Sunday, December 26, 2010

கிளியே....குழறிக் குழறி அழைத்தாயோ?

என்னவோ எல்லாரும் அரங்கன் திருமால் ஆயிரம் நாமங்கள் ஆழ்வார்கள் ஆண்டாள் அப்படீன்னு மட்டுமே இங்க பேசிட்டே இருக்கீங்களே மார்கழில ஒரு மாசிலா ஜீவனை யாராவது நினச்சிப்பார்த்தீங்களா?! அது மட்டும் இல்லேன்னா அரங்கனாவது திருவரங்கக்கோயிலாவது!

அதை கே ஆர் எஸ் மறப்பார் ராதாவும் மறப்பார்! அதைத்தவிர பாக்கி எல்லாரையும் எல்லாத்தியும் பத்தி மார்கழில எழுதுவாங்க! நல்லவேளை ஆண்டாள் அதை தன்னோட ஒரு பாட்டுல கூவி அழைச்சா தோழியை அழைக்கிறமாதிரி! அதெப்படிங்க அழகான அதை மறக்கலாம்?

அழகா இருப்பதால்தான அதை ஆண்டாள் கையில் வச்சிருக்க்கா மீனாட்சியும் அதுக்கு இடம் கொடுத்திருக்கா! ஓ என்ன அதுன்னு கண்டுபிடிச்சிட்டீங்கதானே? ஆமாம் கிளிதான் அது!தத்தைன்னும் சொல்வாங்க தூயதமிழ்ல!

இடிந்த அரங்கன் கோயிலைத் தர்மவர்மனுக்கு கிளி தான் காட்டிக் கொடுத்தது! கிளி மண்டபம் அதனால்தான் அரங்கத்தில் இருக்கு முன்னெல்லாம் தூணுக்குத்தூண் கூண்டு கட்டி கிளிகளை அதில் அடைச்சிருப்பாங்க ரங்கா ரங்கான்னு ஜோரா கத்தும் அவையெல்லாம். இப்போ சில வருஷங்களா கிளிமண்டபம் மட்டும் இருக்கு கிளிகள் இல்லை.

சரி ஆண்டாளுக்கு கிளி ஏன்?

அந்த காலத்தில் உயர்குடிப்பெண்கள் எல்லோருமே கிளிகளை வளர்ப்பது ஒரு இனிய பொழுதுபோக்கா இருந்ததாம்!

ஓர் அழகான காட்சி.
விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் மரத்தில் உள்ள குயிலை ஆண்டாள் பார்க்கிறாள். கூவி அழைத்து கண்ணனை வரவழைத்தால் இதோ என் கையில் இருக்கும் கிளியை உன் தோழி ஆக்குவேன் என்கிறாள்.

இன்னடிசிலோடு பாலமுதூட்டி
எடுத்த என் கோலக்கிளியை
உன்னோடு தோழமை கொள்வன் குயிலே
உலகளந்தான் வரக்கூவாய்!

ஆண்டாள் அப்போது தோளில் கிளியை வைத்திருக்கலாம்

*** *** ***
ஆண்டாளின் கிளிக்குச் சொல்லப்படும் இன்னொரு கதை: ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், ‘என்ன வரம் வேண்டும்?’ என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், ‘இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்!’ என்று வேண்டிக் கொண்டார் என்றும், அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது

ஒருவேளை கிளியிடம் கண்ணனின் நாமத்தை சொல்லித் தந்தால் எந்நேரமும் அதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கும்.. காதுக்கும் இனிமையாக இருக்கும் என்று ஆண்டாள் நினைத்திருப்பாளோ ? பெண் மனசு பெண்ணுக்குத்தானே தெரியுமாம்?!

கிளி ஜோசியம் போலத் தான் இதுவும்! ஒரு சுவையான Myth! கிளி எடுத்துக் கொடுக்கும் சீட்டில் எப்படி மனம் மயங்குதோ, அது போலவே கிளி சொல்லும் கண்ணன் நாமத்திலும் மனம் மயங்குதுன்னு கே ஆர் எஸ் முன்ன என் பதிவில் வந்து இப்படி சொல்லி இருக்கார்!

ஆண்டாள் கிளி விடு தூது எழுதலை! ஒன்லி மேக விடு தூது, குயில் விடு தூது! கிளி சொன்னதை மட்டுமே தான் சொல்லும்! சமயத்தை அனுசரித்துப் பேசத் தெரியாது! அதைத் தூதா அனுப்பி, அது கண்ணன் வீட்டில், வருங்கால மாமியார் கிட்ட மாட்டிக்கிட்டு ஏதாச்சும் உளறிடுச்சின்னா? அதான் நோ கிளி விடு தூது! (இதுவும் தகவல் உபயம்--கே ஆர் எஸ்)


கூட்டி லிருந்து கிளியெப்போதும்
கோவிந்தா. கோவிந்தா. என்றழைக்கும்,
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில்
உலகளந் தான். என் றுயரக்கூவும்,

நாட்டில் தலைப்பழி யெய்தியுங்கள்
நன்மை யிழந்து தலையிடாதே,
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்
துவரா பதிக்கென்னை யுய்த்திடுமின்
-நாச்சியார் திருமொழி

ஆண்டாள் எனும் சோலையில் அருகம்புல்லாய்க்கூட இருக்க இயலாத நிலையில் ஆர்வம் காரணமாகவும் மார்கழில கிளிக்கு ஒரு பாடல் எழுதி அதைப்பெருமைப்படுத்த வேண்டும் என்றும் ஏதோ தெரிஞ்சதை எழுதி மெட்டும் போட்டு பாடியும் படுத்திருக்கேன் கேட்டு சொல்லுங்க என்ன?!

பாட்டு..


அரங்கா அரங்கா என அழைக்கும்
அழகுக்கிளியே நமஸ்காரம்(ஸ்ரீ)

மரங்கள்மீதும் மதில்கள்மீதும்
வானமளாவும் கோபுரத்தும்(ஸ்ரீ)

சோலைப்பசுமை தன்னிலவன்
சொக்கும் வனப்பைக்கண்டாயோ?
கோலக்கிளியே அவனை நீ
குழறிக் குழறி அழைத்தாயோ?(ஸ்ரீ)

நீலவானக் கருமுகிலில்
நிமலன் நிறத்தை நினைத்தாயோ?
காலமுற்றும் அவனருளக்
கனித்துக் கனிந்து விளித்தாயோ?(ஸ்ரீ)

தென்றல் காற்று சிரிக்குங்கால்
தேவன் குரலைக் கருதினையோ?
இன்றே வருவாய் எனவுருகி
இரங்கி இரங்கி அழைத்தாயோ?(ஸ்ரீ)

கரிய துளசி வனத்தினிலே
கண்ணன் மனத்தை உணர்ந்தாயோ?
உரியாய்! உடனே வா வென்றே
உருகி உருகி இசைத்தாயோ?(ஸ்ரீ)

மாவின் தளிரைக் கோதுகையில்
மாலின் அதரம் எண்ணினையோ?
ஆவியனையான் அணைத்திடவே
ஆசை பெருக அழைத்தாயோ?(ஸ்ரீ)

*****************************************************************

139 comments :

தமிழ் said...

அருமையான வரிகள்
அதுவும் உங்களின் குரலில்

Radha said...

//அதை கே ஆர் எஸ் மறப்பார் ராதாவும் மறப்பார்! அதைத்தவிர பாக்கி எல்லாரையும் எல்லாத்தியும் பத்தி மார்கழில எழுதுவாங்க! //
எங்களுக்கு தற்பெருமை/தற்புகழ்ச்சி எல்லாம் பிடிக்காது. :-)

Radha said...

கிளிக்கு நமஸ்காரம் சொல்லும் அரங்கத்து குயிலுக்கு நமஸ்காரம். பாடல் அருமையாக வந்து இருக்கிறது.

Kavinaya said...

பாடலின் அழகிலும் குரலின் ஒயிலிலும் சொக்கிப் போனேன்! அருமை அக்கா.

பி.கு.: கிளி பதிவு மார்கழிக்கு கொஞ்சூண்டு முன்னாடி வந்தது; அதனாலதான் தம்பீஸ்லாம் இடைவெளி விட்டிருந்தாங்க!

எல் கே said...

வீட்டில்தான் கேட்க முடியும் கேட்டு மறுபடியும் கமென்ட் போடறேன்

ஷைலஜா said...

//திகழ் said...
அருமையான வரிகள்
அதுவும் உங்களின்
//
நன்றி திகழ்! பயந்துட்டே இருந்தேன் எல்லாரையும் பாட்டு ஓடவைச்சிடுமோன்னு:)

ஷைலஜா said...

//Radha said...
//அதை கே ஆர் எஸ் மறப்பார் ராதாவும் மறப்பார்! அதைத்தவிர பாக்கி எல்லாரையும் எல்லாத்தியும் பத்தி மார்கழில எழுதுவாங்க! //
எங்களுக்கு தற்பெருமை/தற்புகழ்ச்சி எல்லாம்
///////


கிளிபத்தி எழுதினா தற்புகழ்ச்சியா?:) இந்த அநியாயத்தைக்கேக்க இங்க யாரும் இல்லையா?:)

ஷைலஜா said...

Radha said...
கிளிக்கு நமஸ்காரம் சொல்லும் அரங்கத்து குயிலுக்கு நமஸ்காரம். பாடல் அருமையாக வந்து இருக்கிறது
>>>>>>>>>>>>>>>>>>

:):) ஆமாம் கிளி என் ஃபேவரிட் பறவை.... அதுக்கு நமஸ்காரம் சொல்ல ஒருவாய்ப்பு கொடுத்த கண்ணன் பாட்டின் அடியார்களான உங்களுக்கெல்லாம் நன்றி/

ஷைலஜா said...

//கவிநயா said...
பாடலின் அழகிலும் குரலின் ஒயிலிலும் சொக்கிப் போனேன்! அருமை அக்கா.

பி.கு.: கிளி பதிவு மார்கழிக்கு கொஞ்சூண்டு முன்னாடி வந்தது; அதனாலதான் தம்பீஸ்லாம் இடைவெளி விட்டிருந்தாங்க!

10:33 PM, December
///நன்றி என் அருமைத்தங்கையே! ஓ கிளிபதிவு வந்துட்டதா எப்படி என் கண்ல படாம போச்சு கிளிக்கு ரெக்கை முளைச்சி பறந்துபோய்டுத்தா?:) சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் நன்றி கவிநயா.

தமிழ் said...

/நன்றி திகழ்! பயந்துட்டே இருந்தேன் எல்லாரையும் பாட்டு ஓடவைச்சிடுமோன்னு:) /

அப்படி எல்லாம் நாங்க சொல்லி விட முடியுமா

அப்படி ஒரு இனிமை உங்களின் குரலில்

ஷைலஜா said...

// எல் கே said...
வீட்டில்தான் கேட்க முடியும் கேட்டு மறுபடியும் கமென்ட் போடறேன்

10:39
//////சரி கார்த்திக்..... மெதுவா வாங்க.

Radha said...

//கிளிபத்தி எழுதினா தற்புகழ்ச்சியா?:) இந்த அநியாயத்தைக்கேக்க இங்க யாரும் இல்லையா?:) //
ஆஹா ! V.V அக்கா, என்னை விட பெரிய டகால்டி வேலை செய்றீங்க. :-)
சரி சரி. நான் கிரிதாரியின் கன்று. ரவி தான் ஆண்டாள் கிளி. நீங்க அரங்கத்துக் குயில். :-)

தக்குடு said...

கிளியோட அருமை இன்னொரு கிளிக்கு தான் தெரியும்! கிளியோட குரல்லையே அதை கேட்டாச்சு!...:)) எனக்கும் பச்சைக்கிளி ரொம்ப ரொம்ப பிடிக்கும்!!.:)

ஷைலஜா said...

//Radha said...
//கிளிபத்தி எழுதினா தற்புகழ்ச்சியா?:) இந்த அநியாயத்தைக்கேக்க இங்க யாரும் இல்லையா?:) //
ஆஹா ! V.V அக்கா, என்னை விட பெரிய டகால்டி வேலை செய்றீங்க. :-)
சரி சரி. நான் கிரிதாரியின் கன்று. ரவி தான் ஆண்டாள் கிளி. நீங்க அரங்கத்துக் குயில். :-)

////

<<<<<<<<<fair and lovely உபயோகிச்சாவது குயில் கிளியா மாறிடாதா ராதா?:)

ஷைலஜா said...

//தக்குடுபாண்டி said...
கிளியோட அருமை இன்னொரு கிளிக்கு தான் தெரியும்! கிளியோட குரல்லையே அதை கேட்டாச்சு!...:))///

<<<வாங்க கத்தார் காளையே! நெல்லை இளைஞரே! பெங்களூர் பெருந்தகையே! இந்த அக்காவின் அன்புத்தம்பியே கண்ஸ் அவர்களே நலமா? :) பாட்டைக்கேட்டு கிலியாகாம கிளியென்ற உமக்கு அடுத்த சந்திப்புல( காசி )அல்வா வழங்கப்படும்:)

Unknown said...

திருவரங்கத்துக் கிளிக்குத் தெரியாதா கிளிகளின் அருமை பற்றி? ஆமா, இந்த கிளிமண்டபத்துக் கிளிகள் இல்லாததால் தான் அங்கே யாரும் ரங்கான்னு பதில் சொல்றதில்லையா இப்ப எல்லாம்? பாட்டும் நல்லா இருக்கு, பாடினதும் நல்லா இருக்கு. மார்கழி வாழ்த்துகள், ஷைலஜா!

Unknown said...

//<<fair and lovely உபயோகிச்சாவது குயில் கிளியா மாறிடாதா ராதா?:)//

ம், lovelyயான பஞ்சவர்ணக் கிளிக்கு எதற்கு fair and lovely ? :-)

ஷைலஜா said...

//கெக்கே பிக்குணி said...
திருவரங்கத்துக் கிளிக்குத் தெரியாதா கிளிகளின் அருமை பற்றி? ஆமா, இந்த கிளிமண்டபத்துக் கிளிகள் இல்லாததால் தான் அங்கே யாரும் ரங்கான்னு பதில் சொல்றதில்லையா இப்ப எல்லாம்? பாட்டும் நல்லா இருக்கு, பாடினதும் நல்லா இருக்கு. மார்கழி வாழ்த்துகள்
///

<<<>>>>>>கேபி எவ்ளோ நாளாச்சு உங்களோட எழுத்தைப்பார்த்து வாவ் !க்ரேட்!ஆமா கேபி கிளிமண்டபம்னு இன்னும் பேர் இருக்கு மண்டபமும் இருக்கு ஆனா கிளிக்கூண்டு இல்லை கிளியும் இல்லை); பொதுமக்கள் சிலர் கிளிக்கு தொல்லை தந்துவிட்டதால் அவைகளைபராமரிக்கமுடியலையாம் தேவஸ்தானத்துல கேட்டப்போ சொன்னாங்க.ஆனாலும் கீச்ச்கிச்சென்ற ஓசை அங்கபோறப்பல்லாம் மான்சீகமா கேட்டுட்டுதான் இருக்கு எனக்கு!
பாட்டை பாராட்டினதுக்கு நன்றி கேபி மார்கழிவாழ்த்துகள் உங்களுக்கும்!

ஷைலஜா said...

//கெக்கே பிக்குணி said...
//<>>>>>>

எத்தனை அன்பு கேபிக்கு என்மேல! பார்த்துங்கப்பா கேஆரெஸ் & ராதா:):)

In Love With Krishna said...

@Shailaja aunty:
//நீலவானக் கருமுகிலில்
நிமலன் நிறத்தை நினைத்தாயோ?
காலமுற்றும் அவனருளக்
கனித்துக் கனிந்து விளித்தாயோ?(ஸ்ரீ)//
Idhellam neenga dhaan pannuveenga. :)
Andha kili ungalai paarthu kathukkum.
And, when He is playing hide and seek, vera velai illadhadhu pola avan perai alaikkum.
As though to remind.
Manasellam avan nirainju irukka engendhu remind panradhaam???

In Love With Krishna said...

@Shailaja aunty:
i really liked this post. :)
Indha 'small girl's compliments ellam ethupeengla? :))

பாரதிதேவராஜ் said...

ஆஹா!
அற்புதம் குரலிலும் வரிகளிலும்.
தேனினும் இனியதாய்
சொட்டு சொட்டாய்!
தன்யனானேன்
அரங்கனின் அருள் கிட்டியதற்காய்
நன்றி! நன்றி!
பாரதிதேவராஜ்.

ஷைலஜா said...

//In Love With Krishna said...
@Shailaja aunty:
//நீலவானக் கருமுகிலில்
நிமலன் நிறத்தை நினைத்தாயோ?
காலமுற்றும் அவனருளக்
கனித்துக் கனிந்து விளித்தாயோ?(ஸ்ரீ)//
Idhellam neenga dhaan pannuveenga. :)
Andha kili ungalai paarthu kathukkum.
And, when He is playing hide and seek, vera velai illadhadhu pola avan perai alaikkum.
As though to remind.
Manasellam avan nirainju irukka engendhu remind panradhaam
///

<<>>>>>>>

ஆமாம்மா கேகே மனசெல்லாம் அவன் நிறைஞ்சிருந்தா நினைவுபடுத்திக்கொள்ளத்தேவை இல்லைதான் நன்றாக சொன்னாய்!

ஷைலஜா said...

//In Love With Krishna said...
@Shailaja aunty:
i really liked this post. :)
Indha 'small girl's compliments ellam ethupeengla
////<<<<<<<<<<<

க்ருஷ்ணப்ரேமியாக இருக்கிற உன் கருத்தை நான் என்றும் மதிப்பேன் கேகே, எப்போதும் எல்லாரையும் மதிக்கணும் என்கிறதே என் கொள்கை!
பாரேன் ஒரு கிளியை முக்கிய கதாபாத்திரமாக்கி கிளிப்பதிவை மார்கழிக்குப்போட்ருக்கேன் இல்ல?:)

ஷைலஜா said...

//பாரதிதேவராஜ் said...
ஆஹா!
அற்புதம் குரலிலும் வரிகளிலும்.
தேனினும் இனியதாய்
சொட்டு சொட்டாய்!
தன்யனானேன்
அரங்கனின் அருள் கிட்டியதற்காய்
நன்றி! நன்றி!
பாரதிதேவராஜ்
//

<<<>>>>>>>>

பாரதி சார்! நன்றி உங்க வருகைக்கும் கருத்துக்கும்!

In Love With Krishna said...

@Radha:
i asked about 'adhokshaja' in a previous post remember?
Actually, i remember sometime in my Sanskrit class, they said it meant "One who cannot be percieved by impure senses"
That's why i asked whether you knew how that is. But, you gave more meanings. :)
btw, coming to my point, by that respect, this parrot CAN call out to Him, na?
Copy adichaalum avar thirunaamam dhaan!! :))

In Love With Krishna said...

//ஒரு கிளியை முக்கிய கதாபாத்திரமாக்கி கிளிப்பதிவை மார்கழிக்குப்போட்ருக்கேன்//
@Shailaja aunty:
Adhe 'parrot' unga profile pic... :)
What is this relationship between you and the parrot, aunty??? :))))

Radha said...

//Actually, i remember sometime in my Sanskrit class, they said it meant "One who cannot be percieved by impure senses"
That's why i asked whether you knew how that is. //

well, well, well...dear sister ! only one person here used to ask questions for which he already knew the answer (called as அறிவினா)...you have joined the club ! let me be very careful before answering your questions. :-)

//btw, coming to my point, by that respect, this parrot CAN call out to Him, na? //
i don't know whether you are asking about yourself or pulling the legs of the writer of this article ! :-)
anyways, the answer is:
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் !

In Love With Krishna said...

//கிளி சொன்னதை மட்டுமே தான் சொல்லும்! சமயத்தை அனுசரித்துப் பேசத் தெரியாது!//
Yes, that's why i think it is His messenger.
Because, it will come and say His name even if we forget for one minute.
@Shailaja aunty: Neenga padhivu potta neram, enakku indha kili romba pidichu pochu! :))
-----
But, my take on why Aandal had a parrot for a pet:
(purely fictional, meant to induce laughter only) :)
Because::: She did not have a CELL PHONE!!!
What is the relationship between cell phone and parrot?
A. Parrot says His name, Cell phone rings His song.
B. Both have no idea when to announce their presence. They ring when they feel like, no concern for what we may think.
C. Imagine Aandal, sitting at home, thinking, crying for Krishna. Then only the parrot will chose the time to come and say: Achyuta! Janardhana! Madhava!!! IDIOT PARROT!
Imagine if Aandal had been there today.
She will be sitting at home. (same situation)
Her friend will call her, but the phone sings: Sri Man Narayana! Sri Man Narayana!!
She changes the ring tone now. (Indha kaalathu Aandal-la? Konjam porumai kammi) :)
She then switches on the radio.
What does she hear?
"Va Va Va Kannaaa Vaa..."
Then, that also goes off (all this in cellphone)
She goes to the gallery and opens the pictures.
Haiyyo! Ingaiyum avana??????
D. The parrot was taught by Aandal. Today, if Aandal had a cell phone, settings would be programmed by her only. :)
E. The parrot was a sign of Her bhakti. That it sung His name was a sign of Her bhakti.
If the ringtone in a cell phone of present day Aandal was His name, that is also Her bhakti.
F. But, what it does is out of our control, out of Aandal's control. So, while everything else was Aandal's message to Krishna, the parrot was HIS MESSENGER.
When Her heart was broken, it was a reminder from Him that He would always be there. :))
And, though, she would have gotten irritated, it would come back and do the same thing, just as a cell phone won't stop ringing, it's not it's fault.
So, if Aandal had taken Avatar today (nice, no, we could have gone with her) her parrot would have been a cell phone.
But, did it have His number?
No, i don't think so.
She might have sung a few paasurams asking for His number. :)

In Love With Krishna said...

@Radha: No, i did not know the answer.
i wanted to know how that came about. :)
But, you gave me a different set of meanings

In Love With Krishna said...

@Radha:
//i don't know whether you are asking about yourself or pulling the legs of the writer of this article ! :-)//

Why are you pulling double meanings out of my innocent words?
i am not like you. :)))

i meant: since it knows nothing by itself (the parrot), and copies, or in other words, imbibes His name from its owner, i said it really does not have any "impure sense".
So, when He cannot be called by "impure sense", this parrot without any "impure sense" can call Him easily!

In Love With Krishna said...

@Radha:
btw, i am still not clear about 'Adhokshaja".
i don't get how it can mean so many deep meanings at the same time.
So, which concept do we use to the sloka from mukunda mala?
i asked you, you gave me a set of meanings.
My sanskrit teacher that day gave me the meaning which i mentioned.

Radha said...

//எத்தனை அன்பு கேபிக்கு என்மேல! பார்த்துங்கப்பா கேஆரெஸ் & ராதா:):) //
அது சரி. நீங்க அவங்களுக்கு இனிப்பா மை.பா கொடுத்து இருப்பீங்க. :-)

Radha said...

@KK,
adhokshaja - i remember reading the meanings for this name in mahabharatham (situation - pre-war scenario, beeshma eulogising krishna and advising duryodhana to strike peace with pandavas) and also in sri bhagavatham. i didn't bother too much to get to the roots though. i shall ask learned ppl around me and let you know. maybe, we should derive it from "adha:" which means low/below. and i guess what your teacher had mentioned is same as one of the meanings i had given. (senses dwelling in materialistic pleasures can be called impure and the lord can't be grasped using them.) anyways, let me not act like a learned person. i know only very little of sanskrit. :-)

Radha said...

Parrot vs Cellphone - that was a very nice comparision. :-)

//She might have sung a few paasurams asking for His number. :) //
:-)

குமரன் (Kumaran) said...

அக்கா. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் ஆமாம் ஆமாம் என்று தலையை ஆட்டுகிறது இந்தக் கோலக்கிளி. தெரிகிறதா? :-)

ஷைலஜா said...

கொஞ்சம் பிசி ஆகிட்டேன்...இன்றுபோய் நாளைவந்து என் மகள் மற்றும் என் தம்பிகளுக்கு பதில் தரேன் :)

Kavinaya said...

//ஓ கிளிபதிவு வந்துட்டதா எப்படி என் கண்ல படாம போச்சு கிளிக்கு ரெக்கை முளைச்சி பறந்துபோய்டுத்தா?:)//

இல்லையே; இன்னும் அங்கேயேதான் இருக்கு... :)

ஷைலஜா said...

//கவிநயா said...
//ஓ கிளிபதிவு வந்துட்டதா எப்படி என் கண்ல படாம போச்சு கிளிக்கு ரெக்கை முளைச்சி பறந்துபோய்டுத்தா?:)//

இல்லையே; இன்னும் அங்கேயேதான் இருக்கு
////<<<<<<

அங்கே போய் கோவிந்தக்கிளியைப்பார்த்தேன் கவிநயா... மிக அழகா எழுதினதை எப்படி இவ்வளோ நாள் கவனிக்காமல் போனேன்? இப்போதாவது பார்த்தேனே அந்த வாய்ப்பு தந்தமைக்கு நன்றி தங்கையே!

sury siva said...

அரங்கா அரங்கா என திருவரங்கத்தில் கிளி பேசக்கேட்டிருக்கிறேன்.
அந்த அரங்கத்துக் கிளிக்கு நமஸ்காரமா !!
அற்புதம் !!

உங்க்ள் கவிதைக்கு நான் இதுவரை மெட்டு இடவில்லை.
முதல் முறையாக கானடா ராகத்தில் இட்டிருக்கிறேன்.

சற்று நேரத்தில் யூ ட்யூபில் அல்லது எனது வலையில் கேட்கலாம்.

சுப்பு ரத்தினம்.
http://menakasury.blogspot.com

Kavinaya said...

கோவிந்தக் கிளியை வாசித்தமைக்கு நன்றிகள் அக்கா.

சுப்பு தாத்தாவின் இசையிலும் உங்கள் பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன்.

ஷைலஜா said...

// sury said...
அரங்கா அரங்கா என திருவரங்கத்தில் கிளி பேசக்கேட்டிருக்கிறேன்.
அந்த அரங்கத்துக் கிளிக்கு நமஸ்காரமா !!
அற்புதம் !!

உங்க்ள் கவிதைக்கு நான் இதுவரை மெட்டு இடவில்லை.
முதல் முறையாக கானடா ராகத்தில் இட்டிருக்கிறேன்.

சற்று நேரத்தில் யூ ட்யூபில் அல்லது எனது வலையில் கேட்கலாம்.

சுப்பு ரத்தினம்.
http://menakasury
///M<<<>>>>>>>>


அருமை ஐயா இன்றே வருவாய் என் உருகி என்பதில் உருகியே போனேன் கடைசியில் அரங்கா அரங்கா என்ன்னும் போது நெகிழ்ச்சியாய் இருக்கிறது.
மிகவும் அழகான கனடா ராகம் இறைஞ்சும் விதத்தில் அமைந்துள்ளது மிக அழகு.. நன்றி என் எழுத்திற்கு உயிர் கொடுத்தமைக்கு.

ஷைலஜா said...

//கவிநயா said...
கோவிந்தக் கிளியை வாசித்தமைக்கு நன்றிகள் அக்கா.

சுப்பு தாத்தாவின் இசையிலும் உங்கள் பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன்.

3:43 PM,
////<<>>>>>>

ஆமாம் சுப்புத்தாத்தா எவ்வளவு உருக்கமாய் பாடி இருக்கிறார் அதைக்கேட்டதும் நான் கிளியை ரொம்ப அதிகாரமாய் உரிமையாய் பாடின மாதிரி இருக்கு!

ஷைலஜா said...

//குமரன் (Kumaran) said...
அக்கா. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் ஆமாம் ஆமாம் என்று தலையை ஆட்டுகிறது இந்தக் கோலக்கிளி. தெரிகிறதா
//<<<>>>>

குறும்புக்கார குமரன்!

ஷைலஜா said...

//In Love With Krishna said...
//ஒரு கிளியை முக்கிய கதாபாத்திரமாக்கி கிளிப்பதிவை மார்கழிக்குப்போட்ருக்கேன்//
@Shailaja aunty:
Adhe 'parrot' unga profile pic... :)
What is this relationship between you and the parrot, aunty??? :))))

5:53 AM,
///////

<<<<<<<<<<<< என்னரங்கன் கோயிலைக்கண்டு கூவிய பறவை அல்லவா கேகே அதான் கிளி என் profileஇருக்கு! மேலும் கிளி வெஜிடேரியன் என்னைமாதிரி:)

ஷைலஜா said...

//Radha said...
//எத்தனை அன்பு கேபிக்கு என்மேல! பார்த்துங்கப்பா கேஆரெஸ் & ராதா:):) //
அது சரி. நீங்க அவங்களுக்கு இனிப்பா மை.பா கொடுத்து இருப்பீங்க. :-)

8:22 AM, December
//

<<<<<<<<<<<<<<

:):) இல்லையே இன்னும்:)

In Love With Krishna said...

@Shailaja aunty:
//மேலும் கிளி வெஜிடேரியன் என்னைமாதிரி//
Ok, ennaiyum serthukonga! :)
btw, one doubt out of personal experience: When you are not in India, isn't it too tough to avoid egg-based foods (like cake, croissant, etc.)?
Chumma if you go to a restaurant itself, veggie option is only one or two. That too, if you don't take eggs (my case, i left eating cakes, etc. when i was 12) the options reduce more and more.
How do you manage?
(Pls. don't tell me home-cooked meals as your answer) :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//As though to remind.
Manasellam avan nirainju irukka engendhu remind panradhaam???//

@கள்வனின் காதலி
யார் சொன்னா கிளி, ஞாபகப்படுத்தத் தான் கூவுது என்று?
இல்லை! பல விஷயங்களுக்கும் அவன் பேரைக் கத்தும்! :)

* அவள் மகிழ்ச்சியில், அவன் பேரைக் கத்திக் கத்தி இன்னும் போதை ஏற்றும்!
* அவள் தனிமையில், அவன் பேரைச் சொல்லிச் சொல்லி ஆறுதல் கூட்டும்!
* அவள் சோகத்தில், அவன் பேரைப் பாடிப் பாடிக் கொஞ்சமேனும் தூங்க வைக்கும்!
* அவள் கோபத்தில், அவன் பேரை உரக்கக் கத்தி அவளை வெறுப்பேற்றும்!

இதற்காகட் தான் ஆழ்வார்கள்/ஆசாரியர்கள் கிளியைச் சொன்னார்களே அன்றி குயிலைச் சொல்லவில்லை! சொல்லப் போனால் குயிலுக்கு கிளியை விடக் குரல் இனிமை! ஆனால் குயில் நேரத்துக்கேற்றவாறு, தன் மெட்டை மாற்றிக் கொள்ளும்; சொந்தமாய்ப் பாடும்! ஆனால் கிளிக்கோ, சொல்லிக் கொடுத்த படி அவன் பேர் மட்டுமே! வேறு எதுவும் தானாகச் சொல்லாது!

சொந்த ஞான யோகம் செய்யும் குயிலைக் காட்டிலும்
அவனே என்று சரணமாக இருக்கும் கிளியே அவள் தோளும் ஏறியது! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//well, well, well...dear sister ! only one person here used to ask questions for which he already knew the answer (called as அறிவினா)...you have joined the club !//

whoz that "person" radha? lemme know! avanai adichi noRukkiduvOm, naama reNdu pErum chErnthu! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அக்கா...சூப்பர் பதிவு! சூப்பர் பின்னூட்ட மழை!
இனி திருவரங்கப் பிரியா என்பது போல் திருவரங்கக் கிளி என்றும் அழைக்கப்படுவீர்களாக!
KK can shorten this to TVK on the lines of PSP, DSP and so on... :)

In Love With Krishna said...

@KRS:
//KK can shorten this to TVK on the lines of PSP, DSP and so on... :)//
1. i don't understand DSP
2. Neenga peyar vachuttu en peyarai matti vidureengla?? :)
3. TVK reminds me of Tiru Valli Keni...:))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@KK
The cell phone aaNdal was so nice...
actually thatz how me and my thOzhi kOthai speak most of the time...

SMS:
If she sends a "hey" then shez so interested to talk abt him with me...
If she sends just a "hi" she means, no talks abt him. If I still talk abt him, she says hi & bye...

Ring tone:
She keeps on changing from all the movie songs from 1940 Bhaktha Meera to 2010 Manmathan Ambu mixing Naachiar Tirumozhi :)

Caller Tone:
kaNNa en kaiyai thodaathe!
இந்தப் பாடல் உங்களுக்குப் பிடித்திருந்தால் டவுன்லோட் செய்து கொள்ளக் கட்டணம் ஒரு தடா வெண்ணெய், ஒரு தடா அக்கார அடிசில் மட்டுமே! :)

In Love With Krishna said...

@KRS:
//இல்லை! பல விஷயங்களுக்கும் அவன் பேரைக் கத்தும்!//
Yes, but i could think of your last point only, because then only the parrot is irritating.

In Love With Krishna said...

//Ring tone:
She keeps on changing from all the movie songs from 1940 Bhaktha Meera to 2010 Manmathan Ambu mixing Naachiar Tirumozhi :)//

1940 bhakta Meera ok...
Manmadhan Ambu??
Public forum, i am not going to type what i think Aandal would have done with Manmadhan Ambu...

In Love With Krishna said...

@KRS:
//If she sends a "hey" then shez so interested to talk abt him with me...
If she sends just a "hi" she means, no talks abt him. If I still talk abt him, she says hi & bye...//

No, He is officially Her husband now. :)
So, she'll say 'Hey' when you think of Him.
And, when you are not talking about Him, she'll say Hi and bye.
She won't tolerate anything wrong being said about her dear husband.. :))

ஷைலஜா said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
அக்கா...சூப்பர் பதிவு! சூப்பர் பின்னூட்ட மழை!
இனி திருவரங்கப் பிரியா என்பது போல் திருவரங்கக் கிளி என்றும் அழைக்கப்படுவீர்களாக!
KK can shorten this to TVK on the lines of PSP, DSP and
.///

<<<<<<<<<<<<<<<<வாங்கய்ய்யா அரங்கன் போஸ் அழகுத்தம்பியே! எங்கடா ஆளைக்காணொமே ஆண்டாளும் கிளியும் வந்து ஒருநாளாகியும்னு நினச்சேன்:)
வருக வருக நல்வரவு!

நாடி நாடி நரசிங்கா! said...

சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்
துவரா பதிக்கென்னை யுய்த்திடுமின்
:)
nice post: thans:)

Radha said...

இங்கே சில பாசுரங்களில் திருமங்கை ஆழ்வார் குயில், கிளி வித்தியாசம் பார்க்காம எல்லா ஜீவராசிகளையும் கண்ணன் புகழ் பாடுமாறு விளிக்கிறார். :)
+++++++++
திருத்தாய் செம்போத்தே!
திருமாமகள் தன்கணவன்
மருத்தார் தொல்புகழ் மாதவனை வரத்
திருத்தாய் செம்போத்தே !

கரையாய் காக்கைப்பிள்ளாய் !
கருமாமுகில் போல்நிறத்தன்
உரையார் தொல்புகழ் உத்தமனை வரக்
கரையாய் காக்கைப்பிள்ளாய் !

கூவாய் பூங்குயிலே !
குளிர்மாரி தடுத்துகந்த
மாவாய் கீண்ட மணிவண்ணனை வரக்
கூவாய் பூங்குயிலே !

கொட்டாய் பல்லிக்குட்டி !
குடமாடி உலகளந்த
மட்டார் பூங்குழல் மாதவனை வரக்
கொட்டாய் பல்லிக்குட்டி !

சொல்லாய் பைங்கிளியே
சுடராழி வலனுயர்த்த
மல்லார் தோள்வட வேங்கடவன் வர
சொல்லாய் பைங்கிளியே !
(பெரிய திருமொழி 10-10)
+++++
தொண்டீர் பாடுமினோ ! :)

Radha said...

Give an acronym and get the expansion.
DSP => தயா சமுத்ர பெருமாள் ! :)
[quiz question: க்ருபா சமுத்ர பெருமாள் என்பது எந்த திவ்ய தேசத்து பெருமாள் பெயர்? ]

ஷைலஜா said...

Narasimmarin Naalaayiram said...
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்
துவரா பதிக்கென்னை யுய்த்திடுமின்
:)
nice
<<<<<<<<<<<<<<<<

நன்றி! எல்லாப்புகழும் ஆழ்வார் பெருமானுக்கே!

ஷைலஜா said...

//Radha said...
இங்கே சில பாசுரங்களில் திருமங்கை ஆழ்வார் குயில், கிளி வித்தியாசம் பார்க்காம எல்லா ஜீவராசிகளையும் கண்ணன் புகழ் பாடுமாறு விளிக்கிறார். :)
+++++++++
திருத்தாய் செம்போத்தே!
திருமாமகள் தன்கணவன்
மருத்தார் தொல்புகழ் மாதவனை வரத்
திருத்தாய்
////


ஆமாம் ராதா......இதெல்லாம் அருமையான பாடல்கள்

ஷைலஜா said...

Radha said...
Give an acronym and get the expansion.
DSP => தயா சமுத்ர பெருமாள் ! :)
[quiz question: க்ருபா சமுத்ர பெருமாள் என்பது எந்த திவ்ய தேசத்து பெருமாள் பெயர்
///
<<<<<<<<<<<<

ஸ்தல சயனப்பெருமாள்?(மல்லை)

Radha said...

// ஸ்தல சயனப்பெருமாள்?(மல்லை) //
அக்கா, திருக் கடல்மல்லை பெருமாள் ஸ்தல சயன பெருமாள் தான்.
"க்ருபா சமுத்ர பெருமாள்" ஊர் எது?
hint: இந்த ஊர் மூலவர் பெயர் "அருள் மாகடல்". என்ன ஒரு பெயர் !!

ஷைலஜா said...

//Radha said...
// ஸ்தல சயனப்பெருமாள்?(மல்லை) //
அக்கா, திருக் கடல்மல்லை பெருமாள் ஸ்தல சயன பெருமாள் தான்.
"க்ருபா சமுத்ர பெருமாள்" ஊர் எது?
hint: இந்த ஊர் மூலவர் பெயர் "அருள் மாகடல்". என்ன
///
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து கொல்லுமாங்குடி என்ற சிற்றூரை அடைந்து அங்கிருந்து கிழக்கே 2 மைல் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்.

மூலவர் : சலசயனப்பெருமாள,புஜங்க சயனம்
தாயார் : திருமகள் நாச்சியார்
உற்சவர் : க்ருபா சமுத்திர பெருமாள்
தீர்த்தம் : மானஸ புஷ்கரணி
விமானம் : நந்தவர்த்தனம்
தற்போதைய பெயர் : சிறுபுலியுர்
(உதவி கூகுள்சயனப்பெருமாள்!)

ஷைலஜா said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
@KK
The cell phone aaNdal was so nice...
actually thatz how me and my thOzhi kOthai speak most of the time...

SMS:
If she sends a "hey" then shez so interested to talk abt him with me...
If she sends just a "hi" she means, no talks abt him. If I still talk abt him, she says hi & bye...

Ring tone:
She keeps on changing from all the movie songs from 1940 Bhaktha Meera to 2010 Manmathan Ambu mixing Naachiar Tirumozhi :)

Caller Tone:
kaNNa en kaiyai thodaathe!
இந்தப் பாடல் உங்களுக்குப் பிடித்திருந்தால் டவுன்லோட் செய்து கொள்ளக் கட்டணம் ஒரு தடா வெண்ணெய், ஒரு தடா அக்கார அடிசில்
//

:):):) naughty boy KRS!

ஷைலஜா said...

ராதா ! நான் சொன்னது சரியா இல்லையா?!

Radha said...

கிரிதாரி ! சிறுபுலியூர் என்று சரியான பதில் அளித்த அரங்கத்துக் கிளிக்கு பழம் கொண்டு வா !
:-)

ஷைலஜா said...

.. In Love With Krishna said...
@Shailaja aunty:
btw, one doubt out of personal experience: When you are not in India, isn't it too tough to avoid egg-based foods (like cake, croissant, etc.)?
Chumma if you go to a restaurant itself, veggie option is only one or two. That too, if you don't take eggs (my case, i left eating cakes, etc. when i was 12) the options reduce more and more.
How do you manage?
(Pls. don't tell me home-
////////

oops ! sorry KK.... இந்த மடலைப்பார்க்காம விட்டுட்டேன்! மாலை டிபன் (அடை அவியல்:):)முடிச்சிவந்து விவரமா எல்லா கேள்விக்கும் பதில் தரேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//No, He is officially Her husband now. :)//

@KK
wife-ology theriyaama irukeenga!
Lover-aa irukkum pothu kooda oru pachathaapam irukkum kOthai-kku! aana husband-kku? :))

தன் கண்வனை, தன் உற்ற தோழன் ஓட்டுவதைப் பார்த்து, உள்ளுக்குள் கெக்கலிக்கும் இன்பமே இன்பம், இந்தக் கோதை போல பொண்ணுங்களுக்கு! ஆனா, கணவனுக்கு ஏதாச்சும் ஒன்னு-ன்னா துடிச்சிப் போயிருவா! அது வேற, இது வேற :)

என்ன சில சமயம் இவளை வெறுப்பேத்த, நான் அவன் பக்கம் கட்சி மாறீருவேன்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Radha said...
இங்கே சில பாசுரங்களில் திருமங்கை ஆழ்வார் குயில், கிளி வித்தியாசம் பார்க்காம எல்லா ஜீவராசிகளையும் கண்ணன் புகழ் பாடுமாறு விளிக்கிறார். :)//

ஆமாம் ஆமாம்!
அதுக்காக மத்த பறவைகளை அப்படியே விட்டுட முடியுமா நம்ம உலக நாயகன்?

ஆனா இதுகளை எல்லாம் விளி விளி-ன்னு சொல்லிச் சொல்லி விளிக்க வேண்டி இருக்கு ஆழ்வாருக்கு! ஆனால் கிளி? தானாகவே விளிக்கிறது! ஏய் அவனை விளிக்காதே-ன்னு சொன்னாலும், அப்பவும் விளிக்கிறது! :)

இப்போ புரியுதா ராதா, அவள் தோளில் கிளிக்கு மட்டும் தனி இடம் ஏன்-ன்னு? அவள் தோளில் மட்டுமா? அரங்கன் தோளிலும் மாலையோடு ஒட்டிக்கிட்டு இருக்கும் மர்மம் இது தான்! :)

I am so happy that I am kOthai's kiLi! Hi...Kothai kiLi...KK...appo naanum KK-vaa? omg! :))

In Love With Krishna said...

@KRS:
//அரங்கன் தோளிலும் மாலையோடு ஒட்டிக்கிட்டு இருக்கும் !//
Hi! Enakku indha kili romba romba pidichirukku!
Aranganatha! Ennai un azhagana, gambeeramana thozhil kili aakiyadhu un thirumeni padum bhagyam kodu!
Enakku un malai-yai undhan style speed post-il anuppi vidu!
Unnai alangaritha pookal-in narumanam innum en manadhil ninaivugalaa poothirukku!
My dear KP! Uranguvadhu pol nadikaamal enakku right now reply pannu!!! :))

ஷைலஜா said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

தன் கண்வனை, தன் உற்ற தோழன் ஓட்டுவதைப் பார்த்து, உள்ளுக்குள் கெக்கலிக்கும் இன்பமே இன்பம், இந்தக் கோதை போல பொண்ணுங்களுக்கு! ஆனா, கணவனுக்கு ஏதாச்சும் ஒன்னு-ன்னா துடிச்சிப் போயிருவா! அது வேற, இது வேற :)

என்ன சில சமயம் இவளை வெறுப்பேத்த, நான் அவன் பக்கம் கட்சி மாறீருவேன்! :)

////

<<<<<<<<
:):) நல்ல கதையால்ல இருக்கு இது?:)

ஷைலஜா said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
. :)//

ஆமாம் ஆமாம்!
அதுக்காக மத்த பறவைகளை அப்படியே விட்டுட முடியுமா நம்ம உலக நாயகன்?

ஆனா இதுகளை எல்லாம் விளி விளி-ன்னு சொல்லிச் சொல்லி விளிக்க வேண்டி இருக்கு ஆழ்வாருக்கு! ஆனால் கிளி? தானாகவே விளிக்கிறது! ஏய் அவனை விளிக்காதே-ன்னு சொன்னாலும், அப்பவும் விளிக்கிறது! :)

இப்போ புரியுதா ராதா, அவள் தோளில் கிளிக்கு மட்டும் தனி இடம் ஏன்-ன்னு? அவள் தோளில் மட்டுமா? அரங்கன் தோளிலும் மாலையோடு ஒட்டிக்கிட்டு இருக்கும் மர்மம் இது தான்! :)


///<<<<<<<<<>.

ரவி, எனக்கென்னவோ வேற வலுவான காரணம் ஏதோ இருக்கணும் என்று தோன்றுகிறது.. கிளீ தானாய் ஏதும் பேசாது சொன்னதத்தான் திரும்பச்சொல்லும். வைணவத்தில் ஆசாரியர்கள் சொல்வதைத்தான் அடியார்கள் கேட்பார்கள், அப்படி ஒரு அடியாரின் மனோபாவம் கிளிக்கு இருப்பதால் அதனை அரங்கன் மகிழ்ந்து ஏற்கிறானோ?

ஷைலஜா said...

//In Love With Krishna said...
@KRS:
//அரங்கன் தோளிலும் மாலையோடு ஒட்டிக்கிட்டு இருக்கும் !//
Hi! Enakku indha kili romba romba pidichirukku!
Aranganatha! Ennai un azhagana, gambeeramana thozhil kili aakiyadhu un thirumeni padum bhagyam kodu!
Enakku un malai-yai undhan style speed post-il anuppi vidu!
Unnai alangaritha pookal-in narumanam innum en manadhil ninaivugalaa poothirukku!
My dear KP! Uranguvadhu pol nadikaamal enakku right now reply pannu!!! :))

//

<<>>>>>>>

இன்னொரு ஆண்டாள் ஆகிட்டாங்க கேகே! அவள்தான் மாலிடம் ஆர்டர் போட்டவள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//My dear KP! Uranguvadhu pol nadikaamal enakku right now reply pannu!!! :))//

ha ha ha
kiLi replied...
@kk, now look at the post....last pic.

In Love With Krishna said...

@KP:
Aranga! Aranga! Aranga!!!
There is no word but Your name to describe your beauty. :)))))))
Andha kili pol ennaiyum paithiyamai un peyar-ai solla vaithaye!

@KRS:
En aranganathan-ai post-il serthu vittadhu-kku thanks :))

@Shailaja aunty:
Adhellam illai. Aandal-in order avanai order poda vendum-nu. Myself just a little follower! :))

ஷைலஜா said...

ஆஹா புன்னகை தவழ என்னரங்கன் பதிவில் வந்துவிட்டானா?

//////

தாவியன் றுலக மெல்லாம் தலைவிளாக் கொண்ட எந்தாய்

சேவியே னுன்னை யல்லால்சிக் கெனச் செங்கண் மாலே

ஆவியே.அமுதே என்றன் ஆருயி ரனைய எந்தாய்

பாவியே னுன்னை யல்லால் பாவியேன் பாவி யேனே.//


தொண்டரடிப்பொடி

In Love With Krishna said...

@KRS:
Eppodhum pola KP late reaction dhaan kudupaaru-nnu paartha ungalai use panni vandhitaar!
Tnx KRS!
KP- un arumaiye arumai!!
Kovathil, anbil, out of love, blinded by Your liberty given to me, if i have said anything wrong, forgive me. :)

ஷைலஜா said...

// In Love With Krishna said...
@KP:
Aranga! Aranga! Aranga!!!
There is no word but Your name to describe your beauty. :)))))))
Andha kili pol ennaiyum paithiyamai un peyar-ai solla vaithaye!


///
அரங்கப்பைத்தியம் ஆல்ரெடி இங்க இருக்கே கேகே!

Radha said...

ஆஹா ! கிளியை ஏன் தேர்ந்தெடுக்கணும் அப்படின்னு தான் எவ்வளவு விளக்கங்கள்...எல்லாமே அருமை அருமை.

Radha said...

//I am so happy that I am kOthai's kiLi! Hi...Kothai kiLi...KK...appo naanum KK-vaa? omg! :)) //
:))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ரவி, எனக்கென்னவோ வேற வலுவான காரணம் ஏதோ இருக்கணும் என்று தோன்றுகிறது.. கிளீ தானாய் ஏதும் பேசாது சொன்னதத்தான் திரும்பச்சொல்லும். வைணவத்தில் ஆசாரியர்கள் சொல்வதைத்தான் அடியார்கள் கேட்பார்கள்//

இது ஆசார்யர்களின் உன்னதமான பெருமைக்காகச் சொல்லுப்படும் ஒரு நயவுரை அக்கா! அவ்வளவு தான்!

சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளை என்பது போல், தாமாக எதுவும் சொல்லாது, தன் ஆசார்யன் காட்டித் தரும் இறைவனை, அப்படியே கிளிப்பிள்ளை போல் பிடித்துக் கொள்வது...

முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு
பின்னோர்ந்து தாம் அதனைப் பேசாதே - தம் நெஞ்சில்
தோற்றினதே சொல்லி, இது சுத்த உபதேச வர
வாற்றது என்பர் மூர்க்கர் ஆவார்.
- உபதேச ரத்தின மாலை

இத்தோடு சரி!
----------------------------

//அப்படி ஒரு அடியாரின் மனோபாவம் கிளிக்கு இருப்பதால் அதனை அரங்கன் மகிழ்ந்து ஏற்கிறானோ?//

இல்லை!
ஆசார்யன் சொல்வதைக் கேட்காத காக்கை, செம்போத்து, நாரை, குயில்-ன்னு இன்னும் எத்தனையோ பறவைகள் இருக்கே! அவற்றின் கதி? அவற்றுக்கும் சேர்த்துத் தானே எம்பெருமான் காவலன்?

அரங்கன், கிளியை மட்டும் தோளில் ஏற்றிக் கொள்வது, சொந்த ஞான/கர்மம் காட்டாத சரணாகத-கிளிக்கு, ஏதோ பெருமை சேர்க்க அல்ல!

அந்தக் கிளி அவன் பேரைப் பிடித்துக் கொண்டது! இனி ஆசார்யனே கூவாதே-ன்னு சொன்னாலும் அது விடாது! கூவிக்கிட்டு தான் இருக்கும்! ஆண்டாள் கூவாதே-ன்னு கத்துறா? ஆனா அது நிறுத்திச்சா? :)

அந்தக் கிளியைத் தன் தோளில் இருத்திக் கொண்டால், அது சொல்லும் திருநாமம் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும் அல்லவா! அதுவும் அவன் தோளாகிய உயர்ந்த இடத்திலிருந்து! அந்தத் திருநாம ஒலி கேட்டு இதர பறவைகளும் கடையேறும்! அதான்!

அவனை விட அவன் திருநாமம் விரைந்து காக்க வல்லது! அனைவருக்கும் "முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே - துயிலெழாய்!"

சரி, அதற்கு எதற்கு தன் தோளில் இடம் கொடுக்க வேண்டும் எம்பெருமான்? திருநாமத்தைக் கையில் இருந்தோ, கூண்டில் இருந்தோ கூட கூவலாமே? தோள் எதற்கு?

எதற்கு-ன்னா, அவன் தோளில் இருந்து கூவினா, அவன் செவிகளுக்கும் மிக அருகில் கேட்குமாம் திருநாமம்!

அவனும் அந்தத் திருநாம இனிமையில் மயங்குகிறான்!

அதான் தோளில் கிளிக்கு இடம் தந்தான்! அது, கிளிக்குப் பெருமை என்பதை விட, திருநாம அருமை, அவனை விட்டுப் பிரிந்த அனைவரையும் அவனிடம் ஒன்று சேர்க்க வல்லது!

நாடினேன், நாடி நான் கண்டு கொண்டேன், நாராயணா என்னும் "நாமம்"!
அந்தத் திருநாமக் கைங்கர்ய ஜந்துவான கோலக் கிளி திருவடிகளே சரணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆஹா புன்னகை தவழ என்னரங்கன் பதிவில் வந்துவிட்டானா?//

அக்கா,
அது KK கேட்க, கிளி கொண்டு வந்த சேர்த்த படம்! :)

//சேவியேன் உன்னை அல்லால் "சிக்" கெனச் செங்கண் மாலே//

அப்படியே மாணிக்கவாசகர் பாடுவது போலவே இருக்கு!
சிக்-கெனப் பிடித்தேன்! எங்கு எழுந்து அருளுவது இனியே?

//ஆவியே.அமுதே என்றன் ஆருயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவி யேனே.//

பொய்யனேன் வந்து நின்றேன், பொய்யனேன் பொய்யனேனே!

உன்னை எங்ஙனம் மறந்து வாழ்வேன் ஏழையேன் ஏழையேனே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பாயும் நீர் அரங்கம் தன்னுள்
பாம்பணை பள்ளி கொண்ட

மாயனார் திரு நண் மார்பும்,
மரகத உருவும், தோளும்,

தூய தாமரைக் கண்களும்,
துவர் இதழ் பவள வாயும்,

ஆய சீர் முடியும், தேசும்
அடியோர்க்கு அகலலாமே!

குட திசை முடியை வைத்து
குண திசை பாதம் நீட்டி
வட திசை பின்பு காட்டி
தென் திசை இலங்கை நோக்கி

கடல் நிறக் கடவுள் எந்தை
அரவணை துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ
என் செய்வேன் உலகத்தீரே!

சேவியேன் சேவியேனே!
பாவியேன் பாவியேனே!
பொய்யனேன் பொய்யனேனே!
மூர்க்கனேன் மூர்க்கனேனே!

உன்னை எங்ஙனம் மறந்து வாழ்வேன்? - என் அன்பே
ஏழையேன், ஏழையேனே!
ஏழையேன், ஏழையேனே!
ஏழையேன், ஏழையேனே!

Radha said...

//அப்படியே மாணிக்கவாசகர் பாடுவது போலவே இருக்கு! //
:-)

உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லாக்
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று
வெள்கிப்போய் என்னுள்ளே நான் விலவு அறச் சிரித்திட்டேனே
(தொண்டரடிப்பொடி ஆழ்வார்)

கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித்
தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன்
உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று
வெள்கினேன் வெள்கி நானும் விலாவிறச் சிரித்திட்டேனே.
(திருநாவுக்கரசர் தேவாரம்)

ஷைலஜா said...

Radha said...

உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லாக்
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று
வெள்கிப்போய் என்னுள்ளே நான் விலவு அறச் சிரித்திட்டேனே
(தொண்டரடிப்பொடி ஆழ்வார்)

கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித்
தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன்
உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று
வெள்கினேன் வெள்கி நானும் விலாவிறச் சிரித்திட்டேனே.
(திருநாவுக்கரசர்
.///

ஆழ்வாரும் நாயன்மாரும் எப்படி இப்படி ஒன்றேபோல் சிந்தித்து எழுதி இருக்கிறார்கள் ராதா! வியப்பாக இருக்கே!’’வெள்கி என்ன பொருள்?

Radha said...

ஆமாம் அக்கா. இதை எல்லாம் படிக்கும் போது நிறைய நம்பிக்கை ஏற்படிகிறது. டகால்டி கேசா இருக்கறதுல பெரிய வருத்தம் இல்லை. :-)
வெள்குதல் - வெட்குதல், கூச்சப்படுதல்

இந்த ஒப்பீடு ராமகிருஷ்ணா மடம் வெளியிட்டு உள்ள "திவ்ய பிரபந்த திரட்டு" என்னும் நூலில் உள்ளது.பிரபந்த பாசுரங்களுக்கு அறிமுகம் வேண்டுவோர்க்கு படித்தான் பரிந்துரை. :-)

sury siva said...

//
கடல் நிறக் கடவுள் எந்தை
அரவணை துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ
என் செய்வேன் உலகத்தீரே!//

கதிரவன் உதித்தான் இல்லை அதி
காலையில் எழுந்த நானே
கணினியைத் திறந்தாலங்கே
'பாம்பணை பள்ளி கொண்ட'
மாயவன் முன்னே நிற்க,

அடியேன் தன்யனானேன்.
ஆனந்தம் இன்பம் என்றால்
இதுவன்றோ!!
இத்யம் விம்ம விம்ம‌
பூபாள ராகத்தில் உம்
பாடலைப் பாடி மகிழ்ந்தேன்.

சுப்பு ரத்தினம்.

Radha said...

dear subbu thaaththa,
in the previous post there is this "araavamudhe" pasuram rendered in kalyani ragam. please don't miss it. i am 100% sure you would like it very much !

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இந்த ஒப்பீடு ராமகிருஷ்ணா மடம் வெளியிட்டு உள்ள "திவ்ய பிரபந்த திரட்டு" என்னும் நூலில் உள்ளது.பிரபந்த பாசுரங்களுக்கு அறிமுகம் வேண்டுவோர்க்கு படித்தான் பரிந்துரை//

:-)
அதுக்காக மடத்துக்கு எல்லாம் போக வேண்டிய அவசியமே இல்லை!
நம்ம கூடல் குமரன் இருக்க, வெண்ணைய் இருக்க, நெய்க்கு அலைவானேன்?
http://koodal1.blogspot.com/2008/12/blog-post.html

இந்த அப்பர்-தொண்டரடிப்பொடி ஒற்றுமையை முன்பே பதிவிட்டுள்ளார் குமரன்!
மேலும் ஆழ்வார் அருளிச் செயல்களுக்கு அறிமுகம் வேண்டுமென்றால், எளிமையான, அழகான, நூல்கள் கிழக்குப் பதிப்பகத்தில் உள்ளன! சுஜாதா எழுதிய ஆழ்வார்கள் - ஒரு எளிய அறிமுகம் இன்னும் எளிது!

Shakthiprabha (Prabha Sridhar) said...

பாடல் மிக பிடித்திருக்கிறது. அதை உணர்ந்து மயங்கி மயங்கி சொக்கி பாடியுள்ளீர்கள். சிறிது நேரம் நீங்கள் ஆண்டாளாகவே உணர்ந்தீர்களா?

கிளி பற்றிய தவகல் "கீச் கீச்" என நெஞ்சில் நிறைந்தது.

ஷைலஜா said...

// Radha said...
வெள்குதல் - வெட்குதல், கூச்சப்படுதல்




>>>>?//

நன்றி ராதா..இதைக்கூட தெரிஞ்சிக்கலையேன்னு வெட்கப்படறேன் நிஜம்மா:)

ஷைலஜா said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//இந்த ஒப்பீடு ராமகிருஷ்ணா மடம் வெளியிட்டு உள்ள "திவ்ய பிரபந்த திரட்டு" என்னும் நூலில் உள்ளது.பிரபந்த பாசுரங்களுக்கு அறிமுகம் வேண்டுவோர்க்கு படித்தான் பரிந்துரை//

:-)
அதுக்காக மடத்துக்கு எல்லாம் போக வேண்டிய அவசியமே இல்லை!
நம்ம கூடல் குமரன் இருக்க, வெண்ணைய் இருக்க, நெய்க்கு அலைவானேன்?
http://koodal1.blogspot.com/2008/12/blog-post.html


/////
நெய்யை இங்கு கையோடளித்த மைவண்ணன் மகிழ் மலர்(சூடித்தந்த )மங்கையின் மெய்த்தோழரே வாழி!

ஷைலஜா said...

//Shakthiprabha said...
பாடல் மிக பிடித்திருக்கிறது. அதை உணர்ந்து மயங்கி மயங்கி சொக்கி பாடியுள்ளீர்கள். சிறிது நேரம் நீங்கள் ஆண்டாளாகவே உணர்ந்தீர்களா?

கிளி பற்றிய தவகல் "கீச் கீச்" என நெஞ்சில் நிறைந்தது
//

<<<<<<<<<<<<<<<அட ஷக்திப்ரபாவா ? என்ன அதிசியம்! க்ருஷ்ணபக்தையான உன்னை கிளி இங்க இழுத்து வந்துவிட்டதா? ராதா மோகனும் கேஆரெஸ்ஸும் கேகேயும் கேட்டுக்குங்க..ஷக்திப்ரபா என் இனிய தோழி பெங்களூர்தான்.. என்னைவிட வயசில் சின்னவங்கதான் ஆனா க்ருஷ்ணனைப்பற்றி பேசுவதில் மிக உயர்ந்தவர் . கேகே மாதிரி ஆங்கிலம் அதிகம் வந்துடும்!:) ஆனா அருமையா எழுதுவாங்க....அடிக்கடி இங்க வந்து எழுதினால் நன்றாக இருக்குமே என்று நீங்களும் சொல்லுங்கப்பா...

ஷைலஜா said...

//sury said...
//
'பாம்பணை பள்ளி கொண்ட'
மாயவன் முன்னே நிற்க,

அடியேன் தன்யனானேன்.
ஆனந்தம் இன்பம் என்றால்
இதுவன்றோ!!
இத்யம் விம்ம விம்ம‌
பூபாள ராகத்தில் உம்
பாடலைப் பாடி மகிழ்ந்தேன்.

சுப்பு ரத்தினம்
///

<<> ஐயா அது உங்கள் வலையில் உள்ளதா?

Radha said...

//நம்ம கூடல் குமரன் இருக்க, வெண்ணைய் இருக்க, நெய்க்கு அலைவானேன்?
http://koodal1.blogspot.com/2008/12/blog-post.html
//
ரொம்ப தாமதமா பதிவுலகிற்கு வந்தேன்....நிறைய மிஸ் பண்ணிட்டேன் போல...சரி குமரனுக்கு இது எப்படி கிடைத்தது? இந்த அருமையான ஒப்பீடு தனக்கு எப்படி கிடைத்ததுன்னு அங்கே குமரன் சொல்லி இருக்கார்னா...
++++++++++++++
நான் தேடித் தரலை கவிநயா அக்கா. எழுத்தாளர் ஜெயமோகனுக்கு ஜடாயு ஐயா எழுதிய கடித்தத்தை ஜெயமோகனின் வலைப்பக்கத்தில் படித்தேன். ஜடாயு ஐயா தான் இவ்விரு பாடல்களையும் ஒரு சேரத் தந்திருந்தார்.
+++++++++++
பாருங்க அங்கயும் ஜடாயுன்னு ஒரு பறவை. :-)
கிருஷ்ணா ! அடுத்த பிறவியில் எம்மை பறவையாகவோ மாடாகவோ படைத்திடுவாய். :-)

Radha said...

//ராதா மோகனும் கேஆரெஸ்ஸும் கேகேயும் கேட்டுக்குங்க..ஷக்திப்ரபா என் இனிய தோழி பெங்களூர்தான்.. என்னைவிட வயசில் சின்னவங்கதான் ஆனா க்ருஷ்ணனைப்பற்றி பேசுவதில் மிக உயர்ந்தவர் . கேகே மாதிரி ஆங்கிலம் அதிகம் வந்துடும்!:)
//

glory to Krishna ! welcome sister ! :-)

ஷைலஜா said...

ராதா ஒரு சந்தேகம் தத்தை என்று கிளிக்கு தூய தமிழ் பெயர் இருக்க அதை இலக்கியத்தில் அதிகம் உபயோகித்திருக்கிறார்களா ? கிளீ தானே பெரும்பாலும் இருக்கிறது?

Shakthiprabha (Prabha Sridhar) said...

அழைப்புக்கு நன்றி ராதா. பக்தை என்று சொல்லிக் கொள்வதை விட கண்ணனின் "காதலியாக" "மனைவியாக" என்னை எண்ண நினைக்கிறேன். பாசுரம் பிரபந்தம் பற்றியெல்லாம் அதிகம் தெரியாது. நீங்கள் எல்லாம் எழுதினால் படிக்க சுவையாக இருக்கிறது. :)

Shakthiprabha (Prabha Sridhar) said...

100th comment shy wanted me to write...

best words would be

"krishna...krishna"

In Love With Krishna said...

@shaktiprabha:
hi! :)
//பக்தை என்று சொல்லிக் கொள்வதை விட கண்ணனின் "காதலியாக" "மனைவியாக" என்னை எண்ண நினைக்கிறேன்.//
Sema "punch dialogue" adicheenga ponga! :)
The waves of your beautiful dialogue are now dancing (as a smile) on the face of the One who is reclining on milky waves.
And, realizing His smile, even i am smiling here. :)

In Love With Krishna said...

Shailaja aunty, KRS, Radha:
A little request to all of you people.
Can any one of you post "Thiruvidanthai Nithya Kalyana Perumal" paasuram?
Just one paasuram, even in the comments' here will do.
Thanks :)
i was thinking of Him all of a sudden today, (as some people i know are going to see Him).

Radha said...

@kk,
thats a very dangerous question for me ! i tend to keep away from this perumal, vaaranam aayiram of andaal, etc. let others respond. :-)

In Love With Krishna said...

@Radha:

//thats a very dangerous question for me ! i tend to keep away from this perumal, vaaranam aayiram of andaal, etc. let others respond//

why?
When Perumal is dressed beautifully like "Mappillai", ungalukku mattum "Ferocious"-aa theriyuraara?

In Love With Krishna said...

@Radha: "Radha"-nnu peyar ungalukku...
How come you don't like "Vaaranam Aayiram"??? :)))

Unknown said...

It is interesting to note that Pillai Loka Jiyar in his "Thaniyan" to Nachiyar Thirumozhi tries to establish Kothai as Kili.
"periyAzhvAr tirumagaLennum madippuDaiya kiLi"

"vaLarttu eDuppArkkum kAlilE vaNanga vENdum padiyAna kiLi"

Radha said...

//@Radha: "Radha"-nnu peyar ungalukku...
How come you don't like "Vaaranam Aayiram"??? :)))
//
சரியா போச்சு. my full name is radhamohan. if you have boys in your class with names like vidhyasankar you can find that his friends call him as "vidhya" ! :-)

In Love With Krishna said...

@Radha:
aaha... my focus is not your name.
my focus is "what makes you run away from vaaranam aayiram??"
Adhukku badhil sollama vidhyashankar peyar solli escape aagureengle!! :))

In Love With Krishna said...

@Radha:
Without realizing, i put in the 108th comment!
Perumal-e!
Andha 108th divya desathil irukkum perumal-e kekkuraaru:
"Why do you run away from Vaaranam Aayiram?"
KK kettapa no reply.
ok, ippa en kaadhalan kekkraan. :))

ippa reply panniye aaganum.
Question is from Mr. 108!! :))

Radha said...

Mr.108...Vaikundanathan !!

கோயில் கொண்டான் திருக்கடித்தானத்தை
கோயில் கொண்டான் அதனோடு என் நெஞ்சகம்
கோயில் கொள் தெய்வமெல்லாம் தோழா வைகுந்தம்
கோயில் கொண்ட குடக்கூத்த அம்மானே !

Mr.108 knows the answer ! :-)
["Varanamayiram" has this power of getting you married !! The phalasruti of the pasuram is like that. Same is the case with Nithaya Kalyaana Perumal...]

In Love With Krishna said...

@Radha:
my question on one of the madhavi panthal posts:
////என் கனவை இவ்வளவு பொறுமையாகக் கேட்ட உனக்கு, நல்ல குழந்தைகள் பிறக்கும்!//

"Is it for this that i listened to Your wonderful speech?
Is it for this that i stand in front of Him, and talk to Him?
O Krishna! is that what i seek??
Aren't You diluting my whole idea by stating this, O Foremost of Women?
Ofcourse, i live by His grace, and am thankful for everything He has given me.
But given that i have a notorious habit of asking Him for everything, and He has been amazingly patient throughout, do i need to end these wonderful 10 songs with a petition of this kind?
Isn't it like saying: You promised me this, so My Lord, it is for 'that reason' that i offer this prayer of mine unto You??
"etraikum ezhel piravikkum undhanodu ottromeyavom unakke naam aatseiyvom,
matrunamkaamangal maatrelor empaavai!'
After telling me to ask Him for that highest gift from 'Kadhir madhiyam pol muhathaan', why evn talk of something like this??
I am too small, and i know practically nothing; yet i am bound here by love for You, and for Your 'Acchudhan', so do tell me: i have no such prayer unto You. i prayed for that 'Kamala Kannan' alone.
Then, why is it that Your words that speak about Saranaagathi end with such a puzzling note?
i do not caim that i know much. But for some one who has relished your great poetry, that too by Your grace, isn't it fair that You make clear this puzzling footnote?
'manathukkiniyaanai padavum nee vaai thiravaay'
That is why i spoke! if i made a mistake,then forgive me in His name."

ippadi andha (tiru)paavai kitta niraya time kettirukken.
Somehow, my question remains a question till today.
Pls. if anyone knows what Thaayar might answer me, pleez reply.//

In Love With Krishna said...

//
You have something called the Rolling Shield in School, for the best student!
We learn for our sake, learning sake, future sake! Then why all this shield? Is it not materialistic? Will it not create competition between students? If one student wins that shield, means, all others are not good students??? :))
அருமையான இறைத் தமிழ்க் கவிதை - பத்து பாடல்கள்! அதை முடிக்கும் போது இந்த சுழற் கோப்பை!



நீங்க, உங்களுக்கு மட்டும் கண்ணனைக் கேட்டீங்க! "எனக்கு" எல்லாம் அவனே! அதனால் "எனக்கு" அவனே வேணும்! ** i have no such prayer unto You. i prayed for that 'Kamala Kannan' alone ** வேற பலன்களெல்லாம் ஏதும் தேவையில்லை! இப்படிப் பாட்டுக்குப் பலன் சொல்லி முடித்து, "என்னை" insult பண்ண வேணாம்! :)) => இப்படி உங்க விருப்பத்தில் நிறைய "என்" இருக்கு! :))

ஆனா, தோழி கோதை அப்படி அல்ல! அவளுக்கு அவள் மட்டும் கண்ணனை அடைந்தால் போதாது! அத்தனை பேரும் கண்ணன் கழலினை அடைய வேணும்! அதுக்குத் தான் இந்தச் சுழற் கோப்பையை வைக்கிறாள்!

சுழற்கோப்பை என்பது ஒரு பொது அடையாளம் மட்டுமே! அது ஒருவரிடம் மட்டும் தங்கி விடுவதில்லை! சுழன்று கொண்டே இருக்கும்! கையில் மட்டுமல்ல, பல மாணவர்களின் எண்ணங்களிலும் சுழன்று கொண்டே இருக்கும்! ஆர்வம் இல்லாத மாணவர்கள் கூட, குறைந்த பட்சமாவது ஈர்க்கப்படுவார்கள்! தன் நண்பனுக்காகவேனும் அணி திரள்வார்கள்! அதற்கான ஊக்கம் தான் கோதையின் அந்த நூற்பயன்/பல சுருதி!

* திருப்பாவையில் = எங்கும் திருவருள் பெற்று இன்பு உறுவர் எம்பாவாய்-ன்னு பொதுப் பலனாகத் தான் முடித்தாள்!
* ஆனால் இது கல்யாணக் கனவு! = அதனால் சிறப்புப் பலனாக வைத்து முடிக்கின்றாள்!

முன்னது சரணாகதி! அதனால் பொதுப் பலன்! சரணாகதி ஆன அடுத்த நிமிடமே, உலகை விட்டே யாரும் தடார்-ன்னு போயிடுவதில்லையே! அந்தப் பிறவி வரை வாழுகிறார்கள் அல்லவா? அந்த வாழ்வுக்கும் பலன், பற்றுக் கோடு வேண்டுமே! அதான் இந்தச் சிறப்புப் பலன்!

//வாயும் நன் மக்களைப் பெற்று - மகிழ்வரே//

இங்கே நன்+மக்கள் என்பது நல்ல குழந்தைச் செல்வம் என்பது கல்யாணக் கனவுக்கான சிறப்புப் பலன்! மகிழ்வரே என்னும் இன்பப் பலன்!
ஆனால் அது மட்டுமே பொருளல்ல! அப்படிப் பார்த்தா, இந்தப் பாட்டைத் துறவிகள், ஜீயர்கள் கூடத் தான் ஓதுகிறார்கள்! அவிங்களுக்கு என்ன சொல்வது? :)

நன் மக்கள் = குழந்தைச் செல்வம், நல்ல நட்பு, நல்ல இனம், அடியார் குழாம் என்று பலவும் குறிக்கும்!
The Focus is not on "நன்மக்கள்", but on "வாயும்-மகிழ்வரே"!
நன்மக்கள் என்பது ஒரு Rolling Shield மட்டுமே! :)

ஆர்வம் உடையவர்கள் நாராயணைக் கேட்பது "தன்"னளவில்!
ஆர்வம் இல்லாதவர்களும் நாராயணனை அடைய வேணும் அல்லவா! அதற்கான பொறியே கோதைத் தமிழ் = வேதம் அனைத்துக்கும் வித்தாகும்!

ஆர்வம் உடையார்கள், ஆர்வம் இல்லாதவர்களுக்காக, "நன்மக்கள்" போன்ற சொற்களைத் தாங்கிக் கொண்டே ஆக வேணும்! :) ஏன்-ன்னா கோதைத் தமிழ் ஆண்டவனுக்கு அல்ல! அடியார்களுக்காக!

In Love With Krishna said...

Sorry, the nxt comment was KRS reply. :))

In Love With Krishna said...

@Radha:
i really like Nithya Kalyana Perumal.
But that doesn't mean i want the benefits He usually is supposed to bestow on people.
When my relations were there to pray for marriage, i too kept the 11 pradarshans along with them.
But, that's because i really liked Perumal there.
And, He was good enough to give me los of Prasad, and some beaautiful flowers :)

In Love With Krishna said...

So, NKP-kku kalyaanam-na dhaan vendanuma???
i can't take this! :))
Now, i have my own little prayer to NKP: [Please help me get good marks in my public exams!!!!
Enakku PSP dhaan public exam campaign in-charge! :))
NKP-aana neenga Unga arulum, blessings-um enakku kudunga! ]

ok, i have put my prayers. Now, you also put in some prayers to Him which you think is appropriate for you, and pls. put in the paasuram.
And, margazhi maadham-a irukku! VA padicchu paarunga!! Not for the sake of phala, but for the sake of Gopala! :))

In Love With Krishna said...

@Radha:
i don't claim i understand the meaning of inserting phala at the end of every 10 songs, unlike KRS.
But, what was meant to encourage people, can it stop you from thinking of dear NKP??
Or enjoying VA??
Tamizh theriyaamalum enakku pidichu pona pattu!
Ungalukku pidikaatha enna?? :))

A lot of people ask Lakshmi Thaayar for wealth. They do prayers for that. She grants them also.
But, Sri Ramanuja talks only about surrender in His prayer to Thaayar in Saranagathi Bhasya.
i feel, what is the "general outcome" of prayer/bhakti is not important.
What one wants from the heart is important.
Bhakti is love from the heart.
So, only what our heart wants matters :))

In Love With Krishna said...

@Radha:
i don't claim i understand the meaning of inserting phala at the end of every 10 songs, unlike KRS.
But, what was meant to encourage people, can it stop you from thinking of dear NKP??
Or enjoying VA??
Tamizh theriyaamalum enakku pidichu pona pattu!
Ungalukku pidikaatha enna?? :))

A lot of people ask Lakshmi Thaayar for wealth. They do prayers for that. She grants them also.
But, Sri Ramanuja talks only about surrender in His prayer to Thaayar in Saranagathi Bhasya.
i feel, what is the "general outcome" of prayer/bhakti is not important.
What one wants from the heart is important.
Bhakti is love from the heart.
So, only what our heart wants matters :))

In Love With Krishna said...

@Radha:
Actually, last time, i went to NKP temple, i had an interesting chat with Him. To tell you the gist of it,i said, "i am asking You for stuff people usually might not be asking You for. So, i think my prayer would have reached you faster. If it has (i hope so), please add one more: that i can forever love You. "

So, please don't run away from dear NKP! :))
Go, ask Him for something.
He will get all the more alert by the "different" prayer.
(But, this deal is between us! ok-va??) :))

In Love With Krishna said...

@Shailaja aunty:
Just now, i "heard" the song.
You sung it beautifully :))

In Love With Krishna said...

//கள்ளழகரு கிளம்பிட்டாரு//
i just saw this post.
Romba azhagaa irundhar azhagar!! :))
Adhai post pannavargal-kku en "thanks" sollidunga :))

Radha said...

@KK,
regarding "vaaranam aayiram", the fear is mainly because of the fickle natue of my mind... :-) true renunciates don't have this kind of fear...i am deeply attached to my parents and still have worldly inclinations...
and NKP is newly married !! why disturb Him ? ;-) He has all the power and might to come to me. Anytime let Him come and this bonded soul shall welcome ! :-)

In Love With Krishna said...
This comment has been removed by the author.
In Love With Krishna said...

@Everyone:
This is totally unrelated to the post.
But, since i was thinking, i thought i'd share.
Enga ooru koil thenthiruperai. (near Alwarthirunagari)
Magaranedung-kuzhaikaadhar engal "aathu Perumal" but not kula deivam.
Anyways, there, in front of Thaayar Sannathi, there is a sannathi for Aanjaneyar.
People say HE has grown with time.
My patti says she saw Him as a very small Aanjaneyar. But, now he is quite big. :))
i dunno if he will grow further, if he does, i'll tell you. :)
But, have you heard of anything like this elsewhere?

In Love With Krishna said...

@Radha: ok, you welcome Him whenever you want :)


In my case, right now, i want, but He's not coming :(

ஷைலஜா said...

//Shakthiprabha said...
அழைப்புக்கு நன்றி ராதா. பக்தை என்று சொல்லிக் கொள்வதை விட கண்ணனின் "காதலியாக" "மனைவியாக" என்னை எண்ண நினைக்கிறேன். பாசுரம் பிரபந்தம் பற்றியெல்லாம் அதிகம் தெரியாது. நீங்கள் எல்லாம் எழுதினால் படிக்க சுவையாக இருக்கிறது. :)

11:41 AM, December
//

<<<<<<<<sh..sh!எல்லாரும் இப்படி கண்ணனின் காதலியாக நினைத்தால் என்ன ஆகிறது?:) ஆனாலும் இந்த நிலைக்கு சிலரை கண்ணன் இழுத்திருக்கிறான் என்றால் அது அவர்கள் செய்த பாக்கியம்தான்!நான் சின்ன வயசில் ஆண்டாளாய் என்னை நினச்சிப்பேன்:)(ஓவர்தான் :)
ஸ்ரீரங்கத்தில் வெளி ஆண்டாள் சந்நிதி என்று கோவிலிலிருந்து அரைகிலோமீட்டர் தொலைவில் உள்ள சப்தப்ராஹாரத்தின் முதல் தெரு ஒன்றில் இருக்கிறது அங்கேதான் ஆண்டாள் பெரியாழ்வாருடன் வந்திறங்கி காவிரியில்(அப்போது காவிரி அதுவரை புரண்டு வந்திருக்கணும் தென்னீர் பொன்னி திரைக்கையால் அடிவருட பள்ளிகொள்ளும் என்று அரங்கனை ஓர் ஆழ்வார் பாடின மாதிரி திருவடியை வருடிப்போகிற அளவு காவிரி நிறைந்திருக்கணும்) நீராடி பிறகு கோயிலுக்குள் சென்று அரங்கனுடன் ஐக்கியமானாள் என்பது தெரிந்தகதை. உள் ஆண்டாள் சந்நிதி என்று கோயிலில் நுழைந்ததுமே ஒரு பெரிய சந்நிதி உண்டு...நாம ஏன் நடு ஆண்டாளாய் ஆயிரங்கால் மண்டபம் பக்கம் போய் உட்காரக்கூடாது என அந்த பத்து வயசில் அசட்டுத்தனமாய் நினைப்பேன்!
ஷக்தி உனக்கு பாசுரம் தெரியலைன்னா என்ன பரமனை வசப்படுத்த காதலியாய் மனைவியாய் கற்பனை செய்ய தெரிந்திருக்கிறதே இதுவே பக்தியின் ஒரு நிலைதானே!

Radha said...

//In my case, right now, i want, but He's not coming :(
//
Pls go to next post. He has arrived ! :-)

ஷைலஜா said...

அடேயப்பா ராதாவும் கேகேயும் நிறைய விஷயங்களை அலசி இருக்கிறார்களே.. வாசிக்கவே ரொம்ப அற்புதமாக இருக்கு. ஆனா, கேகே எனக்கு அரங்கனைத்தான் அதிகம் தெரியும்அதனால் உன்னோட பலகேள்விகளுக்கு மரியாதையாய் மரியாதையாய்(திரு திரு):) முழிக்கிறேன்!

ஷைலஜா said...

//Love With Krishna said...
@Shailaja aunty:
Just now, i "heard" the song.
You sung it beautifully :))

/////

நன்றி கேகே...அரங்கன் மீது என்றால் எப்படியாவது பாடணும் அவ்வளவுதான் அது எப்படி வந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து முயற்சி செய்தது!

In Love With Krishna said...

@Shailaja aunty:
//நன்றி கேகே...அரங்கன் மீது என்றால் எப்படியாவது பாடணும் அவ்வளவுதான் அது எப்படி வந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து முயற்சி செய்தது!//
Aunty, naan aranganathar-ai kettu KRS potta photo ninaithen!
Unga pattu kettappa dhaan i understood Aranga actually came to your post to hear you sing. :))
And, see closely, HE is smiling :))

ஷைலஜா said...

In Love With Krishna said...
@Shailaja aunty:
//நன்றி கேகே...அரங்கன் மீது என்றால் எப்படியாவது பாடணும் அவ்வளவுதான் அது எப்படி வந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து முயற்சி செய்தது!//
Aunty, naan aranganathar-ai kettu KRS potta photo ninaithen!
Unga pattu kettappa dhaan i understood Aranga actually came to your post to hear you sing. <<<<<<<<<

ஆஹா ! இப்படியெல்லாம் அனுபவிச்சி சொல்லும் நீயும் பிஞ்சிலே பழுத்த எங்கள் இணையக்கோதை! IK!
<<<<<<<<<<<<<<

Vishnu... said...

அருமை அருமை .. தோழியே ...
இவ்வளவு அழகான வலைத்தளம் அருமையான படைப்புகளோடு ..சொல்லவே இல்லையே நீங்கள் ...

கிளிப்பாட்டு ..மிக மிக அருமை ..
உங்கள் குரலில் அது மேலும் இனிமையாகி விட்டது ...

நன்றி உங்கள் வலைத்தளம் அறிமுகம் செய்தமைக்கு ..

பிரியமுடன்
விஷ்ணு ...

Sankar said...

Shilaja akka.. arumai arumai.. romab inimayana kural.. azhagum vanappum porundhiya varigal.. :) :) sooper..
we should suggest some professional singer to sing this in concerts.. :)

ஷைலஜா said...

//Vishnu... said...
அருமை அருமை .. தோழியே ...
இவ்வளவு அழகான வலைத்தளம் அருமையான படைப்புகளோடு ..சொல்லவே இல்லையே நீங்கள் ...

கிளிப்பாட்டு ..மிக மிக அருமை ..
உங்கள் குரலில் அது மேலும் இனிமையாகி விட்டது ...

நன்றி உங்கள் வலைத்தளம் அறிமுகம் செய்தமைக்கு ..

பிரியமுடன்
விஷ்ணு
///

<<<<>>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விஷ்ணு!

ஷைலஜா said...

//Sankar said...
Shilaja akka.. arumai arumai.. romab inimayana kural.. azhagum vanappum porundhiya varigal.. :) :) sooper..
we should suggest some professional singer to sing this in concerts.. :)

12:38 AM,
//

<<<<<<>... எங்கடா சங்கரைமட்டும் காணோமேன்னு பார்த்தேன்! வாங்க வாங்க நன்றி .
கிளிப்பாட்டு சிலபேரை துரத்தியடிச்சிடிச்சோன்னு கொஞ்சம் உதறல்தான்:) ஆமா சங்கர், இதை சுதாவோ ஓஎஸ் அருணோ அருணா சாய்ராமோ ஜெய்ஸ்ரீயோ மேடைல பாடினா அருமையா இருக்கும்! பார்க்கலாம் கிளிக்கு அதிர்ஷ்டம் இருக்கான்னு!

Shakthiprabha (Prabha Sridhar) said...

"In love with Krishna" loved ur id :)

உங்கள் பதிவை ரசித்தேன். நன்றி.

shy, an unwanted (warranted?) confession which can be dismissed as it has nothing to do with the topic.

கண்ணனுக்கு தான் மட்டுமே அன்புக்குறியவளாக இருக்க நினைப்பது - பாமா

ருக்மிணி/ராதா வின் அன்பு பக்குவப்பட்ட அன்பு.

ஆண்டாள் / மீரா அன்பு பொறாமையற்ற அன்பு.

I am afraid, I actually fall in bama category. I feel extremely jealous if anyone else claims krishna as theirs.இன்னும் நிறைய பக்குவப்பட வேண்டும் :)

In Love With Krishna said...

@Shaktipabha:
glad you liked it:)
did you know that bama only took the form of aandal?
but, it is but natural for women to feel jealous.
don't we compare: oh! why cant i love like that?
But, the great lover that HE is, and afraid of losing any of those who love him, he has got a solution: your krishna is different from my krishna is different from nth krishna, atleast in form.
he is the same personality, but exclusively exclusive to everyone.
he took so many forms in rasa lila, and same in mathura.
he has already taken one form for your sake, and is patiently awaiting the time when you'll reach him.:)
hope i can say the same for myself :))
happy new yr ! :))

Shakthiprabha (Prabha Sridhar) said...

ILWK,

Very happy new year. காதில தேன் பாஞ்ச மாதிரி இருக்கு உங்க போஸ்ட். :) மனமும் வாழ்வும் எல்லோருக்கும் நிறையட்டும். ஆண்டாள் - பாமா news to me. Very interesting :D

Shakthiprabha (Prabha Sridhar) said...

//he is the same personality, but exclusively exclusive to everyone.
he took so many forms in rasa lila, and same in mathura.//

oh my god...ILWK, உங்க போஸ்ட் சிலிர்க்க வைக்கிறது...எவ்வளவு தெளிவா அழகா சொல்லிருக்கீங்க. உடல் மனம் எல்லாம் பூத்து போச்சு. Krishna has blessed u with ample gnaanam. :) good wishes for new year.

In Love With Krishna said...

@Shaktiprabha:
//ஆண்டாள் - பாமா news to me. Very interesting //
haiyyo...i am not sure myself.
1) bama is boomadevi thaayar
2) aandal is bhoomadevi thaayar
so i have heard...
so if 1+1=2...bama is andal
this was just my guess :)
if it's wrong, shailaja aunty, radha, krs, pondravargalai en statement-ai correct seiyya sollanum :)
//காதில தேன் பாஞ்ச மாதிரி இருக்கு உங்க போஸ்ட்//
adhisayame illai-nga...i am talking about your lover, na?
Ofcourse, it will be nectareous. :))
//Krishna has blessed u with ample gnaanam. :)//
no. no...
if only i had the gnaanam about Him!!
actually, He's blessed me with ample blessings in life :)
Like, for example, a great devotee in my mother who was the one who explained the above part to me!
When she said this, ofcourse, i was floating in air for a few days. :))
//good wishes for new year.//
Same to you. :)
May Krishna guide us to our goals this year! :) May He bless joy, prosperity and success on all!
May we find Him enshrined in our hearts, may we find more love for Him every next day, may we serve Him more and more this year and forever, and may He bless us with the ability to talk about Him, spread His fame to one and all :))

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP