Thursday, September 30, 2010

கண்ணனைக் காணவில்லை


பக்த மீரா படத்தில் மற்றுமொரு அருமையான பாடல். அதிகபடியான சோகத்தை வரவழைக்கும் பாடல் என்று முன்னரே சொல்லிவிடுகிறேன்.:-)

உடல் உருக உளம் உருக
ஊனெலாம் நெக்குருக
குழலூதி இசை பாடி, எனைத் தேடி வந்து
கடல் வண்ண திருமேனி எழிற் கோலம் காட்டி
கனவினிலே எனை மணந்த  கண்ணா !  என் கிரிதரனே !
படமுடியாத் துயரம் இந்தப் பேதை படவிலையோ !
பாவி உயிர் உன் பிரிவால் வேள்வது அறிந்திலையோ !
இடர் கடலில் மீராவை தவிக்க விட்டே
இன்று எங்கு சென்றாய் ?
என்னரசே ! எங்கு மறைந்தனையோ?

 மேலே உள்ள பாடலை எம்.எஸ் அம்மாவின் குரலில் இங்கே கேட்கலாம்.

யாரும் ஆழ்ந்த துக்கத்தில் இருப்பது நமக்கு கஷ்டமாக இருக்கிறது அல்லவா? இப்படி "என்னரசே ! என்னரசே! எங்கு மறைந்தனையோ?" என்று அவள் கதறியது அரசன் காதில் விழுந்தது. துக்கத்தில் ஆழ்ந்த மீராவை மேலும் தவிக்க விடாமல்,  காவிரி ஆற்றங்கரையில்  கிடந்தபடியே உலகை ஆளும் அரசன், அரங்கன், அவளுக்கு தரிசனம் தருகிறானாம். கொவ்வைக் கனி போன்று சிவந்த வாய், செந்தாமரைக் கண்கள் இவற்றை கண்ட உடன்  தொண்டரடிப் பொடி ஆழ்வார் அடைந்த ஆனந்த நிலையை மீராவும் அடைந்தாள். :-)

இனிதிரைத் திவலை மோத எறியும் தண் பரவை மீதே*
தனிகிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான்*
கனியிருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள்*
பனியரும்பு உதிருமாலோ? என் செய்கேன் பாவியேனே ?
                                                      
பாயுநீர் அரங்கந் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திரு நன் மார்வும் மரகத உருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவரிதழ்ப் பவள வாயும்
ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே.
                              (திருமாலை - 18, 20)
மேலே உள்ள தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாசுரங்களை ஜானகி ராமானுஜம் அவர்கள் பாடி இங்கே கேட்கலாம்.

11 comments :

Kavinaya said...

எங்கு சென்றாயோ மன்னவனே?
எந்தன் கருவிழியிரண்டை ஏங்கியழ வைத்தவனே!

அவனைப் பாடுவதாலேயே அழகு மிளிரும் பாசுரங்கள். பகிர்ந்தமைக்கு நன்றி ராதா.

In Love With Krishna said...

//இடர் கடலில் மீராவை தவிக்க விட்டே
இன்று எங்கு சென்றாய் ?
என்னரசே ! எங்கு மறைந்தனையோ?//

Beautiful!! Thanks for the post!

ப.கந்தசாமி said...

லிஸ்ட்டில் உள்ள பாட்டுக்களை டவுன்லோடு செய்யமுடியுமா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இது கண்ணன் பாட்டா? இல்லை மீரா பாட்டா? இல்லை ராதா பாட்டா? :)))

எதுன்னாலும் ஓக்கே தான்! ஆனா பேரை மாத்தி வச்சிருவோம்! :)

Radha said...

கவிநயா அக்கா,
வழக்கமா நீங்க சொல்றதை அப்படியே ரிபீட் செய்றேன். "உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி". :-)
முதல் பாடலுக்கான சுட்டியை முதலில் இட மறந்துவிட்டேன். எம்.எஸ் அம்மாவின் குரலில் மிக அருமையாக இருக்கும்.
பதிவை நீங்கள் வாசித்த பொழுது பாடலை கேட்கவில்லை எனில் இப்பொழுது மறக்காமல் கேட்டுவிடவும். :-)

Radha said...

In Love With Krishna,
No mention.
If the disappearance of Krishna is beautiful then He may think that He is playing a fair game. :-)

Radha said...

//லிஸ்ட்டில் உள்ள பாட்டுக்களை டவுன்லோடு செய்யமுடியுமா? //
ஐயா, லிஸ்ட்டில் உள்ள பெரும்பாலான பாடல்களை டவுன்லோட் செய்யலாம்.
ரவி, நீங்கள் எதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

Radha said...

ரவி, இது முன்னரே எழுதி வைத்திருந்த பதிவு. இன்னும் சில மீரா பாடல்கள் உள்ளன. மீராவாக இருந்தாலும், ராதாவாக இருந்தாலும் பாட்டுடை தலைவன் கிரிதாரியே ! :-))

In Love With Krishna said...

@Radha: omg, i should have realized, na, before commenting?

The problem is He always thinks He is playing a fair game,thinks too much of Himself...thinks people will run after Him if He just disappears.
But, you know the funniest part?

Inevitably, we DO run after Him!

நாடி நாடி நரசிங்கா! said...

உடல் உருக உளம் உருக
ஊனெலாம் நெக்குருக
குழலூதி இசை பாடி, எனைத் தேடி வந்து
கடல் வண்ண திருமேனி எழிற் கோலம் காட்டி
கனவினிலே எனை மணந்த கண்ணா ! என் கிரிதரனே :)))

மீராவின் பதிவுகள் அருமை!

Radha said...

@In love with Krishna,
Its indeed true that His devotees always run behind Him. Its equally true that He too runs behind them. :-)
@ராஜேஷ்,
மீராவின் பதிவுகள் உங்களுக்கு பிடித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. :-)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP