Wednesday, December 01, 2010

கண்ணா நீ அறிவாயோ?



ஒவ்வொன்றாய்ச் சேர்க்கின்றேன்
உயிர்ப்பூவில் கோர்க்கின்றேன்
கண்ணா நீ அறிவாயோ?
சூடிக் கொள்ள வருவாயோ?

வான்உலவும் மேகத்தை அழைத்து
மழைநீரைச் சேர்க்கின்றேன்
அதிகாலைப் பனித்துளி யோடு
விழிநீரில் கோர்க்கின்றேன்

குழல்வழியும் இசையினைப் பிரித்து
உன்சுவாசம் சேர்க்கின்றேன்
உன்னைத் தொட்ட தென்றலைஎந்தன்
நீள்மூச்சில் கோர்க்கின்றேன்

இதழ்விரியும் பூக்களை எடுத்து
உன்முறுவல் சேர்க்கின்றேன்
சலசலக்கும் ஆற்றின் ஒலியில்
உன்சிரிப்பைக் கோர்க்கின்றேன்

கீழ்வானச் சிவப்பை விழியில்
உறங்காமல் சேர்க்கின்றேன்
உயிர் வருத்தும் ஏக்கத்தை அதிலே
கனவாக்கிக் கோர்க்கின்றேன்

ஒவ்வொன்றாய்ச் சேர்க்கின்றேன்
உயிர்ப்பூவில் கோர்க்கின்றேன்
கண்ணா நீ அறிவாயோ?
சூடிக் கொள்ள வருவாயோ?

--கவிநயா

113 comments :

Radha said...

Nice one. Though the Lord has spent time in so many other places (Mathura, Dwaraka etc) looks like His sports in Brindavan is most attracting for most of the devotees...

In Love With Krishna said...

Beautiful!
left me shivering in joy, keep wrting!! :)

நாடி நாடி நரசிங்கா! said...

deep lines:)

Kavinaya said...

//looks like His sports in Brindavan is most attracting for most of the devotees...//

உண்மைதான் ராதா :) வாசிப்புக்கு நன்றி.

Kavinaya said...

// In Love With Krishna said...

Beautiful!
left me shivering in joy, keep wrting!! :)//

ரசனைக்கு மிக்க நன்றி :)

Kavinaya said...

//deep lines:)//

அப்படின்னா என்னன்னு தெரியலை ராஜேஷ் :) ஆனா வாசித்ததற்கு நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குழல் வழியும் இசையினைப் பிரித்து
உன் சுவாசம் சேர்க்கின்றேன்//

//கீழ்வானச் சிவப்பை விழியில்
உறங்காமல் சேர்க்கின்றேன்//

//உன்னைத் தொட்ட தென்றலை என்
நீள் மூச்சில் கோர்க்கின்றேன்//

கவிக்கா கவியே கவி!
- இப்படிக்கு ரவி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அதிகாலைப் பனித்துளியில்
விழிநீரைச் சேர்க்கின்றேன்

கீழ்வானச் சிவப்பினிலே
விழிவேள்வி நோற்கின்றேன்

உனைத்தொட்ட காற்றால்-என்
உள்மூச்சு தீர்க்கின்றேன்

உன்னெச்சில் பட்டெந்தன்
உடம்பெல்லாம் வேர்க்கின்றேன்!

வேர்க்கின்றேன் தீர்க்கின்றேன்
வேல்முருகா வந்துவிடு!

வேர்க்கின்றேன் தீர்க்கின்றேன்
வந்துன்னைத் தந்துவிடு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//deep lines:)//

அப்படின்னா என்னன்னு தெரியலை ராஜேஷ் :)//

என்னக்கா, Deep Lines தெரியலையா?
"ஆழம் எது ஐயா, அந்தப் பொம்பளை மனசு தான்யா"! அதான் Deep Lines :)

Kavinaya said...

//கவிக்கா கவியே கவி!
- இப்படிக்கு ரவி!//

வரிக்கு வரி ரசித்த ரவிக்கு நன்றி :)
- இப்படிக்குக் கவி!

Kavinaya said...

//அதிகாலைப் பனித்துளியில்
விழிநீரைச் சேர்க்கின்றேன்

கீழ்வானச் சிவப்பினிலே
விழிவேள்வி நோற்கின்றேன்

உனைத்தொட்ட காற்றால்-என்
உள்மூச்சு தீர்க்கின்றேன்

உன்னெச்சில் பட்டெந்தன்
உடம்பெல்லாம் வேர்க்கின்றேன்!//

கலக்கல்ஸ்!

வருவான் வருவான்... கொஞ்சம் வெயிட்டீஸ்!

Kavinaya said...

//"ஆழம் எது ஐயா, அந்தப் பொம்பளை மனசு தான்யா"! அதான் Deep Lines :)//

ஹ்ம்... அப்படித்தான் ஏதாச்சும் இருக்கும்னு நினைச்சேன் :) நன்றி கண்ணா.

நாடி நாடி நரசிங்கா! said...

கண்ணா உன்னைத் தொட்ட தென்றலை எந்தன்
நீள்மூச்சில் கோர்க்கின்றேன்:)

Ex: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளின் மேல் பட்ட காற்றை அப்படியே பிடித்து மூச்சில் கோர்த்து பார்த்தால் எப்படி இருக்கும். :)

இந்த வரிகள் அருமை . அதே தான் ஆழமான வரிகள் :)

In Love With Krishna said...

Narasimmarin Naalaayiram: Ex: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளின் மேல் பட்ட காற்றை அப்படியே பிடித்து மூச்சில் கோர்த்து பார்த்தால் எப்படி இருக்கும். :)
Wow!! :) :) :) :)
Avar thirumeni-yai alangarikkum pookal-in narumanathai ungal swasa kaatril korthu paaarungal... :)
avarukkendre oru mayakkum narumanam undu :)))

மாதேவி said...

நைஸ் கண்ணா.

sury siva said...

incredible poetic ecstacy !!
wait for a while to listen to this
in Raag Neelambari
subbu rathinam.
http://menakasury.blogspot.com

Kavinaya said...

//Ex: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளின் மேல் பட்ட காற்றை அப்படியே பிடித்து மூச்சில் கோர்த்து பார்த்தால் எப்படி இருக்கும். :)//

ஆஹா.. :)

//இந்த வரிகள் அருமை . அதே தான் ஆழமான வரிகள் :)//

நன்றி ராஜேஷ் :)

Kavinaya said...

//நைஸ் கண்ணா.//

கண்ணன் சார்பில் நன்றி மாதேவி :)

Kavinaya said...

//incredible poetic ecstacy !!//

நன்றி சுப்பு தாத்தா!

//wait for a while to listen to this
in Raag Neelambari//

http://www.youtube.com/watch?v=pGpJOxZiuCY

நீலாம்பரி ராகத்தில் பொருத்தமாக, அழகுப் படங்களுடன் பாடித் தந்தமைக்கு நன்றிகள் பல, தாத்தா! பாடல் அருமை.

Radha said...

Three people should be immediately banned from stepping anywhere near the abode of Triplicane Badsha.
1. Rajesh
2. In love with Krishna
3. Kavinaya Akka
விட்டா பார்த்தசாரதியை மொத்தமா கபளீகரம் செய்துடுவாங்க போல இருக்கு.
Well, silent spectators KRS, Kumaran and Radhamohan should also be banned...
~
Order issued by,
Satyabama in Radhamohan

Radha said...

Dear Bama,
Triplicane is not Dwaraka. This place - Brinda Aranyakam - is verily Brindavan where Radha reigns supreme. So you can't issue orders like that.
~
Order cancelled by,
Rukmini in Radhamohan

Radha said...

Dear Radhamohan,
You are sufferring from MPD. Please consult a doctor immediately.
~
With great concern,
Radhamohan in Radhamohan

Radha said...

ஆம். "வைத்யோ நாராயண ஹரி:"
நிச்சயம் இன்று திருவல்லிக்கேணி செல்ல வேண்டும்.
~
Radha in Radhamohan

Radha said...

சுப்பு தாத்தா,
உங்கள் குரல் எனக்கு முசிரியின் குரலை (later days) நினைவூட்டுகிறது. நிச்சயமா காலை வாரி விடலை. :-)
அடுத்த பதிவில் முசிரி பாடிய பாடல் ஒன்றினை பதிவு செய்கிறேன்.
அன்புடன்,
ராதாமோகன்

sury siva said...

//சுப்பு தாத்தா,
உங்கள் குரல் எனக்கு முசிரியின் குரலை (later days) நினைவூட்டுகிறது. நிச்சயமா காலை வாரி விடலை. :-)//

வயசு 70 ஐ நெருங்கிட்டிருக்கு. பல்லோ சுத்தமா அஞ்சு ஆறு தான் பாக்கி இருக்கு.
குரலோ எப்பவோ ஜூட் வாங்கின்டு போயிடுத்து. இன்னமும் இருப்பது
பாடணும்னு ஒரு ஆசை தான்.

குரல்லே பிசிறு அடிக்கிரது அப்படின்னு என்னோட தங்க என் சின்ன வயசிலேயே
சொல்லுவா. ஆனா முசிறி இருக்கார்னு நீங்க சொல்றது !!!!!

பாவம் முசிறி.

சுப்பு தாத்தா.
http://kandhanaithuthi.blogspot.com

நாடி நாடி நரசிங்கா! said...

:)

In Love With Krishna said...

@Radhamohan: //விட்டா பார்த்தசாரதியை மொத்தமா கபளீகரம் செய்துடுவாங்க போல இருக்கு.//
Haiyyo...en ParthaSarathy-yai sollaamal veru yaarai solvadhaam????
En ParthaSarathy-ya oru naalaikku pathu murai-yavudhu damage seyyaamal enakku thookam varadhe?!!!

//Order cancelled by,
Rukmini in Radhamohan//

En Thaayar-e enakku support-a?? Thankyou! Thankyou! :))

Radha said...

//ஆனா முசிறி இருக்கார்னு நீங்க சொல்றது !!!!! //
நிதானமான நடையில் ஒற்றுமை...நிதானமாக பாடுவதை கேட்பதற்கு எனக்கு பிடித்திருக்கிறது. மற்றபடி நீங்கள் சொல்லும் குறைகள் எதையும் மறுப்பதற்கில்லை. :-)

Kavinaya said...

ராதா... ராதா... என்னத்தைச் சொல்றது? :)

அது சரி... திருவல்லிக்கேணி போனீங்களா? அந்த தென்றலை கொஞ்சம் இந்தப் பக்கம் அனுப்பி வைங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Order issued by,
Satyabama in Radhamohan//

//Order cancelled by,
Rukmini in Radhamohan//

:)
அடடா...
பாமா கருணையே உருவான பூமிப் பிராட்டி ஆயிற்றே! என் தோழி கோதை ஆயிற்றே! நாம தூங்கினாலும், மூஞ்சில தண்ணி தெளிச்சி, நாலு குத்து குத்தி, பேய்ப் பெண்ணே-ன்னு பாட்டு பாடி, எழுப்பி, கூட்டிக்கிட்டு போவாளே! அவளா Ban பண்ணுவா? நோ நோ நோ! :)

1. Rajesh
2. In love with Krishna
3. Kavinaya Akka
Also
KRS
Kumaran
& this dakaldi Radha Mohan - should be definitely banned near the gates of Triplicane Badsha!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அவளே சொல்றா-ன்னா சும்மா இல்ல! அவளா Ban பண்ணுவா? அவ Fan பண்ணுவா!
எங்கள் நெஞ்சிலே நின்று எரிகிறானே! அதை Fan பண்ணுறா! அதான்!

Ban செய்த பின், உள்ளே நுழைய முடியாமல்....
1. Rajesh - வாகன மண்டபத்திலேயே நின்று ஆடி ஆடி அகம் கரைந்து...
2. In love with Krishna - துளசி மாலையைச் சொடுக்கி, அவன் மேல் வீசி, அவனை முடிச்சு போட்டு, வாடா டேய்- என்று வெளியே இழுக்க...
3. Kavinaya Akka - தன் கோவிந்தக் கிளியைக் கிள்ளி விட, அதுவும் உலகளந்தா உலகளந்தா என்று ஹைப் பிட்சில் கத்த...

Also
4. Kumaran - அங்கேயே பதிவு போட்டு, கவிகள் பாடி நடனமாட...
5. dakaldi Radha Mohan - வாயில் பாதி சர்க்கரைப் பொங்கலும் பாதி கிரிதாரியுமாய்...கண்ணா கண்ணா என்று கத்த...

6. KRS - ஓ...என்னைத் தான் இத்தனை பேரும் கண்ணா கண்ணா என்று அழைச்சீங்களோ என்று தன் முருகனோடு சிரித்துக் கொண்டே முன்னே வர...

KRS-க்கு பயந்து போன அந்த மீசை பார்த்த சாரதி.....

Banஆவது ஒன்றாவது என்று அவனே அலறி அடித்துக் கொண்டு வெளியே வர...

அவனோடு அவன் உத்தரீயம் புரண்டு தரையெல்லாம் ஜொலி ஜொலிக்க...
துளசீ வாசம் கருவறைக்கு வெளியில் வந்து, மொத்த ஊருக்கும் வாசம் வீச...

அவன் வேர்த்த நீரே தீர்த்தமாக
அவன் குதித்து வந்த அடியே சடாரியாக...

வந்து நின்ற மீசையான்
Ban செய்யப்பட்ட மக்கள் அறுவரையும் கூல் ட்வுன் செய்ய,
தன் மார்பில் உள்ள ரோஜாப் பூவினை எடுத்து, அதைத் தன் மூச்சுக்குள் இழுத்து முகர்ந்து பார்த்து, கொடுக்க மனசில்லாமல்..பயந்து கொண்டே...

ரோஜாவை லஞ்சம் கொடுத்து தஞ்சம் கொடுக்கிறான்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இதோ அந்த மீசையான் பயந்து குதித்து வரும் காட்சி...

அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தான்!
ஆனைபரி மேல்-அழகன் வந்தான் வந்தான்!

கச்சிதன்னில் கண்கொடுக்கும் பெருமாள் வந்தான்!
கருதவரம் தரும்வரதப் பெருமாள் வந்தான்!

முத்திமழை பொழியும்முகில் வண்ணன் வந்தான்!
மூலம்-என ஓலம்-இட வல்லான் வந்தான்!

உத்தர வேதிக்குள்ளே உதித்தான் வந்தான்!
உம்பர்தொழும் கழலுடையான் வந்தான் தாமே!

வென்றி வில்லும் வாளும் தண்டும்
சங்கோடு சக்கரமும்
இன்று வந்து என் நெஞ்சம் நிறைந்தது!
நெஞ்சுள்ளும் நீங்காது நீங்காதே!

உன் கோல நீள் கொடி மூக்கும்,
தாமரைக் கண்ணும், கனி வாயும்,
நீல மேனியும், நான்கு தோளும், ஐயோ........வந்து என் நெஞ்சம் நிறைந்ததுவே!

Kavinaya said...

//இதோ அந்த மீசையான் பயந்து குதித்து வரும் காட்சி...

அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தான்!
ஆனைபரி மேல்-அழகன் வந்தான் வந்தான்!

கச்சிதன்னில் கண்கொடுக்கும் பெருமாள் வந்தான்!
கருதவரம் தரும்வரதப் பெருமாள் வந்தான்!

முத்திமழை பொழியும்முகில் வண்ணன் வந்தான்!
மூலம்-என ஓலம்-இட வல்லான் வந்தான்!

உத்தர வேதிக்குள்ளே உதித்தான் வந்தான்!
உம்பர்தொழும் கழலுடையான் வந்தான் தாமே!

வென்றி வில்லும் வாளும் தண்டும்
சங்கோடு சக்கரமும்
இன்று வந்து என் நெஞ்சம் நிறைந்தது!
நெஞ்சுள்ளும் நீங்காது நீங்காதே!

உன் கோல நீள் கொடி மூக்கும்,
தாமரைக் கண்ணும், கனி வாயும்,
நீல மேனியும், நான்கு தோளும், ஐயோ........வந்து என் நெஞ்சம் நிறைந்ததுவே!//

அவன்
கோல எழில் படித்து
அவன் பதம் பிடித்து
மெய் விதிர் விதிர்த்து
நின்ற என்நெஞ்சமும் நிறைந்தது.

கண்ணா நீ நீடுழி வாழி!

sury siva said...

// அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தான்!
ஆனைபரி மேல்-அழகன் வந்தான் வந்தான்!//

ஆனந்த பைரவியிலே எனைப்பாடச்சொன்னான்.
ஆனந்தக் களிப்பிலே எனை மெய்மறக்கச் செய்தான்.



ஆஹா ! ஆஹா !!
என்ன ஒரு பாடல் !!

சுப்பு தாத்தா.
http://menakasury.blogspot.com

நாடி நாடி நரசிங்கா! said...

dakaldi Radha Mohan - வாயில் பாதி சர்க்கரைப் பொங்கலும் பாதி கிரிதாரியுமாய்...கண்ணா கண்ணா என்று கத்த..:)

இத படிச்சவுடன் அறியாமலே சிரிச்சிட்டேன். super:))

In Love With Krishna said...

@KRS: No words for your imagination. :)
//வென்றி வில்லும் வாளும் தண்டும்
சங்கோடு சக்கரமும்//
// ... நான்கு தோளும், ஐயோ........வந்து என் நெஞ்சம் நிறைந்ததுவே!//

Romba azhaga kavithai ezhudhireenga, but i think it's a long time since you saw PSP...avarukku edhu chakram, naangu thozhgal ellam???
En Kannan-ache Parthasarathy...avanukku chakram ellam thevaiyillai makkalai adiyodu thorkadikka, oru chinna sirippe podhum :)

Radha said...

//dakaldi Radha Mohan - வாயில் பாதி சர்க்கரைப் பொங்கலும் பாதி கிரிதாரியுமாய்...கண்ணா கண்ணா என்று கத்த..:)

இத படிச்சவுடன் அறியாமலே சிரிச்சிட்டேன். super:)) //
ம்ம்...என்னை வெச்சி காமடி நடக்குதா... நடக்கட்டும் நடக்கட்டும்...
எல்லாம் நல்லா இருக்கு...ஆனா அந்தக் கிளியை யாரும் கிள்ளி விட வேணாம். லேசா தடவி கொடுத்தாலே போதும். இரண்டு பதிவுக்கு முன்னாடி பட்டினி கிடந்து "உலகளந்தானே" என்று கதறிய அந்த கிளிக்கு பழம் கொடுக்கவே கண்ணன் வந்தான்.
ஆள் ஆளுக்கு நினைப்பில் சுற்றுகிறீர்களே. ;-)

Radha said...

//avanukku chakram ellam thevaiyillai makkalai adiyodu thorkadikka, oru chinna sirippe podhum :) //

Nice comment sister ! :-)

Ravi,
Pls don't defend your poem. I like this school kid's comment. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Ravi,
Pls don't defend your poem//

Itz not my poem
Itz a mix of Desika's poem + aazhwar paasuram :)

So, I should now defend it by playing with the school kid, which I like very much like that meesaiyaan :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆள் ஆளுக்கு நினைப்பில் சுற்றுகிறீர்களே. ;-)//

சுற்றுகிறீ"களே" இல்லை!
சுற்றுகி"றோம்" :)

//இரண்டு பதிவுக்கு முன்னாடி பட்டினி கிடந்து "உலகளந்தானே" என்று கதறிய அந்த கிளிக்கு பழம் கொடுக்கவே கண்ணன் வந்தான்//

அடப் பாவி! பாட்ஷாவை இப்படிப் போட்டுக் கொடுக்கலாமா? ரெண்டு பதிவு போட்டு வெயிட் பண்ணாப் பிறகு தான், அவன் வந்து சாப்பாடே போடுவான்-ன்னா சொல்ற, எங்க பாட்ஷாவைப் பார்த்து?

அவன் அப்படியெல்லாம் இல்ல ராதா! நாங்கள்/கிளி பசியால் வாடுவது அவனுக்குப் பொறுக்கவே பொறுக்காது! அதான் பிரசாதக் கடையைக் கோயிலுக்குப் பின்னால் வைக்காமல், தன்னை வந்து பார்க்கும் முன்னமே வைத்துள்ளான்!
அதை முகர்ந்து கொண்டே, உண்டு கொண்டே வரிசையில் நிக்க வசதியாக! :)

அதிரசோ பார்த்த சாரத்யை நம:
லட்டுலோ பார்த்த சாரத்யை நம:
புளி யோதராப் பார்த்த சாரத்யை நம:
பொங்கலோ பார்த்த சாரத்யை நம:
வேய்ங் குழல்..ச்ச்சே தேன் குழல் பார்த்த சாரத்யை நம:
:)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Romba azhaga kavithai ezhudhireenga, but i think it's a long time since you saw PSP...//

@கள்வனின் காதலி...
கடேசியா PSP-யைப் பார்த்தது மூனு வாரத்துக்கு முன்னாடி, அதுவும் நம்ம ராதா மோகனோடு சேர்ந்து பார்த்தேன்! :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//avarukku edhu chakram, naangu thozhgal ellam???//

நல்லா யோசிச்சிப் பாருங்க!
PSP-க்கு சக்கரம் கிடையாதா? வேங்கட கிருஷ்ணனுக்குச் சக்கரம் கிடையாதா?

சங்கு சக்கரத்தோடு, பீஷ்மர் போட்ட மேக்கப்பில், ஊரு சுத்தற போக்கிரி PSP-யா? VNK-வா? :))

நாடி நாடி நரசிங்கா! said...

அதிரசோ பார்த்த சாரத்யை நம:
லட்டுலோ பார்த்த சாரத்யை நம:
புளி யோதராப் பார்த்த சாரத்யை நம:
பொங்கலோ பார்த்த சாரத்யை நம:
வேய்ங் குழல்..ச்ச்சே தேன் குழல் பார்த்த சாரத்யை நம:
:)

தயிர் சாதத்தை விட்டுடீங்களே.
பார்த்தசாரதி கோயில்ல மதிய நேரத்துக்கு போனா தயிர் சாதத்தை கொழச்சி கொழச்சி தருவாங்கேளே!

நாடி நாடி நரசிங்கா! said...

:)

In Love With Krishna said...

KRS: 'Meesaiyan' PSP-ya VK-ya??? :)))
Ippo enna pannuveenga!? :)

In Love With Krishna said...

//ஊரு சுத்தற போக்கிரி PSP-யா? //
Oor suthra velai-ellam PSP-kku dhaan, ippo kooda margazhi maadha thiruvizha-vaam, kilambitaaru... :)

Aana, ulle utkandhikittu sorry, ninukittu irukkiradhu VK dhaan...adhuvum ippo 'thiraiyin pin nirkindraay kanna' pol 'thirayin pin beauty parlour-il irukkai kanna" range-kku thailakappu vera :))
Neenga solra madhiri odi varanum-na VK dhaan varanum :))

In Love With Krishna said...

//நாங்கள்/கிளி பசியால் வாடுவது அவனுக்குப் பொறுக்கவே பொறுக்காது!//
Yes, andha pasi avarai paarka irundha, avar queu-vil kooda nirka vidamaataru ungala :)
Happens all the time with me :)

In Love With Krishna said...

@KRS: //Itz a mix of Desika's poem + aazhwar paasuram//
Explain with reference please!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//En Kannan-ache Parthasarathy...avanukku chakram ellam thevaiyillai makkalai adiyodu thorkadikka, oru chinna sirippe podhum :)//

:))
ஆமாம் கள்வனின் காதலி!
தோற்கடிக்க சின்னக் கள்ளச் சிரிப்பே போதும் தான்!
ஆனால் நம்மிடம் தோற்றுப் போக அவனுக்கு ஆசை! அதான் சக்கரம் எடுத்துக்கிட்டு, சவுன்ட் விட்டுக்கிட்டே வரான்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//KRS: 'Meesaiyan' PSP-ya VK-ya??? :)))
Ippo enna pannuveenga!? :)//

தோடா, கள்வனின் காதலி அடிக்கற லூட்டியைப் பாருங்க! :)

மீசையான் இருவரும் தான்!
VK-க்கு வெள்ளையா தெரியும்!
PSP-க்கு பீஷ்மர் போட்ட மேக்கப்பில் மீசையும் ஆசையும் துடிப்பது தெரியாது!
இப்போ என்ன பண்ணுவீங்க DSP-ச்சே-PSP? :)

In Love With Krishna said...

KRS says: //அதிரசோ பார்த்த சாரத்யை நம:
லட்டுலோ பார்த்த சாரத்யை நம:
புளி யோதராப் பார்த்த சாரத்யை நம:
பொங்கலோ பார்த்த சாரத்யை நம:
வேய்ங் குழல்..ச்ச்சே தேன் குழல் பார்த்த சாரத்யை நம://

Rajesh says: //தயிர் சாதத்தை விட்டுடீங்களே.//

ILWK says : :)))))

VenkataKrishnan says: Aamam, vitta menu card-e potriveengle neenga ellam serndhu?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Neenga solra madhiri odi varanum-na VK dhaan varanum :))//

PSP-யும் கருவறைல தான் இருப்பாரு! அதனால் நான் சொல்றா மாதிரி ஓடி வர PSPஆல முடியும்!
VK செம உசரம்! நான் சொல்றா மாதிரி ஓடியாந்தா, வாசப்படியில் தலை இடிச்சிப்பான்! அப்பறம் அவ்ளோ உசரமானவனுக்குத் தைலம் தேய்ச்சி, என் தோழிக்குத் தான் கை வலிக்கும்! அதுனால, நான் சொன்ன PSPயே ஓடி வரட்டும்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

முக்கியமான கேள்வி: (ராதா என்னைய அடிக்கப் போறான் :)

பார்த்தசாரதி-ன்னா உற்சவர் தானே! அவர் தானே பாரதப் போரில் ஆயுதம் தொடேன்-ன்னு சொன்னவர்! முகமெல்லாம் பீஷ்ம அம்பு வாங்கி நின்னவர்!

அப்பறம் எதுக்கு மூலவருக்கு மட்டும் சங்கைக் கொடுத்து,
ஒரிஜினல் அக்மார்க் பார்த்தசாரதிக்கு, ஆயுதம் தொடேன்-ன்னு சொன்னவருக்கு, முகத்தில் அம்பு வாங்கியவருக்கு, கையில் சங்கு+சக்கரம் இருக்கு?

கதை உடான்ஸா? :)

In Love With Krishna said...

//PSP-க்கு பீஷ்மர் போட்ட மேக்கப்பில் மீசையும் ஆசையும் துடிப்பது தெரியாது! //
No, no, no... PSP-yai paarunga- He is CLEAN SHAVED, with WAR-SCARS...
i'll tell you how...

Venkatakrishnan is Gitacharyan thirukolam, Manushya Vasudevan...

PSP is not in Gitacharyan thirukolam. That is why He holds chakra. But, wearing 'Bhishma's make-up' is His lila. The metal was recast so many times, but the scars remained.
It is Perumal's way of showing us that He will do anything for His devotees (like Arjuna) and accept even arrows from true devotees (like Bhishma).
It's like when Shivaji Ganesan did the role of 'Shivaji', he got the name Shivaji.
When he did the role, he was Chatrapathi Sivaji.
But, will he sport the same makeup always? No.
But, the name remained- 'Ganeshan' became 'Sivaji Ganesan;.

Ippo VK and PSP-kku vaanga...
VK- Geethacharyan thirukolam
PSP- Our dear Krishna, but we still call Him Parthasarathy because He had been Partha's Sarathy. While He still has the marks, the war is over long back- so no 'meesaiyan'.

In Love With Krishna said...

//கதை உடான்ஸா? :)//
KRS: Read my comment. :)

In Love With Krishna said...

//Ippo VK and PSP-kku vaanga...//
(Continued)
Original Parthasarathy-ellam kidaiyaadhu, VK and PSP both are original.

VK is like a photo of Perumal's Parthasarathy role
PSP is PSP only:)

That is why- VK has no scars- Bhagavad Gita was said at the BEGINNING, or BEFORE the war.
That is why 'meesaiyan', no chakra,...

But, PSP is after the war is over.
So, He has scars.
And, gone back to Vrindavan get-up of clean-shave. :)

Radha said...

ம்ம்ம்...என்ன நடக்குது இங்க? இதுக்கு முன்னாடி ராமர் பதிவு இருக்கு...போங்க போங்க... எல்லாரும் போயி ராமர் பாட்டு கேளுங்க...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இதுக்கு முன்னாடி ராமர் பதிவு இருக்கு...போங்க போங்க... எல்லாரும் போயி ராமர் பாட்டு கேளுங்க...//

no no!
naanga kavinaya akka post-kku thaan athiga comments pOduvOm! :)

//ம்ம்ம்...என்ன நடக்குது இங்க?//

இங்கே குணானுபவம் நடக்கின்றது!

பாருங்க கள்வனின் காதலி, கொஞ்சம் பேச விட்டா, என்னமா கலக்குறாங்க-ன்னு!
இதுக்குத் தான் அடியார் குழாத்தில் இப்படி பல விஷயங்களைப் போட்டு வாங்கணும்-ங்கிறது! கள்வனின் காதலி ரியலி கலக்கிங்ஸ்! :)

@IWLK - உங்களைக் கண்ணன் பாட்டில் பதிவுகள் போட அழைக்கிறோம்! அழைக்கிறான் மாதவன்! ஆனிரை மேய்த்தவன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//the war is over long back- so no 'meesaiyan'//

இது அநியாயம்!
அப்போ, சண்டைக்காகத் தான் மீசையா?
அவன் ஆயர் குலம் ஆச்சே! எப்பவும் மீசை வச்சியே தானே இருக்கணும்! :)

ஒத்துக்க மாட்ட்டோம்! பார்த்தசாரதி உற்சவருக்கும் மீசை உண்டு! அது முகப் பின்னங்களால் நமக்குச் சரியாத் தெரியலை போல! அடுத்த தபா வந்து அவனை இன்னும் ஆராயறோம்! அது வரை ராதா அவனுக்கு Gilette வாங்கிக் கொடுக்காமல் இருக்கவும்! :)

Radha said...

ம்ம்..சண்டை ஆகாம இருந்தா சரி தான்.
ராதாவின் தங்கமேயோ !
ராதாவின் வைரமேயோ !
ராதாவின் முத்தேயோ !
ராதாவின் பட்டேயோ !
ராதாவின் ஆருயிரேயோ !
கிருஷ்ணாவோ ! கிரிதாரியேயோ !!!
இங்கே யாரும் சண்ட போடாம பார்த்து கொள்ளவும்.:-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@ILWK
கணேசன்-ல்ல சிவாஜி ஒட்டிக்கிட்டாப் போல, கண்ணனிடம் பார்த்தசாரதி ஒட்டிக்கிச்சி!
ஆகா! என்ன அருமையான உவமை! இனி பின்னூட்டத்தில் மட்டும் கலக்கினாப் போதாது! நீங்க பதிவு எழுதியே ஆகணும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மக்கா...
ILWK சொன்னதின் தொகுப்பாக இதோ:

திருவல்லிக்கேணி மூலவர் = வேங்கட கிருஷ்ணன் = கீதை உபதேசிப்பது போல் நின்ற திருக்கோலம் = போர் துவங்கும் முன்னமேயே, அப்படியே Freeze ஆகி நின்று விட்ட Pose! அதான் முகத்தில் பீஷ்ம வடுக்கள் இல்லை!

மத்தபடி மீசை, உழவுகோல், குறுங்கத்தி எல்லாம் உண்டு! ஆயுதம் தொடேன் என்பதால் சங்கு மட்டும்! சக்கரம் இல்லை! மனிதன் போல் இரண்டே கைகள் தான்! மார்பிலே மட்டும் என்றுமே நீங்காத அவள்! அவளை வைத்து மட்டுமே தான் அவன் வெறும் மனிதன் அல்ல என்று அறிந்து கொள்ளலாம்! :)
------------------------------

உற்சவர் = பார்த்த சாரதி!
நண்பன் அருச்சனின் பொருட்டு, தன் முகத்தில் பீஷ்ம வடுக்களை வாங்கிக் கொண்டவர்!

நண்பனுக்காக, தன் சத்தியத்தையும் மீறத் துணிந்தவர்! ஆயுதம் தொடேன் என்ற சத்தியத்தையும் மீறி, சக்கரத்தைத் தூக்கியவர்! ஆனால் அழிக்க உபயோகிக்கவில்லை!
1. நண்பனை மாளாது அடித்தும், அவன் அவரை வீழ்த்தத் தயங்கியது கண்டு, தானே பீஷ்மரை வீழ்த்த, சக்கரம் தூக்கினார்! ஆனால் பயன்படுத்தவில்லை! பீஷ்ம சரணாகதிக்குப் பின் விட்டுவிட்டார்!
2. நண்பன் தற்கொலை செய்து கொள்ளப் போகும் நேரம்! அப்போதும் தன் சத்தியத்தை மீறி, அவன் உயிரைக் காக்கச் சக்கரம் தூக்கினார்! ஆனால் அழிக்கவில்லை! கதிரவனை மட்டும் மறைத்து, ஒரு திருப்புமுனை மட்டுமே உருவாக்கினார்! செயத்ரதனை மறைத்து வைத்தால், அருச்சுனன் தானே செத்து விடுவான் என்ற குயுக்திக் கூட்டத்தின் திட்டம் தவிடு பொடியானது!

உற்சவர் பார்த்தசாரதிக்கு நான்கு கரங்கள், சங்கு சக்கரம் எல்லாமே உண்டு! போர் முடிந்த பின்பும், வடுக்களை முகத்தில் தாங்கி நிற்பதால், பார்த்தசாரதி என்ற பேரும் கூடவே தங்கி விட்டது! ஆனால் அவன் அந்தக் கோலத்தில் பார்த்தனின் ரத சாரதி அல்ல! நம்முடைய மனச் சாரதி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இங்கே யாரும் சண்ட போடாம பார்த்து கொள்ளவும்.:-)//

வந்துட்டாருப்பா திருவிளையாடல் முத்துராமன்! :)
இங்கே சண்டை நடக்கிறதா என்ன? குணானுபவம் அல்லவோ நடக்கிறது? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//In Love With Krishna said...
@KRS: //Itz a mix of Desika's poem + aazhwar paasuram//
Explain with reference please!//

ஹிஹி!
இப்போ தான் மூனு வாரத்துக்கு முன்னாடி சென்னை வந்த போது, ராதாவுக்கு Explain பண்ணேன்! உங்களையும் அப்போ அல்லிக்கேணிக்கு கூப்பிட்டு இருக்கணுமோ? சரி, அடுத்த தபா! :)

நான் சொன்ன பாடல், காஞ்சிபுரம் வரதப் பெருமாள் மீது! திருச்சின்ன மாலை என்று தேசிகர் பாடுவது!

அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்!
கச்சி தன்னில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்
-என்றெல்லாம் வருதே! பார்க்கலையா?

அதைச் சும்மா அங்க இங்க மாத்தி, பாட்ஷா-வுக்கு Use பண்ணேன்! அம்புட்டு தான்! :)
முடிக்கும் போது நம்மாழ்வார் திருவாய்மொழியைச் சொல்லி முடித்தேன்! சங்கோடு சக்கரமும், இன்று வந்து என் கண்ணுள் நீங்காது! நெஞ்சுள்ளும் நீங்காது நீங்காதே!

@ராதா...கவிக்கா பதிவுக்கு 100 பின்னூட்டம் வந்துருச்சா? எண்ணிப் பாத்துச் சொல்லு! :)

Radha said...

Fantastic recap ! :-)
இன்னும் கொஞ்ச நாள்ல மூலவருக்கும் மீசை இருக்காது. தைல காப்பு முடிந்து திரை நீக்கும் பொழுது வெகு எளிமையான பிருந்தாவன கிருஷ்ணன் காட்சியளிப்பான். ஏகாதசி அன்று மறுபடியும் ராஜ அலங்காரம். இது வருடந்தோறும் நடைபெறுவது. ரொம்ப கஷ்டப்பட்டு ஒன்னும் பேசாம இருக்கேன். :-)

Kavinaya said...

//வெகு எளிமையான பிருந்தாவன கிருஷ்ணன்//

அவருதான் நம்ம favorite :)

//ரொம்ப கஷ்டப்பட்டு ஒன்னும் பேசாம இருக்கேன். :-)//

கேட்க நாங்க இருக்கும்போது ஏன் கஷ்ஷ்டப்பட்டு பேசாம இருக்கீங்க?

கண்ணனும், கள்வனின் காதலியும் கலக்குறாங்கல்ல? ராதாவும் சேரணும் :)

//ம்ம்ம்...என்ன நடக்குது இங்க? இதுக்கு முன்னாடி ராமர் பதிவு இருக்கு...போங்க போங்க... எல்லாரும் போயி ராமர் பாட்டு கேளுங்க...//

ராகவன் ரொம்ப பொறுமை; ரொம்ப அமைதி. இந்த க்ருஷ்ணன் இருக்கானே, அவன் தான்... :)

Radha said...

//இங்கே சண்டை நடக்கிறதா என்ன? குணானுபவம் அல்லவோ நடக்கிறது? :) //
ம்ம்...ஒத்து கொள்கிறேன். இப்போ தான் comments எல்லாம் படிச்சேன். திடீர்னு நிறைய comments பார்த்து இந்த கிளிக்கு கொஞ்சம் கிளி பிடித்து விட்டது. இப்போ தெளிந்து விட்டது. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ராகவன் ரொம்ப பொறுமை; ரொம்ப அமைதி. இந்த க்ருஷ்ணன் இருக்கானே, அவன் தான்... :)/

ஆமாம்-க்கா! என் இனிய தோழன் ஜி.ராகவன் ரொம்ப பொறுமை! ரொம்ப அமைதி! ரொம்ப நல்ல கோவக்கார, அடாவடி அமைதியான பையன்! என்னைப் போலவே :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//திடீர்னு நிறைய comments பார்த்து இந்த கிளிக்கு கொஞ்சம் கிளி பிடித்து விட்டது. இப்போ தெளிந்து விட்டது. :-)//

ஓ...ராதாக் கிளி, பாயசத்துக்குப் பதிலா வேற ஏதோ குடிச்சிருக்கும் போல! :)
கிளியின் கிலி தீர்த்த கவிக்கா வாழ்க! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இன்னும் கொஞ்ச நாள்ல மூலவருக்கும் மீசை இருக்காது//

அச்சிச்சோ!
மீசை இருந்தாத் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்! இந்த முருகன் இப்போ நான் சொல்லிச் சொல்லித் தான் மீசை வச்சிக்க ஆரம்பிச்சிருக்கான்! :)

//தைல காப்பு முடிந்து திரை நீக்கும் பொழுது வெகு எளிமையான பிருந்தாவன கிருஷ்ணன் காட்சியளிப்பான்//

அப்போ, அவ எப்படி இருப்பா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ரொம்ப கஷ்டப்பட்டு ஒன்னும் பேசாம இருக்கேன். :-)//

உன் பின்னூட்டம் என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த வந்த என்னை ஏமாற்றாதே!
பேசு ராதா பேசு! :))

Kavinaya said...

//உன் பின்னூட்டம் என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த வந்த என்னை ஏமாற்றாதே!
பேசு ராதா பேசு! :))//

:)))

எல்லாரும் சேர்ந்து ராதாவுக்கு ஒரு பெரீய்ய்ய்ய்ய்அ "ஓ!" போடுங்க :)

Radha said...

ம்ம்..தரவு கிரவு அப்படின்னு எதுவும் கேட்டு தொல்லை செய்யக் கூடாது. :-)
இது எல்லாம் பெரிய க்யூ-ல நிற்கும் பொழுது அடியார்கள் சொல்ற கதை. மூலவரை பார்த்தசாரதி அப்படின்னு சொல்ற பேர் நிறைய. அவரும் பார்த்தனுக்கு சாரதியாய் இருந்துட்டு தான் வந்து இருக்கார்...ரொம்ப வயசானவர்.
[quiz question: how long did Krishna stay on earth?] மீசை கூட வெள்ளையா இருக்கும். :-)
மகாபாரத போர் முடிஞ்சபுறம் குளிர்ச்சியா இருக்கற இடம் தேடிட்டு இந்த க்ஷேத்ரம் வரார். அவரை தேடிட்டு ருக்மிணியும் இங்க வந்து சேர்றா...போரில் நிறைய அம்பு காயங்கள் பட்டு ஒரே ரத்த களரியாகி இருக்கும் திருமேனியை பார்த்து பதறி போயி பெருமாலுடன் பெருமானை அணைத்து கொள்கிறாள். ருக்மிணி பிராட்டியின் ப்ரேமையிலேயே கண்ணனின்(மூலவரின்) காயங்கள் மறைந்து போயினவாம்.

Radha said...

சரி. இப்போ வேற மாதிரி பார்க்கலாம். பகவத் கீதையை உபதேசம் செய்த "கீதாசார்யன்" தான் மூலவர் அப்படின்னா அவரும் பார்த்தசாரதி தான். அர்ஜுனன் தேரை ஓட்டிட்டு போயி ரெண்டு சேனைகளுக்கு நடுவே நிறுத்த சொல்றான். இவரும் அப்படியே செய்யறார்.
அதுக்கப்பறம் தான் கீதை உபதேசம். கீதை உபதேசத்துக்கு முன்னாடியே பார்த்தசாரதி ஆயிடறார். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பதறி போயி பெருமாலுடன் பெருமானை அணைத்து கொள்கிறாள். ருக்மிணி பிராட்டியின் ப்ரேமையிலேயே கண்ணனின்(மூலவரின்) காயங்கள் மறைந்து போயினவாம்//

Wow!
அப்படியே அவனுக்கு ஆடையானாள் போலும்! ஒத்திக் கொடுத்து ஒன்றுமில்லாமல் செய்து விட்டாள்!
இதைத் தான் முருகனருள் பாட்டு வலைப்பூவில் பதிவு போட்டு வாரேன்!
http://muruganarul.blogspot.com/2010/12/or.html
நீயும் அதே சொல்லி இருக்க! ராதா நீ வாழ்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// Radha said...
ம்ம்..தரவு கிரவு அப்படின்னு எதுவும் கேட்டு தொல்லை செய்யக் கூடாது. :-)//

அதெல்லாம் Logical Statements-க்குத் தான் கேட்போம்! :)
உணர்வுகளுக்கு தரவு இல்லை! உறவு உண்டு!

Kavinaya said...

//ருக்மிணி பிராட்டியின் ப்ரேமையிலேயே கண்ணனின்(மூலவரின்) காயங்கள் மறைந்து போயினவாம்.//

how sweet!!! அதேதான் நானும் சொல்ல வந்தேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ருக்மிணி பிராட்டியின் ப்ரேமையிலேயே கண்ணனின்(மூலவரின்) காயங்கள் மறைந்து போயினவாம்//

என்னைப் போல ஒரு அப்பாவிச் சிறுவன், வாயை வைத்துக் கொண்டு சும்மா இராமல், ராதா என்னும் மேதையிடம், உரிமை எடுத்துக்கிட்டு கேட்டே விட்டான்....

என்னாது-ங்கறீங்களா?....

அதே ருக்மிணிப் பிராட்டி உற்சவரையும் அணைச்சிருந்தா, அவர் காயங்களும் மறைஞ்சி போய், ஜாலியா இருந்துருப்பாரு-ல்ல? ஏன் அவரை மட்டும் மிஸ் பண்ணிட்டாங்க? :))))))))

Radha said...

இப்ப மட்டும் உற்சவர்க்கு ஜாலிக்கு என்ன குறைச்சல். உலகமே பச்சதாபபட்டு வந்து மயங்கி விழுது...

@IWLK
"பீஷ்மரை "true devotee" அப்படின்னு சொல்றீங்களே...அது மாதிரி அன்பர்கள், இப்படி அம்பாலயா அடிப்பாங்க? அன்பால தான அடிப்பாங்க? இவரு எப்படி true devotee ஆக முடியும்?" இப்படின்னு முன்னாடி கே.ஆர்.எஸ் கேட்டாரு. உங்க கிட்ட ஏதாவது பதில் இருக்கா?

Radha said...

ILWK எல்லாம் தட்டச்சு செய்ய ரொம்ப கஷ்டமா இருக்கு. பேசாம KK (Kalvanin Kaadhali) அப்படின்னு மாத்திடலாம். :-)

In Love With Krishna said...

//"பீஷ்மரை "true devotee" அப்படின்னு சொல்றீங்களே...அது மாதிரி அன்பர்கள், இப்படி அம்பாலயா அடிப்பாங்க?//
Bhishmar than velaiyai seydha karma yogi.
Perumal-in bhakthar dhaan. Avar dhaane thandhar namakkellam Vishnu Sahasranamam.
Avar seydha ore thavaru- Perumal dharmam side-la vandhu gambheerama ninna podhum kooda kadamai, kanniyam, kattupaadu endru alaindhar, poraadinar.

Poril kanda kanda rascal ellam ParthaSarathy mel ambu evvinaargal. Adhai ellam PSP etrukondaara? No, no, no...
Only when Bhishma's arrows touched Him did they make scars. Why?
Arjunan 'Haiyyo, idhu Bhishmar aache'-nnu bhayathodu poradiyapodhu PSP took His chakra and ran towards Bhisma.
Appo, Bhishmar ayudhangalai ellam keele vaithu saran adainthaar.
Bhishmar charanadaintha bhakthar dhaan. Ana, Perumal-ai en ambugalaal kaayapadithinaar- i don't know.
Either, he was totally arrogant and stupid, or, he thought he was instigating PSP to finally kill him with His own hands.
Neengale correct reason pick pannikonga!!!

In Love With Krishna said...

@Radha: Thanks for the explanation. i never knew!
//அதே ருக்மிணிப் பிராட்டி உற்சவரையும் அணைச்சிருந்தா, அவர் காயங்களும் மறைஞ்சி போய், ஜாலியா இருந்துருப்பாரு-ல்ல?//

Ada ponga! Nithya utsava moorthy-yana PSP-kku illadha jolly-ya??

btw, veera thalumb-am: adhan adhai perisa kaatikittu oor suthraaru PSP. Rukmini piratti solli ketkama ponavar-llam naam solli ketpaara enna?

Radha said...

Thanks KK.
I like this explanation though.
http://www.indiadivine.org/audarya/sri-vaishnava-forum/124306-no-subject.html
---------------snip------------------
On the 9th day of the war, Bhishma promptly began mowing down the
Pandava army so that he could confront Arjuna and get a Darshan of the Lord.
Since Bhishma could not offer flowers to the Lord, he resolved to use his
arrows as flowers and chant the name of the Lord while aiming each arrow
at the Lord. In this manner Bhishma, shot 108 arrows at the Lord while
uttering the Lord's name before shooting each arrow. Sri Veda Vyasa
portrays the Lord as being extremely beautiful when each arrow frm
Bhishma drew his blood. When the last arrow
had been shot, the Lord Madhava was pleased with his devotion and decided to
appear before his devotee. Feigning anger on Arjuna (for apparently being
soft in his methods of fighting against Bhishma), the Lord set out with
Chakram in hand to appear before Bhishma and bless him.
---------------snip------------------

In Love With Krishna said...

@Radha: //இன்னும் கொஞ்ச நாள்ல மூலவருக்கும் மீசை இருக்காது. //
Yes, so neenga Gilette vaangi kudukkavendam, as KRS said.
Avare Gilette use pannuvaaru.
btw, PSP utsavar-kku no meesai.
Adhuku-nnu neenga kovil pohira varaikkum ellam wait panna vendam. Just see here:
http://mydearestkrishna.blogspot.com/2010/09/break-from-my-usual-post.html

நாடி நாடி நரசிங்கா! said...

o my god nice nice comments:))superb:)

நாடி நாடி நரசிங்கா! said...

Kavi akka said:_எல்லாரும் சேர்ந்து ராதாவுக்கு ஒரு பெரீய்ய்ய்ய்ய்அ "ஓ!" போடுங்க :)

போடாம விட்ருவோமா:)
நமெக்கெல்லாம் நல்ல நல்ல அறுபுதமான கண்ணன் பாடல்களை தந்தவராச்சே!

அதனால அனுமன், நரசிம்மர்=பார்த்தசாரதி இவர்களுடன் சேர்ந்து போடுவோம் பெரீய்ய்ய்ய்ய்அ "ஓ!" ஒ!

அடியார்கள் வாழ! அரங்க நகர் வாழ!

(note: till 21-dec- - iam not available - buy)

In Love With Krishna said...

@KRS:
//@IWLK - உங்களைக் கண்ணன் பாட்டில் பதிவுகள் போட அழைக்கிறோம்! அழைக்கிறான் மாதவன்! ஆனிரை மேய்த்தவன்!//
Neenga koopadreenga, but not Him.
Why?
He knows that enakku Tamil 'konjam konjam' dhaan theriyum.
Adhavudhu, thanks to Divya Prabandham, i can read and understand. Ana writing? No, no no...
btw, therinja konjam tamil also enga amma potta rule kaaranamaaga dhaan- no english at home (when i was abroad). Koodave, slokam padikkanum-nu tamizh solli kuduthaanga.
So, en madhavan enakkaga english kavithaigal kettukittu irukaaru en blog-la. :)
So, thanks (a lot), but no thanks. :)

In Love With Krishna said...

@Radha:
//On the 9th day of the war, Bhishma promptly began mowing down the
Pandava army so that he could confront Arjuna and get a Darshan of the Lord.
Since Bhishma could not offer flowers to the Lord, he resolved to use his
arrows as flowers and chant the name of the Lord while aiming each arrow
at the Lord. In this manner Bhishma, shot 108 arrows at the Lord while
uttering the Lord's name before shooting each arrow. Sri Veda Vyasa
portrays the Lord as being extremely beautiful when each arrow frm
Bhishma drew his blood. When the last arrow
had been shot, the Lord Madhava was pleased with his devotion and decided to
appear before his devotee. Feigning anger on Arjuna (for apparently being
soft in his methods of fighting against Bhishma), the Lord set out with
Chakram in hand to appear before Bhishma and bless him.//

:)))))))))))
My PSP my PSP dhaan.
Evlo nallavar paarungalein????

Tnx for the research work :)

Radha said...

//மூலவருக்கும் மீசை இருக்காது //
When I said "மூலவருக்கும்" I had clearly indicated my side. :-)
கேஆர்.எஸ் கிட்ட ஆரம்பத்துலையே வேணாம்னு சொன்னேன். கேட்காமே மிரண்டு பிடிச்சி வேணும்னு போயி பல்ப் வாங்கிகிட்டான். :-)

Radha said...

@KK,
I am not aware of any rule in Kannan Songs which prevents us from blogging in English. If there is any, it has been broken now. :-)

Kavinaya said...

உங்கள் அனைவராலும் எனக்கும் குணானுபவம் கிடைக்கிறது. மிக மிக நன்றி!

In Love With Krishna said...

//இங்கே குணானுபவம் நடக்கின்றது!//
//உங்கள் அனைவராலும் எனக்கும் குணானுபவம் கிடைக்கிறது.//

Gunanubhavam- apadinna?!
Anubhavam ulla yevarenum explantion kudukkavum!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//"பீஷ்மரை "true devotee" அப்படின்னு சொல்றீங்களே...அது மாதிரி அன்பர்கள், இப்படி அம்பாலயா அடிப்பாங்க? அன்பால தான அடிப்பாங்க? இவரு எப்படி true devotee ஆக முடியும்?" இப்படின்னு முன்னாடி கே.ஆர்.எஸ் கேட்டாரு. உங்க கிட்ட ஏதாவது பதில் இருக்கா?//

ராதா
ஒருவர் சொல்லாத ஒன்றினை, தன் வசதிக்கு ஏற்றாற் போல் வார்த்தைகளால் திரித்து, விளக்கம் கேட்பது ஏலாது, ஏலாது!

பீஷ்மரை "true devotee" அல்ல என்று எப்போதுமே நான் சொன்னதில்லை! அடியார்களை அளவுகோலால் அளப்பது அடியார் பழித்தலாகும்! இன்னொரு முறை சரியாக உள்வாங்கிக் கொள்!

"பீஷ்மரை நோக்கி, எம்பெருமான் பார்த்தசாரதியானவன் சக்கரம் தூக்கிய போது தான், மகா ஞான/கர்ம யோகியாகிய அவருக்குப் புத்தியே வந்தது!" - இது தான் நான் முன்பு சொன்ன வாசகம்!
ஆனானப்பட்ட பீஷ்மரைப் போய் புத்தி வந்தது என்று எழுதலாமா என்று அப்போது பாய்ந்து வந்தாய்!

பீஷ்மர் ஞான யோகி, கர்மா யோகி, தன் கர்மாக்களில் மட்டும் தலை சிறந்து விளங்கினார்! ஆனால் அதையும் தாண்டி, அவையெல்லாம் எம்பெருமானுக்கே அர்ப்பணம் என்ற மனநிலை வராதவராய் இருந்தார்!

பீஷ்மர், "தான்" செய்த சத்தியம், "தான்" செய்த சத்தியம் என்று, கர்ம யோகத்தில் தன்னை முன்னிறுத்தியதால், அஸ்தினாபுர அழிவுக்குத் தானே ஒரு காரணமாகிப் போனார்! அடியவர்(ள்) சபை நடுவில் அல்லல்படும் போது, ஓரளவு தான் பேச முடிந்தது! "தான்" செய்த சத்தியம் அதற்கு மேல் கடமையாற்ற விடவில்லை!

ஆனால், கண்ணனோ தன் பக்தனுக்காக, "தான்" செய்த சத்தியத்தையும் மீறத் துணிந்தான்! ஆயுதம் தொடேன் என்றவன் பீஷ்மரை நோக்கிச் சக்கரம் தூக்க முனைந்தான்!

இதைப் பார்த்த போது தான் ஆனானப்பட்ட பீஷ்மருக்கே "புத்தி" வந்தது! ஒரு பெரும் நன்மைக்காக, "தன்" சத்தியத்தைக் கைவிட்டு, அதனால் தனக்குப் பாவம் ஏதேனும் வந்தால், அதையும் ஏற்றுக் கொள்ளும் உள்ளம், கண்ணனைப் போல், தனக்கு இல்லையே, என்று அன்று தான் புரிந்து கொண்டார்! சரணாகத நிலை அவருக்கு ஏற்பட்டது!

அன்றிலிருந்து, அவர் மனத்திலே பெரும் மாற்றம்!
இது நாள் வரை...வீர புருஷ, சத்திய வாக்கு காப்பாற்றிய பீஷ்மர்!\
ஆனால் அன்றிலிருந்து சரணாகத பீஷ்மர்!
இந்த மனநிலைக்கு அப்பறம் தான் விஷ்ணு சகஸ்ரநாமம், பீஷ்ம துதி எல்லாம் பாடியது! உலகமும் போற்றியது!

போதுமா ராதா?
இதைத் தான் சொன்னேன்!
இன்னொரு முறை "true devotee" அல்ல என்று நான் சொன்னதாக, எந்த public place-இலும் திரிக்க மாட்டாய் அல்லவா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இப்போ, இது தான் சாக்கு என்று நம்ம IWLK-இடம் பஞ்சாயத்து வைக்கப் பார்த்தான் ராதா! :)
ஆனால் கள்வனின் காதலி, மிக அழகாக, சாரத்தைத் தொட்டு விட்டார்கள்!

Avar seydha ore thavaru- Perumal dharmam side-la vandhu gambheerama ninna podhum kooda kadamai, kanniyam, kattupaadu endru alaindhar, poraadinar!

Either, he was totally arrogant and stupid, or,
he thought he was instigating PSP to finally kill him with His own hands.

"புத்தி வந்தது" என்று சொன்னதற்கே பாய்ந்த ராதா, "arrogant & stupid"-க்கு பாய மாட்டார் என்று நினைக்கிறேன்! :)

பேரறிஞர் பீஷ்மரின் மனம் மாறும் கட்டும் அது! சரணாகத நிலை!
* "தன்" சத்தியத்தையும் தர்மங்களையும்,
* பொது தர்மங்களுக்காக, விட்டுக் கொடுப்பதைக் கற்றுக் கொண்டார் பீஷ்மர் அன்று!
* அப்படிக் கற்றுக் கொடுத்தவன் = கீதாசார்யன்!
* வெறும் Theory ஆக அல்லாமல், Practical-ஆக, தானே செய்தும் காட்டினான்!

இவன் அல்லவோ ஆசார்யன்! கீதாசார்யன்!
படிப்பை மாற்றாது, மனத்தையும் மாற்ற வல்ல ஆசார்யன்!

எங்கள் கீதாசார்யன், தொண்டனடி தழும்பு உகக்கும் பெருமாள், எங்கள் பார்த்தசாரதிப் பெருமாள் திருவடிகள சரணம்!

Radha said...

@KRS,
I am extremely sorry if I have said anything that you have not mentioned. Its due to my own misunderstanding of your words.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Sri Veda Vyasa portrays the Lord as being extremely beautiful when each arrow frm Bhishma drew his blood//

கண்ணனின் கருமேனி, செம்மேனி அழகாய் மாறியது என்னவோ உண்மை தான்! ஆனால் அது கண்ணனுக்கு வலிக்குமே என்று தோன்றவில்லை இந்த வீடுமனுக்கு!

பெரியாழ்வார், ஐயோ அவனுக்கு என்ன ஆகி விடுமோ, பல்லாண்டு பல்லாண்டு என்றார்!
கர்ம யோகி வீடுமருக்கோ, "தன்" அம்பு வழிபாடே முக்கியமாய் போய் விட்டது! :)

//Since Bhishma could not offer flowers to the Lord, he resolved to use his arrows as flowers//

இட்டுக் கட்டி எழுதும் வியாக்யனங்களுக்கு ஒரு அளவே இல்லையா! இப்படிப் பல் இளிக்கிறதே, with so many inconsistencies! :(

அப்படியே பூக்கள் போட்டுத் தான் கண்ணனை ஒவ்வரு முறையும் பீஷ்மர் வழிபட்டது போலவும்....
ஏதோ இன்னிக்கு பூக்கள் கிடைக்காமல், அம்பால் பூப்போடுவது போலவும் அல்லவா சிலாகிக்கப்படுகிறது!

அப்படியே அம்பால் பூப்போட்டால், அம்பு வணக்கம் செலுத்துவார்களே, திருவடிகளில்! அப்படிப் பூப்போடுவது தானே! முகத்தில் ரத்தக் களறி நடத்தி, அதற்கு இப்படி ஒரு வியாக்யானமா?

மேலும் கண்ணனை Target பண்ணி எல்லாம் பீஷ்மர் அடிக்கவில்லை! பார்த்தன் மேல் எய்யும் பாணங்கள், உக்கிரத்தில் சாரதி மேலும் படும்! இதையெல்லாம் பார்த்தால், ஏ கண்ணா, நீ போர்க்களமே வந்திருக்கக் கூடாது என்று தான் பீஷ்மரும் பேசுகிறார்!

அது கண்ணன், பார்த்தனுக்காக, தானும் ஏற்றுக் கொண்ட பாணங்கள்!
பீஷ்மர் 108 count வச்சி, அஷ்டோத்திர சத நாமார்ச்சனை செய்த பாண புஷ்பங்கள் அல்ல!

எது எப்படியோ, அன்பர்கள் அளிக்கும் வடுக்களும், எம்பெருமானுக்கு உவப்பு தான்! அழகு தான்!

இந்த நிகழ்ச்சி மாமேதை பீஷ்மர்->சரணாகத பீஷ்மர் ஆகும் கட்டம் என்பதை மறந்து,
பீஷ்மர் என்னும் தனி மனிதனைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு,
அவரினும் மேலான அவர் வாழ்க்கைப் பாடத்தைக் கவனிக்கத் தவறுவது...பீஷ்மருக்கே உவப்பைத் தாராது! தனி மனிதத் துதி தான் மிஞ்சும்!

Radha said...

Btw, its really surprising that Bhishmar didn't join the Pandavas even after the Saranaagathi episode.

In Love With Krishna said...

//Btw, its really surprising that Bhishmar didn't join the Pandavas even after the Saranaagathi episode.//
No, but he gave them his blessings.
PSP Himself cleverly sent them to get his blessings.
Bhishma always knew he was fighting for a lost cause.
It's one thing to chose before a war, but in the middle of a war, if you change sides, even by saying Perumal's name, it's not right.
btw, he chose his death, by waiting so long for PSP to come, bearing the pain of the arrow-bed till PSP showed His beautiful face to Him.
Endha mugathai avar pun padithinaaro, adhuve avarkku mukthi alithadhu!!!

Radha said...

//It's one thing to chose before a war, but in the middle of a war, if you change sides, even by saying Perumal's name, it's not right. //

Ok. My thought process goes like this...To be on the Lord's side is always right. For the Lord always does the right thing. Can He ever do anything wrong?

In Love With Krishna said...

//To be on the Lord's side is always right. For the Lord always does the right thing. Can He ever do anything wrong?//
No, Perumal's side is the ONLY side.
But let's consider two facts:
1. Sharanaagathi is surrender, right? Bhishma surrendered hiimself to Perumal, but never gave up his ideals. He realized they were not always steadfast, in a changing world, but chose to stick to them.
2. While he did stick to his ideals, they were giving him no material gains, atleast in the Kurukshetra war.

i think it was only lying on the arrow bed hat the magnitude of the whole thing struck Bhishma.

Was he not silent when Draupadi was derobed? There began the process of blinding himself with the rope of 'karma yoga' tag.
So, when PSP ran towards him, He was pulling away that peice of cloth blindfolding Bhishma's eyes.
And, so, Bhishma surrendered.

But, when Bhishma's eyes opened, he was already standing on shaky ground. He had himself asked for it, but now he lamented.
How can a man jump from adharma to dharma?
How can a man jump from one world to another world?
So, Bhishma chose to fall down in the shaky ground of adharma.
But, he didn't just fall, he fell like a rod at Perumal's feet.
So, Perumal took care of Him after that.
Technically, everyone's Perumal's puppet. In the Mahabahrata, Bhishma himself acknowledges that position of helplessness and defeat the moment he sees Krishna. He says: ''Krishna is the charioteer of Arjuna. How long can anyone be disillusioned when Krishna is the charioteer?" (word-by-word quote illai)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Btw, its really surprising that Bhishmar didn't join the Pandavas even after the Saranaagathi episode.//

It was only a starting point of the heart change of Bhishmar!
He didnt perform a explicit saranagathi (which is not needed too)!
It was only an onset of change!

He has been like this for years. We cannot expect him to change instantly! But the seed was planted in him now! There started the transformation!

The Lord never asked for ditching the kaurava side or joining the pandava side.
Even Vidhura was with Kauravas, during the war! But the Lord only asked for hearts unto Him and no harm to his devotees!
Vidhura did both and didnt get caught in karma. He even earned the title of drohi & lame-man, but still restrained. Had duriyOdhana told Bheeshma that he was a drohi, Bheeshma wud have got easily agitated and started "proving" loyalty to "his" promise! :)

Vidhura was a great karma yOgi, both in letter & spirit!
---------------------

Bheeshma

Here is a man, who thought he was doing karma yOga, but actually was stuck to the karma, instead of offering the fruit of karma to the Lord!
Many of us are like this! We think that we are something, but actually we are nothing! :)

Bhishma was having trouble reconciling Shikandi!
Here we have a thiru nangai on the Lord's Chariot itself!
Even after seeing that, Bhishma could not reconcile her/him.

Bhishma had his own definition & standards!
Conformance to them was a great karma discipline.

Bhishma was a great statesman, great warrior, great preacher of dharma etc etc before!
But after this incident, he became a great Bhaktha!

Not that, he was not a bhaktha before! He had bhakthi in him, even previously! But he was caught in the cycle of his own actions like a spider!
* Earlier he was a bhaktha! Now he become a heartful bhaktha!
* Earlier his achievement was conquests! Now his achievement was Vishnu Sahasranamam
* His conquests disappeared! His Sahasranamam stays and will stay!

காயேன வாசா மனசு இந்திரியேர்வா
புத்தி ஆத்மனாவா பிரகருதே சுபாவாத்
கரோமி யத்யத் சகலம் பரஸ்மை
நாராயண இதி...சமர்ப்பயாமி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Gunanubhavam- apadinna?!
Anubhavam ulla yevarenum explantion kudukkavum!//

:)
அனுபவம் இல்லாத அடியேனும், சும்மா ஏதோ உளற அனுமதி உண்டு தானே கள்வனின் காதலீ? :)

எம்பெருமானை, அவன் கல்யாண குணங்களை, சக அடியார்களோடு, பேசி இருப்பது குணானுபவம்! எண்ணி இருப்பது குணானுபவம்! செய்து இருப்பது குணானுபவம்!

குண அனுபவம் = குணானுபவம்!

குணானுபவம் என்றால் அவனைப் புகழ்ந்து இருத்தல்/பஜித்தல் என்று மட்டுமே பொருள் இல்லை!
அவனைத் திட்டலாம்! அவன் செய்கைகளைக் கேள்வி கேட்கலாம்! = அதுவும் குணானுபவம் தான்!

பேசு பொருள் அவனாய் இருத்தல் குணானுபவம்!
அவனைக் கேள்வி கேட்டாலும், அதில் அவன் தேடலை விதைப்பது குணானுபவம்!
சக அடியார்கள் மனத்தில் அவன் தேடலை விதைப்பதுவும், தம் மனத்தில் அடியார்கள் கருத்தைக் கொள்வதுவும் = குணானுபவம்!

ஒரே சொல்லில் சொல்லணும்-ன்னா என் ஆருயிர்த் தோழி தான் வரணும்!
கூடி இருந்து குளிர்ந்தேலோ = குணானுபவம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@ராஜேஷ்
//(note: till 21-dec- - iam not available - buy)//

டாட்டா! போய் வாருங்கள்! எங்கே? அரங்கமா?
இந்த லூசுப் பையன் பார்த்தசாரதி தான் மீசை இல்லாம ஊர் சுத்தறான்-ன்னா, நீங்களும் சுற்றக் கிளம்பி விட்டீர்களா, மார்கழி அதுவுமா? :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அதே ருக்மிணிப் பிராட்டி உற்சவரையும் அணைச்சிருந்தா, அவர் காயங்களும் மறைஞ்சி போய், ஜாலியா இருந்துருப்பாரு-ல்ல? ஏன் அவரை மட்டும் மிஸ் பண்ணிட்டாங்க? :))))))))//

எங்க வீட்டுச் சின்னப் பெண்ணொருத்தி ஸ்ரீநிதி! அவளுக்கு நான் தாய் மாமன்!

ஊருக்கு வந்தா, எங்க வீட்டில் வந்து தங்கிக்குவா! இங்கிருந்து தான் பள்ளிக்குப் போய் வருவா! வெளியில் சென்றால் தன் அப்பா பாக்கெட்டில் இருந்து தான் பர்ஸ் எடுப்பா! என்னை எடுக்கவே விட மாட்டா! மாமா பாவம்-ம்மா! அவ்ளோ தூரத்தில் இருந்து வந்திருக்காரு! நாம தான் அவருக்கு வாங்கிக் கொடுக்கணும்-ன்னு சொல்லுவா! :) என் தங்கை இதைக் கேட்டு என்னை மொறைப்பா! :))

இந்தப் பொண்ணு, முதன் முதலாகப் பார்த்த சாரதியைப் பார்த்து பயந்தே விட்டாள்! என்னது இது? மூஞ்சில ஆசிட் ஊத்தினா மாதிரி? நல்லாவே இல்ல! பயமா இருக்கு, வீட்டுக்குப் போயிறலாம் என்று ஒரே அழுகை!

கதையை லேசாச் சொன்ன பிறகு, இன்னும் அழுகை!
ஐயோ பாவம்! எவ்ளோ நல்ல Friend இந்தச் சாமி! அவருக்கு அப்பறமாச்சும் Treatment குடுத்து சரி பண்ணலாம்-ல்ல? நமக்காக இப்படியே இருந்தா இவர் தோல் என்ன ஆகும்? அம்மா, உங்க ஹாஸ்பிட்டல்-ல்ல இவரைச் சேர்த்துப்பாங்களா? :))

இப்படிப் பேசும் போது எல்.கே.ஜி - புரசைவாக்கத்தில் வீடு!
இப்போ மூன்றாவது - அவன் இருக்கும் திருவல்லிக்கேணியே வீடாகிப் போனது!

Radha said...

Very good explanation. Thanks KK and KRS. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அதே ருக்மிணிப் பிராட்டி உற்சவரையும் அணைச்சிருந்தா, அவர் காயங்களும் மறைஞ்சி போய், ஜாலியா இருந்துருப்பாரு-ல்ல? ஏன் அவரை மட்டும் மிஸ் பண்ணிட்டாங்க? :))))))))//

ருக்மிணிப் பிராட்டி உற்சவரை அணைக்காததன் காரணம் இது தான்! அல்லது அணைத்தவளை, வேண்டாம் இப்படியே இருந்து கொள்கிறேன் என்று அவன் சொன்னதன் காரணம் இது தான்!

= இது போன்று பிஞ்சு நெஞ்சில் தோன்றத் தான்!

அதான் அப்படியொரு கேள்வியை இங்கே அடியார் குழாத்தில் வைத்தேன்!
PSP ஜாலியாகச் சுற்றி வரான் என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம்! ஆனால் ஆறாத வடுக்களை முகத்தில் சுமந்து திரிபவர்களைக் கேட்டுப் பாருங்கள்! அவர்கள் தினப்படி கண்ணாடி முன் என்ன நினைத்துக் கொள்கிறார்கள் என்று!

முகத்தில் ஷேவ் செய்யும் போது, ஆழமான வெட்டு விழுந்தாலே, எப்படா போகும்-ன்னு Balm பூசிக் கொள்பவர்கள் நாம்! என்றென்றும் வெட்டு என்றால்?

PSP ஜாலியாக மட்டுமே இல்லை! சோகமாகவும் கூட இருக்கிறான்! எதனால்? தன் செல்வங்கள் தன்னிடம் என்று வந்து சேருமோ? என்று கொஞ்சலாமோ?-ன்னு...
இறைவனுக்கும் துயரம் உண்டு போல!

அதான்...
"துயர் அறு" சுடர் அடி தொழுது எழு என் மனனே
என்றார் நம் ஆழ்வார்!
யார் துயரம் அறுகிறதாம், சுடர் அடி தொழுதால்?

* நம் துயரம் அறும்!
* தம்மைத் தம் குழந்தைகள் வந்து சேரவில்லையே என்ற இறைவனின் துயரமும் அறும்!
* துயரறு சுடரடி என்று திருவடிகளின் பெருமை இது தான்!

இப்படி, PSP முகத்திலே துயர் உற்றாலும், அதையெல்லாம் பழகிக் கொண்டு, பெருமையாக எடுத்துக் கொண்டு...
பிஞ்சு உள்ளத்திலே குணம் என்பதை விதைக்கத் தான், அப்படியே திரிகிறான் போலும்...ருக்மிணி அணைத்தும் வேண்டாம் என்று சொல்லி...

எம்பெருமானே...ஹே PSP..
எங்கள் உள்ளமும் பிஞ்சு உள்ளம் தான்!
உன் ஆசிட் முகங் காட்டி, எங்கள் உள்ளத்திலும் உன்னை விதைப்பாயே!

உன் தன்னோடு உறவேல் நமக்கு!
உன் தன்னோடு உறவேல் நமக்கு!

Radha said...

Thats another nice story. I wish I become a kid again...and never grow up. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// Radha said...
When I said "மூலவருக்கும்" I had clearly indicated my side. :-)
கேஆர்.எஸ் கிட்ட ஆரம்பத்துலையே வேணாம்னு சொன்னேன். கேட்காமே மிரண்டு பிடிச்சி வேணும்னு போயி பல்ப் வாங்கிகிட்டான். :-)//

ஹா ஹா ஹா
அடியார்கள் கிட்ட பல்ப் வாங்கும் சுகமே அலாதியானது! அதுவும் பீஷ்ம வடு பார்த்தசாரதி தான் கற்றுத் தந்தது! :))

சரி, மேட்டருக்கு வருவோம்!
மீசை என்பது மூலவருக்குத் திருவல்லிக்கேணியில் வரையப்பட்ட ஒன்று!

திவ்ய மங்கள விக்ரகம் என்னும் அவர் திருமேனியிலேயே, மீசையோடு தான் செதுக்கப்பட்டுள்ளதா என்பதை அறிவது கடினம்! அதே போல் உற்சவர் திருமேனியிலும்!

அப்புறம் ஏன் இந்த மீசை வரையும் பழக்கம்? அதுவும் திருவல்லிக்கேணியில் மட்டும்? எத்தனையோ பார்த்தசாரதி கோயில்கள் உள்ளன! கேரளாவில் கூட உண்டு! இன்றைய குருக்ஷேத்திரத்தில் கூட உண்டு! அங்கெல்லாம் மீசை இல்லையே! இங்கு மட்டும் எதற்கு, இல்லாத ஒன்றை, "வரைந்து" வைக்கிறார்கள்?

எம்பெருமான் கோனார் குலத்திலே தோன்றியவன்! தேரோட்டியாகவும் வேறு ஆகிப் போனான்! அதனால் அவன் சின்னங்கள் அத்தனையும் அவன் விக்ரகத்திலே காணலாம்! குதிரைக்குப் புல் அறுத்துப் போடும் குறுங்கத்தி, குதிரையை நெம்பும் உழவுகோல் உட்பட அனைத்தும் அவன் திருமேனியில் இருக்கும்! அதான் மீசையும் கூட!

ஒரு பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின், அதிலுள்ளவற்றைக் கண்டு அருவெறுக்காது, ஒதுங்காது, உள்ளது உள்ளபடியே செய்தல் தான் உண்மையான கர்ம யோகம்! கண்ணனே ஒரு கர்ம யோகி!

குதிரைக்குத் தண்ணி வைப்பதும், புல் அறுத்துப் போடுவதும், அதன் சாணத்தை எடுப்பதும், இன்னும் பல பலான பலான பணிகளை எல்லாம் துவாரகைக்கு அரசன் செய்வதா? ஆனால் அவன் இப்போது ஒரு தேரோட்டி! எடுத்த பொறுப்பைச் செய்து தான் ஆகணும், சுய கெளரவம் பார்க்காமல்! கீதையில் வாயால் சொன்னதை, தானே செய்தும் காட்டினான் எந்தை கண்ணன்! அவனைப் போல் ஒரு ஜீவன் வருமா? முருகா! கடைசியில் அவனுக்கு மிஞ்சியது காந்தாரியின் சாபமே! :(

மேலும், தமிழ்க் குல வழக்கப்படி, ஆயர்கள், ஆய மறவர்கள் மீசை உள்ளவர்கள், உழவுகோல் கொண்டவர்கள்! அதையே முல்லை நிலத் தெய்வமான கண்ணனும் அல்லிக் கேணியில் காட்டி நிற்கிறான்! ஆலயப் பூசை முறைகள் ஒரு சாராருக்குச் சென்றாலும், அவர்களும் தொல் வழக்கத்தை மறவாது, முல்லைத் தலைவன் கண்ணனுக்கு, மீசையை வரைந்தாச்சும் வைக்கிறார்கள்!

மீசையை இதற்கு மேல் பேசினால், ஆலயங்களில் ஆரிய-திராவிட வாதம் ஆகி விடும் என்பதால், இத்துடன் அமைகிறேன்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// Radha said...
Thats another nice story. I wish I become a kid again...and never grow up. :-)//

இப்ப மட்டும் என்னவாம்? உசரம் தான்! But You never grew up Radha! :)

உடனே என்னைய பார்க்காதே! மீ ஒன் அப்பாவிச் சிறுவன்! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஓ...கமெண்ட் அப்பவே 100-ஐ தாண்டிருச்சா? :)
கவிக்கா - தம்பியின் மண்டகப்படியை ஏற்றுக் கொள்ளுங்கள்! அது வரை வர்ட்டா ஷ்டைலில்...வர்ட்ட்ட்டா? :)

Kavinaya said...

நீங்கள்லாம் இவ்வ்வ்ளோ சொல்றீங்க, படிக்கிற எனக்கு வார்த்தையே வரலை! படிச்சிக்கிட்டே இருக்கணும் போல இருக்கு. கண்ணா, ராதா, கள்வனின் காதலி, ராஜேஷ், அனைவரும் நீடூழி வாழ்க!

கண்ணா, தங்கை குழந்தைக்கு சுத்திப் போடச் சொல்லுங்க :)

In Love With Krishna said...

@KRS:
Krishna enbaargal, Kaanha enbaargal, Kannan enbaargal...
Namakku etra maadhiri avar peyar-kke namma 'twist' kuduthikrappo, meesai pathi vivaadhichu enna nadakkapogudhu? :)
btw, varaiya patadhu dhaan, Ana avar thiruvullam kooda adhu dhaan :)

In Love With Krishna said...

@KRS: Thaayar solliye ketkaadhavar ellam naam solli-ya ketka poraaru?
Unga Srinidhi pol ethanai ullangal crying for Him theriyuma? (me included)
Enna dhaan bhaktavatsalan-aga irukkatum, enna dhaan best sarathy-aga irukattum, enna dhaan avar mugam azhagaave irukattum, avar muga vaatu paarkumpodhellam kodumai seivadhu ennavo unmai dhaan.

Dhanvantri-ye ivar dhaane?
Open wound-oda open air-la suthradhellam evalo infectious theriyuma? That's why i scold Him- suthikitte irukeenga-nnu.
Avar mel anbu varadhurkku, scars ellam thevai-illa, avarai oru murai paarthaale podhum!

Avar daily kannadi paarka dhaan seyiraar, ana ennavo adhilum avarkku oru sugam kidaikuthu.
Avar friend-kku, avar bhaktan0kku help panna sugam.

Aanal, eno, avar-kku ennai pol avar mugam paarthu kangal pongum bhakthargal mattum andha oru nodi-kku marandhu pogudhu.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP