Sunday, April 25, 2010

இளையராஜா/யேசுதாஸ்: கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்!

கண்ணன் பாட்டு மக்களே, எனக்கு ஒரு சந்தேகம்! தீர்த்து வைங்க!
இந்தப் பாட்டு கண்ணன் பாட்டு தானே?
"கண்ணனே" நீ வர-ன்னு தானே துவங்குது? :)

இளையராஜாவின் மிக அழகான மெலடிக்களில், இது என்றும் நிலைத்து நிற்கக் கூடியது! வயலினை வச்சிக்கிட்டே ஜால வித்தை காட்டுவாரு ராஜா என்பதற்கு இதுவும் ஒரு சரியான எடுத்துக்காட்டுப் பாடல்!

ராஜா-வின் வயலின் சாகசங்களோடு பாட்டின் கம்பீரத் துவக்கம் - Dont Miss! கூடவே மெல்லீசா ஒரு "டொக் டொக்" சத்தம்....
* பாட்டு ஆரம்பிக்கும் போதும் டொக் டொக்!
* அப்பறம் பாடல் முழுக்கவும் டொக் டொக் கேட்கும் பாருங்க!
அந்த டொக் டொக்-கையே உன்னிப்பா Follow பண்ணீங்கனா....
அதான் என்னோட காதல் துடிப்பு-ன்னு தெரிஞ்சீரும்! :))



(ஆண்குரல் - பச்சையில்; பெண்குரல் - கண்ணனுக்கு பிடிச்ச வயலெட்டில்! :)


காத்திருந்தேன்...

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் - ஜன்னலில் பார்த்திருந்தேன்!
கண்விழித் தாமரை பூத்திருந்தேன் - என் உடல் வேர்த்திருந்தேன்!
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் - மன்னவன் ஞாபகமே!
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் - மன்மத நாடகமே!
அந்திப் பகல், கன்னி மயில், உன்னருகே!
(கண்ணனே நீ வர)

நீலம் பூத்த ஜாலப் பார்வை - மானா? மீனா?
நான்கு கண்கள் பாடும் பாடல் - நீயா? நானா?

கள்ளிருக்கும் - பூவிது பூவிது!
கையணைக்கும் - நாளெது நாளெது?
பொன்னென மேனியும் - மின்னிட மின்னிட!
மெல்லிய நூலிடை - பின்னிடப் பின்னிட

வாடையில் வாடிய
ஆடையில் மூடிய
தேர்...நான்...
(கண்ணனே நீ வர)
பேச வேண்டும்! மெதுவா மெதுவா...

ஆசை தீரப் பேச வேண்டும் - வரவா? வரவா?
நாலு பேர்க்கு ஓசை கேட்கும் - மெதுவா! மெதுவா!

பெண் மயங்கும் - நீ தொட நீ தொட!
கண் மயங்கும் - நான் வர நான் வர
அங்கங்கு வாலிபம் - பொங்கிடப் பொங்கிட
அங்கங்கள் யாவிலும் - தங்கிடத் தங்கிட

தோள்களில் சாய்ந்திட
தோகையை ஏந்திட
யார்...?நீ....!
(கண்ணனே நீ வர)
தோள்களில் சாய்ந்திட...


படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
குரல்: யேசுதாஸ் & உமா ரமணன்
வரிகள்: வைரமுத்து
ராகம்: மலைய மாருதம்




தென்றலே என்னைத் தொடு படம் ஒரு வருஷம் மேல ஓடியது-ன்னு நினைக்கிறேன்! பாட்டுக்கும்-காதலுக்காகவே!
சேட்டன் யேசுதாஸோட mesmerizing காதல் குரல்!
உமா ரமணனும் நல்லா கம்பெனி குடுக்கறாங்க! (பூங்கதவே, கஸ்தூரி மானே-ன்னு நிறைய ஹிட் கொடுத்தவங்க உமா!)

ராகம்/மெட்டு எங்கேயோ கேட்டாப் போல இல்லை?
TMS பாட்டு ஞாபகம் வருதா? ஓராறு முகமும் ஈராறு கரமும்....தீராத வினை தன்னை தீர்க்கும்! எக்ஜாக்ட்லி!
அந்த முருகன் பாட்டு ராகமே தான், இந்தக் கண்ணன் பாட்டு ராகமும் கூட! :)
பூப்பூக்கும் மாசம் தை மாசம் என்ற பாட்டும் இதே மெட்டு தான்!

கண்ணா, உனக்கு, உன் பாட்டு பிடிச்சி இருந்தது தானே? :)

10 comments :

Raghav said...

ரொம்ப நாள் கழித்து கேட்கிறேன்.. மயக்கும் குரல்..

Raghav said...

//இந்தப் பாட்டு கண்ணன் பாட்டு தானே?//

ஒத்துக்க மாட்டோம்.. பாட்டுக்கு வியாக்யானம் எல்லாம் சொல்லி கண்ணன் பாட்டுன்னு நிருபிங்க.. அப்புறம் எங்க தீர்ப்ப சொல்றோம் :)

Anonymous said...

சூப்பர் பாட்டு. இந்தப்படம் இன்னும் பாத்ததில்லை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Raghav said...
ஒத்துக்க மாட்டோம்.. பாட்டுக்கு வியாக்யானம் எல்லாம் சொல்லி கண்ணன் பாட்டுன்னு நிருபிங்க..//

என்னாது? பாட்டுக்கு வியாக்யானமா? அதான் ஆங்காங்க ரொமான்டிக்கா படம் போட்டிருக்கேனே! அதே வியாக்யானம் தான்! :)

//அப்புறம் எங்க தீர்ப்ப சொல்றோம் :)//

உங்க தீர்ப்பு யாருக்கு வேணும்? காதல் ஜோடிங்க, புதுக் கல்யாண ஜோடிங்க தீர்ப்பு சொல்லட்டும்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சின்ன அம்மிணி said...
சூப்பர் பாட்டு. இந்தப்படம் இன்னும் பாத்ததில்லை//

ஆகா! தென்றலே என்னைத் தொடு-வைப் பாக்கலையா? ஆபிசில் ஒரு மதியம் ஃபுல்லா உட்கார்ந்து, rajshri.com-ல பாருங்க-க்கா! காபி அண்ணாச்சியை வேணும்-ன்னா காபி போட்டுத் தரச் சொல்லுறேன்! :)

தென்றல் வந்து என்னைத் தொடும் பாட்டும் நல்லா இருக்கும்! மலேசியா வாசுதேவன் வேற ஒரு பாட்டு பாடி இருப்பாரு! சட்டு-ன்னு ஞாபகம் வரலை!

sury siva said...

//உங்க தீர்ப்பு யாருக்கு வேணும்? காதல் ஜோடிங்க, புதுக் கல்யாண ஜோடிங்க தீர்ப்பு சொல்லட்டும்! :)//

alagana malayamarudham
amudham pol iniya sorkal
Anandha nilai undu pannum
ilaya raajavin iniya isai.

kandavar ellor mayangum
kaanaathavarum Engith thavikkum = ulam
kavarum paadal ithu
kannanin paadalE.

subbu thatha
meenakshi paatti.
( naanga ambadhu varusama kaadhal jodi )

sury siva said...

//உங்க தீர்ப்பு யாருக்கு வேணும்? காதல் ஜோடிங்க, புதுக் கல்யாண ஜோடிங்க தீர்ப்பு சொல்லட்டும்! :)//

alagana malayamarudham
amudham pol iniya sorkal
Anandha nilai undu pannum
ilaya raajavin iniya isai.

kandavar ellor mayangum
kaanaathavarum Engith thavikkum = ulam
kavarum paadal ithu
kannanin paadalE.

subbu thatha
meenakshi paatti.
( naanga ambadhu varusama kaadhal jodi )

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ulam kavarum paadal ithu
kannanin paadalE.

subbu thatha
meenakshi paatti.
( naanga ambadhu varusama kaadhal jodi )//

தங்கள் தீர்ப்பே தீர்ப்பு! வாழி வாழி! :)
இராகவ், கால்-ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ-ப்பா! :)

In Love With Krishna said...

//இந்தப் பாட்டு கண்ணன் பாட்டு தானே?//

i skipped the intro and went to the lyrics...idhuvarai ketkadha pattu...
kannan pattu endru than ninaithen...:))

Then i saw that it was a film song.

Kadhal mannan avane, avane...
Avanukku porundhadha kaadhal pattu kaadhal pattu illave illai..:))

Tnx 4 posting!

கானா பிரபா said...

காபி அண்ணாச்சியை வேணும்-ன்னா காபி போட்டுத் தரச் சொல்லுறேன்! :)
//


எகொசா ;)

பாட்டு சூப்பர் தல, மொட்ட பாஸா கொக்கா

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP