது? :))

//PSP kitta ippa thothu poyittten! :((//

Dont worry KK! We will win!

Dai, PSP....See, KK is feeling, ozhungaa ava kitta next time thOthu pO! okay? or else kOthai kiLi naan, unnai kannathileye kothuvEn :)

In Love With Krishna said...

Aandal-kku ippo thirumanjanam-aam koil-il. :))
"ippodhemmai neeratellor empaavay!"
:))

In Love With Krishna said...

//Dont worry KK! We will win! //
:))
On a second thought...
no need, let Him win, always, forever...
i don't mind losing if it is to Him...
(if He loses, which that IDIOT never will, but if He does, i'll only feel bad)
C'mon PSP! This heart is lost to you!?
You are the weirdest ruler, still not fully claiming Your conquered territory! :))

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP