Wednesday, September 01, 2010

எல்.ஆர்.ஈஸ்வரி அடிக்கும் பிறந்தநாள் கும்மி!

இன்று கும்மி அடிக்கலாம் வாங்க! வழக்கமான பதிவுலகக் கும்மி அல்ல! கண்ணன் பிறந்த நாள் கும்மி! அதுவும் நம்ம எல்.ஆர்.ஈஸ்வரி அடிக்கும் கும்மி:)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணா! Happy Birthday KaNNa! - From me & my murugan :)


கண்ணன் பாட்டு அன்பர்கள் அனைவருக்கும் இனிய கண்ணன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


அதிரசம், லட்டு, சீடை, முறுக்கு, தேன்குழல், அப்பம், திரட்டிப் பால், சோமாஸ், மைசூர்பா என்று பலவிதமான பண்டங்களைக் குழந்தைகள் ஜாலியாக உண்டு மகிழும் நாள்! மகிழட்டும்! மகிழட்டும்!

ஆனால் பெரியவர்கள் சற்றே நினைவில் வையுங்கள்! கண்ணன் பிறந்த நேரம் இத்துணை ஜாலியாகக் கழியவில்லை!
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர...

பால், தயிர், வெண்ணெய், நாவற்பழம் என்ற எளிமையும் கண்ணனுக்கு மிகவும் பிடிக்கும்!
எனவே நம்மளவில் பூசைகளில் எளிமையைக் கைக்கொள்வோம்!

அதிரசம், லட்டு, சீடை, முறுக்கு, தேன்குழல் என்பனவற்றை எல்லாம், அருகில் காப்பகங்களில்....ஒருத்தி மகனாய்/மகளாய்ப் பிறந்து, ஒளிந்து வளரும் குழந்தைகளோடு பகிர்ந்துண்டு மகிழ்வோம்! அதுவே கண்ணனுக்குப் பிடித்தமான நிவேதனம்! சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!



கண்ணன் பிறந்தநாள் பதிவுகளின் தொடர்ச்சியாக..இது மூன்றாம் பதிவு! முத்தான பதிவு! ஏன்-ன்னா, எல்.ஆர். ஈஸ்வரியின் துள்ளலான கும்மி ஒலிக்கும் பதிவு!

ஒவ்வொரு ஆண்டும் கோதை மற்றும் முருகன் பிறந்தநாள் பதிவுகள் வருமே தவிர, கண்ணனுக்கு ஓரவஞ்சனை தான் செய்துள்ளேன் போலும்! இப்பத் தான் பார்த்தேன்! :)
அதான் இந்த ஆண்டு, ஓரவஞ்சனையை ஈரவஞ்சனை ஆக்கிறலாம்-ன்னு.... :)

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி-இன் கிருஷ்ண கானங்களின் நேற்றைய தொடர்ச்சியாக, இன்று எல்.ஆர்.ஈஸ்வரியின் கண்ணன் கும்மாளம்!
அவருக்கே உரித்தான துள்ளலோசையோடு! கேட்போமோ கண்ணன் கும்மி?
அப்படியே பெரியாழ்வாரின் கண்ணன் பிறந்த நாள் குதூகலங்கள் போலவே இருக்கும் பாருங்க!

வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
கோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே!
கோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே!
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்து அளர் ஆயிற்றே!

இதோ ஒலிச்சுட்டி! கேட்டுக் கொண்டே படியுங்கள்!

கோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே!
கோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே!

வேங்கடத்து மலைதனிலே,வெண்முகிலாய் மாறுங்களே!
ஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே!
(கோபியரே கோபியரே)

நந்தகுமார் மெல்லிசையில் நடனமிடும் தோகைகளே!
பந்தமுள்ள திருமழிசைப் பறவைகளாய் மாறுங்களே!

சிந்துமணி வைரநகை ஸ்ரீராமன் பிம்பம் அவன்!
மந்தி்ரம் சேர் திருமாலின் மறுவடிவத் தோற்றம் அவன்!
(கோபியரே கோபியரே)

ஆழிமழைக் கண்ணன் அவன், அழகுநகை மன்னன் அவன்!
தாழை இலை பயிரினைப் போல், தானுறையும் வண்ணன் அவன்!

நாடிவரும் அன்னையர்க்கு நவநீத கிருஷ்ணன் அவன்
நந்தகுல யாதவர்க்கு, ராகவ பாலன் அவன்!!
(கோபியரே கோபியரே)

வரிகள்: கண்ணதாசன்
குரல்: எல்.ஆர்.ஈஸ்வரி
இசை: எம்.எஸ்.வி
தொகுப்பு: கிருஷ்ண கானம்


குழந்தைகள் கும்மி அடிக்கும் காணொளி:))

22 comments :

நாடி நாடி நரசிங்கா! said...

Hey! கிருஷ்ணா பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நாடி நாடி நரசிங்கா! said...

கோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே!
கோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே!

வேங்கடத்து மலைதனிலே,வெண்முகிலாய் மாறுங்களே!
ஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே!
:)))))))))))))))))))))))

Radha said...

கண்ணன் லீலைகள் செய்வானே !
கண்ணன் மாயைகள் புரிவானே !

இன்று காலை கண்ணனுக்கு என்று பாடல் பதிவு செய்ய நினைத்து ஒரு வித தயக்கத்தில் விட்டு விட்டேன்.
நேற்று தானே ரவி ஒரு பாடல் பதிவு செய்து இருக்கிறார்...சில நாட்கள் ஆகட்டும் என்று.
கண்ணனுக்கு ரவி கைகளால் தான் பிறந்த நாள் பதிவு அமைய வேண்டும் என்று எண்ணம் போல. :-)

கிருஷ்ண கானம் அமிர்த கானம். என்றும் இனிக்கும் பாடல் இது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@ராதா
//கண்ணனுக்கு ரவி கைகளால் தான் பிறந்த நாள் பதிவு அமைய வேண்டும் என்று எண்ணம் போல. :-)//

கண்ணனுக்கு ராதா கைகளால் தான் பிறந்தநாள் பின்னூட்டம் அமைய வேணும் என்ற எண்ணம் போல! :))

ராதா
//தாழை இலை பயிரினைப் போல், தானுறையும் வண்ணன் அவன்!//
இதைக் கொஞ்சம் சரி பார்த்துச் சொல்லேன்! கேட்டுக் கேட்டு எழுதியது! இந்த இடத்தில் உச்சரிப்பும், என்ன சொல்ல வராங்க-ன்னும் சரியாத் தெரியலை!

குமரன் (Kumaran) said...

பல நேரங்களில் கண்ணதாசன் பாடல்களும் புரிவதில்லை1 இந்தப் பாடல் வரிகளும் புரியவில்லை! தெரிந்தவர் விளக்கம் சொன்னால் விளங்கும்!

காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே என்றால் சேலை கட்டிக் கொண்டு ஆடுங்கள் என்கிறாரா? பந்தமுள்ள திருமழிசைப் பறவைகள் என்றால் என்ன? தாழை இலைப் பயிரினைப் போல் தான் உறையும் வண்ணன் என்றால் என்ன? நந்த குல யாதவர்க்கு ராகவ பாலன் என்றால் என்ன? எப்படி? புரியவில்லை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
பல நேரங்களில் கண்ணதாசன் பாடல்களும் புரிவதில்லை. இந்தப் பாடல் வரிகளும் புரியவில்லை! தெரிந்தவர் விளக்கம் சொன்னால் விளங்கும்!//

:)
கண்ணன் தான் பலருக்கும் புரியாமல் போனவன்!
அடுத்து கண்ணபிரான் (இரவிசங்கர்)!
இப்ப கண்ணதாசனுமா? :)))

விளக்கம் சொல்லும் குமரனுக்கே விளக்கம் சொல்வது-ன்னா எப்படி?

//காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே என்றால் சேலை கட்டிக் கொண்டு ஆடுங்கள் என்கிறாரா?//

காவிரியில் சேல் (சிலா) மீன்களைப் போல் ஆடச் சொல்கிறார்! :)
சிலர் ஆடாமல் சிலாவைச் சுட்டுக் குடுக்குமாறு கேட்கிறார்கள்!

ஓங்கு பெரும் செந்நெல்லூடு கயல் உகள என்பது போல்,
அரங்கனின் திருமார்புத் திருமாலையாம் காவிரியில், சிலா மீன்களைப் போல் பாய்ந்து, சேலாட்டம் ஆடுங்களே!

//பந்தமுள்ள திருமழிசைப் பறவைகள் என்றால் என்ன?//

திருமழிசைப் பறவையைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா குமரன் அண்ணா?
பல சமயங்களும் கண்ட திருமழிசை ஆழ்வார், இறுதியில் யாரைப் பற்றிக் கொண்டாரோ, அதே போல் திருமழிசைப் பறவையாய் "மாறுங்கள்"! :))

//தாழை இலைப் பயிரினைப் போல் தான் உறையும் வண்ணன் என்றால் என்ன?//

இந்த வரி தானா-ன்னு எனக்கு இன்னுஞ் சந்தேகமா இருக்கு! பாடலைக் கேட்டுச் சொல்லுங்களேன்!

//நந்த குல யாதவர்க்கு ராகவ பாலன் என்றால் என்ன? எப்படி?//

கண்ணன் வரும் இடத்தில் இராகவனை எதுக்கு கொண்டாந்து வைக்கிறாரு இந்தக் கண்ணதாசன்? "போலிப் பண்பாளனை"ப் போட்டுத் தாக்கவா? :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@ராதா
//கண்ணனுக்கு ரவி கைகளால் தான் பிறந்த நாள் பதிவு அமைய வேண்டும் என்று எண்ணம் போல. :-)//

இப்பவாச்சும் புரிஞ்சுதா ராதா, கிரிதாரியின் ரவி-ன்னு சொல்லுங்க பார்ப்போம்! :)

ஹிஹி! வேணாம்! நான் என் முருகனின் ரவி மட்டுமே!

கண்ணன் கழல் கேஆரெஸ் என்பது தான் சரியாக இருக்கும்!
கண்ணனின் ரவி என்பது நோநோ! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நந்த குல யாதவர்க்கு ராகவ பாலன்//

எப்படி இராகவன் காட்டு முனிவர்க்கு வேள்வி காத்தானோ...
அதே போல் நந்த குல யாதவர்க்கு ஊரைக் காத்தான்!
இந்திரனின் ஆணவ அம்பு மழையில் இருந்து, குன்று குடையாய் எடுத்தாய் "குணம்" போற்றி!

குணம்-ன்னாலே அது இராகவன் தானே!
அதான் குமரன்! புரிஞ்சிச்சா? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@ராஜேஷ்

என்ன நீங்க பாட்டை அப்படியே எடுத்து பின்னூட்டம் போடறீக?
நீங்களும் பாடி கும்மி அடிக்கறீகளா என்ன? :)

தமிழ் said...

அருமையான பாடல்

பகிர்வுக்கு நன்றி நண்பரே

/நாடிவரும் அன்னையர்க்கு நவநீத கிருஷ்ணன் அவன்
நந்தகுல யாதவர்க்கு, ராகவ பாலன் அவன்!!/


பாலின் சாரம் வெண்ணெய்.வாழ்வின் சாரம் கண்ணன்.ஆய்ச்சியர் தயிரைக் கடைந்து வெண்ணெயை எடுக்கிறார்கள்.வாழ்க்கையைக் கடைந்துதான் ஆன்மீக ஞானத்தைப் பெற வேண்டும்.நாடி வருகின்ற அன்னையர்க்குக் கண்ணன் நவ்நீத கிருஷ்ணனாகிறான்.

வாழ்க்கையின் சாரத்தை கீதையில் கண்ணன் கொடுத்திருக்கிறான்

Radha said...

/* ராதா
//தாழை இலை பயிரினைப் போல், தானுறையும் வண்ணன் அவன்!//
இதைக் கொஞ்சம் சரி பார்த்துச் சொல்லேன்! கேட்டுக் கேட்டு எழுதியது! இந்த இடத்தில் உச்சரிப்பும், என்ன சொல்ல வராங்க-ன்னும் சரியாத் தெரியலை!
*/
ஆஹா ! இப்பொழுது தான் வரிகளை கூர்ந்து கவனிக்கிறேன்.
நான் இந்தப் பாடலை பள்ளி நாட்களில் (ஐந்தாவது, ஆறாவது வகுப்பில்) கேட்டது.
என் காதுகளில் வரிகள் வேறு மாதிரி விழுந்து இருக்கிறது. :-)
"தாழியிலே தயிரினை போய் தான் எறியும் (இறையும்) வண்ணன்(மன்னன்) அவன்."
எது சரி என்று தெரியவில்லை. :-)

Radha said...

//நந்த குல யாதவர்க்கு ராகவ பாலன் என்றால் என்ன?//
குமரன், எனக்கு "நந்த குல யாதவர்க்கு ராஜ கோபாலன்" என்று கேட்கிறது. :-)

Radha said...

//இப்பவாச்சும் புரிஞ்சுதா ராதா, கிரிதாரியின் ரவி-ன்னு சொல்லுங்க பார்ப்போம்! :)//
இது ஒரு பெரிய விஷயமா?
"கிரிதாரியின் ரவி" என்று சொன்னால் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் இனி அப்படியே அழைத்து விட்டால் போகிறது. :)

Radha said...

"பந்தர்புர, திருமழிசை பறவைகளாய் மாறுங்களே" என்று முன்பு நினைத்திருந்தேன். :-)
(பந்தர்புரம் => விட்டலனின் ஊர்.)
பந்தம் = அழகு என்ற பொருளில் பார்த்தால்...
"பந்தமுள்ள திருமழிசை பறவைகள் " என்றால் "அழகான திருமழிசை பறவைகள்" என்றும் பொருள் கொள்ளலாம் போல.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

"தாழியிலே தயிரினை போய் தான் எறியும் (இறையும்) வண்ணன்(மன்னன்) அவன்"
or
"தாழை இலை பயிரினைப் போல், தானுறையும் வண்ணன் அவன்"

- குமரன், தீர்ப்பு சொல்லுங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன், எனக்கு "நந்த குல யாதவர்க்கு ராஜ கோபாலன்" என்று கேட்கிறது. :-)//

போச்சுறா...ராஆஆகவ-ன்னு அந்தம்மா நல்லாப் பாடுறாங்களே! நீங்க எதுக்கு ராகவனை இருட்டடிப்பு செய்யறீங்க ராதா? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பந்தர்புர, திருமழிசை பறவைகளாய் மாறுங்களே" என்று முன்பு நினைத்திருந்தேன். :-)
(பந்தர்புரம் => விட்டலனின் ஊர்.)//

இதுல கூட பண்டரிபுரத்தை நினைச்ச பார்த்தியா? நீ தான் ராதா, மெய்யாலுமே கிரிதாரியின் ராதா! நான் இல்லை!

நான், கண்ணன் கழலில்...
என் முருகனின் ரவியாவே இருந்துக்கறேன்! :)

Radha said...

//"தாழியிலே தயிரினை போய் தான் எறியும் (இறையும்) வண்ணன்(மன்னன்) அவன்"
or
"தாழை இலை பயிரினைப் போல், தானுறையும் வண்ணன் அவன்"

- குமரன், தீர்ப்பு சொல்லுங்க! //
இரண்டுமே தவறு என்று தோன்றுகிறது. :)

Radha said...

//என் முருகனின் ரவியாவே இருந்துக்கறேன்! :)//
கே.ஆர்.எஸ் = கந்தனின் ரவி சங்கர். :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Radha said...
கே.ஆர்.எஸ் = கந்தனின் ரவி சங்கர். :)//

ராதா
யார் கால்-லயும் நான் ரொம்ப ஆழ்ந்து விழ மாட்டேன்!
ஆனா இப்போ உன் காலில் விழுந்துக்கறேன்!
//கே.ஆர்.எஸ் = கந்தனின் ரவி சங்கர்//
இதைப் பார்த்த மாத்திரமே, என் நெஞ்சு அப்படி இனிக்கிறது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

முன்பு ஒருமுறை குமரன், பந்தல்-திருநீலநக்க நாயனார் பதிவில், ஞான சம்பந்தர் முதலானோரின் குருபூசையை நினைவு வைத்து கொண்டு பதிவு இட்டமைக்கு, "சைவச் செம்மல்"-ன்னு என்னை விளித்தார்!

அது தோழனிடமே இருக்கட்டும்! நான் கண்ணன் கழல் கேஆரெஸ் என்றே இருந்து கொள்கிறேன்-ன்னு அப்போது சொன்னேன்!

கண்ணன் கழல்-ன்னு சொல்லிட்டு, எப்படி "என் முருகன், என் முருகன்"-ன்னு சொல்றீங்க-ன்னு பல பேரு கேட்டுப் பார்த்துட்டாங்க! :)

நான் கண்ணன் கழல் தான்! = அது பொறந்த வீடு! அந்தக் கால்-ல தான் விழுவேன்! கந்தக் கால்-ல கூட விழ மாட்டேன்! காதலன்-காதலி ஈகோ :)

ஆனா அதுக்காக என் கண்ணன்-ன்னு சொல்ல முடியுமா? அது தோழி கோதையின் கண்ணன்!
எனக்கு, என் முருகன் தான்!

பொறந்த வீட்டுப் பாசம் ஒரு படித் தூக்கலாத் தான் இருக்கும் எனக்கு! அதையெல்லாம் என் முருகன் அட்ஜஸ்ட் பண்ணிக்கிடுவான்! Coz hez a cool guy! :)

காதலி தனிமையில் வேண்டுமானால் காதலனை எண்ணி உருகுவாள்!
ஆனால் பப்ளிக்கா காதலனைப் புகழ்ந்து சொன்னதா சரித்திரம் உண்டா? :)
அதே கதி தான்டா உனக்கும் எனக்கும், என் முருகா! :)

Radha said...

அடடா ! ரவி கால்ல விழறதுக்கு முன்னாடி நான் ரவி கால்ல விழுந்துட்டேனாம். :)
என்னாலும் கண்ணன் கால்ல எல்லாம் விழ முடியாது. :) சீதா ராமன், பரமசிவன், பார்வதி முருகர், விநாயகர் எல்லார் கால்லயும் விழுவேன்.
அதிர்ஷ்ட வசமா இதுக்கு எல்லாம் யாரும் கேள்வி கேட்கவில்லை. :)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP