Wednesday, May 05, 2010

கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே !!

இடம்: பெங்களூர்
நேரம்: அழகிய மதிய நேரம்..

காண்பவை: கணினி, கடிகாரம் ஒரு மணி 35 நிமிடம் காட்டிக் கொண்டிருந்தது. பிஸி பேளா பாத்-ம், தயிர் வெங்காயமும்.. கொஞ்சம் காராபூந்தி சேர்த்து.. உண்ட மயக்கம் உண்மையான தொண்டருக்கும் உண்டு என்பதை உணர்த்தும்படி இராகவ் தூங்கிக் கொண்டிருக்கிறன்.


திடீரென்று முதுகில் ஒரு அடி விழுகிறது. டொம்ம்ம்ம். திடுக்கிட்டு விழிக்கும் ராகவ்,

ராகவ்: எவ அவ ??

தலையில் மலர் கிரீடம், கையில் குழலுடன் உள்ள ஒரு கபடதாரி: எவன் அவன்னு கேளுப்பா..


ராகவ்: சரி சரி.. இப்போ என்ன விஷயம்.. ஏதாவது கஸ்டமர் மீட்டிங்கா..

கபடதாரி: நான் உனக்கு கஸ்டமரா.. கஷ்டம்டா முருகா!!

ராகவ்: முருகாவா??? கண்டுபிடிச்சிட்டேன்.. கே.ஆர்.எஸ் தானே நீங்க..

கபடதாரி: சே! கண்ணன் வேஷம் போட்டாலும் கண்டுபிடிச்சுடுறாங்கப்பா..

ராகவ்: ஹி ஹி.. கண்ணன் வேஷம் போட்டா போதுமா.. ராதா ராதான்னு சொல்லிருந்தாலும் நம்பியிருப்பேன்.. முருகா முருகான்னு ஒரு வார்த்தை போதுமே..

கபடதாரி: சரி சரி.. சும்மாதானே இருக்க.. கண்ணன்பாட்டுல ”என்னை”க் கண்டதைப் பற்றி ஒரு பாடல் எழுதேன்..

ராகவ்: அப்படியே ஆகட்டும்.. என் ஞான ஆசார்யரே!!..

கபடதாரி: ஸ்ஸ்ஸ்ஸ்.. முடியல..

ராகவ்: சரி.. பாடல் ஜேசுதாஸ் ஐயாவ பாடச் சொல்லட்டுமா..

கபடதாரி: ம்.. அவரும் இருக்கட்டும்.. அப்புடியே புதுசா ஏதாவது செய்யு.. நான் அடுத்ததா.. ராதாவை போய் பாட்டு போடச் சொல்லி டகால்ட்டி பண்ணணும்.. வரட்டா...

***

கண்ணனைக் கண்டு பலநாட்கள் ஆகிவிட்டதாம் இந்தப் பேதைக்கு.. யாரைக் கேட்பது?? எங்கு போய்க் கேட்பது?? நான் வளர்த்த மல்லிக் கொடியிடம் கேட்போம்.. அதுதான் என் உற்ற தோழி.. என் நிலைமையை கண்ணனுக்கு தன் வாசத்தின் மூலம் கொண்டு சேர்த்து விடும்.

என் மல்லிக் கொடியே எனக்காக தூது செல்வாயா!!.. என் பாடலை கேட்பாயா.


கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!
கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!

கண்மணி வண்ணனின் குழல் ஓசையைக் கேட்டாயோ!
கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!
கண்மணி வண்ணனின் குழல் ஓசையைக் கேட்டாயோ!
கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!

வெண்ணிலாவில் அவன் என்னுடன் களிக்கையில்!
கண்ணே கண்ணே என்று ஆவலுடன் அழைத்த!

கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!
கண்மணி வண்ணனின் குழல் ஓசையைக் கேட்டாயோ!
கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!

எண்ணமெல்லாம் நான் செய்கிறேன் என்றான்!
எண்ணமெல்லாம் நான் செய்கிறேன் என்றான்!
திண்ணம் உன்னை நான் செய்விடேன் என்றான்!

கண்ணிமை மூடினேன்ன்ன்ன்ன்ன்..
கண்ணிமை மூடினேன்.. லலிதா சோதரன்
கண்ணிமை மூடினேன்..லலிதா சோதரன்
கண்முன்னே இருந்தான் எங்கோ மறைந்தான்!

கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!
கண்மணி வண்ணனின் குழல் ஓசையைக் கேட்டாயோ!
கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!

***
ஜனனி அவர்கள் பாடிய கர்னாடிக் ஃப்யூஷன்




ஜேசுதாஸ் ஐயாவின் தேமதுரத் தமிழில்,




7 comments :

Kannabiran, Ravi Shankar (KRS) said...

:)

ungaLai paaka naan blore vanthenaa? permission vangineengaLaa? :)

//கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!//
which malli? kumaran malli? :)

//திண்ணம் உன்னை நான் செய்விடேன் என்றான்!//
cheyviden or kaividen??

//லலிதா சோதரன்//
this is the answer to last post's question...lalitha is the thangame thangam (saki) of radha!

Rajewh said...

எளிமை அதனிலும் இனிமை
மிக்க நன்றி!

(but first off- enna koduma sir ithu)

குமரன் (Kumaran) said...

மல்லிக்கொடி குமரன் மல்லி மட்டும் இல்லை மொத்த மல்லி குடும்பமும்! அப்பத் தானே கொடின்னு சொல்ல முடியும்! :-)

உன் எண்ணமெல்லாம் நான் செய்கிறேன்; திண்ணம் உனை நான் செய்ய விட மாட்டேன்; இரண்டு வரியும் சேர்ந்து வருவதால் இங்கே செய்விடேன் தான் சரின்னு நினைக்கிறேன். கைவிடேன் வராது.

Kavinaya said...

ச்வீட்டான பாடல். அதனினும் ச்வீட்டான படங்கள் :) நன்றி ராகவ்.

In Love With Krishna said...
This comment has been removed by the author.
In Love With Krishna said...

Beautiful!! :)
//திண்ணம் உன்னை நான் செய்விடேன் என்றான்!//
Pls. explain?

நாகு (Nagu) said...

இந்த பாடலை ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருக்கிறேன்...

என்னவெல்லாம் நான் பண்ணுகிறேன் என்றான்...

என்று கூட கேட்டிருக்கிறேன்.
http://www.fulfillr.com/viewMusic.php?fileUri=Kannanai-Kandayo-Maalikodiye-Sindhubhairavi-Raagam-Mrs-Sowmya&module=music&app=player&id=277&password=&vId=0&song=true

இந்த பாடலை எழுதியது யார்? (ராகவ் என்று டுபாக்கூர் விடக்கூடாது)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP