Sunday, October 10, 2010

நாராயணா ! ஹரி நாராயணா !

 
ஹரி பஜனை 
[ ராகம்: பிருந்தாவன சாரங்கா ]

நாராயணா ! ஹரி நாராயணா !
நாராயணா ! ஹரி நாராயணா !
 
ஸ்ரீ ஹரி கோவிந்த நாராயணா !
முர ஹரி கோவிந்த நாராயணா !
நர ஹரி கோவிந்த நாராயணா !
 
நாராயணா ! ஹரி நாராயணா !
நாராயணா ! ஹரி நாராயணா !



பொரு மா நீள் படை ஆழி சங்கத்தொடு*
திரு மா நீள் கழல் ஏழ் உலகும் தொழ*
ஒரு மாணிக் குறள் ஆகி நிமர்ந்த* அக்
கரு மாணிக்கம் என் கண்ணுளதாகுமே.

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி; நாடுவன் மாயமே
அல்லும் நன் பகலும் இடைவீடு இன்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே.
(திருவாய்மொழி 1-10-1, 1-10-8)

மேலே உள்ள  நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை இங்கே கேட்கலாம்.
பாடியுள்ளோர்: சென்னை [பள்ளிக்கரனை]  திருநாரணன் கோவிலின்  திவ்ய பிரபந்த பாடசாலை குழுவினர்

11 comments :

சமுத்ரா said...

நல்ல பக்திமயமான வலை...:)

நாடி நாடி நரசிங்கா! said...

எல்லா பாசுரங்களையும் Mp3 - la போட்டுடுங்க!
நாங்க Download பண்ணிகறோம்:)

In Love With Krishna said...

Nalayira divya prabandham pattu ellam "musical" format-la availabla-aa?
Can u give me the name of the album/artiste?

எல் கே said...

பகிர்வுக்கு நன்றி

Radha said...

@Samudra, LK,
கண்ணன் பாடல்கள் உங்களுக்கு பிடித்தது குறித்து மகிழ்ச்சி. :-)

Radha said...

@Rajesh, @In love with Krishna,
என்னிடம் சில பாசுரங்கள் மட்டுமே இசை வடிவில் உள்ளன.
கிரிதாரியின் அருளால் அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக இந்த வலைப்பூவில் இடுவதாக எண்ணம்.

If you are interested in listening to Divya Prabandham in musical form, you may want to contact the Prabandham school. Address is given below:

Sri Sadagopan Tirunarayana Swami Divya Prabandha Pathasala,
Sadagopan Nagar,
Jalladampet Village,
Chennai - 600 100
Ph: 91 44 22462436
Email: aravamudhu@gmail.com

Artiste Name: Araiyar Swami Sri Rama Bharathi
[The songs in this post were sung by Ms.Sri Rama Bharathi and her students.]

I think you will get approximately 400 pasurams rendered in musical form. That would be close to 15 hours of music. The price of the entire album is Rs.2000/-
If you have further queries please drop me an e-mail in the following address:
dradhamohan@gmail.com

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//If you have further queries please drop me an e-mail in the following address:
dradhamohan@gmail.com//

or General Manager - Sales, Mr. Radha Mohan :))

//திரு மா நீள் கழல் ஏழ் உலகும் தொழ*
ஒரு மாணிக் குறள் ஆகி நிமர்ந்த//

ராதா, ஒரு கேள்வி! டேய்...எங்கே ஒடுற? பயப்படாத! ஈசி கேள்வி தான்டா! :)

ஏழ் உலகும் தொழ-ன்னு சொல்லுறாரு!
ஆனா மூவுலகு தான் அளந்தாரு!
அப்ப மீதி நாலு உலகத்தை அளக்கலையா? :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மல்கும் கண் பனி; நாடுவன் மாயமே//

மாயத்தை நாடுவாரா? மாயையை ஒழிக்கணும் என்பது தானே ஆன்றோர் வாக்கு? இவர் மாயத்தை நாடுறேன்னு சொன்னா எப்படி?

//நல்கி என்னை விடான் நம்பி நம்பியே//
Who is this Nambi Nambi? Double Nambi? :)

Radha said...

//General Manager - Sales, Mr. Radha Mohan :))//
:-))
//ராதா, ஒரு கேள்வி! //
ஒரு கேள்வி அப்படின்னு சொல்லிட்டு எத்தனை கேள்வி கேக்கறே பாரு. :-)
//
1. அப்ப மீதி நாலு உலகத்தை அளக்கலையா? :))
2. மாயத்தை நாடுவாரா?
3. மாயையை ஒழிக்கணும் என்பது தானே ஆன்றோர் வாக்கு?
4. Who is this Nambi Nambi? Double Nambi? :)
//

Even my school teachers have not cheated me like this. :-) I shall choose the easy question and answer that alone.
நான்காவது கேள்விக்கு பதில் "தென்குறுங்குடி நம்பி". மீதி கேள்வி எல்லாம் சாய்ஸ்-ல விட்டுடறேன். :-)

Sumathi Sundar (Krishnaamma) said...

nalla valaithalam :) naanum oru krishna bakthaidhaan :) enakku pazhaiya paadal vendum. "senchulakshmi" engira padathil varum, "parkadal thanile sesha sayanamadhil thuilum maale deva".... adhu kidaikkumaa? please, anbudan,Krishnaamma

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@சுமதியம்மா
நீங்கள் கேட்ட பாடல்கள் சுசீலாம்மா பாடும் மிகழ் பழைய பாடல்கள்! கிடைத்தால் இங்கு அவசியம் இடுகிறோம்!

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP